“பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல… ஜஸ்ட் பேனிக் அட்டாக்தான்… மைண்ட் ரிலாக்ஸா இருந்தா சரியாப் போயிடும்.. இப்போ முழிச்சிடுவாரு.. நீங்க கூட்டிட்டுப் போகலாம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் டாக்டர்.
அவர் சென்றதும் லேரன் அவந்திகாவிடம் “பேனிக் அட்டாக் வர்ற அளவுக்கு என்ன நடந்துச்சு?” என்று கேட்க அவள் அப்பாவியாய்க் கண்ணை விரித்துத் தோளைக் குலுக்கினாள்.
“சரி… கொஞ்சம் மேடியப் பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க… எமர்ஜென்சினா எனக்குக் கால் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.
அவள் சென்றதும் பெருமூச்சுவிட்ட வர்ஷா அவந்திகாவின் கையில் அடித்து “உன்னாலதான் இது எல்லாமே” என்று சொல்லவும் அவந்திகா முகத்தைப் பாவம் போல வைத்துக்கொண்டாள்.
அந்நேரம் பார்த்து மேடிக்கு விழிப்பு வரவே கண்ணைத் திறந்தவன் அவந்திகாவைப் பார்த்ததும் “எனக்கு மட்டும் 30 வயசுக்கு மேல பிரஷர் வந்துச்சுனா அதுக்கு நீ மட்டும்தான் காரணமா இருப்ப” என்று சொல்ல வர்ஷா சிரித்தாள்.
“ஓ! சாரி மேடி” என்றாள் அவந்திகா அவசரமாக.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்ன பூரி மேடி? உனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விபரீதமான ஆசைல்லாம் வருது?” என்று அவன் கேட்க அவந்திகா “கம் ஆன் மேடி! வாழப் போற கொஞ்ச நாள்ல நமக்குப் பிடிச்சதச் செஞ்சுட்டுச் சந்தோஷமாச் செத்துப் போகணும்… இதான் லைஃப்” என்றாள் சாதாரணமாக.
“ஆமா ஆமா! நீ இப்பிடியே ராகவ் சார் முன்னாடிப் பண்ணிட்டே இரு… அதப் பாத்து டென்ஷனாகி டென்ஷனாகியே நான் வாழப் போற நாள் கொறஞ்சுப் போயிடும்”
“நீ இருந்தாலும் ராகவ் சாருக்கு ரொம்பத்தான் பயப்படுற மேடி” என்று சொல்லிவிட்டு அவனை முறைக்க “அதே மாதிரி நீ ராகவ் சார் முன்னாடி என்னைப் ரொம்பத்தான் டென்ஷன் ஆக்குற… இப்பிடியே பண்ணிட்டு இருந்தா ஒரு நாள் பேனிக் அட்டாக்குக்குப் பதிலா ஹார்ட் அட்டாக் வந்து நான் போய்ச் சேந்துடுவேன்” என்றான் மேடி.
“சே சே! அப்பிடில்லாம் உன்னைச் சாக விட மாட்டோம்… நான் உன்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடுவேன் மேடி” என்றாள் அவந்திகா அமர்த்தலாக.
மேடி திரும்பி வர்ஷாவைப் பார்த்தவன் “பாத்தியா அப்போ கூட நான் இனிமே இப்பிடிக் குறும்புத்தனம் பண்ணி உன் உயிரை வாங்க மாட்டேன்னு அவ வாயில வருதானு பாரு” என்று கூறினான்.
அவந்திகாவோ அவன் எழும்ப உதவி செய்தவள் “அந்த மாதிரி மோசமான வார்த்தைகள் எல்லாம் என் வாயிலிருந்து வராது மேடி” என்று சொல்லிக்கொண்டே அவனது டிஸ்சார்ஜுக்கு வேண்டிய ஃபார்மாலிட்டிஸைச் செய்யச் சென்றாள்.
