அவந்திகா சன் டியூ அலுவலகம் செல்வதை 10 நாட்களிலிருந்து 1 மாதமாகத் தள்ளிப்போட்டாள்.. ராகவ் கேட்டதற்கு “உன்னோட கன்சர்ன்க்கு 10 டேய்ஸ் வொர்க் பண்ணுனது எனக்கு என்னவோ ஒன் இயர் வொர்க் பண்ணுன ஃபீல் வருது. ஐ வான்ட் மோர் ரெஸ்ட்” என்று சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றாள்..
ஆனால் இது எல்லாவற்றிற்கும் காரணம் கௌசல்யாவின் அறிவுரை என்பது அவர்கள் யாரும் அறியாத விஷயம்…
10 நாள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் செல்லத் தயாரானவள் சித்தியின் அழைப்பிற்கு இணங்கி அவர்களின் வீட்டுக்குச் சென்றாள். நீண்ட நாளுக்குப் பின் அங்கே வந்தவளை ரகுவரன் அன்பால் திக்குமுக்காடச் செய்யக் கௌசல்யாவோ யோசனையுடனே வலம் வந்தார்.
ரகுவரன் அலுவலகம் கிளம்பிச் சென்றதும் அவந்திகாவை அழைத்துத் தன் அருகில் அமர்த்திக்கொண்டு கேள்விக்கணைகளை அவளை நோக்கி வீச அவந்திகாதான் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்.
“நீ உன்னோட வாழ்க்கையைப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க அவந்திகா?”
“சித்தி நீங்க கேக்கிற விஷயம் எனக்குப் புரியல!” என்று குழப்பத்துடன் பதிலளித்தவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தார் கௌசல்யா..
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ரகுவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ அடம்பிடிச்சப்ப உனக்கு வயசு என்ன தெரியுமா? 15.. அதுக்கு அப்புறம் சித்தி உங்களுக்குனு ஒரு லைஃப் இருக்கு, ப்ளீஸ் எனக்கு ஒரு தம்பி பாப்பா வேணும்னு நீ கேட்டப்போ நீ ஒரு 18 வயசுப் பொண்ணு. அப்போல்லாம் புரிஞ்ச விஷயம் இப்போ நான் கேக்கிறப்போ உனக்குப் புரியலையா?” என்று சாதாரணமான ஆனால் மறுக்க முடியாத குரலில் கேட்டவரை அவளால் எதிர்கொள்ள இயலவில்லை..
மற்றவர்களின் பேச்சை அலட்சியம் செய்வது போல அவரது பேச்சை அவளால் அலட்சியம் செய்ய முடியாது என்பது கௌசல்யாவும் அறிந்த உண்மையே! இருந்தும் அக்கா மகளின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார்.
“சித்தி! உங்க விஷயம் வேற இது வேற” என்று அவள் தயக்கத்துடன் சொல்ல “எப்பிடினு சொன்னா நானும் புரிஞ்சுக்க வசதியா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அவளையே பார்த்தவரை உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள்.
“சித்தி! நீங்க சொன்னது எல்லாமே சரிதான்… ரகு அண்ணா ப்ச் சித்தப்பா உங்களை லவ் பண்றதை நான் எப்பிடிக் கண்டுபிடிச்சேன் தெரியுமா? அம்மாவப் பாக்குறப்போ அப்பா கண்ணுல ஒரு விவரிக்க முடியாத ஆர்வம் இருக்கும்.. அதுக்குப் பேரு எனக்கு அப்போ தெரியாது.. அதே விஷயத்தை நான் சித்தப்பா கண்ணுல உங்களுக்காகப் பாத்தேன்… அவரு உங்களை ரொம்பவே காதலிச்சாரு…. அண்ட் காதலிக்கிறாரு…
அப்புறம் தம்பி பாப்பா நான் கேட்டதுக்கும் சித்தப்பாவோட காதல்தான் காரணம்… அவரு உங்க மேல வச்சிருக்கிற காதலுக்கு அடையாளமா ஒரு அழகான குழந்தை இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு அப்போ தோணுச்சு. அதான் நான் கேட்டேன்…” என்று சொல்லிவிட்டு நிறுத்தியவள் சித்தியைப் பார்க்க அவரோ அவளது முழுமையான பதிலுக்காகக் காத்திருந்தார்.
