Header Image

 

கண்மணி 22

அரிஞ்சயனைத் திட்டிவிட்டு கையோடு செண்பகாதேவியைத் தன்னுடன் அழைத்து வந்த பவானி அவரைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அன்று வார இறுதி என்பதால் வேலையாட்கள் வழக்கம் போல விடுமுறை எடுத்துக்கொள்ள வானதியும் பாகீரதியும் லோகநாயகியுடன் சேர்ந்து சமையலறையில் கொட்டமடித்துக் கொண்டிருந்தனர். தான் பேசுவது அவர்களில் யார் காதிலும் விழுந்துவிடக் கூடாதென பதறியவளாய் தனியே அழைத்து வந்தாள். “ஏன் சித்தி இப்பிடி இருக்கிங்க? அவரு திட்டுனார்னா பதிலுக்குப் பேச வேண்டியது தானே… எங்கம்மாவ அப்பா அவ்ளோ லவ் பண்ணுறார்… ஆனா … Continue reading “கண்மணி 22”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 21

சிவசங்கர் பேசிவிட்டுச் சென்ற விசயம் யாவும் பவானியின் மனதில் புயலை உண்டாக்க அதன் தாக்கத்தை எதிர்கொள்ள இயலாதவளாக விறுவிறுவென அறையை விட்டு வெளியேறியவள் தோட்டத்தைத் தஞ்சமடைந்தாள். இத்தனை நாட்கள் காதலிக்க நேரமில்லை என்று மட்டும் சொன்னவன் இன்று காதலிக்கிறேனா இல்லையா என தெரியவில்லை என்கிறான். பெரியளவில் முன்னேற்றம் ஒன்றுமில்லை. ஆனால் எப்படி அவனால் இவ்வளவு சாதாரணமாக அனைத்தையும் மறக்க முடிந்தது என யோசிக்கும் போது அவளுக்குள் எரிச்சல் மண்டியது. அவன் பேசிய வார்த்தைகளுக்கும் அவனது செய்கைகளுக்கும் மன்னிப்பு … Continue reading “கண்மணி 21”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 12

என் கண்கள் தவிக்கும் அலைகள் என்றால், அவற்றை ஈர்க்கும் முழுநிலவு நீ. மீறவே முடியாத இந்த வசீகர ஈர்ப்பை யாரிடமிருந்து கடனாகப் பெற்றாய்? -நேத்ரன் நாட்கள் சிறகு கட்டிப் பறந்தன. வெண்பாவின் விரல்கள் வெளிர் நீல நிற நூலோடு சேர்ந்து, நேத்ரனின் நினைவுகளையும் சேர்த்து அழகாகப் பின்னிக்கொண்டிருந்தன. அவளது ஓய்வு நேரங்களில் உருவான அந்த அழகான கார்டிகன் ஆகாஷின் அளவிற்குக் கச்சிதமாக முற்றுப்பெற்றிருந்தது. இடையிடையே நேத்ரனிடம் என நினைத்தாலும், தேர்தல் காய்ச்சல் அவனை முழுமையாகச் சுருட்டிப் போட்டிருந்தது. … Continue reading “ஸ்வரம் 12”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 20

மணமகளின் தந்தை சுதர்சன் சுவாமிநாதனுக்குத் தூரத்து உறவு. அந்த முறையில் ஜெகத்ரட்சகன் சுதர்சனுக்கு அண்ணன் முறை வேண்டும். அதனால் தான் ஜெகத்ரட்சகனே நேரில் வந்திருந்தார். இல்லையெனில் மனைவியையோ மகனையோ அனுப்பி வைத்திருப்பார். ஆனால் வந்த இடத்தில் மகளையும் மருமகனையும் கண்டவருக்கு மனம் அலைபாய்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மணமேடையில் கண் பதித்தார். ஆனால் உள்ளமெங்கும் மகள் எப்படி இருக்கிறாளோ என்ற கவலை தான். அவளது பார்வை தன் புறம் திரும்பும் போதெல்லாம் மருமகன் ஏதோ சொல்வது கண்ணில் படவும் … Continue reading “கண்மணி 20”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 19

பவானியின் வாழ்க்கை சாந்திவனத்தில் எவ்வித குறைவுமின்றி இனிமையாய் நகர்ந்து கொண்டிருந்தது. அன்பான தோழிகள், அரவணைக்கும் தாத்தா பாட்டி, அக்கறையாய் கவனித்துக் கொள்ளும் அத்தை, மாமா மற்றும் சித்தியுடன் அவளது வாழ்க்கை ஜெகஜோதியாகச் சென்றது. அங்கே அவளுக்கு இருந்த இரு நெருடல்கள் அரிஞ்சயனும், சிவசங்கரும் மட்டும் தான். அரிஞ்சயனிடம் அவளுக்குச் சிறுவயதிலிருந்தே ஒட்டவில்லை. பெரியவளானதும் அவரது குத்தல் பேச்சுகளை அடையாளம் கண்டுகொண்டவளுக்கு அவருடன் இயல்பாகப் பேசிப் பழக தோணவில்லை. சிவசங்கரைத் தான் எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று அவளுக்குப் … Continue reading “கண்மணி 19”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 17

