அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்ட உஷாவை நீண்ட நேரமாகக் கவனித்துக் கொண்டிருந்தான் வருண்.. அவளின் முகத்தில் ஏனோ சிந்தனை கோடுகள். அவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன் அவளே கூறுவாள் என்று காத்திருந்து பொறுமையை இழந்தான்.
அவள் அருகே மெதுவாகச் செல்ல அவனைக் கவனிக்காத உஷா அவன் மீதே மோதிக்கொண்டாள். அவளைக் கீழே விழாமல் தாங்கியவன் சோஃபாவில் அவளை அமரவைத்துக் கீழே அமர்ந்துகொண்டான்.
(அப்போதானே அவ முகத்தைப் பாத்துப் பேச முடியும்… சார்தான் சரியான பனைமரம் ஆச்சே)
“இந்தக் குட்டித் தலைக்குள்ள என்ன ஓடுது ரதி? சொன்னாதானே என்னால சொல்யூஷன் குடுக்க முடியும்” என்ற அவனது பரிவான வார்த்தையில் முகம் மாறியவள் அவனது கையைப் பிடித்தபடியே பேச ஆரம்பித்தாள்..
“வருண்! உனக்கே நல்லாத் தெரியும். அவந்திகாவுக்கும் ராகவுக்கும் இப்போதான் ஏதோ கொஞ்சம் சண்டை எதுவும் வராம இருக்கு. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கொஞ்ச கொஞ்சமாப் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ திடீர்னு இந்தத் தியா ஏன் இங்க வந்தா?”
“யூ ஆர் ரைட்…. எனக்கும் இதே கேள்வி அப்போவே தோணுச்சு. பட் ராகவ் இதைப் பெருசாவே நெனைக்கலைங்கிற பட்சத்துல நம்ம இதுல வொர்ரி பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லைனு நான் நெனைக்கிறேன்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அவசியம் இருக்கு.. நான் யோசிக்கத்தான் செய்வேன்.. பிகாஸ் ஹனிபி என்னோட ஃப்ரெண்ட்… கிட்டத்தட்ட 11 வருஷமா என்னோட சந்தோஷம் துக்கம் எல்லாத்தையும் ஷேர் பண்ணிகிட்டவ…. இன்னைக்கு அவளால ஒரு நார்மல் மேரேஜ் லைஃப் வாழ முடியாம இருக்கிறதுக்கு நம்ம கல்யாணம்தான் காரணம்… இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் அவ வராம இருந்திருந்தா ராகவை மீட் பண்ணிருக்க மாட்டா… அதுக்கு அப்புறமா நடந்த விபரீதம் எதுவும் இல்லாம அவ லைஃப் ஸ்மூத்தா போய்ட்டு இருந்திருக்கும். அத விடு. முடிஞ்சு போன விஷயம். பட் இந்தத் தியாவை எனக்குச் சுத்தமாப் பிடிக்கல. அவளோட பார்வைல கொஞ்சம் கூட நேர்மை இல்ல வருண்”
“ரதி! ரிலாக்ஸ் டா… நீ இவ்ளோ டென்ஷன் ஆகுறதுக்கு ஒன்னும் இல்ல…”
“இஸிட்? சப்போஸ் நான் ஒருத்தனை உனக்கு முன்னாடிக் காதலிச்சு அவன் உன்னோட சொந்தக்காரனா இருந்து நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா அவன் இப்பிடி வந்து நின்னு உன்னோட பொண்டாட்டிய, இன்னைக்கு அந்தத் தியா ராகவைப் பாத்த பார்வையப் பாத்திருந்தான்னா உனக்கு எப்பிடி இருக்கும்?”
“ரதி! இப்போ என்னதான் பண்ணனும்ங்கிற?” என்ற வருணுக்குப் பொறுமை போய்விட்டது.
“நீ எதுவும் பண்ண வேண்டாம். பட் நான் எதாச்சும் பண்ணுனா அதைத் தடுக்காம மட்டும் இருந்தாப் போதும்…”
“ரதி! என்ன பண்ணப் போற?”