நர்ஸிடம் கையெழுத்துப் போட்டு மாதவ் இருக்கும் அறைக்கு வந்தவள் அதற்குள் வர்ஷாவுடன் தயாராகி நின்றுகொண்டிருந்த மாதவைப் பார்த்து “வீட்டுக்குப் போலாமா?” என்று கேட்டபடிக் கால்டாக்சிக்குப் போன் செய்தாள்.
பின்னர் மாதவை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்து அவனது வீட்டில் விட்டுவிட்டு வர்ஷாவும் அவந்திகாவும் அவரவர் இல்லம் திரும்பினர்.
அவந்திகா வீடு திரும்பியவள் “இன்னைக்கு அந்த மைதாமாவு செத்தான் என்கிட்ட. எவ்வளவு தைரியம் இருந்தா அவன் என்னையே ஐ லவ் யூ சொல்ல வச்சிருப்பான்?” என்று பேசிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தவள் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த மூன்று பெண்மணிகளையும் பார்த்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
“வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சாமா?” ராதிகா.
“ராதிம்மா! எல்லாம் பெர்ஃபெக்டா கம்ப்ளீட் ஆயிடுச்சு… நாளைக்கு லான்ச் பத்தி நெனச்சாதான் கொஞ்சம் நெர்வஸா இருக்கு”
“அதுல்லாம் நல்லபடியா நடக்கும்… இந்த 10 நாள்ல நீங்க எல்லாரும் அவ்ளோ உழைச்சிருக்கீங்க.. இது கண்டிப்பா சக்சஸ் ஆகும்” என்றார் பிரியா.
“ராகவ் இன்னைக்கு வீட்டுக்கு வர மாட்டேனு கால் பண்ணான்மா” என்று சுமித்ரா சொல்ல “வாட்? என்கிட்ட சொல்லலயே தாதி” என்று அதிர்ந்தாள் அவந்திகா.
“நீ அவன்கூடதான இருந்திருப்ப… சோ சொல்லிருக்க மாட்டான்” என்றார் அவர்.
அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தவள் தங்கள் அறைக்குள் வந்தவள் அமைதியாக சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடினாள்.
கண்ணைத் திறக்கும்போது எதிர்ப்புற சுவரில் பெரிதாகத் தொங்கிய அவர்களின் ரிசப்ஷன் புகைப்படத்தைப் பார்த்தவள் அதன் அருகே சென்றாள்..
“25 டேய்ஸ்ல எவ்ளோ விஷயங்கள் மாறிடுச்சு… இந்தக் கல்யாணம், ரிசப்ஷன், இந்த வீடு எல்லாமே ஒரு செகண்ட், கனவு மாதிரி இருக்கு… நான் அதைக் கனவுனு நெனைக்கிற டைம்ல எல்லாம், நீதான் அது எல்லாமே உண்மைனு எனக்கு உறைக்கிற மாதிரிப் புரிய வைக்கிற… ஒரு போட்டோக்குக் கூட இவ்ளோ பவர் இருக்குதே” என்று அந்தப் போட்டோவிடம் பேசியவள் பெருமூச்சு விட்டுக்கொண்டே ரெஃப்ரெஷ் ஆகச் சென்றாள்.
அன்று இரவு ராகவ் வரவேயில்லை. அவனுக்காகக் காத்திருந்தவள் அந்த சோஃபாவிலே உறங்கியும் போனாள்.
அந்த 25 நாட்கள் மணவாழ்க்கையில் இருவரும் ஒருவரை ஒருவர் ஓரளவுக்கு நெருங்கியிருந்தனர். ராகவ் இன்னொரு முறை சிராஜினால் அவந்திகாவுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வீட்டுக்கு அவளை அழைத்து வந்தவன் இப்போது அவளைப் பார்க்காமல் இருந்தால் ஏதோ இழந்தது போல உணர்ந்தான். அதே போல் அவந்திகாவும் முன்பு போல அவனை மூன்றாவது மனிதனாக எண்ணாமல் அவனிடம் சில விஷயங்களைத் தயக்கமின்றிப் பகிரத் தொடங்கியிருந்தாள்.
கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டாலும் யாராவது ஒருவர் வந்து சமாதானம் செய்துகொண்டனர். என்னதான் வீட்டினருக்காக, சித்திக்காக என்று சமாளித்தாலும் உண்மையாகவே அவர்களுக்குள் ஒரு அழகிய உறவு மலரத் தொடங்கியிருந்தது.
மறுநாள் காலையில் தாமதமாக எழுந்து அரக்கப் பரக்கத் தயாரானாள் அவந்திகா. மனதிற்குள்ளே “சே! அந்த மைதாமாவு இருந்திருந்தா கரெக்ட் டைம்க்கு என்னை எழுப்பிருப்பான். இப்போ பாரு அவந்திகா நீ இன்னைக்கு லேட்டாப் போய் அவன்கிட்ட திட்டுதான் வாங்கப் போற போ” என்று புலம்பியபடியே தயாரானவள் காலையுணவை மறுத்துவிட்டு லான்ச் நடக்க இருக்கும் ஹாலுக்குச் சென்றாள்.
எல்லாம் தயார் நிலையிலிருக்க அடுத்த ஒரு மணி நேரத்தில் விஹான் டெலிகாமின் 5th Generation Network அதாவது 5G லான்ச் செய்யப்பட்டது..(எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்தியால 4G தான்.. It’s just an imagination… 5Gக்கான வேலைகள் மட்டும் நடந்துட்டு இருக்கு.. It will be launched in 2020 or later…)
நல்லபடியாக அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராகவும் கிஷோரும் தங்கள் நிறுவன ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு பார்ட்டி கொடுப்பதாகத் தீர்மானித்தனர்.
அதை அறிவித்துவிட்டு அவந்திகாவைத் தேடியவன் கண்ணில் அவள் ஆர்யாவுடன் பேசிக்கொண்டிருப்பது படவே கடுப்புடன் அவர்களை நோக்கிச் சென்றான்.
அவர்கள் அருகில் நெருங்கும்போது அவந்திகாவின் வார்த்தைகள் அவனின் காதில் விழுந்தது..
“நோ சார்… உங்களுக்கு ஏத்த மாதிரி வேற யாராச்சும் உங்க லைஃப்ல வருவாங்க” என்ற அவந்திகாவின் குரலில் ராகவ் வேகமாக அவர்களை நோக்கிச் சென்றான்.
“அது நீயா இருந்தா நல்லா இருக்கும்ங்கிறது என்னோட ஒபினியன்.. ப்ளீஸ் அவந்திகா என்னோட ப்ரபோஸலை ரிஜெக்ட் பண்ணுறதுக்கு ஏதாச்சும் வேலிட் ரீசன் இருக்கா உன்கிட்ட?”
“இருக்கு” என்று சொல்லிக் கையைக் கட்டியபடி ஆர்யாவைக் கூரிய விழிகளால் பார்த்தாள்.
“ஐயாம் மேரிட்.. எனக்கு ஜஸ்ட் 25 டேய்ஸ் முன்னாடிதான் மேரேஜ் ஆச்சு”
அவளின் பதிலில் ஆர்யா அதிர்ந்தான் என்றால் அதைக் கேட்டுக்கொண்டிருந்த ராகவிற்கோ காதில் தேன் வந்து பாய்ந்தது போன்று இருந்தது.
“வாட்? ரியல்லி?” என்று அதிர்ந்தவனைப் பார்த்தவள் “யெஸ்.. சோ நீங்க தேவையில்லாம என்கிட்ட இனிமே இந்த மாதிரி பேசாம இருந்தா நல்லா இருக்கும்” என்று எச்சரிக்க அவளின் ஒரிஜினல் முகத்தைப் பார்த்ததும்தான் ஆர்யாவுக்கு அவள் சீரியஸாகச் சொல்லுவது புரிந்தது.
