அதே நேரம் வீட்டில் ராதிகா தியாவை அழைத்து அவள் செய்த காரியத்தைப் பற்றி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்.
“ராதி ஆன்ட்டி! நீங்களும் என்னைப் புரிஞ்சிக்காமப் பேசுனா என்ன அர்த்தம்? நான் ராகவ் மேல உள்ள கேர்லதான் அவந்திகா மேல கோவப்பட்டேன்… அவ இப்பிடி விளையாடிகிட்டே இருந்தா அவனால சாப்ட முடியாதுனுதான்” என்று சமாளித்தாள் தியா.
அவளைக் கேலியாகப் பார்த்த ராதிகா “அவ ராகவோட வைஃப் மா. அவளை விடவா உனக்கு ராகவ் மேல அக்கறை இருந்திடப் போகுது?” என்று கேட்டு வைத்தார்.
அதே நேரம் “அத விடு. மகன் மருமகளாவே இருந்தாலும் புருஷன் பொண்டாட்டி விஷயத்துல தலையிடக் கூடாதுன்னுதான் நாங்களே அமைதியா இருக்கோம். நீ ஏன் தேவையில்லாம அவந்திகாவ கத்துற தியா?” என்று பிரியாவும் தியாவை வறுத்தெடுக்க அவள் மாட்டிக்கொண்டு விழித்தாள்.
“பிரியா ஆன்ட்டி! நீங்களுமா? தாதி! நீங்க சொல்லுங்க…. நானும் ராகவும் லவ் பண்ணுறப்போ நான் ராகவ் பக்கத்துல உக்காரப் போனா கூட நீங்க என்ன சொல்லுவீங்க? பெரியவங்க முன்னாடி இப்பிடிலாம் பழகக் கூடாதுன்னு சொல்லுவீங்கதானே! இப்போ அதையே அவ பண்ணுறப்போ மொத்த குடும்பமும் சேந்து ரசிக்கிறீங்க? யாருக்காகவும் குடும்பத்தோட பழக்கவழக்கங்களை மாத்திக்க மாட்டோம்னு சொன்ன நீங்களே இன்னைக்கு உங்க ரெண்டு மருமகள்களுக்காக இவ்ளோ விஷயங்களை ஏன் மாத்திகிட்டீங்க?” என்று சுமித்ராவை நோக்கி அடுத்த கேள்வியை வீசினாள்.
“அதுக்குப் பதில் உன்னோட கேள்வியிலேயே இருக்கு தியா. புரியலயா? அவங்க ரெண்டு பேரும் இந்த வீட்டோட மருமகளுங்க. அவங்களுக்காக எதை வேணுனாலும் மாத்திக்கலாம். இனிமே நீ ராகவப் பத்தி…” என்று பேச முற்பட்டவரை அமைதியாக இருக்குமாறு கண் காட்டினார் ராதிகா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பின்னர் அவரே “இந்த வீட்டோட மருமகள்களைப் பத்தியோ இல்ல எங்க பையன்களைப் பத்தியோ இனிமே நீ கவலைப்பட வேண்டிய அவசியம் கெடையாது… அவங்களை நாங்க பாத்துக்கிறோம்… அதே மாதிரி இன்னொரு தடவை என்னோட ராகவ் உன்னை லவ் பண்ணுனாங்கிற வார்த்தை உன் வாயில இருந்து வரவே கூடாது… ஏன்னா எனக்கு எல்லாமே தெரியும்… நீ யாருன்னும் தெரியும்… நீ பண்ண காரியம் என்னன்னும் தெரியும்… இவ்ளோக்கும் மேல உன்னை இங்க தங்க அலோ பண்ணதுக்கு ஒரே காரணம் நீ வீணாவோட அண்ணன் பொண்ணுங்கிறது மட்டும்தான்… அதை மறந்து நானா எதுவும் செய்யுற நெலைமைக்கு என்னைப் போக வச்சிடாத…. வீணா அவளுக்குப் புத்தி சொல்லிப் புரிய வை.. இல்லைனா நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது” என்று வீணாவுக்கும் ஒரு குட்டு வைத்துவிட்டுச் சென்றார்.