“நான் நெனைக்கிற மாதிரி அந்தத் தியா தப்பான எண்ணத்தோட இந்த வீட்டுக்குள்ள வந்திருந்தானா ஐ நோ ஹவ் டு ஹேண்டில் ஹெர்…” என்று தீர்மானமாகச் சொன்ன மனைவியை ஒரு பெருமூச்சுடன் பார்த்தான் வருண்..
“ரதிம்மா! உன்னை எப்போவுமே யாரும் இங்க தடுக்க மாட்டாங்க… எனக்கும் என் தம்பி லைஃப் மேல அக்கறை இருக்கு…. நீ என்ன பண்ணனும்னு நெனைக்கிறியோ அதத் தாராளமாப் பண்ணு… பட் அதால யாரோட மனசும் ஹர்ட் ஆகாமப் பாத்துக்கோ” என்று அவன் கூறவும் உஷாவுக்கு மகிழ்ச்சியானது..
“டோன்ட் வொர்ரி வருண்… நான் யாரையும் ஹர்ட் பண்ண மாட்டேன்” என்று அவனிடம் கூறிவிட்டு அவனை அணைத்துக்கொண்டாள்.
மறுநாள் காலை…..
நன்கு உறங்கிக் கொண்டிருந்தவளின் காதில் போன் ரிங்டோன் விழவும் அவந்திகாவுக்கு மெதுவாகத் தூக்கம் கலைய ஆரம்பித்தது..
தூக்கக் கலக்கத்திலே “ராகவ்! போனை எடு” என்று சொல்லிவிட்டுப் புரண்டு படுத்தாள். ஆனால் போனின் சத்தம் நிற்காமல் தொடரவே கடுப்பில் விழித்தவள் தன் அருகில் கிடந்த அதைத் தூக்கி எறியப் போக மீண்டும் சத்தம் வந்தது.
ஏதாவது முக்கியமான அழைப்பாக இருக்குமென்று ராகவைத் தேடினால் அவன் அங்கில்லை. நேரத்தைப் பார்த்தவள் அவன் ஜிம்மில்தான் இருப்பான் என்று அங்கே சென்றாள்..
அவள் நினைத்த மாதிரியே அவன் அங்கிருக்கக் கால் வந்த விவரத்தைச் சொல்லிவிட்டுப் போக எத்தனித்தவளைக் கையைப் பிடித்து நிறுத்தினான்.
“கால் பேசுனதுக்கு அப்புறமா போனை வாங்கிட்டுப் போ” என்று சொல்லிவிட்டுப் போனில் பேச ஆரம்பிக்க அவந்திகா தூக்கம் போன கடுப்பில் அங்கிருந்த ட்ரெட்மில்லில் உட்கார்ந்தாள்.
அவன் பேசிக் கொண்டே இருக்க “இவனுக்கு என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது? இங்க நான் வேஸ்ட் பண்ணுற ஒவ்வொரு நொடியும் என்னோட அருமையான தூக்கம் பறிபோய்ட்டு இருக்கு” என்று பல்லைக் கடித்தபடியே போனில் பேசிக் கொண்டிருந்தவனின் கால் கட் ஆகும் நேரத்துக்காகக் காத்திருந்தாள்.
அதே நேரத்தில் தியா கிச்சனில் செஃபைத் தொந்தரவு செய்து தானே டீ போடுவதாக அதகளம் செய்துகொண்டிருந்தாள்..
“மேடம்! ப்ளீஸ் ராகவ் சார் காலைலே டீ குடிக்க மாட்டாரு”
“நீங்க இங்க செஃப்தான். சோ நான் சொன்னத மட்டும் செஞ்சாப் போதும். இங்க இஞ்சி எங்க இருக்கு?” என்று அவரைப் பொருட்படுத்தாமல் ராகவிற்காக டீ போட்டாள்.
அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவனது அறை இருக்கும் தளத்திற்குச் சென்றவளுக்கு “அச்சோ! இப்போ அவன் ஜிம்மிலதான இருப்பான்..” என்று நினைவு வர “வெயிட் ராகவ்.. உனக்காக நானே என் கையால டீ கொண்டு வர்றேன்” என்று சொல்லிக்கொண்டே ஜிம் இருந்த தளத்திற்குச் சென்றாள்.