மறுநாள் விடியல் சாந்திவனத்துக்குப் பரபரப்புடன் தொடங்கியது. அதற்குக் காரணமானவள் பவானி தான். அவளிடம் முந்தைய நாளிரவு பேசிய அவளது தோழனின் வருகைக்காக வீட்டைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கென இருக்கும் நண்பர்கள் வானதியும் ஈஸ்வரும் மட்டுமே. அவ்வாறு இருக்கையில் அவனது வருகைக்காக அவள் பரபரப்பாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லையே! வானதிக்கோ அண்ணனின் திருமணத்துக்கு எடுத்த விடுப்பு முடிந்து அலுவலகம் செல்லும் பதற்றம் தொற்றிக் கொண்டது. எனவே அவளை விட்டுவிட்ட பவானி பாகீரதியைப் பிடித்துக் கொண்டாள். “பாகி இன்னைக்குப் … Continue reading “கண்மணி 17”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 11

எந்தப் பழக்கத்திற்கும் அடிபணியாதவன், இன்று உன் கண்களின் போதையில் என்னை முழுதாய் இழந்துவிட்டேன். இந்த அழகான அடிமைத்தனத்தின் தவிப்புகளைத் தீர்க்கும் ஒற்றை மறுவாழ்வு மையம் நீ மட்டும்தான். ராஜவிலாசம், மகாராஜநகர்… தயக்கத்தோடு சோபாவில் அமர்ந்திருந்த வெண்பாவிடம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தாள் நிருபமா. அவளுக்கு இப்போது கல்லூரி செமஸ்டர் தேர்வு விடுமுறை. “உங்க குர்தி கலெக்‌ஷன் நல்லா இருக்கு மதினி. எங்க வாங்குறீங்க?” குந்தவை அன்பாய்க் கொடுத்துவிட்டுப் போன காக்டெயில் பழச்சாறை அருந்திக்கொண்டிருந்தவள் புன்னகையோடு “விண்டேஜ் கிளாஸட் ஆஃப் கமலினு … Continue reading “ஸ்வரம் 11”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 15

ஜெகன் அசோசியேட்ஸ்… இளம் வழக்கறிஞர்கள் பட்டாளம் உற்சாகத்துடன் வேலையில் கண்ணாய் இருந்தனர். அவர்களில் பெண்களும் அடக்கம். ஜெகத்ரட்சகன் அவரது அலுவலக அறையில் வேலையில் மூழ்கியிருந்தார். அவரது நீண்டநாள் கிளையண்டான அமைச்சர் செழியன் இனி தன் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வது அரிது என்பதைப் புரிந்து கொண்டவர் தனது உதவியாளரிடம் செழியனது கோப்புகளின் மென்பிரதிகள் அனைத்தையும் அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு மற்றவற்றை அவரது அலுவலகத்தில் ஒப்படைத்து விடும்படி கட்டளையிட்டிருந்தார். அந்த வேலை முடியும் தருவாயில் இருக்க ஜெகத்ரட்சகனின் ஜூனியர் அந்தக் … Continue reading “கண்மணி 15”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 14

அஞ்சனா விலாசம்… ஜெகத்ரட்சகன் காலையுணவை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானவர் அருண் இன்னும் ஷார்ட்சும் டீசர்ட்டுமாய் சுற்றுவதைப் பார்த்துவிட்டுப் புருவம் சுருக்கினார். “அருண் ஆபிஸ்கு கிளம்பாம இன்னும் கேசுவலா இருக்கியே? உடம்பு எதுவும் சரியில்லையாப்பா?” “இல்லப்பா… நான் இன்னைக்கு ஆபிஸ்கு லீவ்… பவாவுக்கு இன்னைக்கு மறுவீடு சடங்கு பண்ணனும்னு அம்மா சொன்னாங்க… அவங்க வீட்டுல இருந்து யாரும் வந்தா உங்களுக்குப் பிடிக்காது.. அதான் நாங்களே அங்க போய் செய்ய வேண்டிய சம்பிரதாயத்தைச் செஞ்சு முடிச்சிட்டு வந்துடுறோம்” என்று … Continue reading “கண்மணி 14”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 13

மறுநாள் விடியல் பவானிக்கு இயல்பாய் அமைந்தது. அவள் எழுந்திருக்கும் போது சிவசங்கர் அங்கில்லை. மெதுவாக எழுந்தவள் அமைதியாக சில நிமிடங்கள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்து பால்கனியை அடைந்தவள் வீட்டைச் சூழ்ந்திருந்த மரங்களையும் தோட்டத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றாள். அந்த வீட்டின் வயது தான் அந்தத் தோட்டத்துக்கும். அதனாலேயே விருட்சங்கள் வீட்டின் உயரத்தைத் தொட்டிருந்தன. வெயிலின் சூடு சிறிது கூட அந்தப் பங்களாவின் மீது படாது தடுத்துக் கொண்டிருந்த அம்மரங்களைத் தங்களது வீடுகளாய் மாற்றிக் கொண்டிருந்த பறவைகளின் … Continue reading “கண்மணி 13”

 

Share your Reaction

Loading spinner