Header Image

 

ஸ்வரம் 10

என் பார்வை மீறத் துணியாத ஈர்ப்பு விசை நீ. என்னை இத்தனை அழகாகக் கட்டிப்போடும் இந்தக் காந்த வித்தையை எங்கிருந்து திருடி வந்தாய்? வெண்பாவுக்கு ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. பரபரப்பாகப் பள்ளிக்குச் சென்று வேலை பார்த்தவளுக்கு வீட்டில் நேரத்தைக் கழிப்பது போரடித்தது. ஏதாவது கற்றுக்கொள்ளலாமென யூடியூபைப் புரட்டிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் க்ரோசே வீடியோ ஒன்று கண்ணில் பட்டது. கல்லூரியில் படித்த காலத்தில் அவளுக்கு க்ரோசே பின்னுவதில் ஆர்வமுண்டு. கீ செயினில் கோர்த்துக்கொள்ள குட்டி குட்டியாய்ப் பொம்மைகள், … Continue reading “ஸ்வரம் 10”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 11

சாந்திவனத்திலும் அஞ்சனாவிலாசத்திலும் திருமணத்துக்கான இனிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. புத்தாடைகள் நகைகள் வாங்குவது என இரு குடும்பத்தினரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவளித்தனர். வானதியும் பாகீரதியும் உற்சாகத்துடன் வெட்டிங் பிளானிங் நிறுவனம் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததோடு அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை உடனிருந்து கவனித்துக் கொண்டனர். திருமணப்பத்திரிக்கையின் முதல் பிரதியை ஈசன் முன்னே வைத்து வழிப்பட்டப் பிறகு பத்திரிக்கை கொடுக்கும் வேலை ஆரம்பித்தது. சுவாமிநாதன் தங்களின் உறவினர்கள் ஒருவர் … Continue reading “கண்மணி 11”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 10

சிவசங்கர் தனது வெள்ளைச்சட்டையின் காலர் பட்டனைப் போட்டவன் என்ன தோணியதோ தெரியவில்லை, அதைக் கழற்றிவிட்டு முழுநீளச்சட்டையை முழங்கை அளவில் மடித்துக் கொண்டான். சிகையைக் கோதும் போது மோதிரவிரலை அவனறியாது நோக்கிய விழிகள் எதேச்சையாக டிரஸ்சிங் டேபிளை நோக்க மூளையோ “அடேய் மோதிரத்தை அவ கையில திணிச்சு அனுப்புனதுலாம் மறந்து போச்சா?” என்று நினைவுபடுத்த அந்நாளின் நினைவில் சில நொடிகள் சிலையாய் நின்றான்.  பின்னர் “சிவா கொஞ்சம் இங்க வாயேன்! பவாகுட்டி செலக்ட் பண்ணுன இன்விடேசன் டிசைன் உனக்குப் … Continue reading “கண்மணி 10”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 8

கே.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவமனை படுக்கையில் சோர்வாய் கண் மூடி சாய்ந்திருந்தார் சுவாமிநாதன். மருமகன் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்தது. அவர் என்றுமே ஞானதேசிகனையும் ஜெகத்ரட்சகனையும் பிரித்துப் பார்த்தது கிடையாது. அன்னபூரணியும் அவ்வாறே! பழைய நினைவுகளில் கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது அவருக்கு. தமக்கையும் அவரது கணவரும் விபத்தில் அகால மரணமடைந்த போது ஐந்து வயது பாலகனாய் தன்னுடன் அழைத்து வந்த ஜெகத்ரட்சகனை மகனும் மகள்களும் இலகுவாகத் தங்களின் நட்புவட்டத்தில் இணைத்துக்கொண்டபோது இருவரும் … Continue reading “கண்மணி 8”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 9

என் அதிகாரத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை, அவளை மயக்கும் மெல்லிசையாகவே ஒலிக்கவிட்டேன்; அவளது வெட்கம் கலந்த மறுப்புகளையெல்லாம் மூழ்கடித்து அவளை முழுமையாக எனக்காய் அடிபணிய வைக்க! நேத்ரன் நிச்சயதார்த்தத்திலிருந்து கிளம்பியது எதனால் எனப் புரியாமல் மறுநாள் பள்ளிக்குச் சேர்ந்தாள் வெண்பா. காலை அவளது வகுப்பு மாணவர்களைப் பெற்றோர் கொண்டு வந்துவிடும் இடத்தில் அவள் நிற்கவேண்டும். அங்கிருந்து வகுப்பறைக்கு அழைத்துச் செல்லவேண்டும். நேரே ஸ்டாஃப் ரூமுக்குச் சென்றவள் அவளது ஹேண்ட்பேக்கிலிருந்து கைக்குட்டையை எடுத்தபோது பேனா ஒன்று கீழே விழுந்து … Continue reading “ஸ்வரம் 9”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 6