ஜிம்மிற்குள் செல்லுபோதே ராகவின் குரல் கேட்டது..
“போனைக் கொஞ்ச நேரம் காத்திருந்து வாங்கிட்டுப் போனா நீ ஒன்னும் கொறஞ்சுப் போக மாட்ட ஜான்சிராணி”
அதற்கு அவந்திகா பதிலளிக்கும் முன் “ராகவ் நான் உனக்கு உன்னோட ஃபேவரைட் இஞ்சி டீ கொண்டு வந்திருக்கேன்” என்று சொல்லியபடியே உள்ளே வந்த தியாவைப் பார்த்தான் ராகவ்.
அதைப் பார்த்த அவந்திகாவுக்கு இவ எதுக்கு ராகவ்கு டீ கொண்டு வந்திருக்கா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
“ராகவ் டீ எடுத்துக்கோ” என்று நீட்டியவளைக் கண்டுகொள்ளாமல் அவன் வியர்வையைத் துடைக்கவும் அவளுக்குக் கடுப்பாக இருந்தது. இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகமாக நின்றாள்.
அவந்திகாவுக்கோ தியா தான் ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாமல் ராகவிடம் பேசுவது கடுப்பை உண்டாக்க அவளது கையிலிருந்த டீ கப்பை வேகமாக வாங்கிக்கொண்டவள் “நீங்க ராகவுக்காகக் கஷ்டப்பட்டு டீ போட்டதுல்லாம் ஓகே! பட் அவரு டீ குடிக்கறத விட்டு ரொம்பநாளாச்சு. சோ இது அவருக்குத் தேவைப்படாது” என்று சொல்ல தியா கோபத்தை அடக்கிக் கொண்டு சிரமப்பட்டுப் புன்னகைத்தாள்.
“அவந்திகா! பட் இன்னைக்கு ஒரு நாள் டீ குடிச்சா ஒன்னும் கெட்டுப் போகாதுங்கிறது என்னோட ஒப்பினியன்” என்று தலையைச் சரித்துக் கூறினாள் தியா.
“அஹான்! அதுவும் சரிதான்.. பட் என்னால இதைக் குடிச்சே ஆகணும்னு ராகவைக் கம்பல் பண்ணமுடியாது. நீங்க போட்ட டீயும் வேஸ்டாகக் கூடாது. நோ ப்ராப்ளம். என்னோட ஹஸ்பென்ட்க்காகப் போட்ட டீதானே. நானே குடிச்சுடுறேன்” என்று ஒரு சொட்டு விடாமல் குடித்துவிட்டு அவள் கையில் கப்பைக் கொடுத்தாள்.
“ஐ ஹோப் நாளைல இருந்து நீங்க டீ போடுறேனு சொல்லி இப்பிடி நடந்துக்க மாட்டீங்க. பழைய விஷயங்கள் எல்லாத்தையும் ராகவ் எப்பவோ தூக்கிப் போட்டுட்டாரு. அதைத் திரும்பியும் ஃபாலோ பண்ண வேண்டிய அவசியம் அவருக்கு இல்ல” என்று அவளுக்குப் புரியும் விதமாகக் கூறி அவளை வெளியே போக வைத்தாள் அவந்திகா.
அவள் வெளியேறியதும் ராகவின் புறம் திரும்பி “டீ நல்லாவே இல்ல ராகவ்.. உன்னோட எக்ஸ் என்னைவிடக் கேவலமாப் போட்டுருக்கா” என்று முகத்தைச் சுழித்தபடி போனை வாங்கிக்கொண்டு வெளியேறினாள்.
கீழே வந்த தியா அவளுக்கு இருந்த கோபத்தில் என்ன செய்யவென்று புரியாமல் கிச்சனில் நுழைந்து கப்புகளைக் கழுவப் போட்டாள். பின்னர் பொறுமையாக யோசித்தவளுக்குப் புரிந்த விஷயம் இதுதான்.
தான் இப்போது கோபத்தை வெளிகாட்டினால் ராகவ் என்றுமே அவளுக்குக் கிடைக்க மாட்டான் என்பதுதான்.
