மறுநாள் காலை அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பிய அவந்திகா அவளுக்கு முன் தயாராகி இருந்த உஷாவை ஆச்சரியமாகப் பார்த்தபடியே கீழே வந்தாள்.
“உஷா! நீ எதுக்கு இப்போ ரெடியாகி இருக்க?”
“ஆபிஸ்க்குப் போகத்தான் ஹனிபி, இது என்ன கேள்வி?”
“வாட்? உன்னை யாரு இப்போ ஆபிஸுக்குக் கூப்பிட்டது? நீ ஒன்னும் வர வேண்டாம். நானும் ரித்தியும் எல்லாத்தையும் பாத்துக்குவோம். நீ நல்லா ரெஸ்ட் எடு போ”
“எவ்ளோ நேரம்தாண்டீ சும்மாவே இருக்க முடியும்? நான் அங்க வந்து சிஸ்டம் வொர்க்தான பண்ணப் போறேன்” என்று அவளைச் சமாளிக்க முயன்றாள்.
அவந்திகா அவள் கூற வந்த எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் “நீ வர வேண்டாம். அண்ட் திஸ் இஸ் ஃபைனல்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுச் சாப்பிட அமர்ந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளின் எதிர்ப்புற இருக்கையில் அமர்ந்தவள் “நீ இருந்தாலும் ரொம்பத்தான் பண்ணுற போ” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் வருண் ராகவ் வீணா என்று அனைவரும் வர, பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.
வீணா அவந்திகாவைப் பார்த்தவர் “அவந்திகா உனக்கும் ராகவுக்கும் தான் ஃபர்ஸ்ட் மேரேஜ் ஆச்சு. உங்களுக்கு அப்புறமா கல்யாணம் பண்ணுனவங்க எங்களுக்குக் குட் நியூஸ் சொல்லிட்டாங்க. நீங்க எப்போ சொல்லப் போறீங்க?” என்று சாதாரணமாகக் கேட்டு வைத்தார்.
வேண்டா வெறுப்பாகச் சப்பாத்தியைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தவளுக்கு இதைக் கேட்டதும் புரையேறியது. தண்ணீரைக் குடித்துச் சமாளித்தவள் அவளைக் கண்டுகேலியாகச் சிரித்த ராகவை முறைத்துவிட்டு வீணாவுக்குப் பதிலளித்தாள்.
“சோட்டிமா! ஏதோ அவங்களுக்குப் பல வருஷத்துக்கு முன்னாடியே நாங்க கல்யாணம் பண்ண மாதிரி சொல்லுறீங்க? அவங்க மேரேஜுக்கு ஜஸ்ட் டூ டேய்ஸ் பிஃபோர்தான் எங்க மேரேஜ் நடந்துச்சு”
“இருக்கட்டுமே! அப்பிடிப் பாத்தா கூட உங்களுக்குக் கல்யாணம் ஆகி 4 மாசம் ஆகுதேம்மா” என்று விடாமல் கேள்வி கேட்டார் அவர்.
என்னடா இந்தம்மா காலங்காத்தால என்னைக் கொஸ்டீனா கேட்டுச் சாகடிக்குது என்று எண்ணியவள் “ஆக்சுவலி இந்தக் கேள்வியை நீங்க ராகவைப் பாத்துத்தான் கேக்கணும். அவருதான் சொன்னாரு அவந்திகா நீயே ஒரு கொழந்தை மாதிரிதான் இருக்க, இப்போ நமக்கு எதுக்கு இன்னொரு கொழந்தை, கொஞ்சநாள் போகட்டும்னு. சோ நீங்க அவருகிட்ட கேளுங்க” என்று அவன்புறம் அவரைத் திருப்பிவிட்டு அவள் பாட்டுக்குச் சாப்பிட்டாள்.
ராகவோ “என்னம்மா பொய் சொல்லுறா ஜான்சி ராணி!” என்று மனதில் வியந்தவன் “யெஸ் சாச்சி. நானும் முதல்ல அந்த மாதிரிதான் நெனச்சேன். இருந்தாலும் பேபி பொறந்தா நல்லா இருக்கும்னு ரீசன்டா எனக்கே தோண ஆரம்பிச்சிடுச்சு.” என்று சொல்லவும்
வீணா “கேட்டுகிட்டியா சின்ன மருமகளே! என்னதான் ஹஸ்பென்ட் அண்ட் வைஃப் அந்நியோன்யமா இருந்தாலும் அவங்களோட கொழந்தைதான் அந்த அன்னியோன்யத்தைக் கடைசி வரைக்கும் காப்பாத்தப் போற ஒரு ஜீவன். அது இல்லாம உங்க உறவு என்னைக்குமே முழுமை ஆகாது” என்று அட்வைஸைப் பொழிந்தார்.
