அவந்திகாவும் தலையை ஆட்டியபடி அவரை வழியனுப்பி வைத்தாள்.
அமைதியாகத் தங்களின் அறைக்குச் சென்றவள் தன் சூட்கேஸிலிருந்து தன்னுடைய துணிமணிகளை வார்ட்ரோபில் அடுக்கத் தொடங்கினாள். ராகவ் எதோ போனில் பேசிகொண்டிருந்தான்.
அவள் அடுக்கி முடித்துவிட்டு அவனைப் பார்க்கவும் போனை வைத்தவன் “வாட் ஜான்சிராணி? எதுக்கு இப்பிடி என்னையே பாத்துகிட்டிருக்க? உன் பார்வையே சரியில்லையே?” என்று சொல்லிவிட்டுச் சோஃபாவில் அமர்ந்து அவளையே பார்த்தான்.
“ஒன்னும் இல்ல. நீ காதலுக்கு ஒரு டெஃபனிஷன் குடுத்தியே, அது கொஞ்சமாச்சும் சேஞ்ச் ஆயிருக்கா? இல்ல பழய மாதிரியே தானா?”
“ம்ம்ம்… யோசிக்க வேண்டிய விஷயம்தான். ரொம்பநாள் வரைக்கும் அந்தத் தியரிதான் உண்மைனு நெனச்சிட்டு இருந்தேன். பட் நீயில்லாத இந்த ரூம்மப் பாத்ததும் காதல்னா என்னன்னு புரிஞ்சுது. சாதாரணமா நீ இல்லாம வேற யாரையும் நான் மேரேஜ் பண்ணிருந்தா சத்தியமா என்னோட கேரக்டர்ல இம்மியளவுக்குக் கூட அவளுக்காக நான் சேஞ்ச் பண்ணிருக்க மாட்டேன். பட் ஐ சேஞ்ச்ட் மைசெல்ஃப் ஒன்லி ஃபார் யூ அண்ட் ஃபார் அவர் லவ்” என்று சொல்லவும் அவந்திகா கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள்.
“அவர் லவ்வா? நான் எப்போ உன்னை லவ் பண்றேனு சொன்னேன்? எனக்கு நான் அப்பிடிச் சொன்னதா நியாபகம் இல்லையே?” என்று எழுந்தவளை ஆச்சரியமாகப் பார்த்தான் ராகவ்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அன்னைக்கு மால்ல வச்சு நான் குடுத்த பொக்கேயச் சிரிச்சிகிட்டேதானே ஜான்சி ராணி வாங்குன?”
“அட! இது நல்லா இருக்கே! ஏதோ உன் மனசு கஷ்டப்படக் கூடாதேனு பொக்கேவை வாங்கிட்டு உன் ப்ரபோசலை கேட்டா நீ நானும் உன்னை லவ் பண்றேனு நெனச்சிப்பியா? ஃபன்னி கய்” என்றவள் தொடர்ந்தாள்.
“நான் உன்னோட ப்ரபோசல ரிஜெக்ட் பண்ணல பட் அக்செப்ட்டும் பண்ணல… மனசுல ஆச்சா?” என்று கேட்க அவன்தான் குழம்பிப் போனான்.
“பட் நான்தான் ஐ லவ் யூ சொல்லிட்டேனே”
“ஏய்! தேஞ்சு போன ரெக்கார்ட் மாதிரி அதையே சொல்லக் கூடாது! நீதான் ஐ லவ் யூ சொல்லிருக்க. நான் இல்ல. எனக்கு இதப் பத்தி யோசிக்கக் கொஞ்சம் டைம் வேணும்”
“வாட்? நான் உன்னோட ஹஸ்பென்ட், உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லி ப்ரபோஸ் பண்ணிருக்கேன். இன்னும் உனக்கு என்கிட்ட ஐ லவ் யூ சொல்றதுக்கு என்ன கேடு?”
“பார்றா! நீ என்னையே மிரட்டுறியா? இங்க பாரு தம்பி, ஒரு ஹஸ்பென்டா உன்னை ஏத்துக்க எனக்குக் கொஞ்சம் நாள் ஆகும். அது வரைக்கும் நான் ஐ லவ் யூ சொல்லப் போற நாளுக்காக நீ வெயிட் பண்ணித்தான் ஆகணும். புரிஞ்சுதா?” என்று கண்ணை உருட்டிக் கேட்கவும் வேறு வழியின்றி வாயில் முணுமுணுத்தப்படியே சரி என்றான் ராகவ்.
மறுநாள் காலையில் அவன் ஜிம்மிற்குச் சென்றதும் குளித்து அலுவலகத்துக்குத் தயாரானவள் நியாபகமாகத் தன்னுடைய தாலியை டாப்பின் மேல் இழுத்து விட்டுக்கொண்டாள்.
