Header Image

 

பிரியம் 4

“எங்களோட டிஜிட்டல் உலகத்துல எல்லாமே வித் இன் அ செகண்ட்ல எங்க கைக்கு வந்துடும். காய்கறில ஆரம்பிச்சு ஜெராக்ஸ் பேப்பர் வரைக்கும் பத்து நிமிசத்துல என்னோட வீட்டு வாசலுக்கு ஆப்ஸ் மூலமா டெலிவரி ஆகிடும். ஆனா காதல் அப்பிடி ‘டென் மினிட்ஸ் டெலிவரி’ மாதிரி கைக்கு வந்துடுமா என்ன? நமக்குச் சரியான துணையா ஒருத்தன் வர்ற வரைக்கும் நூறு வருசம் ஆனாலும் காத்திருக்கலாம்னு ‘The Selection’ நாவல்ல கியாரா காஸ் சொல்லிருக்காங்க.” –ப்ரியம்வதா அறைக்குத் திரும்பியதும் அன்னையின் … Continue reading “பிரியம் 4”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 1

“ஏதோ ஒரு கணக்குக்காகவோ அல்லது கடமைக்காகவோ வாழ்றது காதலே இல்லை. ஒருத்தரோட ஆன்மாவும் நம்ம ஆன்மாவும் ஒரே மெட்டீரியல்ல செஞ்சதுனு தோணணும். அந்த மிரர் சோலுக்காகத்தான் நான் காத்திருக்குறேன்!” –பிரியம்வதா ஸ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர்… ‘மதுமிதா அண்ட் ஆரண்யன் வெல்கம்ஸ் யூ’ என்று அலங்கார விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பலகை ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த திருமணத்திற்கான அடையாளமாய் நின்றிருந்தது. வழக்கமான மஞ்சள் விளக்குகளுக்குப் பதிலாக, சங்கீத் என்பதால் ‘நியான் ப்ளூ’ மற்றும் ‘மெஜந்தா’ நிற … Continue reading “பிரியம் 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 32

கிருஷ்ணஜாட்சியிடம் நீரஜாட்சி வீட்டை நோக்கி கை காட்ட பட்டாபிராமனின் குரல் அவள் காதிலும் தெளிவாக விழுந்தது. அவளால் அப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஏனெனில் இந்த விவகாரத்தில் அவளால் இன்னும் சரியான ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. முதலில் அவளால் ஹர்சவர்தனின் காதல் என்ற வார்த்தையையே நம்ப முடியவில்லை எனும் போது மற்றவற்றை யோசிக்க அவளுக்கு இப்போது அவளுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. எனவே நீரஜாட்சியிடம் பட்டாபிராமனைச் சமாதானம் செய்துவிட்டு வருமாறு கூறியவள் அவுட் … Continue reading “பூங்காற்று 32”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 28

நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆஃப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை நீரஜாட்சிக்கு. அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான் ரகுநந்தன். தோட்டத்தில் அமர்ந்திருப்பவளைக் கண்டதும் அவளை நோக்கிச் சென்றவன் “இங்கே உக்காந்து என்ன பண்ணிண்டிருக்க?”என்ற கேள்வியுடன் அவனும் ஊஞ்சலில் அமர நீரஜாட்சி நகம் கடிப்பதை நிறுத்திவிட்டு கவலையுடன் அவனைப் பார்த்தாள். “கிருஷ்ணாவும் லின்னும் வரலை! அவங்களுக்கு … Continue reading “பூங்காற்று 28”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 25

மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நீரஜாட்சி திரும்பிய போது நேரம் கிட்டத்தட்ட ஏழு மணியை நெருங்கியிருந்தது. ஸ்கூட்டியைப் பூட்டிவிட்டு சாவியுடன் அவுட் ஹவுஸை நோக்கி நடைப்போட்ட போது ரகுநந்தனின் கார் வீட்டின் நுழைவாயிலில் உள்ளே வருவதைக் கண்டவள் அதைக் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் செல்ல முற்பட அதற்குள் காரில் இருந்து இறங்கியவன் “நீரு” என்று அழைத்ததில் அங்கேயே நின்றபடி திரும்பினாள் அவள். என்ன என்றவாறு அவனைப் பார்க்க ரகுநந்தன் சாவகாசமாக அவள் அருகில் வந்தவன் அவள் கையைப் … Continue reading “பூங்காற்று 25”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 23.2