எல்லாவற்றையும் கேட்டவள் பொறுமையாக “இப்போ நீங்க பண்ணுனீங்களே இந்த அட்வைஸ் ஃப்ரீயா இல்ல சார்ஜ் எதாச்சும் பே பண்ணணுமா? சோட்டிமா அட்வைஸ் யாரு வேணாலும் பண்ணலாம்! பட் அதைக் கேட்டு நடக்குறது ஆப்போசிட் பர்சன் கைலதான் இருக்கு. இப்போ என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்க சொன்ன அட்வைஸ் என் மண்டைல ஏறவே இல்ல. சாரி” என்று சொல்லிவிட்டுக் கைகழுவச் சென்றாள்.
வீணா ராகவிடம் “நீ உன் பொண்டாட்டிக்குச் செல்லம் குடுத்துக் கெடுத்து வச்சிருக்க ராகவ்! எல்லாமே காலாகாலத்துல நடந்தாதான் நல்லது. ஒரு பொண்ணுக்குத் தாயாகிறது எவ்வளவு பெரிய பாக்கியம் தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டே சொல்ல அவரை முறைத்த கிஷோரைப் பார்த்ததும் அமைதியானார்.
கிஷோரோ “பய்யா! ஒரு கொழந்தையப் பெத்துட்டா மட்டும் போதாது. அதுக்கு என்ன பிடிக்கும், அத எப்பிடி வளக்கணும் இதெல்லாம் யோசிச்சு நடந்துக்கிறவங்கதான் ஒரு நல்ல அம்மா! அதுக்குக் கொஞ்சம் மெச்சூரிட்டி வேணும்! பாபி அதுக்குத்தான் கொஞ்சநாள் போகட்டும்னு சொல்றாங்க! ஏன்னா இங்க சில பேருக்கு மூணு கொழந்தைங்க இருந்தாலும் அவங்களைக் கவனிக்கிறத விட ஊர் சுத்துறதுதான் முக்கியம்னு தோணுது! பட் அவங்கல்லாம் பாபிக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டாங்க” என்று கடுப்புடன் சொல்லிவிட்டுப் பாதி சாப்பாட்டிலேயே எழுந்து சென்றுவிட்டான்.
ராதிகா தட்டுடன் அவன் பின்னாலே செல்லவும் அவந்திகாவுக்கு ராதிம்மா குடுத்தா இவன் சாப்பிடாமவா போய்டுவான் என்று மனதில் தோன்ற அவள் ராகவுடன் அலுவலகம் செல்லத் தயாரானாள்.
அவளை ஆபிஸில் விட்டுவிட்டு அவனது அலுவலகத்துக்குச் சென்றுவிட்டான் ராகவ்.
அதே நேரம் அவந்திகாவுக்கு உஷாவிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருக்க ரித்திமா தானே போய் அவளிடம் கேட்டு வருவதாகச் சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.
ரித்திமா ஏதோ விஷயமாக உஷாவைக் காண வந்தவள் அவளிடம் லேப்டாப்பைக் காட்டி ஏதோ கேட்டுக்கொண்டிருந்தாள். உஷா தண்ணீர் குடிக்க எழுந்திருக்க அவளை அமரச் சொல்லிவிட்டுத் தானே எடுத்து வரச் சென்றாள்.
வேகமாக நடந்து வந்தவள் எதிரே வந்த கிஷோரைக் கவனிக்கவில்லை. தண்ணீர் ஜக்குடன் அவன் மீது மோத அவனது கோட் முழுவதும் ஈரமாகிவிட்டது.
கடுப்புடன் இடித்தவரைத் திட்டப் போனவன் தன் எதிரே நின்றுகொண்டிருந்த ரித்திமாவைப் பார்த்ததும் ஒன்றும் சொல்லாமல் அவளை அமைதியாகப் பார்த்தான்.