எச்சிலை விழுங்கிவிட்டுத் தொடர்ந்தாள் அவள்..
“நானும் ராகவும் அப்பிடி இல்லையே சித்தி.. அவனுக்கு அன்னைக்கு வேற ஆப்ஷன் இல்லை.. அதனால என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டான்.. அவ்ளோதான்.. இதுல எந்த ஃபீலிங்குக்கும் இடம் கெடையாது… எனக்கும் என்னோட லைஃப் பத்தி நெறையா கனவு இருந்துச்சு சித்தி… அது எல்லாமே அன்னைக்கு அந்தக் கல்யாணத்தோட போச்சு… இனிமே அந்தக் கனவுகளை என்னால ராகவ் மேல திணிக்க முடியாது.. அவனோட உலகம் வேற.. என்னோடது வேற.. இந்தச் சூழ்நிலைல என்னால எந்த முடிவும் எடுக்க முடியல சித்தி… எங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும் நாங்க ஹஸ்பென்ட் அண்ட் வைஃப்னு… பட் எங்களால என்னைக்குமே ஒரு நார்மல் ஹஸ்பென்ட் அண்ட் வைஃபா வாழ முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல” என்று சொல்லவும் கௌசல்யா திகைத்தார்.
“கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 35 நாள் கழிஞ்சுப் போச்சு.. இன்னும் நீ இதே மாதிரிப் பேசுனா என்ன அர்த்தம்? ராகவ்கிட்ட அப்பிடி என்னதான் உனக்குப் பிரச்சனை?” என்று அவர் குழப்பத்துடனே கேட்க
“சித்தி! அவன் எப்போவுமே இந்த ஸ்டேட்டஸ், க்ளாஸ்ஸுக்கு ரொம்ப இம்பார்டென்ஸ் குடுப்பான்…. அவன் சத்தியமா முழு மனசோட எனக்குத் தாலி கட்டிருக்க மாட்டான்… இன்னும் அவன் மனசுல ஏதோ ஒரு மூலைல இந்தக் கல்யாணம் நடக்காம இருந்திருந்தா நல்லா இருக்கும்ங்கிற எண்ணம் கண்டிப்பா இருக்கும்” என்று அவந்திகா சொல்லக் கௌசல்யா அதைக் கேட்டுக்கொண்டே அவளை எவ்வாறு சமாளிப்பது என்று யோசித்தார்..
அவந்திகா அவரைப் பார்த்துத் தொடர்ந்தவள் “அவன் ஸ்டேட்டஸுக்கு நான் அவன்கிட்ட பேசக் கூடத் தகுதி இல்லங்கிறதுதான் அவன் என்கிட்ட பேசுன முதல் வார்த்தையே! இப்பிடி இருக்கிறப்போ எங்களால ஒரு நல்ல கணவன் மனைவியா வாழ்க்கைய ஆரம்பிக்க முடியும்? என்னைத் துளி கூடக் காதலிக்காத ஒருத்தன் கூட நான் இவ்ளோ நாள் இருக்கிறதே பெரிய விஷயம்.. இதுல நீங்க நெனைக்கீறது எல்லாம் இந்த ஜென்மத்துல நடக்க வாய்ப்பே கெடையாது” என்றாள் உறுதியாக.
அவள் பேசி முடித்ததும் அவளைக் கண்டிப்பான முகபாவத்துடன் பார்த்தவர் “இதைப் பத்தி என்னிக்காச்சும் நீயோ ராகவோ பேசிருக்கீங்களா?” என்று கேட்க அவள் இல்லையென்று தலையாட்டக் கௌசல்யாவுக்கு அய்யோவென்று இருந்தது..
“ராகவ் பேசாமலே அவர் மனசுல இருக்கிறத நீ கண்டுபிடிச்சிட்டியா? என்ன பொண்ணு நீ? மத்த வாய்லாம் பேசுற.. சொந்தப் புருஷன்கிட்ட பேச உனக்கு என்ன தயக்கம்?”
