காரின் சாவியைப் பெட்டில் வீசியவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட அங்கே வந்த அவந்திகா “ராகவ்! நான் சொல்லப் போறதக் கொஞ்சம் பொறுமையாக் கேளு” என்று அவன் அருகில் வந்து அவனது கையைப் பிடிக்க அவனோ ஆத்திரத்துடன் அவளது கையை உதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சோஃபாவை நோக்கிச் சென்றான்.
அவன் அவளது கையை உதறிய அந்நொடி அவந்திகாவின் நெஞ்சில் சுருக்கென்று ஒரு சிறிய வலி பரவக் கண்ணில் நீர் திரையிட ஆரம்பித்தது. அதை விழுங்கியபடியே அவனிடம் சென்றவள் “ஓகே! உன்னோட இஷ்டம் போல நீ கோவப்பட்டுக்கோ. பட் உனக்கு நெத்தில அடி பட்டுருக்கு. அத ஃபர்ஸ்ட் பாரு” என்று அமைதியாகக் கூற அவனோ அதைக் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை.
அவந்திகா தானே சென்று ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க அவன் அதை வாங்கினால்தானே!
பின்னர் அவளே பஞ்சை எடுத்து இரத்தத்தைத் துடைக்கப் போக அதைத் தடுத்தவனின் கண்ணில் நூறு சதவீத கோபத்தை அன்றுதான் பார்த்தாள் அவந்திகா… ஆனாலும் அதைப் பொருட்படுத்தாது காயத்துக்கு மருந்து போட்டுவிட்டுத்தான் அவள் நகர்ந்தாள்.
“ராகவ்! கொஞ்சம் பொறுமையா என்னோட பக்கத்து நியாயத்தையும் கேளு! ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் அவந்திகா அவள் இயல்புக்கு மாறாக.
கடினமான ஒரு பார்வையை அவளை நோக்கி வீசியவன் அவளையே பார்த்தபடி “நான் எதுக்குப் பொறுமையா இருக்கணும்? எவனோ ஒருத்தன் முட்டாள்தனமா ஏதோ ஒளறிட்டுப் போவான். அதைக் கேட்டுட்டு நீயும் டிசிஷன் எடுப்ப. இதல்லாம் பாத்துட்டு நான் பொறுமையா இருக்கணுமா?” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உனக்குப் புரியல ராகவ். இன்னைக்கு அவன் சொல்லுறான், ஆனா நாளைக்கு எல்லாருமே சொல்லுவாங்க. உன்னோட சப்போர்ட்லதான் நாங்க கன்சர்ன் ரன் பண்றோம்னு தேவையில்லாமப் பேசுவாங்க” என்று அவள் தங்கள் பக்க நியாயத்தை விளக்கினாள்.
“மத்தவங்க என்ன பேசுவாங்கனுல்லாம் எனக்குக் கவலை கெடையாது” என்று சொன்னவனை இறுக்கமான முகத்துடன் பார்த்தாள் அவந்திகா.
“மத்தவங்களப் பத்திக் கவலை இல்லனு நீயா பேசுற ராகவ்? மத்தவங்க என் பொண்ணைப் பத்தி என்ன நெனைப்பாங்கன்னு என்னோட சித்தி கேட்ட ஒரு கேள்விக்காகத்தான் நீ என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டங்கிறத மறந்துடாத ராகவ்” என்ற அவளின் பதிலில் அவன்தான் வாயடைத்துப் போனான்.
உண்மையும் அதுதானே. அன்று கௌசல்யா தன்னுடைய பெண்ணைப் பற்றிச் சமுதாயம் என்ன பேசும் என்று கேட்ட ஒரு கேள்விக்காகத்தானே அவன் அவளை எதிர்பாராமல் மணந்தது!!