தலையைக் குனிந்தபடி வேகமாகத் தளத்தை விட்டு வெளியேற நடந்தவள் சத்தம் இல்லாமல் அங்கே வந்துகொண்டிருந்த ராகவின் மீது மோதி நின்றாள்.
“அம்மாடி! என் மூக்கு போச்சு” என்று மூக்கைத் தடவிக்கொண்டவள் “ஏய் மைதா மாவு! இப்பிடிச் சைலண்டா வராதனு எத்தன தடவை சொல்லிருக்கேன்? உன்னால எப்போ பாரு என் மூக்கு டேமேஜ் ஆய்ட்டே இருக்கு” என்று சொல்லிச் சிவந்த மூக்கைத் தடவிக்கொண்டாள்.
“ஓ! அடி ரொம்பப் பலமோ!” என்று சிரித்தபடி அவளின் மூக்கைச் செல்லமாக ஆட்டிவிட்டுச் சென்றான் ராகவ்.
சிரித்துக்கொண்டே சென்றவனின் முதுகைப் பார்த்து “போடா வளந்து கெட்டவனே” என்று பல்லைக் கடித்துவிட்டுக் கீழே சென்றாள் அவள்.
அதன்பின் அவள் வழக்கம் போல அவனுடன் சேர்ந்து அலுவலகம் சென்றுவிட்டாள்.
அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவளிடம் பேச்சுக் கொடுத்தாள் ரித்திமா.
“ஹனிபி! இந்த 10 டேய்ஸ்ல அப்பிடித்தான் என்னதான் நடந்துச்சு? உன் ஃபேஸ்ல ஒரு க்ளோ தெரியுது”
“10 டேய்ஸ்ல ஏகப்பட்ட விஷயம் நடந்துச்சு. எல்லாத்தையும் எப்பிடி சொல்றது?” என்று அவளிடம் பேசியபடியே லேப்டாப்பில் டைப் செய்துகொண்டிருந்தாள் அவந்திகா.
“நீ ஷார்ட்ஃபார்ம்ல சொன்னாக் கூடப் போதும்” என்ற உஷாவின் கூற்றை ஏற்றவள் நடந்ததைக் கூறினாள்.
“ராகவ் வந்தான். அப்புறம் அம்பு கூடவும் அஜ்ஜு கூடவும் க்ளோஸ் ஆனான். தென் டெய்லி வொர்க்ல எனக்கு ஹெல்ப் பண்றேங்கிற பேருல என்னை இரிட்டேட் பண்ணுனான். அப்புறம் ஒரு நாள் எனக்கு ப்ரபோஸ் பண்ணுனான்” என்று அவள் சொல்லவும் இருவருக்கும் திகைப்பு.
“நெஜமாவா? ஐ காண்ட் பிளீவ் திஸ்” என்று அவர்கள் கூற அவந்திகா “அதேதான் என்னோட நெலைமையும்… பட் அவன் பொய் சொல்லல… அது மட்டும் எனக்குத் தெரியும். அப்புறமா தியாவப் பத்தின விஷயங்களைச் சொன்னான்” என்று அவர்களிடம் நடந்ததை விளக்கினாள்.
“அவளை விடுடி… எப்பிடியோ போறா.. நீ ராகவோட ப்ரபோசலுக்கு என்ன ரிப்ளை பண்ண?” என்று ரித்திமா கேட்கவும் தோளைக் குலுக்கினாள் அவந்திகா.
“ஹனிபி டோண்ட் ஷேக் யுவர் ஷோல்டர்ஸ்… ஆன்சர் மீ”
“நான் எந்தப் பதிலும் சொல்லல”
அதைக் கேட்டதும் தலையிலடித்துக் கொண்டனர் இருவரும்.
“அடியே! உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு அவரு தவிச்சதை நான் கூடவே இருந்து பாத்தேன்டி.. இன்னும் உனக்கு என்னதான் பிரச்சனை?” என்று உஷா கடுப்புடன் கூறிவிட்டு முறைத்தாள்.
“உஷா! அவன் ஏதோ ஒரு பாயிண்ட்ல லவ்வ ஃபீல் பண்ணிருக்கான். ப்ரபோஸ் பண்ணிட்டான். பட் நான் இன்னும் அத ஃபீல் பண்ணலயே” என்று அவள் சாதாரணமாகக் கூறினாள்.