ராகவோ மனதிற்குள்ளே “நாட் பேட் பார்பி டால்! கட் அண்ட் ரைட் இந்த வார்த்தைக்கு டிக்ஸ்னரில அவந்திகாங்கிற பேரையும் மீனிங்கா ஆட் பண்ணிடலாம்” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான்.
“தேங்க்யூ” என்று அவன் பேசவே இடமளிக்காமல் அவள் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
வருத்தத்துடன் நின்ற ஆர்யாவை அணைத்த ராகவ் “என்னடா?” என்று கேட்க “நத்திங் டா! இந்த ஜென்மத்துல எனக்கு ஜெனிதான் போல இருக்கு” என்று அவனது லண்டன் கேர்ள் ஃப்ரெண்டைக் குறிப்பிட்டு வருத்தப்பட ராகவ் “போதும்டா! முகத்தை அப்பிடி வச்சிக்காத” என்று சொல்லி அவனைச் சிரிக்க வைத்தான்.
இவ்வாறு திட்டமிட்டபடி நடந்த லான்சும் போனஸாக அவந்திகாவின் பேச்சும் ராகவின் உற்சாகத்தை வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் அதிகரித்திருந்தது. அதனால் அவன் மிகவும் சந்தோஷமாகவே பார்ட்டிக்குத் தயாரானான்.
ஈவ்னிங் பார்ட்டிக்கு குடும்பமே குதூகலமாகத் தயாராக அவந்திகாவோ அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
வெயிஸ்ட் கோட்டை மாட்டியபடியே ராகவ் அவளைத்தான் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஜான்சி ராணி, ரொம்ப டயர்டா இருக்க போல”
“யெஸ் ராகவ்.. இன்னைக்குப் பார்ட்டிக்கு நான் கண்டிப்பா வரணுமா?”
“வந்தா நல்லா இருக்கும்… பை தி வே நீ வர மாட்டேனு வேற சொல்லுவியா?” என்று அவன் புருவத்தை உயர்த்த “சொல்லுவேன் மேன். நான் இன்னைக்குப் பார்ட்டிக்கு வர மாட்டேன்.. வர மாட்டேன்.. டூ டைம்ஸ் சொல்லிட்டேன்… போதுமா” என்றாள் அவள் பதிலுக்கு.
இவர்களின் விவாதம் நடக்கும்போதே வெளியே உஷாவின் குரல் கேட்டது..
“ஹனிபி! மே ஐ கம் இன்?” என்று கேட்கவும் அவந்திகா ஓடிப்போய்ப் பார்த்தாள். வெளியே நின்றுகொண்டிருந்த உஷாவின் கையிலிருந்த அந்த க்ரீம் கலர் பார்ட்டி கவுனைப் பார்த்ததும் அவளுக்கு விஷயம் புரிந்து மறுப்பதற்கு வாயெடுத்தாள்.
அதற்குள் உஷா அவளது எண்ணம் புரிந்தவளாக “அவந்திகா! நீ வரலனா நானும் போக மாட்டேன். சீக்கிரம் ரெடியாகி ராகவ் கூட ஹோட்டலுக்கு வரணும். நாங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்போம்” என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுச் சென்றாள்.
கவுனைக் கையில் ஏந்தியவள் “வர வர உஷா கூட இந்தக் ஃபேமிலி மெம்பர்ஸ் மாதிரியே ஆர்டர் போட ஆரம்பிச்சிட்டா” என்று புலம்பியபடியே அவர்களின் அறைக்கு வர அங்கே ராகவ் தயாராகி அவளுக்காகக் காத்திருந்தான்.
அவனைப் பார்த்தபடியே கவுனையும் பார்க்க அவன் எழுந்து அடுத்து இருந்த ஆபிஸ் ரூம்குச் சென்றான்.