அனைவரின் ரியாக்ஷனையும் பார்த்து அதிர்ந்தவளாய் நின்ற தியா ராகவிடம் தனியே பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். அவனுக்கு எல்லாவற்றையும் புரியவைத்துவிடலாம். அப்புறமாக இந்தக் குடும்பத்தினரைச் சமாளிப்பது சுலபம் என்று அடுத்த கணக்கைப் போட ஆரம்பித்தாள்.
அதே நேரம் சன் டியூ அலுவலகத்தில் அவந்திகா தோழிகளிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“இந்த உலகத்துல லவ் ஃபெயிலியர் இல்லாதவங்க ரொம்ப கம்மி… பட் இப்பிடித் தன்னோட எக்ஸைப் பத்திப் புகழ்ந்து பேசுறவன் இவன் மட்டும்தாண்டி” என்று கடுப்பாகக் கூறிய அவந்திகாவைப் பார்த்துக் கொண்டிருந்தனர் ரித்திமாவும் உஷாவும்…
“இவ்ளோ உருகிறவன் ஏன்டி அவ ப்ரேக் அப் பண்ணிட்டுப் போனதும் அவளைச் சமாதானப்படுத்தல? அதக் கூட விடு…. நான் என்னோட ட்ரீம் பாய் பத்திச் சொன்னா அது அவனுக்குக் காமெடி.. அதுவே அவன் அவனோட இத்துப் போன எக்ஸ் பத்திச் சொன்னா அது ஃபீலிங்கா?”
“அவந்திகா! ரிலாக்ஸ் பேபி” என்ற உஷாவைப் பரிதாபமாகப் பார்த்தாள் அவந்திகா.
பின்னர் “அவனைச் சொல்லிக் குத்தம் இல்லடி! முட்டாள் மட்டும்தான் லவ் பண்ணுவான்னு அவன் சொன்னப்போவே நான் யோசிச்சிருக்கணும்” என்று அவள் சொல்லிவிட்டு ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்துவிட்டாள்.
அவளிடம் பேசப் போன ரித்திமாவைத் தடுத்த உஷா அவளிடம் உண்மை நிலவரத்தைச் சொல்ல அவளும் அமைதியானாள்.
பின்னர் வழக்கம் போல வேலைகள் என்னவோ நடந்தது.. ஆனால் அவந்திகாதான் அன்று முழுவதும் அமைதியாகவே இருந்தாள்… அவளது அமைதியின் பின்விளைவுகளை நன்கு தெரிந்தவர்கள் என்பதால் உஷாவும் ரித்திமாவும் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை.
மாலையில் வீடு திரும்புவதற்காக அவந்திகாவுக்கு ராகவ் கால் செய்யவே அவள் போனை எடுக்கவேயில்லை.. உடனே உஷாவுக்குப் போன் செய்தவனிடம் அவளைத் தன்னுடன் அழைத்து வருவதாக உஷா கூறிவிடவே அவன் மட்டும் வீட்டுக்குச் சென்றான்.
கிளம்பும் வேளையில் உஷா அவந்திகாவை அழைக்க அவளோ “நான் வரல. நீ மட்டும் போ உஷா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த பேப்பரில் பேனாவால் குத்த ஆரம்பித்தாள்.
“ஹனிபி நான் உன்னைக் கூட்டிட்டு வர்றேனு ராகவ்கிட்ட சொல்லிட்டேன்”
“சோ வாட்? நீ என்னைக் கூட்டிட்டுப் போகலனா அவன் உன் கழுத்தைச் சீவிடுவானா? அவன் பேரைச் சொல்லாத. எனக்குக் கடுப்பா இருக்கு” என்று காதுகளை அவள் மூடிக்கொள்ள உஷா அவளைத் திகைப்பாகப் பார்த்தாள்.