ரித்திமா பதற்றத்துடன் “சாரி கிஷோர்! நீ வந்தத நான் கவனிக்கல!” என்று சொல்லிவிட்டு அவனைப் பாவமாகப் பார்க்க அவன் அவளைக் கேலியாகப் பார்த்துப் புன்னகைத்தான்.
“நமக்குள்ள என்ன சாரி ரித்தி?” என்று அவன் சாதாரணமாகத்தான் கூறினான். ஆனால் ரித்திமாவோ அவன் கோபத்தில் இருப்பதாக நினைத்தவள் “நான் வேணும்னே இடிக்கல கிஷோர்” என்று சங்கடத்துடன் விளக்கினாள்.
அவனோ அவளைக் கிண்டலாகப் பார்த்தவன் “இடிச்சாலும் தப்பில்லங்கிறேன்! இவ்ளோ அழகா சாரி கேட்டா யாருக்குத்தான் மன்னிக்கத் தோணாது” என்று ரசனையுடன் அவளைப் பார்த்தபடிக் கூற அவளோ புருவத்தை உயர்த்தியவள் “உன்கிட்ட போய்ச் சாரி கேட்டேன் பாரு! என்னைச் சொல்லணும்! பை த வே சாரி” என்று சொல்லிவிட்டு முறைத்தபடி நின்றவளைப் பார்த்துக் குழம்பினான் அவன்.
“இப்போ மறுபடி எதுக்கு சாரி?”
“பிகாஸ் உனக்குத்தான் அழகா சாரி கேட்டா ரொம்பப் பிடிக்குதே” என்று சொன்னவள் கையிலிருந்த ஜக்கில் மீதியிருந்த தண்ணீரையும் அவன் கோட்டில் ஊற்றிவிட்டு வேறொரு ஜக்கில் தண்ணீர் கொண்டு சென்றாள்.
கிஷோரோ சிறிதும் கோபமின்றித் தன் கோட்டை உதறிக்கொண்டவன் “பாலா! என் கோட்டை ட்ரையர்ல போட்டுருங்க” என்று சொல்லிவிட்டு வேறு உடை மாற்றுவதற்காகச் சென்றுவிட்டான்.
கடுப்புடன் தண்ணீரை நீட்டிய ரித்திமாவைப் புரியாது பார்த்தாள் உஷா.
“என்னடி ஆச்சு? ஏன் உன் முகம் ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி இருக்கு?”
“ஏன்டி சொல்ல மாட்ட? உன் மொத்த குடும்பத்துக்கும் ஹனிபி சொல்லுற மாதிரி கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்திதான்”
“அஹான்! இருந்துட்டுப் போறோம்! இப்போ இந்தக் காது மூக்குல புகை வர்ற அளவுக்கு உன்னைக் கடுப்பாக்குனது யாரு?”
“வேற யாரு? உன்னோட சோட்டிம்மா பெத்துப் போட்டுருக்காங்களே ஒரு ஏலியன், அதுதான்”
“யூ மீன் கிஷோர்? ஏய் ஹீ இஸ் சோ குட் னா”
“அவன் உனக்கு சோ குட்டா? போடி அவன் 100 வருண், 1000 ராகவுக்குச் சமம். உங்க முன்னாடி சைலண்டா இருக்கிறதால அவனை அண்டர் எஸ்டிமேட் பண்ணாத”
“ஓகே ஓகே! டென்ஷன் மத் கரோ” என்று சொல்லி அவளை அமர வைத்தவள் வேலை விஷயங்களைப் பேச அதன்பின் ரித்திமா கிஷோரை மறந்தாள்.
இரவு எப்போதும் போலத் தோட்டத்தில் தனிமையில் அமர்ந்து பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த அவந்திகா திடீரென்று நட்சத்திரம் எரிந்துகொண்டே விழுவதைக் கண்டதும் கண்ணை மூடி “உஷாவுக்கு என்ன மாதிரியே ஒரு கியூட்டான, ஸ்மார்ட்டான பொண்ணு பொறக்கணும் காட்” என்று மெதுவாக முணுமுணுத்துவிட்டுக் கண்ணைத் திறந்தவள் பக்கத்தில் அவள் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்த ராகவைக் கண்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டாள்.