எனவே அவசரமாக எதுவும் செய்யாமல் ராகவின் மனதில் இடம்பெறுவதற்கு அடுத்த முயற்சியாக மீண்டும் கிச்சனுக்குள் சென்றாள்.
செஃபிடம் சிக்கன் எடுத்து வருமாறு கூறியவள் அவர் சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது தனது அறைக்குத் தன்னுடைய போனை எடுக்கச் சென்றாள்..
அவள் போன சில கணங்களில் உள்ளே வந்த உஷா செஃப் சிக்கனைச் சுத்தம் செய்வதைப் பார்த்துவிட்டு “செஃப் ஃப்ரைடே சிக்கன் சமைக்க வேண்டானு தாதி அன்னிக்கே சொன்னாங்கதானே! தென் எதுக்கு க்ளீன் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்க அவர் தியா செய்யச் சொன்னதாகக் கூறினார்.
அவருக்குப் பதிலளிக்கச் சென்றவள் வாசலில் தியா வருவதைக் கண்டுவிட்டுச் சத்தமாக “இதை டஸ்ட் பின்ல போட்டுருங்க செஃப்” என்று சொல்ல தியா அதிர்ந்தாள்.
வேகமாக உள்ளே வந்தவள் “பாபி! ஏன் சிக்கனை டஸ்ட் பின்ல போடச் சொல்றீங்க?” என்று வருத்தமாகக் கேட்டாள்.
உஷாவோ அலட்சியமாக “இத இன்னைக்கு குக் பண்ணப் போறதில்ல.. சோ” என்று சொல்லித் தோளைக் குலுக்கினாள்.
“பட் பாபி! இன்னைக்கு ஷெட்யூல் படி சிக்கன்தானே” என்று மேலே பேசப் போனவள் உஷாவின் உஷ்ணப்பார்வையில் அடங்கினாள்.
“லிசன் தியா! இந்த வீட்ல நாங்க வந்ததுக்கு அப்புறமா நெறயா பழக்கவழக்கங்களை மாத்தியாச்சு. அதுல ஒன்னுதான் ஃப்ரைடே அன்னைக்கு நோ சிக்கன்! நானும் ஹனிபியும் வேற வெஜிடேரியனா, சோ எங்களுக்கு எப்போவுமே நான் வெஜ் ஆகாது”
“அப்போ இத நாளைக்குச் சமைக்கலாம்தானே! ஏன் டஸ்ட் பின்ல போடச் சொல்லுறீங்க?”
“ஒரு தடவை ஃப்ரிட்ஜ்ல இருந்து வெளியே எடுத்தத குக் பண்ணலனா அத டஸ்ட் பின்ல போடுற பழக்கத்தையும் நாங்கதான் கொண்டு வந்திருக்கோம்! வெளியே எடுத்த எதையும் திரும்பச் சேத்துக்கிற பழக்கமும் எங்களுக்குக் கெடையாது” என்று அதே உஷ்ணப்பார்வையுடன் விளக்கினாள் உஷா.
பின்னர் “நீங்க இந்த வீட்டோட கெஸ்ட். சோ நீங்க இனிமே கிச்சன் பக்கம் வரவேண்டாம். எதுக்கு உங்களுக்குத் தேவையில்லாத வேலை? இதல்லாம் செஃப் பாத்துப்பாரு” என்று சொல்லிவிட்டுக் கையோடு அவளையும் அழைத்துச் சென்றுவிட்டாள்…
சிறிது நேரத்தில் அனைவரும் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க ராகவும் அவந்திகாவும் மட்டும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டே வந்து சேர்ந்தனர்.
தியா ராகவை ஆர்வத்துடன் பார்ப்பதைக் கண்டு பல்லைக் கடித்த உஷா தன்னுடன் இணைந்து பரிமாற வந்த அவந்திகாவைக் கண்ணாலேயே ராகவின் அருகில் அமருமாறு சைகை காட்ட அவளும் யோசனையுடனே அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும் அவளின் கையைப் பிடித்துக்கொண்டான் ராகவ். அவளது தீப்பார்வையைப் பொருட்படுத்தாமல் “லுக் ஜான்சி ராணி! இப்போ மட்டும் நீ சொல்லலனா நான் உன்னோட கைய விட மாட்டேன். எவ்ளோ நேரம் ஆனாலும் நீ இப்பிடியே இருக்க வேண்டியதுதான்” என்று அவனது தட்டிலிருப்பதாய்ச் சாப்பிட ஆரம்பித்தான்.