“நீ கெளம்பு உஷா… நான் அங்க வரப்போறதில்ல…”
“இது என்ன சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம்? கம் ஆன். கெளம்பு.. நீ வரலனா தாதி டென்ஷன் ஆயிடுவாங்க”
“இப்பிடி அவங்க டென்ஷன் ஆவாங்க இவங்க டென்ஷன் ஆவாங்கனு யோசிச்சு நான் இந்த ரிலேஷன்ஷிப்பை அக்செப்ட் பண்ணதாலதான் இன்னைக்கு யாரோ ஒருத்தி என்கிட்டயே ஆர்டர் போடுறா! எனக்கு இனிமே யாரைப் பத்தியும் கவலை இல்ல உஷா”
“ராகவ் பத்திக் கொஞ்சம் யோசி…. நீ வரலன்னா அவரு டென்ஷன் ஆக மாட்டாரா?”
“அவன் ஏன்டி டென்ஷன் ஆகப்போறான்? நான் இருந்தாலும் இல்லாமலே போனாலும் அவன் மெஷின் மாதிரி ஓடிட்டுத்தான் இருப்பான்… என்னோட ப்ரசென்ஸ் அவனை எப்பிடிப் பாதிக்கலையோ அதே மாதிரி என்னோட ஆப்ஸென்ஸும் அவனைப் பாதிக்காது. அவனைப் பத்திப் பேசி என்னை இன்னும்கடுப்பாக்காமக் கெளம்பு தாயே” என்று கையெடுத்துக் கும்பிட உஷா வருத்தத்துடன் சென்றாள்.
அவந்திகாவோ அங்கிருந்த இன்னொரு ரூம்குள் சென்று அங்கே கிடந்த சோஃபாவில் காலைக் கட்டியவாறு உட்கார்ந்துவிட்டாள்.
உஷா அவந்திகா இல்லாமல் வீடு வந்து சேர்ந்தவள் நேரே ராகவின் அறைக்குச் சென்று அவனிடம் விஷயத்தைக் கூறிவிட்டாள்.
“வாட்? பாபி அவ நெஜமாவே அப்பிடியா சொன்னா?” என்று திகைத்தான் ராகவ்..
உஷாவோ பரிதாபமாக “ஆமா ராகவ்… நேரம் ஆக ஆக அவளுக்குக் கோவம் அதிகமாச்சே தவிரக் கொஞ்சம் கூடக் குறையல.. என்னால அவளைக் கன்வின்ஸ் பண்ணிக் கூட்டிட்டு வர முடியல…” என்று சொல்ல வருணும் அவளைத் திகைப்பாகவே பார்த்தான்.
“அட்லீஸ்ட் இவனாச்சும் கூட்டிட்டு வந்திருப்பான்… உன்னால அதுவும் போச்சு” என்று உஷாவையே அவனும் முறைத்தான்.
ராகவ் “பய்யா ப்ளீஸ்! அண்ணி என்ன பண்ணுவாங்க? அந்த ஜான்சி ராணியோட கோபத்துக்கு முன்னாடி யாருமே நிக்க முடியாது” என்று சொல்லிவிட்டு அவன் தோளில் தட்டிவிட்டு அவர்களின் அறையை விட்டு வெளியேறினான்.
இவ்வளவு விஷயங்களையும் மறைந்திருந்த தியா ஒரு வார்த்தை விடாமல் கேட்டுவிட்டாள். அவளுக்கு மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பிக்க ராகவுடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ்ச்சி கடலில் மூழ்க ஆரம்பித்தாள்.
ராகவோ வருண் உஷாவின் அறையை விட்டு வெளியேறியவன் நேரே தங்கள் அறைக்குச் சென்று கார் கீயுடன் கீழே வேகமாக வர ராதிகா “ராகவ்! டிசர்ட் கூடச் சேஞ்ச் பண்ணாம எங்க போற” என்று கேட்க விவரத்தைக் கூறிவிட்டுச் சென்றான்.