“இங்க பாரு மைதாமாவு! எனக்கு ஹார்ட் கொஞ்சம் வீக்! சோ இனிமே சொல்லாமக் கொள்ளாம இப்பிடி வந்து உக்காந்து மனுஷிக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்காத”
“நான் உன்னோட வேண்டுதலைக் கேட்டுட்டேன் ஜான்சி ராணி. பட் எனக்கு ஒரு விஷயம் புரியல, பாபிக்கு ஏன் உன்னை மாதிரி பொண்ணு பொறக்கணும்?”
“இது கூடவா புரியல! என்னை மாதிரி ஒரு ஸ்மார்ட் கேர்ள் உஷாக்குப் பொறந்தா அதுக்கு அப்புறமா அவ அந்தப் பொண்ண நெனச்சு எந்தக் கவலையும் படத் தேவையில்ல! ஷீ வில் டேக் கேர் ஆஃப் ஹெர் ஓன்!”
“எப்பிடி? உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் இன்னும் நீ கௌசிம்மாவ எதாச்சும் பண்ணி டென்ஷன் பண்ணுறியே அந்த மாதிரியா?” என்று அவன் பதிலுக்குக் கேட்கவும் அவனைப் பார்த்துச் சிரித்து வைத்தாள் அவந்திகா.
“உன்னோட சென்ஸ் ஆஃப் ஹியூமரை நீ என்கிட்ட ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் இல்ல! அண்ட் அதப் பாத்துல்லாம் நான் இம்ப்ரெஸ்ஸும் ஆக மாட்டேன்”
“உன்னை இம்ப்ரெஸ் பண்ணுறதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல ஜான்சி ராணி! நீ ஆல்ரெடி என்னைப் பாத்து இம்ப்ரெஸ் ஆனதுல்லாம் எனக்குத் தெரியும்! பட் என்ன, நீ ஒத்துக்கவே மாட்ட. பிகாஸ் நீ அத அக்செப்ட் பண்ணிட்டனா உன் தலைல இருக்கிற கிரீடம் அப்பிடியே கீழே விழுந்திரும் பாரு”
“போடா! நான் அப்பிடித்தான் பண்ணுவேன்! என்னப் பண்ணுவ நீ?” என்று சொல்லிவிட்டு யூடியூபில் காமெடி பார்க்க ஆரம்பித்தாள்.
அவளுடைய போனைப் பிடுங்கியவன் “எப்போ பாரு உனக்கு லேப்டாப், அது இல்லனா போன்! இது ரெண்டையும் விட்டுட்டுக் கொஞ்சம் பக்கத்துல இருக்கிற மனுஷனையும் பாரு” என்று தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
“இங்க பாரு மைதாமாவு மரியாதையா என் போனைக் குடு” என்று அவள் எழுந்து நின்று மிரட்டவும் அவன் அலட்சியமாகப் பார்த்து வைத்தான்.
“குடுடா” என்று அவனது தலைமுடியைப் பிடிக்க “ஏய்! ராட்சசி! வலிக்குது” என்று அவன் கத்த “அப்போ என் போனைக் குடு” என்று பதிலுக்கு மிரட்டினாள் அவள்.
அவன் சட்டென்று ஊஞ்சலிலிருந்து எழும்பவும் அவன் தலை அவளுக்கு எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்த்தவள் தலைமுடியைப் பிடிக்க முடியாமல் போகவே “இப்போ நீ என் போனைக் குடுக்கலனு வைய்யேன், நான் நேரா ராதிம்மா கிட்ட போய்ச் சொல்லிடுவேன்” என்று அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.
அவனோ பாக்கெட்டில் கை வைத்தபடியே “போய்ச் சொல்லிக்கோ போ” என்று அலட்சியமாகச் சொன்னவன் “பட் அதோட உன் போனை நீ மறந்துடு, நீ அம்மா கிட்ட சொன்னா நான் நேரா உன் போனை பாத்டப்ல போட்டுக் குளிப்பாட்டிடுவேன்” என்று சொல்லியவாறு வேகமாக வீட்டினுள் சென்றான்.
“என்னது? டேய் அதுல என்னோட கிளையண்ட்ஸ் காண்டாக்ட் எல்லாம் இருக்குடா” என்று அவன் பின்னே ஓடியவள் ஹாலில் அமர்ந்திருந்த தாதியைப் பார்த்ததும் ஓட்டத்தை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வேகமாகப் படிகளில் ஏறினாள்.