மற்றவர்கள் இதைப் பார்த்தாலும் மனதில் சிரித்துக்கொண்டு காணாதது போலச் சாப்பிட ஆரம்பித்தனர்.
“ராகவ்! கைய விடுடா.. எனக்கு ரொம்பப் பசிக்குது”
“அப்போ விஷயத்தச் சொல்லு”
“சொல்ல மாட்டேன்”
“அப்போ நானும் கைய விடமாட்டேன்”
அவள் யாருக்கும் கேட்காத வண்ணம் சிணுங்க ராகவ் கண்சிமிட்டிவிட்டு நாணை உள்ளே தள்ள ஆரம்பித்தான்.
அவர்களின் இந்த விளையாட்டைப் பார்த்துத் தியாவிற்குக் காதில் புகை வராத குறை. “இந்த ராகவ் என்கிட்ட காட்டுன ஆட்டிட்டியூட் என்ன? இப்போ இந்த அவந்திகாகூடச் சேந்து சைல்டிஷா பிஹேவ் பண்ணுறது என்ன? இந்தப் பொண்ணு எந்தளவுக்கு அவனை மாத்தி வச்சிருக்கா” என்று மனதிற்குள்ளேயே பொருமினாள்.
அவந்திகா பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தவளாய் ராகவ் கையில் வைத்திருந்த நாணைச் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவன் எடுத்து வாய்க்குள் கொண்டு செல்வதற்குள் அவள் அதைச் சாப்பிட்டுவிட ராகவ் வெவ்வேறு திசையில் தன் கையை நகர்த்த அவளும் அந்தக் கோணங்களில் நகர்ந்தவள் அவனைச் சாப்பிட விடாமல் செய்யவே தியா இவர்களின் இந்த அந்நியோன்யத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் கத்திவிட்டாள்.
“இனாஃப் அவந்திகா! கொஞ்சம் அவனைச் சாப்ட விடு. உன்னோட விளையாட்ட அப்புறமா வச்சுக்கோ” என்று சூழ்நிலை மறந்து கத்த ராகவ் அவளைப் பார்த்த பார்வையில் அவள் சாம்பலாகாமல் இருந்தது அவளது பெற்றோர் செய்த புண்ணியம்.
அவந்திகா ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்தவள் அவள் பார்வையிலிருந்து எதைப் புரிந்துகொண்டாலோ ராகவின் கையிலிருந்து தன் கையை உருவிக்கொண்டாள்.
பின்னர் பொறுமையாகச் சென்று கையைக் கழுவிவிட்டு வந்தவள் தியா சாப்பிட்டுவிட்டாளா என்பதை உறுதி செய்துவிட்டுக் கை கழுவிவிட்டு வந்தவளைச் சொடக்கிட்டு அழைத்தாள்.
“ஹலோ! தியா கொஞ்சம் இங்க வாங்க” அவள் அழைக்கவும் கொஞ்சம் தடுமாறிக்கொண்டே வந்து சேர்ந்தவள் அவளை ஒரு விதப் பதற்றத்துடன் பார்க்கவே அவந்திகாவுக்குக் கொஞ்சம் அவளைச் சீண்டினால் என்ன என்று தோன்றியது..
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதோ ஆர்டர் போட்டீங்களே? என்ன அது? எதுவா வேனா இருக்கட்டுமே. என்னை ஆர்டர் பண்ண நீங்க யாரு முதல்ல” என்று கேட்டுவிட்டு வீணாவை ஒரு பார்வை பார்க்க அவருக்கோ சங்கடமாக இருந்தது..