“சித்தி! எனக்குப் பேச ஒரு மாதிரி அன்கம்ஃபர்டபிளா இருக்கு.. அவனை, அவனோட சிரிப்பப் பாத்ததும் எனக்கு எல்லாமே மறந்து போயிடுது சித்தி..” என்று அவள் குழப்பத்துடன் கூற இதையாச்சும் நீ ஃபீல் பண்ணுனியே என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.
“நான் சொல்ல வர்ற விஷயத்தைக் கவனமாக் கேளு.. இன்னும் ஒரு மாசத்துக்கு எந்த வேலையையும் இழுத்துப் போட்டுக்காம வீட்ல இருந்து ராகவுக்கு என்ன பிடிக்கும்னு எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கோ” என்று சொல்லும்போதே அவள் ஏதோ கூற வர அவளை நோக்கி நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு முறைத்தார்.
“உன்னொட விமன் எம்பவர்மென்ட் பத்திலாம் என்கிட்ட பேச ட்ரை பண்ணாத. அத உனக்குச் சொல்லிக் குடுத்ததே நான்தான். ஹஸ்பென்ட் அண்ட் வைஃப்குள்ள ரெண்டு பேரும் ஈக்வல்தான். உங்க உறவுக்காக ராகவ் ஒரு அடி எடுத்து முன்னாடி வந்தா நீயும் அதை ஏத்துக்கணுமே தவிரப் பிடிவாதம் பிடிச்சிட்டு விட்ட எடத்துலேயே பிடிவாதமா நிக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதப் பத்தி நீ ராகவ்கிட்ட பேசுனா அவர் கண்டிப்பாப் புரிஞ்சுப்பாரு. பிகாஸ் ஹீ மே பி அடமண்ட். பட் ஹீ கேன் அன்டர்ஸ்டாண்ட் திஸ் பெட்டர் தன் யூ” என்று முடித்துவிட்டு அவளுக்குப் பிடித்த பிஸிபேளாபாத் தயார் செய்யச் சென்றுவிட்டார்..
ஆனால் அவர் சொல்லி 3 நாட்கள் ஆகியும் அவந்திகாவுக்கு ராகவிடம் தங்கள் வருங்காலம் பற்றிப் பேசத் தைரியம் வரவில்லை..
அன்றும் அதே யோசனையுடன் நாற்காலியின் குறுக்கே அமர்ந்து ஒரு கைப்பிடியில் முதுகைச் சாய்த்து மறுகைப்பிடியில் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்திருந்தவளை அலுவலகத்திலிருந்து திரும்பிய ராகவ் ஒரு மாதிரி பார்த்துவிட்டு அவளின் கால்களைச் சுட்டிக்காட்ட அவந்திகாவோ சலிப்புடன் திரும்பிக்கொண்டாள்.
அவளின் செய்கையைப் பார்த்து நெற்றியைச் சுருக்கியவன் உடை மாற்றிவிட்டுக் கீழே சென்றான். அவன் சென்றதும் சிறிது நேரத்தில் அவன் பின்னேயே வந்தவள் அனைவருடனும் சேர்ந்து டின்னரை முடித்துவிட்டு மொபைல் ஹெட்போன் சகிதம் தோட்டத்திற்குச் சென்று ஊஞ்சலில் முழங்கால்களை மடித்து அதில் முகத்தைத் தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தாள்.
மூன்று நாட்களாக அவளது செய்கையில் வித்தியாசத்தை உணர்ந்தான் ராகவ். அவன் என்ன கேலி செய்தாலும் அதற்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பவள் மூன்று நாட்களாக யோசனையுடன் திரிவதைக் கண்டு அவளுடன் பேச முடிவெடுத்தான். ஆனால் அதற்கு நேரம் வாய்க்காமல் போகவே அவனும் அதைத் தள்ளிப் போட்டு வந்தான்.
நாளை ஞாயிறு என்பதால் இன்று அவன் ஃப்ரீயாக இருக்கத் தோட்டத்தில் அமர்ந்திருந்தவளை நோக்கி இரண்டில் ஒன்றைக் கேட்டுவிடும் எண்ணத்துடன் அங்கே வந்தான்.
அவள் ஊஞ்சலில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் அவள் அருகே சென்று அமர்ந்தான்.
“மூன்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கியா ஜான்சி ராணி?”