அடுத்த இருபது நிமிடத்தில் சன் டியூ அலுவலக வாயிலில் காரைப் பார்க் செய்துவிட்டுப் பூட்டியிருந்த கதவைத் தட்ட அவந்திகாவோ இந்த நேரத்தில் யார் என்று யோசனையுடன் கதவைத் திறக்கச் சென்றாள்.
கதவைத் திறந்தது அங்கே நின்றுகொண்டிருந்த ராகவைப் பார்த்ததும் அவளுக்கும் ஒன்னும் உவப்பாக இல்லை. “தாதி இல்லனா ராதிம்மா என்னைக் கூட்டிட்டு வரச் சொல்லிருப்பாங்க! அதான் இந்த மைதாமாவு வந்திருக்கான்… இல்லன்னா இவன் ஏன் வரப் போறான்?” என்ற சிந்தனையுடன் நிற்க ராகவ் அவளை வாசலிலிருந்து தள்ளி நிறுத்தியவன் உள்ளே சென்றான்.
“ரொம்ப டார்ச்சர் பண்ணுற நீ” என்று மனதில் நினைத்தபடியே நாற்காலியில் அமர்ந்தவன் “இன்னும் பத்து நிமிஷத்துல உன்னோட லேப்டாப் அண்ட் அதர் திங்ஸோட நீ கெளம்புற… ஓகே” என்று கட்டளையிடவும் அவந்திகாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
“வர முடியாது” என்று அவளும் அதே தொனியில் கூறிவிட்டு அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர அவனுக்கு ஆயாசமாக இருந்தது…
“லிசன்! எனக்கு ஆல்ரெடி ஆயிரம் டென்ஷன்… இதுல உன்னைப் பத்தி நெனச்சு வேற நான் ஸ்பெஷலா டென்ஷன் ஆக முடியாது… கெளம்பு”
“உனக்கு நான் பேசுற லாங்வேஜ் புரியலனு நெனைக்கிறேன்… நான் உன்கூட வர மாட்டேன்… டூ யூ அன்டர்ஸ்டாண்ட்?”
“நீ வீட்டுக்கு வா.. நான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் தெளிவாச் சொல்லுறேன்”
“நீ சொல்லுற எந்த விளக்கமும் கேக்கிற நெலைமைல நான் இல்ல ராகவ். நான் அங்கே வர மாட்டேன். உன்னோட டைம வேஸ்ட் பண்ணாம நீ கெளம்பு…”
“பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு அவந்திகா. நான்தான் சொல்லுறேன்ல வீட்ல போய்ப் பேசிக்கலாம்னு. கொஞ்சம் நான் பேச வர்றதக் காது குடுத்துக் கேட்டா நீ ஒன்னும் கொறஞ்சுப் போக மாட்ட” என்று அவன் சொல்லவும் அவளுக்கும் கேட்டால்தான் என்ன என்று தோன்றவே லேப்டாப்புடன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவனுடன் காரில் இருந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் என்னவென்று விசாரித்த மாமியார்களிடம் கொஞ்சம் வேலையிருந்ததாகச் சமாளித்தவள் ராகவ் இருந்த பக்கம் திரும்பக் கூட இல்லை. அதை ராகவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பேச வேண்டிய விஷயங்களை அப்போதே பேசியிருந்தால் அவன் சிறிது நேரத்தில் ஏற்படப்போகும் அந்தப் பிரச்சனையைத் தடுத்திருக்கலாம்.
அவனோ எதோ கால் வந்திருப்பதாகத் தோட்டத்திற்குச் செல்லவே நீண்டநேரமாகத் திரும்பவில்லை. ராதிகா அவந்திகாவிடம் அவனுக்குக் காபி கொடுக்குமாறு கையில் தட்டைக் கொடுக்கவும் அவளும் வேறுவழியின்றி காபி கப்புடன் தோட்டத்திற்குச் சென்றாள்.