ஒன்றும் சொல்லாமல் சிகையைக் கோதிக்கொண்டவனைக் கனிவுடன் பார்த்தவள் “எனக்கு உன்கூடச் சேந்து வொர்க் பண்ணுறதுல பெர்சனலா எந்தப் பிரச்சனையும் கெடையாது ராகவ். நீயோ உன்னோட ஸ்டாஃப்ஸோ இதுவரைக்கும் எங்களை மரியாதைக் குறைவா நடத்துனதே இல்ல. பட் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. உன்கூடதானே வொர்க் பண்ணப் போறோம்கிற அலட்சியம் இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காச்சும் எனக்கு வரலாம். அதால நம்ம வொர்க் கூடப் பாதிக்கப்படலாம். இது எல்லாத்தையும் யோசிச்சுப் பாத்துதான் நான் கான்ட்ராக்ட்ட டெர்மினேட் பண்ணிடலாம்னு சொன்னேன்” என்று பொறுமையாக நிதர்சனத்தைப் புரியவைத்தாள்.
அதைக் கேட்டதும் ராகவிற்கும் அவளை வற்புறுத்தவோ அவளிடம் கோபப்படவோ தோன்றவில்லை.. மௌனமாக அவளது கருத்தை ஒரு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டான்.
ஆனால் அவன் முகம் இன்னும் தெளியாததைக் கண்ட அவந்திகாவுக்கு மனதுக்கு ஏனோ பாரமாகவே இருந்தது. எப்படி அவனது ஒரு புன்சிரிப்பு அவளைப் பாதிக்குமோ அதே போல அவனது கோபமும் வருத்தமும் கூட அவளைத் தீவிரமாகப் பாதிக்கவே அவனது கையைப் பிடித்துக் கண்ணாலேயே மன்னிப்பு வேண்ட ராகவ் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.
“நீ இப்பிடி வருத்தமா இருக்காத ராகவ். என்னால அதைப் பாக்க முடியல” என்று சொல்லிக்கொண்டே அவனைக் கட்டிக்கொள்ள அவளது இந்தத் திடீர் அணைப்பில் ராகவ்தான் திகைத்துப் போனான்.
மெதுவாக அவனது கோபம் அவனறியாமல் தூரம் செல்ல அவனது கரங்களும் அவளை அணைத்துக்கொண்டது.
அவளது கூந்தலை நீவியபடியே தன் நெஞ்சிலேயே முகம் மறைத்துப் புதைந்திருந்தவளை ஒரு புன்னகையுடன் பார்த்தவன் ஆழ்ந்த குரலில் “அவந்திகா! கொஞ்சம் என்னைப் பாரு” என்று சொல்ல அவளோ தலையை ஆட்டி மறுத்தாள்.
“ஹேய்! நான் கோவமா இல்லம்மா! நெஜமா” என்று சொன்னதும் தலையை மட்டும் தூக்கி அவனைப் பார்த்தவள் “உன்னை நம்பலாமா?” என்று கேட்க அவள் கேட்ட விதத்தில் சிரித்தான் ராகவ்.
“உன் மேல யாராலயும் ரொம்ப நேரத்துக்குக் கோவமா இருக்க முடியாது ஜான்சி ராணி” என்று சொல்லி அவளது முடியைக் கலைத்துவிட்டான் ராகவ்.
முடி கலைந்த கோபத்தில் அவனிடமிருந்து விலகியவள் “ஏன்டா என் ஹேர்ஸ்டைல கலைச்சு விட்ட?” என்று கடுப்புடன் கேட்டாள்..
“இப்போதான் நீ பாக்க அழகா இருக்க ஜான்சி ராணி” என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கண்ணாடி முன் நிறுத்தி அவளது கோலத்தைக் காண்பிக்கக் கடுப்பானவள் அங்கிருந்த தலையணையால் அவனைத் தாக்கத் தொடங்கினாள்.
“எனக்கு இதுல்லாம் வலிக்காது ஜான்சி ராணி.. நீ உன்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத”
“நீ இப்பிடிப் பொய் சொன்னா நான் அத நம்பிட்டு அடிக்குறத நிறுத்திடுவேனு நெனைக்கியா? நோ வே” என்று வேகமாக அடித்தாள்.
அவன் கூறியது உண்மைதான் போல!!! அவனுக்கு வலித்த மாதிரியே அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வராததால் அடிப்பதை நிறுத்தியவள் “அது சரி! இப்பிடிப் பாறை மாதிரி இருந்தாக் கல்லைத் தூக்கிப் போட்டாக் கூடத்தான் வலிக்காது” என்று சொல்லிவிட்டுச் சென்றவளை அவன் இழுத்து அணைக்கவும் அவந்திகாவுக்கு அதிர்ச்சியானது..