வேகமாகத் தங்கள் அறைக்குள் சென்றவள் அவன் அங்கில்லாததைக் கண்டு திகைத்தாள்.
பின்னர் குளியலறையில் தண்ணீரின் சத்தம் கேட்டதும் “அடப்பாவி! என் போன்” என்று சொல்லிக்கொண்டே ஓடி உள்ளே வந்து பார்த்தவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
ராகவ் காலை ஆட்டியபடி பாத்டப்பின் விளிம்பின் மீது உட்கார்ந்து தண்ணீரை மட்டும் திறந்து விட்டிருந்தான். போன் இன்னும் அவன் கையில்தான் இருந்தது.
“ஏன்டா இப்பிடி? என்னைத் டார்ச்சர் பண்ணுறதுக்குனே உங்க அப்பா அம்மா உன்னைப் பெத்தாங்களா?” என்று மூச்சு இளைத்தபடிக் கேட்டவளை நக்கலாகப் பார்த்தான் ராகவ்.
“நாட் பேட், நல்லா வேகமா ஓடுறியே! ரன்னிங் ரேஸ்ல கலந்துக்கலாம் நீ” என்று அவளை இன்னும் சீண்ட அவள் வேகமாக அருகில் வந்து போனைப் பிடுங்க முயன்றாள்.
அவன் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றிக்கொண்டே “அது எப்பிடி என்னைப் பாத்து இம்ப்ரெஸ் ஆனாலும் நீங்க அத ஒத்துக்கவே மாட்டீங்க, கேட்டா நான் அப்பிடித்தான் பண்ணுவேன்னு என்கிட்டயே திமிரா சொல்லுவீங்க” என்று கிண்டலாகக் கூற அவந்திகா “ப்ளீஸ் ப்ளீஸ் ராகவ்! எனக்கு உன் கை எட்ட மாட்டிக்குதுடா! போனைக் குடுத்துடு ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
“இத்துணூண்டு இருந்துட்டு என்ன சேட்டை பண்ணுற நீ? உன் போனை சும்மா உன்கிட்ட குடுக்கலாமா? நெவர்” என்று சொல்லிவிட்டு அவளை ஒரு குறும்புப் பார்வை பார்த்தான்.
அவந்திகா மனதினுள் “அவந்திகா! அவன் கிரிமினல்தனமா ஏதாச்சும் யோசிக்கிறதுக்குள்ள நீ ஏதாச்சும் பண்ணி அந்த போனை வாங்கப் பாரு” என்று எண்ணிக்கொண்டவள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவன் போனைக் கொடுக்கவில்லை.
முடியாமல் போகவும் கடுப்புடன் “சரி சரி! நான் ஒத்துக்கிறேன். நான் இம்ப்ரெஸ் ஆயிட்டேன். போதுமா? போனைக் குடு தெய்வமே” என்று பல்லைக் கடித்துக் கேட்டவளை ஆச்சரியமாகப் பார்த்தான் ராகவ்.
“நீ இப்பிடிச் சொன்னா மட்டும் நான் குடுத்துடுவேனா? அதுல்லாம் முடியாது” என்று உறுதியாகச் சொல்லி அவளைக் கூரியவிழிகளால் அளந்தபடியே குறும்புடன் “உனக்கு உன்னோட போன் வேணும்னா கிஸ் மீ” என்று கண்ணை மூடிக்காத்திருக்க அவந்திகா அவன் கன்னத்திலேயே பட்டென்று அடித்தாள் (மெதுவாகத்தான்).
“உன் புத்தி வர வர மோசமாப் போயிட்டுருக்கு. இது நல்லதுக்கு இல்ல” என்று சொல்லிவிட்டு அவன் பார்வையைச் சந்திக்க இயலாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“நான் நல்லாத்தான் இருக்கேன் ஜான்சி ராணி! உனக்குத்தான் மூளை இன்னும் 5 வயசுல இருந்து 24 வயசுக்கு ஏத்த மாதிரி மெச்சூர் ஆகாம இருக்கு. அதெல்லாம் ஏன் வீணா பேசிக்கிட்டு? உனக்கு உன்னோட போன் வேணும்னா நீ என்னைக் கிஸ் பண்ணித்தான் ஆகணும்”
“முடியாதுடா!”