உடையை மாற்றியவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் திருப்திபட்டுக்கொண்டாள். அவள் பின்னே ராகவின் பிம்பம் தெரியத் திரும்பிப் பார்த்தவள் “ஐயாம் ரெடி.. போலாமா?” என்று கேட்க அவன் இல்லை என்று மறுத்துத் தலையசைத்தான்.
இடுப்பில் கை வைத்து அவனை முறைக்கவும் ராகவ் “கஹான் தேரி மங்கள்சூத்ர்? (உன்னோட தாலி எங்கே?)” என்று கேட்க அவள் டிரஸ்ஸிங் டேபிளைக் கைகாட்டவும் அதிலிருந்த சிறிய பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கருகமணியை எடுத்தவன் “வியர் இட்” என்று சொல்லவும் அவந்திகாவுக்கு இவனை என்ன செய்ய என்று தோன்றியது.
“இந்தக் கவுனுக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சூட் ஆகாது ராகவ்” என்று மறுத்தவள் அவனது கண்டிப்பான பார்வையில் அதை எடுத்துக் கழுத்தில் அணிந்துகொண்டாள்.
ராகவ் அதைத் தொடர்ந்து “நீ என்னை மேல் சாவ்னிஸ்ட்னு கூட நெனச்சுக்கோ. பட் இனிமே இது உன் கழுத்தை விட்டு வேற எங்கயும் போகக் கூடாது..” என்று கட்டளையிட “அஹான்… நான் மட்டும் மேரேஜுக்கான லைசென்ஸை என் கழுத்திலேயே மாட்டிக்கணும். நீ ஃப்ரீயா சுத்துவியா?” என்று அவள் வாதிட்டாள்.
“நான் வேணா ‘ஐயாம் அவந்திகா’ஸ் ஹஸ்பென்ட்னு நெத்தில டாட்டூ போட்டுக்கவா?” என்று அவன் கடுப்பாகிவிட அவந்திகா அமைதியானாள் அவன் நெற்றியைப் பார்த்தபடியே.
சில கணம் கழித்து “உன் நெத்தில அவ்ளோ பெரிய சென்டென்ஸ் எழுதுறதுக்கு எடமும் இல்ல… இட்ஸ் ஓகே.. நான் இதை அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே தலைவகிட்டில் குங்குமமிட ராகவ் “இது எதுக்கு?” என்று ஏதோ சொல்லவர அவனைத் தடுத்தாள்.
“இத மட்டும் ஏன் மிச்சம் வைக்கணும்?” என்று கேட்டபடியே அவனைப் பார்க்க அவன் திரும்பி நின்று சிரித்தான்.
பின்னர் “லெட்ஸ் கோ” என்று அவளின் கையைப் பிடித்தபடி செல்ல ஆரம்பித்தான். காரில் அவந்திகாவுடன் ஏறியவன் பார்ட்டி நடக்கும் ஹோட்டலை நோக்கிக் காரைச் செலுத்தினான்.
அரைமணி நேரத்தில் ஹோட்டல் வாசலில் கார் நிற்கவும் அதிலிருந்து இறங்கிய அவந்திகா ரிப்போர்ட்டர்ஸ் கூட்டத்தையும், கேமரா ஃப்ளாஷையும் பார்த்து மிரண்டவளாய் ராகவின் புஜத்தைப் பிடித்துக்கொண்டு அவன் பின்னே சென்றாள்..
அவன் வழிவிடுமாறு அவர்களை விலக்கியபடி அவளை அணைத்துக்கொண்டு உள்ளே சென்றான்..
இருவரையும் முதலில் பார்த்தவன் மேடிதான். அவர்களின் நெருக்கத்தைப் பார்த்ததும் மீண்டும் அவந்திகா ஏதோ செய்துவிடுவாளோ என்ற பயத்தில் அவனுக்கு நாக்கு உளர்ந்தது…
விறுவிறுவென்று அங்கிருந்த ஆரஞ்ச் ஜூஸைக் குடித்தவன் வர்ஷாவிடம் அவர்கள் இருவரையும் காண்பிக்க அவளும் அதே ரியாக்ஷனைக் கொடுத்தாள்.