அங்கே ராகவைப் பார்த்தவள் அதிர்ச்சியில் சிலையானாள். ஏனெனில் அங்கே அவனை அணைத்துக்கொண்டு நின்றவள் தியா.
அதிர்ச்சி சில கணங்களில் வடிய காலையில் அவன் பேசிய வார்த்தைகளே இப்போது அவளின் காதில் ஒலிக்க உள்ளே எழுந்த கோபத்துடன் கையிலிருந்த காபி தட்டை நங்கென்று ஓங்கிப் போட அந்த ஒலியில் தியா விலகினாள்.
சிதறிய கோப்பைத் துண்டுகளைப் பார்த்த வண்ணம் அவள் மிதித்துவிடப் போகிறாளோ என்ற டென்ஷனில் அருகில் வந்த ராகவைக் கையைக் காண்பித்துத் தடுத்தவள் கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.
“அவந்திகா கால்ல குத்திடப் போகுது” என்று பதற்றத்துடன் அருகில் வர அவனை எரிப்பது போலப் பார்த்தவள் “நடிக்காத! இங்க ராதிம்மா, பிரியாம்மா, தாதின்னு யாரும் இல்ல!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று உள்ளே சென்றாள்.
ராகவ் தியாவைக் கொலைவெறியுடன் பார்த்தவன் அவந்திகாவைச் சமாதானப்படுத்த அவள் பின்னே சென்றான்.
ஹாலில் இருந்தவர்கள் உள்ளே வேகமாக வந்த அவந்திகாவையும் அவள் பின்னோடு “அவந்திகா நில்லு” என்று சொல்லிக்கொண்டே வந்த ராகவையும் பார்த்ததும் என்னாயிற்றோ என்று பதற்றமாக உஷா அனைவரையும் கண்ணால் அமைதிப்படுத்திவிட்டு வருணை மட்டும் அழைத்துக்கொண்டு அவர்களின் பின்னே சென்றாள்.
தங்களின் அறைக்குள் சென்ற அவந்திகாவின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவன் “அவந்திகா! காம் டவுன். என்ன நடந்துச்சுனு தெரியாம…” என்று விளக்குவதற்குள் “கைய விடு! டோன்ட் டச் மீ” என்று அவனது கையை உதற அன்று அவந்திகாவுக்கு வந்த வலியை இன்று தன் மனதில் உணர்ந்தான் ராகவ்.
அவனது கையை உதறியவள் தன்னுடைய லக்கேஜை பேக் செய்ய ராகவால் அவள் செய்கையின் வீரியத்தை அப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது..
“ராகவ் ஸ்டாப் ஹெர். அவ கோவத்துல ஏதாச்சும் பண்ணி வைக்கிறதுக்குள்ள அவளைத் தடுத்து நிறுத்து” என்று அவனது மூளை அவனுக்குக் கட்டளையிட அவளை நெருங்கியவன் அவனைத் திரும்பிப் பார்த்த அவளது கண்ணில் தெரிந்த அந்நியத் தன்மையில் அவனையறியாமல் பின்னடைந்தான்.
அதற்குள் அங்கே வந்த உஷாவும் வருணும் அவள் லக்கேஜை எடுத்து வைப்பதைப் பார்த்ததும் அவளை அமைதிப்படுத்த எவ்வளவோ முயற்சிக்க ஆனால் அவளோ யார் பேச்சையும் கேட்கும் மனநிலையில் இல்லை..
எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் அதைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியேற முயல உஷா “நீ இப்பிடிப் பண்ணாத ஹனிபி… கௌசிக்கா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கனு கொஞ்சம் யோசி” என்று அவளைத் தடுக்க முயன்றாள்.