“எக்ஸ்கியூஸ் மீ! இப்போ எதுக்கு மேன் என்னை ஹக் பண்ணுன? சோடோ முஜே (விடு என்னை)” என்று அவள் அணைப்பிலிருந்து விடுபட முயல
அவனோ “நீ என்னை ஹக் பண்ணதுக்கு நான் உன்னை ஏதாச்சும் சொன்னேனா?” என்று கேட்டபடி அணைப்பை இன்னும் இறுக்கினான்.
அவனுக்கு “இல்ல” என்று அவள் பதிலளிக்க ராகவ் “அதே மாதிரி நீயும் சைலன்டா இரு” என்று சொல்லவும் அவந்திகா “நீ ஏதோ வருத்தமா இருந்தன்னு ஹக் பண்ணேன். இப்போ நீ நல்லாதானே இருக்க” என்று அவன் கையை அகற்றத் தீவிரமாக முயற்சித்தவளைப் பார்த்து அவனுக்குக் காமெடியாக இருந்தது.
“உஸ்… அமைதியா என்னை ஹக் பண்ண விடு” என்று அவன் சொல்ல அவள் அவனை விசித்திரமாகப் பார்த்துவைத்தாள்.
“என்னது? ஹக் பண்ண விடணுமா? போடா…. இப்போ நீ மட்டும் என்னை விடலன்னு வச்சுக்கோ.. அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ” என்று அவள் சண்டையிட “ஏன் உனக்கு மட்டும்தான் ஹக் பண்ண ரைட்ஸ் இருக்கா ஜான்சி ராணி? ஜஸ்ட் ஒரு ஹக்ல நீ ஒன்னும் கரைஞ்சுப் போயிட மாட்ட” என்றான் அவனும் சளைக்காமல்.
அவந்திகா அவனுடன் போராடிப் பார்த்துவிட்டு “பெருமாளே! இந்த மைதாமாவுக்குக் கொஞ்சமாச்சும் அறிவைக் குடு” என்று தமிழில் கத்தியவள் “இப்போ உனக்கு இத டிரான்ஸ்லேட் பண்ணனும்னா நீ என்னை விடு” என்று சொல்ல ராகவும் தன் அணைப்பை விலக்கினான்.
அவந்திகாவோ கவுனை நீவிவிட்டபடி அவனை மேலும் கீழுமாகக் கேலிப் பார்வை பார்த்தவள் “நான் டிரான்ஸ்லேட் பண்ணா மட்டும் நீ அப்பிடியே தமிழ்ல பேசி அசத்திடுவ பாரு! உனக்கு தமிழ்ங்கிற வார்த்தையே வாய்ல நுழையாம தமில் தமில்னு சொல்லிக் கொன்னுட்டிருக்க. இந்த லட்சணத்துல உனக்கு டிரான்ஸ்லேஷன் மட்டும்தான் கொறச்சல்! போடா” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு உடையை மாற்றச் சென்றுவிட்டாள்.
ராகவோ “போ ஜான்சி ராணி… திரும்பி இங்கதானே வரணும்” என்று மனதில் கறுவிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் மொத்த குடும்பமும் வீட்டுக்கு வர அங்கே அவர்கள் கண்டது இதுதான்…
ஹாலில் அவந்திகாவும் ராகவும் ஒருவரோடு ஒருவர் பேசிச் சிரித்துக்கொண்டு டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுமித்ரா ஒரு படி மேலே போய்த் தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்..
அனைவரும் திரும்பி வந்ததைப் பார்த்ததும் அவந்திகா எழுந்துகொண்டாள். உஷாவிடம் சென்று விவரத்தை அவள் பிரச்சனை முடிந்த நிம்மதியில் பெருமூச்சு விட்டாள்.
டின்னருக்குப் பிறகு அனைவரும் உறங்கச் செல்ல அன்றைய நாள் அமைதியுடன் முடிந்தது.
காலையில் அலாரம் சத்தத்தில் விழித்துக்கொண்ட அவந்திகா எழுந்து பார்க்கும்போது ராகவ் இன்னும் எழும்பாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.