அதற்குள் ராகவ் நேனாவிடம் அவந்திகாவை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்க வர்ஷா அங்கே வந்தவள் அவர்களிடம் அனுமதி பெற்று அவந்திகாவைத் தன்னுடன் அழைத்துச் சென்று இதைப் பற்றிக் கேட்டாள்.
அவள் சொல்ல வருவதற்குள் முந்திக்கொண்ட மேடி டென்ஷனில் வியர்க்க வழிய ஆரம்பித்தான். அட கடவுளே என்று தலையில் அடித்துக்கொண்டாள் அவந்திகா அவனது கோலத்தைப் பார்த்து.
அதற்குள் கிஷோர் மேடையில் ஏறியவன் தன் முதல் பயணம் இன்றிலிருந்து ஆரம்பிப்பதாகக் கூறி அதற்கு ராகவிற்கும் வருணுக்கும் நன்றி தெரிவித்தான்.
பின்னர் இந்த லான்ச்சைச் சிறப்பாக நடத்த உதவி செய்த அண்ணிகளுக்கும் நன்றி தெரிவிக்க அங்கிருந்த ஊழியர்கள் குழம்பிவிட்டனர்..
அவன் மைக்கில் “கம் ஆன் மை டியர் பாபிஸ்… பய்யா போத் ஆஃப் யூ டூ” என்று சொல்ல வருண் உஷாவின் கையைப் பிடித்து அங்கே அழைத்து வர ராகவ் அவந்திகாவை அழைத்தான்.
அவன் அவளை அழைக்கவும் ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு. இவ்வளவு நாள் ஈவண்ட் மேனேஜராக இருந்தவள் ராகவ் கபூரின் மனைவியா என்று அனைவரும் மலைத்துப் போயினர்.
“அவந்திகா ராகவ் சாரோட வைஃபா?” என்று ஷாக்கானான் மேடி.
“எனக்கும் இது ஷாக்காதான் இருக்கு மேடி” என்றாள் வர்ஷா.
கிஷோர் மேடையில் “இன்னொரு இம்பார்ட்டென்ட் பெர்சனை மறந்துட்டேனே… தி கியூட் அண்ட் கார்ஜியஸ் ரித்திமா… கம் ஆன் ஸ்வீட் ஹார்ட்” என்று அவளை அழைக்க அவள் பார்வையால் அவனை வறுத்தெடுத்துக்கொண்டே மேடையில் ஏறினாள்.
அவந்திகா கிஷோர் கையிலிருந்த மைக்கை வாங்கி “வர்ஷா அண்ட் மேடி.. நீங்களும் தான். கம் ஹியர். தென் லேரன் மேம். நாங்க பண்ணுன எல்லாத் தொல்லைகளையும் பொறுத்துட்டு எங்களுக்குச் சப்போர்ட் பண்ணதுக்குத் தேங்க்யூ” என்று அவள் பங்கிற்கு நன்றி நவிழ்ந்தாள்.
இந்த அலப்பறைகளுக்குப் பிறகு மேடியிடமும் வர்ஷாவிடமும் கதை அளந்துகொண்டிருந்தவளிடம் பேச வந்தவனை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை..
சுதாரித்துக்கொண்டவளாய் “வெல்கம் மிஸ்டர் சிராஜ் மெஹ்ரா” என்று அவனை வரவேற்க அவனோ “நாட் பேட் மிஸஸ் கபூர்… நீங்க இன்னும் என்னை மறக்கலை போல” என்று சொல்லியபடியே கைகுலுக்கினான்.
“மறக்கிற மாதிரியா நீங்க எனக்குப் பண்ணிருக்கீங்க?” என்றாள் அவந்திகா கிண்டலாக.