திரும்பி அவனைப் பார்த்தவள் “வெரி ஃபன்னி” என்று பதிலளித்துவிட்டு மீண்டும் யோசனையைத் தொடர அவன் அவளது காதிலிருந்து ஹெட்போனையும் அருகிலிருந்த மொபைலையும் பிடுங்கியவன் அதைத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
எப்போதும் போல அவளால் தடுக்க முடியவில்லை.
அதனால் திரும்பவும் முழங்காலைக் கட்டியபடி அமரவும் ராகவுக்கு ஆச்சரியமாக இருந்தது.. இந்நேரம் அவள் மொபைல் போனைப் பிடுங்கியதற்காக மூன்றாம் உலகப்போர் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அவள் அமைதி காக்கவும் அவனுக்கே போர் அடித்தது..
அவந்திகா மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்..
“ராகவ்! சித்தி நம்ம லைஃப் பத்தி நம்ம என்ன டிஸைட் பண்ணிருக்கோம்னு கேட்டாங்க”
“அஹான்… நீ அதுக்கு என்ன பதில் சொன்ன ஜான்சி ராணி?” என்று அவளையே குறுகுறுவென்று பார்க்க அவளுக்குத் தான் பதில் சொல்லும் தைரியமே வரவில்லை.
இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “நான் எனக்குக் குழப்பமா இருக்குனு சொன்னேன்” என்று சொல்லவும் ராகவ் அவளை உதட்டில் ஒரு வளைவுடன் பார்த்தான்.
“என்ன குழப்பம் உனக்கு?”
“இந்த மேரேஜ், நம்ம ரிலேஷன்ஷிப் அப்புறம் நம்ம ஃப்யூச்சர், இதப் பத்தி எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு”
“இதுல உனக்கு என்ன குழப்பம்? நான் உன்னோட ஹஸ்பென்ட் அண்ட் யூ ஆர் மை வைஃப். நம்ம மேரேஜ் கூட முறைப்படி நடந்து முடிஞ்சாச்சு. இதுல உனக்கு இப்போ எதுக்குத் தேவையில்லாமக் குழப்பம்?”
“அது இந்த மேரேஜ் நடந்த சிச்சுவேஷன், அப்புறம் நீகூட வேற வழி இல்லாமத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டனு எனக்கு நல்லாவே தெரிஞ்சும் நான் எப்படி….” என்று தயங்கியவள் “நாம எப்பிடி நம்ம லைஃப அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக முடியும்?” என்று கூறித் தர்மசங்கடத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை போலும்… அவன் சாதாரணமாகத்தான் இருந்தான்..
பின்னர் குனிந்து அமர்ந்திருந்த அவளது முகத்தைப் பார்த்துவிட்டு “பட் எனக்கு அதுல எந்தப் பிரச்சனையும் இல்ல” என்று கூலாகச் சொல்லவும் அதிர்ச்சியடைந்தவள் அவள்தான்..
பின்னர் சுதாரித்து “உன்னால எப்பிடி? நோ நோ… நீ சீரியஸ்னெஸ் புரியாமப் பேசுற” என்று படபடப்பாகக் கூறிவிட்டு அவனது பார்வையைத் தவிர்த்தாள்.
அவனோ ரிலாக்ஸாக அவளைத் தன் கரங்களால் சுத்தி வளைத்து அணைத்தவன் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு “அச்சோ கொழந்தைக்கு ஏன் இவ்ளோ டென்சன்?” என்று சொல்லி அவள் மூக்குடன் தன் மூக்கை உரச அவந்திகாவின் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்தது.
அவனது கரங்களை அவளால் விலக்க இயலாதவாறு அவன் இறுக்கமாக அணைத்திருக்க அவந்திகாதான் பரிதாபமாக விழித்தாள்.
அவன் அதே நெருக்கத்துடன் “லுக்! நான் உன்னை எல்லார் முன்னாடியும் அக்னி சாட்சியா என்னோட மனைவியா ஏத்துக்கிட்டேன். அன்னைக்கு நான் குடுத்த அந்த ஏழு வாக்கையும் என்னோட உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் நான் காப்பாத்துவேன். இந்த ஜென்மத்துல உனக்கு நான், எனக்கு நீ! இதுல வேற யாரும் இடைல வரவோ இல்ல நம்ம பிரிஞ்சு போகவோ எடமே கெடையாது. உன்னோட மூளைல இது பதியுறது கொஞ்சம் கஷ்டம்தான். பிகாஸ் மேரேஜ்ல உன்னோட மூணு அடியையும் நான்தானே நடந்து வாக்குக் குடுத்தேன். சோ ரொம்ப யோசிக்காத ஓகே” என்று சொல்லவும் அவந்திகா புரிந்தது போல் மண்டையை ஆட்டி வைத்தாள்.