டயர்டா இருப்பான் போல என்று நினைத்துக்கொண்டு அவந்திகா சோம்பல் முறித்துவிட்டு வழக்கம் போல மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் நன்கு விடிந்துவிட எழுந்து குளிக்கச் சென்றாள். குளித்துவிட்டு வந்தவள் அவன் எழும்பாததைப் பார்த்தபடியே உடை மாற்றிவிட்டுக் கீழே சென்றாள்.
அங்கே செஃப் காலையில் கிச்சனில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க அவர் அருகில் சென்றவள் அவர் காலை உணவு தயாரிப்பில் பிஸியாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவரிடம் தானே இன்று காபி போடுவதாகச் சொல்லிவிட்டுக் காபி பவுடரைத் தேட ஆரம்பித்தாள்.
காலையில் ராதிகா எழுந்து கிச்சனுக்குள் வந்தவர் அங்கே பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்த அவந்திகாவைக் கண் காட்டிச் செஃபிடம் கேட்க அவரோ “சின்ன மேடம் எல்லாருக்கும் காபி போடுறேனு சொன்னாங்க” என்று சொல்லவும் தலையசைத்தவர் பின்னர் வெளியே சென்று ஹாலில் அமர்ந்து நியூஸ் பேப்பரைப் படிக்கத் தொடங்கினார்.
சிறிது நேரத்தில் தட்டில் காபி கோப்பைகளுடன் அவந்திகா வரவும் அதை எடுத்துக்கொண்டவர் அவள் அலுவலகம் செல்லவில்லையா என்று கேட்க அவந்திகா இன்னும் ஒரு 10 நாட்களுக்குத் தனக்கு லீவ் என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
தோட்டத்தில் யோகா செய்து கொண்டிருந்த மாமனார்களுக்குக் காபி கொடுத்துவிட்டு வந்தவள் வருணும் உஷாவும் ஹாலில் இருப்பதைப் பார்த்து அவர்களுக்கும் கொடுத்தாள்.
வருண் “என்னாச்சு? அவந்திகா திடீர்னு ஒரு குடும்பப் பெண்மணியா மாறிருக்கா? ஏதோ சரியில்லையே” என்று அவளைக் கேலி செய்தான்.
“வருண் நாளைக்கும் நான்தான் காபி போடுவேன்… நீ இப்பிடியே கேலி பண்ணுனனு வை.. உன்னோட காபில உப்ப அள்ளிப் போட்டுருவேன்.. பீ கேர்ஃபுல்” என்று மிரட்டிவிட்டு அவளது அறைக்குக் காபியைக் கொண்டு சென்றாள்.
இன்னும் ராகவ் எழுந்திருக்காததைக் கண்டவள் “விடிஞ்சு எவ்ளோ நேரம் ஆகுது? இன்னும் என்ன தூக்கம் இந்த மைதாமாவுக்கு?” என்று சொல்லிக்கொண்டே “ராகவ்! எழுந்திரி மேன்” என்று அவனை எழுப்ப அவன் அவளது கையைத் தட்டிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.
ஒன்னு அதிகாலைலயே எழுந்திரிச்சு உசுர வாங்க வேண்டியது, இல்லைனா இப்பிடிக் கும்பகர்ணன் மாதிரி விடிஞ்சது கூடத் தெரியாம தூங்க வேண்டியது என்று எண்ணியவளின் கண்ணில் சிக்கியது தண்ணீர் வைத்திருந்த ஜக்!
அதைப் பார்த்ததும் “அடேய்! என்னை மட்டும் எப்பிடித் தண்ணி ஊத்தி எழுப்புன! இன்னைக்கு நீயும் அனுபவி தம்பி” என்று அதைக் கையில் எடுத்தாள்.
மெதுவாக அவன் அருகில் அமர்ந்தவள் அவன் காதருகில் சென்று “ராகவ்! மேரி பதி பரமேஸ்வர்! உதோ (எழுந்திரு)” என்று கேலியாகச் சொல்ல அவளின் குரலில் அவன் புரண்டு படுத்தான்.
இதுதான் சமயமென்று ஜக்கிலிருந்த தண்ணீரை அவன் முகத்தில் ஊற்ற அவனோ திடுக்கிட்டு விழித்தான்.