“உஷா! இந்தக் கல்யாணம் நடந்த நாள்ல இருந்து மத்தவங்க என்ன நெனைப்பாங்கன்னு யோசிச்சி யோசிச்சி நான் ரொம்பவே என்னை மாத்திகிட்டேன்…. பட் இனிமேயும் என்னால அப்பிடி இருக்க முடியாது….” என்று பிடிவாதமாகச் செல்ல முயல உஷா மீண்டும் அவளைத் தடுத்தாள்.
“உனக்கு மேரேஜ் ஆயிடுச்சு ஹனிபி… இப்பிடித் திடீர்னு நீ கெளம்பிப் போனா என்ன அர்த்தம்? கொஞ்சம் பொறுமையா இரு”
“நான் கேக்கலையே இப்பிடி ஒரு மேரேஜை? தப்பு என் மேலதான். நான் இந்த வீட்டுக்கு வந்திருக்கவே கூடாது. அதனாலதான் இவ என்ன சொன்னாலும் கொஞ்ச நேரம் கத்திட்டு அப்றமா சமாதானமாயிடுவானு இவனுக்குத் தோணிருக்கு. பட் இட் வோன்ட் ஹேப்பன் அகெய்ன்” என்று அதே கடுப்புடன் பதிலளித்தாள்.
ராகவ் பொறுமையாக “யூ ஹேவ் மிஸ்அன்டர்ஸ்டுட் சம்திங்! கொஞ்சம் பொறுமையா இருந்தா நான் எல்லா விஷயத்தையும் தெளிவா உனக்குச் சொல்லுவேன்” என்று சொல்ல அவனை அலட்சியமாகப் பார்த்தாள்.
பின்னர் “எனக்கு அந்தக் கதை எதையும் கேக்க வேண்டிய அவசியம் இல்ல. உன்னைப் பாக்கக் கூட எனக்குப் பிடிக்கலை. எவ்ரிதிங் இஸ் ஓவர் இன்க்ளூடிங் திஸ் மேரேஜ் டிராமா. லெட் மீ கோ” என்று கடகடவென்று அந்தத் தளத்திலிருந்து கீழே வந்தவள் அங்கிருந்தவர்கள் கேள்வியாகப் பார்க்க ஒரு நிமிடம் நின்றாள்.
பின்னர் “எல்லா விஷயத்தையும் ராகவ் எக்ஸ்ப்ளைன் பண்ணுவாரு. சீக்கிரமா இந்த வீட்ல இன்னொரு கல்யாணமும் நடக்கும். இன்விடேஷன் குடுக்க மறந்துடாதீங்க” என்று சொல்லிவிட்டுத் தியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக வெளியேறினாள்.
அவள் தியாவைப் பார்த்ததும் வீணாவுக்கு ஏதோ தப்பு நடந்திருப்பதாகத் தோன்ற உடனே அவரும் திரும்பித் தியாவைப் பார்க்க அவளது முகமே அவளின் சந்தோஷத்தைப் பிரதிபலித்தது. “இந்தப் பொண்ணு என்ன காரியம் பண்ணி வச்சிருக்கான்னு தெரியலயே” என்று மனம் பதைக்க நின்றார் வீணா.
தியாவோ மிகவும் சந்தோஷமாக இருந்தாள். ராகவுக்கு அவனை விட்டு விலகிப் போனவர்களை நினைக்கும் பழக்கம் கிடையாது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். எப்படித் தன்னை மறந்தானோ அதே போல் அவந்திகாவையும் எளிதாக மறந்துவிடுவான் என்று கனவுக்கோட்டை கட்டியவள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டாள். தியாவை அவன் என்றுமே காதலிக்கவில்லை, எனவே அவளை மறப்பது அவனுக்கு சாதாரணமான ஒன்று. ஆனால் அவந்திகா அவனது மனைவி. மரணம் வரை கூடவருவதாக அக்னிசாட்சியாக வாக்கு அளித்தவனுக்கு அவ்வாறு அவளை எளிதாக மறக்க முடியாது என்பதை அவள் உணரவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