பின்னர் திடீரென்று “ராகவ்! நீ லவ் பத்தி என்ன நெனைக்கிற?” என்று ஆர்வமாகக் கேட்க அவனோ சாதாரணமாக “அதப் பத்தி நெனைக்கிறதுக்குப் பெருசா எதுவும் இல்ல… என்னைப் பொறுத்தவரைக்கும் முட்டாள் மனுஷங்க தங்களோட முட்டாள்தனமான இமேஜினேஷனுக்கு வச்ச பேர்தான் லவ்… நான் முட்டாள் இல்ல” என்று சொல்லித் தீர்க்கமாகப் பார்க்கவும் அவந்திகாவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி..
வேகமாக அவனது கைகளை விலக்கியவள் “அப்புறம் எதுக்கு மேன் இந்த ஜென்மத்துல உனக்கு நான் எனக்கு நீனு டயலாக் பேசுன நீ?” என்று மூச்சுவாங்கக் கேட்டவளைப் பார்த்துச் சிரித்தான் ராகவ்..
“பிகாஸ் நான் நம்ம கணவன் மனைவிங்கிற உறவை மதிக்கிறேன்”
“இந்த உலகத்துல லவ் இல்லாம எந்தக் கணவன் மனைவி உறவும் ரொம்ப நாள் நீடிக்காது ராகவ்” என்று அவள் பிடிவாதமாகக் கூறினாள்.
“லவ் இல்லாமக் கணவன் மனைவி உறவு நீடிக்காதுங்கிறது உண்மையா இருந்தா இன்னைக்கு உலகத்துல முக்கால்வாசி பேர் கல்யாணம் ஆகாம இல்ல டிவோர்ஸியாதான் சுத்திட்டு இருப்பாங்க ஜான்சி ராணி”
“என்னைப் பொறுத்தவரைக்கும் லவ் இல்லாத ரிலேசன்ஷிப்பை என்னால எப்போவுமே ஏத்துக்க முடியாது” என்று அவள் தீர்மானமாக உரைக்க அவளைப் புருவம் உயர்த்தி ஆச்சரியத்துடன் பார்த்தான் ராகவ்.
பின்னர் “ஃபைனலி கொழந்தை வளந்துடுச்சு போல” என்று அவளைக் கேலி செய்தவன் அவளை உறுதியுடன் பார்த்து “நான் ஆல்ரெடி சொல்லிட்டேன்.. லவ்லாம் முட்டாளோட கற்பனைனு… நான் முட்டாள் இல்ல.. எப்போவும் முட்டாளாகவும் மாட்டேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி வீட்டிற்குள் செல்ல ஆரம்பித்தான்.
அவள் வராததைக் கண்டவன் திரும்பிப் பார்த்து “ரொம்ப நேரம் முழிச்சிருக்காத ஜான்சி ராணி. பனி விழுற மாதிரி இருக்கு. சோ உள்ளே வா” என்று சொல்லிவிட்டுச் செல்ல அவந்திகா “இதுக்கும் ஒன்னும் கொறை இல்ல” என்று நொடித்துவிட்டு அவனைப் பின்தொடர்ந்தாள்.
அதே நேரம் உஷாவும் அவந்திகாவும் அலுவலகம் செல்வதற்குச் சிறிது இடைவெளி விட்டதால் ரித்திமாதான் மிகவும் சிரமப்பட்டாள்.. எப்போதும் மூவரும் சேர்ந்தே இருந்ததால் திடீரென்று அவர்கள் இல்லாமல் அவளுக்குக் கை ஒடிந்தது போல இருந்தது…
அதனால் உஷா அவளைத் தங்கள் வீட்டிற்கே வரச் சொல்லிவிட மூவரும் அங்கே அவர்களின் வழக்கமான குட்டிக் கலாட்டாக்களைச் செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டனர்..