அவளது கேலியைப் புரிந்துகொண்டவன் “ஓ! ராகவ் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான் போல. எப்பிடியோ இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கிறதுக்கு நான்தான் காரணம்கிறத மறந்துடாம இருந்தா சரி” என்றான் ஒரு கர்வமான குரலில்.
அவன் செய்த காரியத்தால் தானும் ராகவும் அடைந்த மனவருத்தத்தை நினைத்துப் பார்த்த அவந்திகா “சில கேவலமான ஜென்மங்கள் அவங்க பண்ணுன கேடு கெட்ட வேலைக்குக் கிரெடிட் கேக்குதுங்க. அதுக்கென்ன? குடுத்துட்டாப் போச்சு” என்று நக்கலாகப் பேசக் கடுப்பானான் சிராஜ்.
அவளை நோக்கிக் கோபத்துடன் எட்டுகளை எடுத்து வைத்தவன் சட்டென்று சுவிட்ச் போட்டாற்போல் நின்றான்.
தன் இடையின் ஒரு கை படவும் அவந்திகா திரும்பிப் பார்த்தாள்…
புன்சிரிப்புடன் நின்றவன் ராகவ். அதே சிரிப்புடன் சிராஜைப் பார்த்தவன் “எத்தனை தடவை உனக்கு வார்ன் பண்றது? என்னோட வைஃபை டிஸ்டர்ப் பண்ணாதனு. உனக்கு நான் பேசுற லாங்வேஜ் புரியலைனா சொல்லு..” என்று கேலி செய்தான்.
சிராஜ் ஒரு வன்மத்துடன் சிரித்தவன் அவனை விடுத்து அவந்திகாவைக் கிண்டலாகப் பார்த்தபடியே “அவந்திகா! உங்களைப் பாத்தா பாவமா இருக்கு… ஏன் நான் உங்களுக்கும் அந்தக் கான்ட்ராக்ட்டைக் குடுத்தேன் தெரியுமா? ஐ லைக் யுவர் கான்ஃபிடென்ஸ். பெரிய ஃபேமிலி பேக்ரவுண்ட் எதுவும் இல்லாமத் தானே முன்னேற நெனச்ச அந்த ஃபயர். இதுதான் காரணம். பட் அது இனிமே உங்ககிட்ட மிஸ் ஆயிடும்” என்று சொல்லவும் அவள் திகைத்தாள்.
அவன் அவளது திகைத்த தோற்றத்தைக் கண்டு நகைத்து “என்ன பாக்கிறீங்க? எப்பிடிப் பாத்தாலும் ஹஸ்பென்ட் கூடத்தான் உங்க ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் சைன் ஆயிருக்கும். சோ இனிமே ஹார்ட் ஒர்க்குக்கோ அந்த செல்ஃப் கான்பிடென்ஸுக்கோ எந்த அவசியமும் இருக்காது. அவன்தான் உங்களை ஈஸியா ஜெயிக்க வச்சிருவானே” என்று சொல்லிவிட்டு இருவரிடமும் விடை பெற்றான்.
அவன் சொன்னதை ராகவ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை… ஆனால் அவந்திகா அதிலிருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டாள். அவர்கள் மூவரும் சன் டியூவை ஆரம்பித்த காலத்திலிருந்து அவரவர் வீட்டினரிடம் கூட நிதியுதவி கேட்டு நின்றதில்லை. அதைத் தொடங்க முதல் போட்டது கூட வங்கிக்கடன் வாங்கித்தான். எங்கே வீட்டினரிடம் வாங்கித் தொழில் தொடங்கினால் தங்களின் சொந்த முயற்சி என்ற வார்த்தையின் அர்த்தம் அடிபட்டுவிடுமோ என்று கவனத்துடன் இருந்தனர் அவர்கள் மூவரும்.