“அப்போ போனை மறந்துடு” என்று பாத்டப்பினுள் போடச் செல்ல அவள் வேகமாக அவனது கையைப் பிடித்துத் தடுத்தாள்.
அந்தக் கையிலேயே இதழை ஒற்றிவிட்டு எடுக்க ராகவ் அவளை ஒரு வினோதப் பார்வை பார்த்தான்.
“இதுக்குப் பேரு கிஸ்ஸா உங்க ஊருல?”
“ஆமா… சரி போனைக் குடு”
அவனோ கையை உதறிக்கொண்டு “இதுல்லாம் கணக்குல வராது” என்று சொல்லிக் கண் மூடி நின்று “கேரி ஆன்” என்று சொல்ல அவளுக்கு இனி அவனை ஏமாத்த முடியாது என்று தோன்ற அவன் அருகில் சென்றாள்.
மெதுவாக எம்பிப் பெருவிரலால் நின்றவள் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட ராகவ் அவளின் இதழின் ஸ்பரிசத்தை உணர்ந்தபடியே அதில் தன்னை இழக்கத் தொடங்கினான்.
எவ்வளவு நேரம் இவ்வாறு நின்றார்கள் என்று தெரியவில்லை. அவந்திகாவின் போன் அடிக்கவும் அவள் அவனை விட்டு விலகினாள்.
ராகவ் யாரென்று பார்க்க அவளின் கிளையண்ட் என்று வரவே அவளிடம் போனைக் கொடுக்க அவளோ அவனது முகத்தைப் பார்க்காமலே போனை வாங்கிக்கொண்டு “ஹலோ! சொல்லுங்க” என்று பேசிக்கொண்டே அந்த இடத்தைக் காலி செய்தாள்.
போன் பேசி முடித்துவிட்டு வந்தவள் அவனைத் தவிர்க்க எவ்வளோ முயல அவனது குறுகுறு பார்வை அவளைத் துளைப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
நேரே இடுப்பில் கை வைத்தபடி அவனை முறைக்க “ஜான்சி ராணி! சும்மா சொல்லக்கூடாது. வாட் அ கிஸ்” என்று சிலாகிக்க அவள் தன் முகம் சிவப்பதை மறைக்க அரும்பாடுபட்டாள்.
அந்தச் சிவந்த முகத்தை ரசித்துக்கொண்டே அருகில் வந்தவன் அவளை இடையில் கை வைத்து இழுத்தவன் “இன்னொரு கன்னம் என்ன பாவம் பண்ணுச்சு?” என்று முகத்தை அவளது முகத்தின் அருகில் கொண்டு வர அவளோ நகர வழியின்றி “ராகவ்!” என்று அவனது பெயரை மட்டும் உச்சரிக்க அவன் கேலியுடன் “யெஸ் நான் ராகவ்தான். சோ வாட்?” என்று கேட்டு அவளை இன்னும் படபடக்க வைத்தான்.
“ஒரு கிஸ்ஸுக்கு உன்கிட்ட எவ்ளோ போராட வேண்டியதா இருக்கு” என்று கிண்டலடித்தான்.
பின் அவளுடைய கண்களை ஊடுருவிப் பார்த்து “லிசன் ஜான்சி ராணி! இனிமே என்னோட மார்னிங் அன்ட் நைட் ரெண்டுமே உன்னோட கிஸ்ல ஆரம்பிச்சு அதுலதான் முடியும். நீ அடம் பிடிச்சாலோ இல்ல பிடிவாதம் பிடிச்சாலோ நோ யூஸ்! ஓகே” என்று சொல்லி அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டுத் தன் மனதை அவளுக்குத் தெரியப்படுத்திவிட்டுச் சென்றான்.
அவனது இந்தச் செய்கையில் செய்வதறியாது திகைத்து நின்ற அவந்திகாவுக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவே இல்லை….
காலையில் கண்விழித்த அவந்திகாவுக்குத் தலை பாரமாக இருக்கவே எழுந்து அமர்ந்தவள் தலையைக் கைகளால் தாங்கியபடியே உட்கார்ந்துவிட்டாள்.
அவள் இன்னும் கீழே வராமல் இருக்கவே ராதிகா மேலே வந்தவர் அவள் தலையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் “அவந்திகா என்னாச்சுடா? உடம்பு எதும் சரியில்லையா?” என்று வந்து அவளின் நெற்றி கழுத்தைத் தொட்டுப் பார்த்தார்.