அவர்கள் மூவரின் வழக்கமான இருப்பிடம் தோட்டத்தைப் பார்த்திருந்த அந்த ஜன்னல் அருகே இருக்கும் சோஃபாதான்… அருகில் ஒரு டிவியும் இருக்க எதையாவது பார்த்து விமர்சித்துக் கொண்டே பொழுதைப் போக்கினர்…
அவந்திகாவுக்குச் சூர்யா பாடல்கள் பார்க்காவிட்டால் அன்றைய நாள் முழுவதும் ஏதோ சூனியமாகத் தோன்றும்.. அதைச் சொல்லி அவளைக் கிண்டல் செய்வது உஷா ரித்திமாவின் பிரதான பொழுது போக்கு…
“ஹனிபி! ஏன் உனக்குச் சூர்யா இவ்ளோ பிடிக்குது? ஹீ இஸ் ஜஸ்ட் அன் ஆக்டர் லைக் அதர்ஸ்” என்று உஷா அவளைச் சீண்டிவிட அவந்திகா பொங்கி விட்டாள்.
“ஹேய்! ஒரு ஆக்டர்ங்கிறதயும் தாண்டி எனக்குச் சூர்யா ரொம்பவே பிடிக்கும்டி… அவர் சினிமால மட்டும் இல்ல, நெஜ லைஃப்லயும் கிரேட் லவ்வர். வைஃப் மேல கேர் உள்ளவரு. அதுமட்டுமா நெறய சோஷியல் இஸ்யூஸ்காகவும் அவரு பேசுவாரு. இப்பிடி ஒருத்தரை யாருக்குடி பிடிக்காமப் போகும்?”
“அம்மா தாயே! தெரியாமக் கேட்டுட்டேன்… அவரு உன்னோட ட்ரீம் பாய்னு வேற சொல்லிட்டு இருந்த கொஞ்ச நாளா… இப்போ அதுல ஏதாச்சும் சேஞ்ச் இருக்கா?” என்று ரித்திமா கண் சிமிட்ட அவந்திகா அலட்டிக்கொள்ளாமல் பதில் அளித்தாள்.
“யா பேபி…. ஹீ இஸ் ஆல்வேஸ் மை ட்ரீம் பாய்…” என்று சிலாகித்தவள் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்த ராகவைப் பார்த்ததும் அவள் குறுக்குபுத்தி வேலை செய்ய ஆரம்பித்தது…
“சூர்யா எவ்ளோ ஹான்ட்சம் தெரியுமா? சில பேர மாதிரி மைதாமாவு கலர் இல்லாமப் பாத்த உடனே பிடிக்கிற மாதிரி நம்ம ஊரு கலர். அந்த முகத்தைப் பாத்தாலே சோறு தண்ணி கூட வேண்டானு தோணும்” என்று அவள் சொல்ல ராகவ் கையைக் கட்டிக்கொண்டு கேட்க ஆரம்பித்தான்.
“அது மட்டுமா? சும்மா நெடுமரம் மாதிரி வளராமா கரெக்டான ஹைட், கரெக்டான வெயிட். அதோட அந்த ஸ்மைல், சான்ஸே இல்ல!! அதுலயும் ஒரு முக்கியமான விஷயம் அந்த மனுஷன் அவரு வைஃபை அவ்ளோ லவ் பண்றாரு! ஆனா இங்க சில பேருக்கு லவ்னா என்னன்னு கூடத் தெரியல. ஃபன்னி கய்ஸ்!” என்று சொல்லிவிட்டு ராகவை அலட்சியமாக ஒரு பார்வை பார்க்க அவனோ நீ இப்பிடியே ஒளறிகிட்டே இரு என்று நினைத்துக்கொண்டே சோஃபாவில் அமர்ந்தான்..
“பாலா… காபி” என்று சொல்லிவிட்டு அவந்திகாவின் புறம் திரும்பியவன் “நீ ஏதோ ட்ரீம் பாய் பத்திச் சொல்லிட்டு இருந்தியே… கன்டினியூ” என்று அவள் என்னதான் கூற வருகிறாள் என்று கேட்பதற்காகக் காத்திருந்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