பவானி சிவசங்கரின் மனதிலுள்ளதை அறிய விரும்பி மனம் புண்பட்டுத் திரும்பிய தினத்தன்று இரவில் அவள் தந்தை சொன்னபடி நவீனை மணக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஜெகத்ரட்சகனுக்குத் தன் மகள் தனது பேச்சைத் தட்டமாட்டாள் என்ற எண்ணம் மீண்டும் ஒரு முறை வலுப்பட அஞ்சனாதேவியும் அருணும் பவானிக்கு அமையப் போகும் நல்வாழ்வை எண்ணி மகிழ்ந்தனர். அதன் பின்னர் அனைத்துமே வேகமாக நடந்தது. ஒரு நல்ல நாளில் அமைச்சர் செழியனும் அவரது மனைவி கயல்விழியும் பவானியைப் பார்த்துவிட்டுப் பூ வைத்துச் சென்றனர். … Continue reading “கண்மணி 6”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 5

ஜெகத்ரட்சகன் அமைச்சர் செழியன் வீட்டுச் சம்பந்தம் மகளுக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருக்கும் செழியனுக்குமான பழக்கம் தொழில்ரீதியான நட்பையும் தாண்டி இன்று இருவரும் சம்பந்திகள் ஆகிவிட்ட பூரிப்பு அவர் முகத்தில் தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. அஞ்சனாதேவியும் மகளுக்கு அமையப் போகிற ராஜவாழ்க்கையை எண்ணி மகிழ்ந்திருக்க அருண் மட்டும் நவீனைப் பற்றி யாருமறியாது விசாரிக்க ஆரம்பித்தான். விசாரித்த வரையில் அவனைப் பற்றி யாரும் குறைவாகச் சொல்லாத நிலையில் அவனுக்கும் இச்சம்பந்தத்தில் சம்மதமே! ஆனால் இதையெல்லாம் நினைத்து யார் மகிழ … Continue reading “கண்மணி 5”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 8

உன் மீது மென்னிலவின் ஒளியைப் பொழிவதற்காகவே, எனக்குள் இருக்கும் காட்டுத்தீயை மறைத்து வைத்திருக்கிறேன். ஆனால் நான் விட்டுச்செல்லும் சாம்பலை நீ காண நேர்ந்தால், அப்போதும் என்னை உனக்கான ஒருவன் என்று ஏற்பாயா?  துர்கா புகழேந்தியிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள். “அவங்க ரெண்டு பேரும் நம்ம எல்லாரோடவும் ஐஸ்பால் விளையாடுறாங்க புகழ். அதெல்லாம் பிடிச்சிருக்கு அவங்களுக்கு. நம்மகிட்ட காட்டிக்கவும் செய்றாங்க. ஐயோ அன்னைக்கு ஆரெம்கேவில நடந்துச்சே ஒரு சீன். அதை அப்பிடியே ரெக்கார்ட் பண்ணி இன்ஸ்டால ரீல்ஸா போட்டிருந்தோம்னா வைரல் … Continue reading “ஸ்வரம் 8”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 2

மாநகரத்தின் இயந்திரத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் அழகான மலர்வனமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது ‘அஞ்சனாவிலாசம்’ என்ற பங்களா. வீட்டுக்கு அரணாய் நிற்கும் காம்பவுண்ட் சுவர்களும் அந்த அரணின் நடுவே இரும்பினாலான கேட்டும் அந்த வீட்டுக்குக் கோட்டை போன்ற உருவமைப்பைத் தந்தது என்றால் அது மிகையாகாது. வீட்டைச் சுற்றிலும் உள்ள நெடிய மரங்களில் தஞ்சமடைந்திருந்த பறவைகளின் கீச் கீச் என்ற ஒலியுடன் அந்த வீட்டின் மகாராணியும் இல்லத்தரசியுமான அஞ்சனாதேவியின் குரலில் கணீரென்ற கானம் … Continue reading “கண்மணி 2”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 6

“நான் இதுவரை வாசிக்காத ஆகச்சிறந்த கவிதை நீ; ஆனாலும் என் இதயம் உன்னை எப்படியோ மனப்பாடம் செய்துவிட்டது. உன்னிடமிருந்து ஒற்றைச் சம்மதத்தைப் பெற, எனக்குப் பிடித்த ஆசிரியையிடம் விடைத்தாள் எழுதும் மாணவனாய் நீளமாய் விருப்பத்தைச் சொல்லிக் காத்திருக்கிறேன்” ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து வெண்பா சொன்ன அனைத்தையும் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள் சுனந்தா. பெண் பார்க்கும் படலத்தில் நேத்ரன் பேசியதை வைத்து அவளே ஒரு ஊகத்திற்கு வந்திருந்தாள். “அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்குதுன்னு தோணுது வெண்பா. அதான் இப்பிடி சுத்தி வளைச்சு … Continue reading “ஸ்வரம் 6”

 

Share your Reaction

Loading spinner