அந்த வீட்டுக்கு மதுரவாணி முதல் முறை போன போது தான் அவளுக்கு அறிமுகமாயினர் விஜயலெட்சுமியும், ஆதிவராஹனும். ஆதிவராஹன் மைதிலியின் சகோதரன் என்றதும் அவனைக் கண்டுப் புன்னகைத்தாள் மதுரவாணி. அவனும் மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பதால் அவனிடம் அவள் சகஜாமாகப் பேசவே இதைக் கண்ட மைதிலியின் அத்தை மகளான விஜயலெட்சுமிக்கு அவளை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. விஜயலெட்சுமி ஆதிவராஹனை தனது வருங்கால கணவனாக எண்ணி அந்நாளுக்காக காத்திருந்தவளுக்கு தன்னுடைய கனவு மதுரவாணியால் நாசமாகி விடுமோ என்ற அச்சம் வேறு … Continue reading “பூங்காற்று 23.2”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 23.1

நீராஜாட்சி கிருஷ்ணஜாட்சியுடன் தோட்டத்தில் கால் பதித்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தது ரகுநந்தனின்  கார். காரிலிருந்து பட்டாபிராமனின் தோளைப் பிடித்து அவரை இறக்கி விட்டவன் அவர்களுடன் வந்த கரோலினிடம் அவரை அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு “மெதுவா நடங்க தாத்தா” என்றபடி பார்வையை வீட்டை நோக்கித் திருப்பவும் அங்கே கையில் சூட்கேசுடன் நின்று கொண்டிருந்த சகோதரிகளையும் கண்டு அதிர்ந்தான். இந்த திருமணம் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது அவன் அறிந்தது தான். ஆனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு என்னவாயிற்று … Continue reading “பூங்காற்று 23.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 22

பத்மாவதி நடந்த எதையும் நம்ப இயலாதவராய் இடிந்து போய் நின்றவர் மீண்டும் ஒரு முறை மணமேடையில் மகனுடன் நின்றிருந்த கிருஷ்ணஜாட்சியை நோக்க அவள் கழுத்திலிருந்த மாங்கல்யம் அவரைப் பார்த்துச் சிரித்தபடி நடந்தது அனைத்தும் உண்மையே என்று அவர் முகத்தில் அறைந்தது. அவரின் மனக்கண்ணில் அரை மணி நேரத்துக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் நிழலாடத் தொடங்கின. பட்டாபிராமன் பேத்தியின் பேரனின் கையையும் சேர்த்து வைத்து கண்ணீர் உகுக்க கூட்டத்தினர் இன்னும் சளசளத்துக் கொண்டு தான் இருந்தனர். வேங்கடநாதன் பேரன் … Continue reading “பூங்காற்று 22”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 20

 நிச்சயதார்த்த நாளின் ஆரம்பமே ஹர்சவர்தனுக்குச் சோதனையாக தான் ஆரம்பித்திருந்தது. முடிந்தவரை கிருஷ்ணஜாட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும் என்ற உறுதியில் அவன் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டான் தான். ஆனால் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகளைச் செய்வதற்கு ரகுநந்தனும் நீரஜாட்சியும் சென்றுவிட்டதால் அவனது அன்னை மூச்சுக்கு முன்னூறு முறை கிருஷ்ணஜாட்சியை அழைத்து வைக்க அந்த வீட்டில் அவளது பிரசன்னமே அவனது உறுதியை சிறிது சிறிதாக நிலை குலைத்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக மாலை வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டவன் மண்டபத்துக்கு வந்ததும் தான் … Continue reading “பூங்காற்று 20”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 18

அன்று வீட்டுக்குத் திரும்பிய ரகுநந்தனுக்கு அவன் தந்தையிடமிருந்து கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு வருமாறு அழைப்பு வர நீரஜாட்சியை வீட்டில் இறக்கிவிட்டு கம்பெனியை நோக்கிச் சென்றான். அண்ணன் நிச்சயதார்த்தம் ஒரு புறம் இருந்தாலும் அவனது இலட்சியமான அந்த கம்பெனியும் அவனது மனதிலிருந்து அகலவில்லை. அங்கே சென்றதும் கம்பெனி செகரட்டரி, ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகர் அனைவருக்கும் மகனை அறிமுகப்படுத்தி வைத்த வேங்கடநாதன் இனி கம்பெனியின் பொறுப்பை அவன் தான் பார்த்துக் கொள்ளப் போகிறான் என்பதையும் அவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அவனுக்கு … Continue reading “பூங்காற்று 18”

 

Share your Reaction

Loading spinner