பின்னர் “உடனே நான் சண்டை போட்டுட்டுப் போனதை வச்சு என்னைக் கார்னர் பண்ண ட்ரை பண்ணாதீங்க. எந்தப் பொண்டாட்டியும் புருஷனை இன்னொருத்திகூட நெருக்கமாப் பாத்தா என்ன பண்ணுவாளோ அதைத்தான் நானும் பண்ணேன். பட் அதுக்கு அவன் மேல இருந்த பொசசிவ்நெஸ்தான் காரணமே தவிர லவ் இல்ல. நான் இன்னும் ராகவ் மேல லவ்ங்கிற ஃபீல உணரல. அது இல்லாம என்னால அவனை லவ் பண்ணுற மாதிரி நடிக்கலாம் முடியாது. ஐ நீட் சம் டைம்” என்று அவள் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
உஷாவோ அவள் பேசியதைக் கேட்டு மூளை சூடானவள் அங்கிருந்த ஃப்ரிட்ஜிலிருந்து ஐஸ்வாட்டர் குடிக்கச் சென்றாள்.
தண்ணீரைக் குடித்தவளுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வர காட்சிகள் எல்லாம் மங்கத் தலையைப் பிடித்தபடிக் கீழே அமர்ந்தாள் அவள். தலைக்குள் ஏதோ சக்கரம் சுற்றுவது போல் இருக்கவே மெதுவாக “ரித்தி, அவந்திகா” என்று சிரமத்துடன் அவள் அவர்களை அழைத்தாள்.
அவளது குரலில் மாற்றத்தை உணர்ந்தவர்கள் வேகமாக அங்கே ஓடிச் சென்று பார்க்கையில் தலையைப் பிடித்தபடி அவள் கண்ணை மூடி அமர்ந்திருக்கவும் இருவரும் பயந்து அமருக்குக் கால் செய்தனர்.
அவன் காருடன் வந்து உஷாவைத் தூக்கிக்கொண்டு காரில் வைக்க மற்ற இருவரும் அவனுடன் காரில் அமர்ந்தனர். நேரே அவர்கள் டாக்டர் சஞ்சனாவின் கிளினிக்குக்குக் காரைச் செலுத்தச் சொல்லிவிட்டு உஷாவைப் பதற்றத்துடன் பார்த்தபடி இருந்தனர்.
டாக்டர் சஞ்சனா அவர்களின் குடும்ப மருத்துவர் என்பதால் அப்பாயின்மெண்ட் வெயிட்டிங் எதுவுமின்றி உஷாவை அவரிடம் அழைத்துச் சென்று உள்ளே அனுப்பிவிட்டு மூவரும் டென்ஷனுடன் வெளியே காத்திருந்தனர்.
அமரிடம் யாரிடமும் எதையும் இப்போதைக்குச் சொல்ல வேண்டாமென்று ரித்திமா கூற அவனும் அமைதியாக அவர்களுடன் காத்திருந்தான்.
சில நிமிடங்களில் ஒரு நர்ஸ் கையில் சாம்பிளுடன் லேபிற்குச் சென்றவர் கொஞ்சம் நேரம் கழித்து டாக்டரின் அறையில் நுழைந்து ஏதோ சொல்ல சஞ்சனா மூவரையும் உள்ளே அழைத்தார்.
உள்ளே நுழைந்ததும் மூவரும் பதற்றத்தில் கேள்விகளால் திணறடிக்க அவரோ “ரிலாக்ஸ்! எதுக்கு இவ்ளோ டென்ஷன்… ப்ளீஸ் சிட் டவுன்” என்று சொல்லவும் மூவரும் அங்கே அமர்ந்திருந்த உஷாவைக் கேள்வியுடன் பார்த்தபடி அமர அவர் விஷயத்தைக் கூறினார்.
“ஷீ இஸ் ப்ரக்னென்ட். கொஞ்சம் வீக்கா இருக்கிறதாலதான் இந்த மயக்கம். டென்ஷனாகாமப் பாத்துக்கோங்க. நான் ஈவினிங் வீட்டுக்கு வந்து மத்த இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்லுறேன். இப்போ உஷாவக் கூட்டிட்டுப் போகலாம்” என்று சிரித்தமுகமாகக் கூறினார்.
உஷா மகிழ்ச்சியுடன் மூவரையும் பார்க்க அமர் “கங்கிராட்ஸ் பாபி” என்று சொல்லிக் கைகொடுத்து அவளை மெதுவாக அழைத்துச் சென்றான்.
வெளியே வந்ததும் சந்தோஷத்தில் அவளைக் கட்டிக்கொண்ட அவந்திகாவும் ரித்திமாவும் திடீரென்று விலகினர்.
“உஷா! நாங்க டைட்டா ஹக் பண்ணிட்டோமே! பேபிக்கு வலிச்சிருக்குமோ” என்ற அவர்களின் கேள்வியில் சிரித்தவள் இல்லையென்று தலையாட்ட மூவரும் நிம்மதியாக வீட்டை அடைந்தனர்.
வீட்டில் விஷயத்தைச் சொன்னதும் அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உஷா வருணின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.