பின்னர் “நீங்க இங்க கெஸ்ட்டா வந்திருக்கீங்க. சோ கெஸ்ட் மாதிரி மட்டும் பிஹேவ் பண்ணா உங்களுக்கு நல்லது. வழக்கமா கெஸ்ட் வருவாங்க. நல்லாச் சாப்டுவாங்க. ஒரு த்ரீ டு ஃபோர் டேய்ஸ் தங்குவாங்க. அப்றமா மூட்டையக் கட்டிட்டுப் போய்ட்டே இருப்பாங்க. லைக் வைஸ் நீங்களும் இந்த வீட்டுக்கு கெஸ்ட்டா வந்தீங்க.. இதோ சாப்டு முடிச்சிட்டீங்க. இன்னும் ஒரு நாலு இல்ல அஞ்சு நாள் தங்கிட்டுக் கெளம்பிப் போயிடுங்க. அதை விட்டுட்டுத் தேவையில்லாத சீன் எதும் கிரியேட் பண்ண ட்ரை பண்ணாதீங்க” என்று சொல்லிவிட்டு ராகவ் சாப்பிடும் வரை காத்திருந்தவள் அவன் சாப்பிட்டு முடிக்கவும் அவனுடன் சேர்ந்து அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள்..
உஷாவோ வீணாவிடம் அவளைக் கொஞ்சம் கண்டித்து வைக்குமாறு சொல்லிவிட்டுத் தியாவை ஒரு முறை முறைத்துவிட்டு வருணுடன் சென்றாள்..
காரைத் ட்ரைவ் செய்துகொண்டே அவந்திகாவின் முகபாவங்களைக் கவனித்தான் ராகவ். அவளுடைய மனதில் நிறைய கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பதை அவள் முகம் கண்ணாடி போலப் பிரதிபலிக்க அவளுடைய மூளையோ வழக்கம் போல அந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கோர்வைப்படுத்தத் தொடங்கிவிட்டது…
கார் நின்றது கூடத் தெரியாமல் தீவிர யோசனையில் இருந்தவளை ராகவின் குரல் நிஜ உலகிற்கு இழுத்து வந்தது.
“ஹலோ! ஆர் யூ ஹியர்? அவந்திகா” என்று அவன் உலுக்கவும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் ஆபிஸ் வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தாள். மெதுவாக இறங்கியவள் கண்ணாடியைத் தட்டவும் ராகவ் கதவைத் திறந்தான்.
“கொஞ்சம் உள்ளே வா.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்குக் கடகடவென்று நடந்து செல்லவும் ராகவ் அவளைத் தொடர்ந்து சென்றான்.
உள்ளே வந்தவனை நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டுச் சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்க்க ராகவ் ‘இவளுக்கு என்னாச்சு’ என்கிற மாதிரி அவளைப் பார்த்து வைத்தான்.
“ராகவ்! நீ பாக்குறதுக்குச் சூர்யா அளவுக்கு இல்லைனாலும் ஏதோ கொஞ்சம் ஹேன்ட்சம்மாதான் இருக்க. பட் உன்னோட ரசனை ஏன் இவ்ளோ கேவலமா இருந்திருக்கு?” என்று யோசனையுடன் கேட்கவும் ராகவிற்கு ‘இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா’ என்று தோன்றாமல் இல்லை..
“என்னதான் சொல்ல வர்ற ஜான்சி ராணி? டேரக்டா சொல்லு”
“இல்ல! உனக்கு லவ் பண்ணுறதுக்கு வேற பொண்ணே கெடக்கலைனா இந்தத் தியாவைப் போய் லவ் பண்ணுன? யுவர் டேஸ்ட் இஸ் ரியலி பேட்” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவளின் இந்தச் செய்கை அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும் அதை அடக்கிக்கொண்டு “கம் ஆன் ஜான்சி ராணி! அவ ஃபர்ஸ்ட் இந்த மாதிரிலாம் கெடையாது தெரியுமா? ஷீ வாஸ் சோ சிம்பிள். சோ க்யூட் அண்ட் அடோரபிள் லைக் அன் ஏஞ்சல்” என்று அவளைச் சீண்டிக்கொண்டே அவளின் முகத்தை ஓரக்கண்ணால் பார்க்க அவன் நினைத்தபடியே அதில் கடுகு போட்டால் வெடிக்கும் அளவுக்குக் கோபம்.
அதிலேயே திருப்தியானவன் அவர்களின் இல்லாத காதலைப் பற்றிக் கற்பனையிலே ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அவந்திகாவோ அவன் பொய் சொல்கிறான் என்பதை உணராதவளாய் அதில் மூழ்கிவிட்டாள்.