அப்படி இருக்க இனியும் விஹானுடன் அவர்களின் ஒப்பந்தம் தொடர்ந்தால் தங்களுக்கென்று மூவரும் உருவாக்க நினைத்த அடையாளம் கனவாகவே போய்விடும் என்பதை உணர்ந்தவள் ராகவிடம் சென்றாள்.
அவனை நேருக்கு நேராகப் பார்த்து “ராகவ்! நம்ம கான்ட்ராக்ட்டைக் கேன்சல் பண்ணிடலாம்” என்று சொன்னவளை நம்ப முடியாமல் பார்த்தான் ராகவ்.
அவளைப் பைத்தியமா என்பது போலப் பார்த்தவன் “ஆர் யூ மேட்?” என்று கேட்டும் விட்டான். உஷா ரித்திமாவுக்கோ அவள் கூறிய சிராஜின் வார்த்தைகளைக் கேட்டபிறகு அவந்திகாவின் முடிவு சரிதான் என்று தோன்ற அமைதி காத்தனர்.
“யெஸ்.. ஐ ஹேவ் டிஸைடட். வீ வில் டெர்மினேட் அவர் கான்ட்ராக்ட். அண்ட் ஐ வோண்ட் சேஞ்ச் திஸ் அட் எனி காஸ்ட்” என்ற அவளின் பிடிவாத குரலில் கோபம் கொண்டவன் கையிலிருந்த கண்ணாடி கிளாஸைக் கீழே எறிந்துவிட்டுப் பார்ட்டி ஹாலை விட்டு வெளியேற ஆரம்பித்தான்.
“யூ கேரி ஆன் கய்ஸ்” என்று அவர்களிடம் கூறிவிட்டு அவந்திகாவும் அவன் பின்னே வேகமாகச் சென்றாள்.
கோபத்துடன் பார்க்கிங்கிற்குச் சென்றவன் காரை எடுக்கவும் அங்கே வந்த அவந்திகா அவளும் ஓடிச் சென்று காரில் அவனுடன் அமர்ந்தாள்.
அவன் இறுக்கமான முகத்துடன் காரை ஸ்டார்ட் செய்ய அது சீறிப் பாய ஆரம்பித்தது…
இறுக்கமான முகத்துடன் சாலையை வெறித்தபடிக் காரை ஓட்டிக்கொண்டிருந்தவனிடம் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று தெரியாமல் அவந்திகா குழம்பிப் போனாள்.
ராகவிற்கோ போயும் போயும் சிராஜின் பேச்சைக் கேட்டு இந்தக் கான்ட்ராக்ட்டை அவள் இடையிலேயே முறிப்பதா என்ற கோபம் அவனது கண்ணை மறைக்கச் சாலையில் வரும் வாகனங்கள் கூட அவன் கருத்தில் படவில்லை.
வேகமாக ஓட்டிச் சென்றவன் எதிரில் வந்த லாரியைக் கடைசி நிமிடத்தில் பார்த்து ஸ்டியரிங் வீலை வளைத்துக் காரைச் சாலையிலிருந்து திருப்ப அது சாலையோரப் பாதையிலிருந்த மரத்தில் முட்டி நின்றது.
அந்த வேகத்தில் ஸ்டீயரிங் வீலில் முட்டிக்கொண்டவனின் நெற்றியில் இரத்தம் கசிய ஆரம்பித்ததை அவன் உணரவில்லை. அவந்திகாவுக்கோ பெரிய விபத்திலிருந்து தப்பித்த அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.
மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை அமைதிப்படுத்திக்கொண்டவன் காரை எடுத்து வேறு எந்த விபத்தும் நேரும் முன் வீடு வந்து சேர்ந்தான். காரைப் பார்க்கிங்கில் விட்டுவிட்டு வேகமாக உள்ளே வந்தவன் அவன் பின்னே ‘ராகவ்’ என்று அழைத்தபடியே வந்த அவந்திகாவைக் கண்டுகொள்ளவே இல்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