கோபத்துடன் பார்த்தவனின் எதிரில் கையில் ஜக்குடன் இடுப்பில் கை வைத்தபடி அவனை நக்கலாகப் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகா பட “வாட் இஸ் திஸ்? இப்பிடியா தூங்குறவங்க மேல தண்ணிய ஊத்துவ நீ?” என்று எரிச்சலுடன் சொல்லிக்கொண்டே தலையை உலுக்கத் தண்ணீர்த்துளிகள் தெறித்தது..
அவந்திகா வாய்விட்டுச் சிரித்தவள் “அஹான்! இப்பிடித்தானே அன்னைக்கு எனக்கும் இருந்திருக்கும்! நல்லா என்ஜாய் பண்ணு ராகவ்” என்று கிண்டலடித்தாள்.
எழுந்து தன்னுடைய ஈரமான டி-ஷர்ட்டை உதறிக்கொண்டவன் “அதுக்குத்தான் நீ என்னை அப்போவே பனிஷ் பண்ணிட்டியே! இப்போ” என்று நிறுத்திவிட்டு அவளைக் கூர்ந்து பார்க்க அவந்திகாவின் மூளையில் அவள் பழிவாங்கிய விதம் படமாக ஓடத் துவங்கியது.
அவளது முகபாவங்களைப் பார்த்தவன் என் மேலயா தண்ணிய ஊத்துற.. இன்னைக்கு நீ காலி என்று மனதில் எண்ணிக்கொண்டே “சோ இட்ஸ் மை டர்ன் நவ்” என்று குறும்புடன் நெருங்கவும் அவந்திகாவுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்பது விளங்கிவிட்டது.
“ஏய்! மைதாமாவு! அதுவும் இதுவும் ஒன்னா? நீ என்னை ஏர்லி மார்னிங் ஏ.சி குளிர்ல எழுப்புன. இப்போ டைம் என்னனு பாரு? இப்போ குளிரக் கூட இல்லை. சோ சேஞ்ச் யுவர் ப்ளான்” என்று பின்னே நகர்ந்தாள்.
“நெவர் மைண்ட். பனிஷ்மென்ட் இஸ் பனிஷ்மென்ட். ஓடாத… நில்லு” என்று அவளைத் துரத்த அவளோ அவன் கையில் சிக்காமல் சோஃபா, பெட் என்று அனைத்தின் மீதும் ஏறி ஓடத் துவங்கினாள்.
“இங்க பாரு ராகவ்.. அன்னைக்கு நீ குளிக்கல… சோ நோ பிராப்ளம்… ஆனா நான் குளிச்சு ரெடியாயிட்டேன் மேன். இப்போ மட்டும் என் டிரஸ் ஈரமாச்சுனா…” என்று சொல்ல
“சோ வாட் ஜான்சிராணி? மறுபடியும் குளிச்சுக்கோ” என்று சொல்லி அவளை நெருங்கி இழுத்து அணைத்துக்கொண்டான்.
அவளது முகத்துக்கு நேராகத் தனது தலையை உலுக்க அதிலிருந்து நீர்த்துளிகள் அவளின் முகத்தில் தெறிக்க அவந்திகா கண்களை மூடிக்கொண்டாள். அவள் கோபத்தில் பல்லைக் கடிக்கும் சத்தம் அவன் காதில் கீதம் போல் பாய அவளை விடுவித்தான்.
ஈரமான டாப்பை உதறியபடி அவனைக் கண்ணாலே எறித்தவளைக் குறும்புடன் பார்த்தவன் “அச்சச்சோ! உன்னோட டாப் இவ்ளோ ஈரமாயிடுச்சே! ஒன்னு பண்ணலாமா? எப்பிடியும் நீ டிரஸ் சேஞ்ச் பண்ணத்தான போற… இப்போ நானும் குளிக்கப் போறேன்.. வொய் டோண்ட் வீ கோ டுகெதர்?” என்று கேட்க
அவந்திகா பதறிப்போய்ச் சில அடிகள் நகர்ந்தவள் “அங்கேயே நில்லு… காலைலயே என்னை இரிட்டேட் பண்ணாத ஓகே” என்று கண்ணை விரித்து அவனை எச்சரித்துவிட்டுச் சென்றாள்.
அவளின் செய்கையில் வாய்விட்டுச் சிரித்தவன் பாலாவை அழைத்து விரிப்பை மாற்றச் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றான்..
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