“ராதிம்மா! நான் தூங்க லேட் ஆயிடுச்சு. அதான் ஹெட் கொஞ்சம் பெயினா இருக்கு” என்று அவர் மடியில் மீண்டும் படுத்துக்கொண்டாள்.
“நான் இன்னைக்கு ஆபிஸ் போகல ராதிம்மா” என்று சொன்னவளைக் கவலையோடு பார்த்தார் ராதிகா. அவள் என்றுமே அப்படிச் சொல்பவள் அல்ல என்பது இவ்வளவு நாட்களில் அவர் அறிந்த உண்மை.
“நான் வேணும்னா கீழே போய் உனக்குக் கஷாயம் வச்சுக் கொண்டு வரவா?” என்று அவர் பரிவுடன் கேட்கவும் சட்டென்று எழுந்தவள் “கஷாயமா? அதுல்லாம் எதுக்கு? ஐயாம் ஆல்ரைட் நவ், நான் குளிச்சிட்டு ஆபிஸ் கெளம்பப் போறேன். பை!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று குளியலறையில் நுழைந்தாள்.
“இந்தப் பொண்ணைக் கௌசல்யா எப்பிடித்தான் சமாளிச்சாங்களோ?” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே அவர் எழும்புகையில் உள்ளே நுழைந்தான் அவரது சீமந்த புத்திரன்.
“மாம்! என்னாச்சு? நீங்க இவ்ளோ காலைலயே இங்க?” என்று கேட்க அவரோ செல்லமாக “ஏன்டா? நான் வரக்கூடாதா?” என்று கேட்டு முறைக்க அவரைச் சிரித்துக்கொண்டே அணைத்தவன் “இந்த வீட்ல நீங்க உங்க இஷ்டம் போல எங்க வேணாலும் போகலாம்” என்று சொல்ல அவர் அவந்திகா விஷயத்தைக் கூறிவிட்டு அவளைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுச் சென்றார்.
“அவளுக்கு என்ன? நல்லாதான இருந்தா” என்று யோசித்தவாறே நின்றவன் அவள் குளித்துவிட்டு வரவும் அவளிடமே கேட்டுவிட்டான்.
“ஜான்சி ராணி! உனக்கு உடம்பு எதும் சரியில்லயா?”
“உனக்கு என்னைப் பாத்தா உடம்பு சரியில்லாத மாதிரியா தெரியுது? நைட் தூங்க லேட் ஆனதால கொஞ்சம் ஹெட்பெயின். அப்போதான் மதர் இந்தியா வந்தாங்க. ஏதோ கஷாயம் கொண்டு வர்றேனு சொன்னதும் என் தலைவலி பறந்து போச்சு” என்று சொல்லிவிட்டுக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே பொட்டு வைத்தாள்.
தயாராகிக் கீழே வந்தவள் கிஷோரும் வீணாவும் விவாதிப்பதைக் கேட்டுக்கொண்டே இறங்கிவந்தாள்.
“உங்க இஷ்டத்துக்குல்லாம் என்னால இருக்க முடியாது. நான் என்னோட லைஃப நான் நெனச்ச மாதிரிதான் வாழுவேன்”
“நான் மிஸ்டர் வர்மாவோட பொண்ணை முதல்ல பாத்ததுமே அவதான் என்னோட மருமகள்னு முடிவு பண்ணிட்டேன் கிஷோர்”
“அவ உங்க மருமகளா இருந்தா எனக்கு என்ன? என்னோட வைஃபா நான் நெனைக்கிற பொண்ணுதான் வர முடியும். தேவையில்லாம என் லைஃப்ல நீங்க எந்த டிசிஷனும் எடுக்காதீங்க ப்ளீஸ்” என்று கத்திவிட்டுச் சென்றான்.
வீணாவைப் பார்க்க அவந்திகாவுக்குக் கஷ்டமாக இருந்தாலும் அவர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட அவள் விரும்பவில்லை. இருந்தாலும் கிஷோருடன் பேசிப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவள் அவனிடம் இன்று தன்னை அலுவலகத்திற்கு அவனது காரில் ட்ராப் செய்ய முடியுமா என்று கேட்டு அவனுடன் சென்றுவிட்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