வருண் பதற்றத்துடன் வீட்டுக்கு வந்தவன் ஹாலில் அனைவரும் குழுமியிருப்பதைப் பார்த்துவிட்டு டென்ஷனுடன் அங்கே நின்றுகொண்டிருந்த அவந்திகா அமரிடம் “எதுக்குக் கால் பண்ணுனீங்க? எனி ப்ராப்ளம்?” என்று கேட்க அவர்கள் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு இல்லையென்று தலையாட்டினர்.
“பின்ன என்னாச்சுனு மொத்த ஃபேமிலியும் இப்பிடி உக்காந்திருக்கீங்க?” என்று அவன் கத்தும்போது வந்து சேர்ந்தனர் கிஷோரும் ராகவும்.
வந்தவர்கள் அமர் அவந்திகாவின் திருட்டுப் பார்வையை உணர்ந்தவர்கள் அவர்களிடம் கேட்காமல் நேரே ரித்திமாவிடம் சென்று கேட்க அவளும் பதிலளிக்காமல் தலையைக் குனிந்துகொண்டாள்.
வருணின் டென்ஷனைப் பார்த்த குணாலும் மோகனும் மனதிலே சிரித்துக்கொண்டனர். பின்னர் உஷாவைப் பார்த்து “மருமகளே! போதும்மா! இதுக்கு மேல நீ அவனைத் டென்ஷனாக்குனா அவனைப் பெட்லதான் அட்மிட் பண்ணணும்” என்று சொல்ல அவள் புன்னகையுடன் எழுந்து வருணிடம் வந்தாள்.
“வருண்! உனக்கு ஜூனியர் வருண் வேணுமா இல்ல ஜூனியர் உஷா வேணுமா?” என்று தலையைச் சரித்துக் கேட்க அவனோ டென்ஷனுடன் “இப்போ இது ரொம்ப முக்கியம்! நானே உனக்கு என்னாச்சோனு பதறிப்போய் ஓடி வந்திருக்கேன்” என்று பொரிந்தவன் பின்னர் மூளையில் உரைத்ததும் “உஷா ஆர் யூ சீரியஸ்லி ஸ்பீக்கிங்?” என்று கேட்க அவள் தலையை ஆட்டவும் அவனுக்குச் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.
உஷாவைத் தூக்கி “யூ நோ ஒன் திங் இதுக்கு மேல பெரிய சந்தோஷம் எனக்கு வேற எதுவும் இல்ல. ஐ லவ் யூ சோ மச்” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவந்திகா “ம்க்கும்! நாங்களும் இங்கதான் இருக்கோம் வருண்” என்று தொண்டையைக் கனைக்க வருண் சிரித்துக்கொண்டே “உனக்கு கிஸ் வேணும்னா உன் ஹப்பிகிட்ட கேட்டுக்கோ ஹனிபி” என்று கண் சிமிட்டினான்.
அவந்திகா பல்லைக் கடித்தபடி அவனது தோளில் ரெண்டு அடி போடவும் அவன் “டேய் ராகவ்! இவளை என்னன்னு கேக்க மாட்டியா? இத்துனூண்டு இருந்துட்டு என்ன அடி அடிக்கிறா? அம்மா” என்று சொல்லிவிட்டுத் தோளைத் தடவிவிட்டுக்கொண்டான்.
ராகவோ “பய்யா! அவகிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கணும்னுதான் நான் டெய்லி ஜிம்மே கதினு என் நாளை ஸ்டார்ட் பண்ணுறேன். இல்லனா இந்தப் பாடி அந்த அடியை எப்பிடித் தாங்கும்?” என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டான்.
“போங்கடா ரெண்டு பேரும். உங்ககூடப் பேசி என்னோட ஹாப்பி மொமன்ட்டை நான் மிஸ் பண்ண விரும்பல” என்று சொல்லிவிட்டு உஷாவிடம் போய் நின்றுகொண்டாள்.
அவள் சென்றதும் சிரித்த ராகவ் “பய்யா! கங்கிராட்ஸ்” என்று அவனைக் கட்டிக்கொள்ள கிஷோர், அமர், பிந்து, நேஹாவும் அவனுடன் இணைந்து அவனைக் கட்டிக்கொள்ள வீட்டுப் பெரியவர்கள் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துக் கண்ணீர் மட்டும்தான் விடவில்லை.
அதைப் பார்த்த அவந்திகா “உஷா! இந்தப் ஃபேமிலி ஆ ஊனா சென்டிமென்ட்ட பிழியுறாங்கடி” என்று சொல்ல ரித்திமா “நீ இருக்கியே! அவங்க காதுல விழுந்துடப் போகுதுடி” என்று அவளை அடக்கினாள்.
அதே இனிய மனநிலையுடன் வீட்டுக்கு வரப்போகும் புது நபரை வரவேற்க அந்தக் குடும்பம் தயாரானது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