அவளே நம்புமளவுக்கு இல்லாத காதலைப் பற்றி ஒரு அழகான கதையைச் சொல்லிமுடித்தவன் “அதுக்கு அப்புறமா அவ பிரேக் அப் பண்ணிட்டு லண்டன் போயிட்டா! அவ போனதுக்கு அப்புறமா எனக்கு லவ் மேலயும் லவ் பண்ணுறவங்க மேலயும் இருந்த நம்பிக்கை சுத்தமாப் போயிடுச்சு. அதனாலதான் லவ் பண்ணுறதுலாம் முட்டாள்தனம்னு உன்கிட்ட சொன்னேன்” என்றான் பொய்யான வருத்தத்துடன்.
இந்தக் கதையை அவன் வாயாலேயே கேட்ட அவந்திகாவுக்கு முதல் முறையாக இந்தத் திருமண வாழ்க்கையில் நம்பிக்கை உடைந்தது. இன்னும் பழைய காதல் அவனுடைய மனதை விட்டு நீங்காத காரணத்தாலே அவனுக்குக் காதல் மீது நல்ல அபிப்ராயம் இல்லையென்று அவள் மனதில் பதிந்துவிட்டது. தன் கணவன் மனதில் அவனின் பழைய காதலிதான் இருக்கிறாளோ என்ற யோசனை வேறு அவளது உள்ளத்தில் எழும்பி அவளை வருத்த அவளை அறியாமல் அவள் மனதின் ஓரமாய் ஒரு வலி.
அவனோ அதை அறியாதவனாக “அது மட்டும் கெடையாது. அவளுக்கு நான்னா….” என்று தொடர அவந்திகா கையை உயர்த்தி அவனைத் தடுத்தவள் அவனை முறைத்தவாறே பேச ஆரம்பித்தாள்.
“லுக் மிஸ்டர் ராகவ் கபூர்! நான் உன்னோட எக்ஸைப் பத்தி எக்ஸாம் எதுவும் எழுதப் போறதில்ல.. இவ்ளோ டீப்பா நீ எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண வேண்டிய அவசியம் இல்ல… ஆனா ஒரு விஷயம் அவளோட கேரக்டர் என்னன்னு தெரிஞ்சுருந்தா நீ அவளை லவ் பண்ணிருக்க மாட்ட…. சப்போஸ் நான் அவ இடத்துல இருந்திருந்தா என்னோட எக்ஸ் லவ்வரோட வைஃபை இப்பிடி இரிட்டேட் பண்ணிருக்க மாட்டேன். இவ்ளோ சீப்பா ட்ரிக்ஸ் பிளே பண்ணவும் மாட்டேன்” என்று சொல்லி மூச்சு வாங்கியவள் “உனக்கு ஆபிஸ் டைம் ஆகலயா? கெளம்பு” என்று சொல்லிவிட்டு அவளது இருக்கையில் அமர்ந்து லேப்டாப்பைப் பார்க்கத் தொடங்கினாள்.
ராகவுக்குக் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசிட்டோமோ என்று தோன்றினாலும் ஏனோ கோபத்திலிருக்கும் அவந்திகாவின் முகம் அவனுக்குப் பிடிக்கவே, தான் பேசியதை அவன் பெரிதாக எண்ணவில்லை…
“அப்போ நான் கெளம்பவா ஜான்சி ராணி?”
“இன்னும் நீ கெளம்பலையா? சீக்கிரமாக் கெளம்பு. இன்னைக்கு வெதர் சரியில்ல. எனக்கு இந்த ரூம்ல இருக்கக் கொஞ்சம் சங்கடமா இருக்கு” என்று முகம் பார்க்காமலே உரைக்க ராகவ் விசிலடித்தபடியே கிளம்பினான்.
அவன் சென்ற வழியை முறைத்தவள் “இவனுக்கு இப்போ விசில் ஒன்னுதான் கேடு?” என்று பல்லைக் கடித்துச் சொல்லிவிட்டு லேப்டாப்பில் மூழ்க ஆரம்பித்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


