பின்னர் அவந்திகாவைப் பார்த்து “அண்ட் யூ மிஸ். அவந்திகா, கான்ட்ராக்ட் 75% கம்ப்ளீட் ஆனத மறந்துட்டீங்க போல. இப்போ கூட என்னால அதைக் கேன்சல் பண்ண முடியும்” என்று அவளுக்கும் நான்கு நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்தான்.
பின்னர் “என்னோட முகத்தையே பாத்துட்டு இருக்காம கோ அண்ட் ஈட்” என்று பேன்ட்ரியை நோக்கி இருவருக்கும் கை காட்டவே அவர்கள் அவந்திகாவைப் பார்த்தனர்.
அவனோ அவளின் கையைப் பிடித்து வேகமாகத் தன்னுடைய கேபினுக்கு அழைத்துச் சென்றவன் வீட்டிலிருந்து பிரியா அப்போதுதான் அனுப்பியிருந்த கேரியரைக் காட்ட அவந்திகா “அச்சோ! இன்னைக்குப் பெரிய மாமியார்கிட்ட நான் எப்பிடிச் சமாளிப்பேன்? டெய்லி இதே மாதிரிதான் பண்ணுறியானு கேப்பாங்களே?” என்று எண்ணியவளாய்ச் சாப்பிட அமர்ந்தாள்.
ஆர்வத்துடன் கேரியரைத் திறந்தவளின் முகம் ஒவ்வொரு அடுக்கையும் ஆராயும் வரை நன்றாகத்தான் இருந்தது கடைசி அடுக்கில் இருந்த சப்பாத்தியைக் காணும் வரை!
அதைப் பார்த்த உடனே “அட சப்பாத்திக்குப் பொறந்தவங்களா?” என்று மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டவள் “இதச் சாப்டாதானே!” என்று அந்த அடுக்கை மட்டும் தள்ளி வைத்துவிட்டுச் சாப்பிடத் தொடங்கினாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன் அவள் கை கழுவி கேரியரைப் பூட்டி வைத்ததும் “அவந்திகா டெய்லி என்னால உன்னை இந்த மாதிரி வாட்ச் பண்ணிட்டே இருக்க முடியாது… சோ இனிமே ஒழுங்கா நேரத்துக்குச் சாப்டு” என்று சொல்லவும் தலையாட்டிவிட்டுச் சென்றாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அப்போதைக்கு அவள் அந்த கேரியர் விஷயத்தை மறந்துவிட்டாள். ஆனால் மாலையில் வீடு திரும்பும்போது “இப்போ நான் எப்பிடிப் பிரியாம்மாவச் சமாளிப்பேன்?” என்று புலம்பியபடியே வந்த அவந்திகாவைப் பொறுமையின்றிப் பார்த்தான்.
“இப்போ யோசிச்சி என்ன பண்றது? ஒழுங்கா வேலைக்குச் சாப்டுருந்தா இப்பிடி நடந்துருக்குமா?” என்று அவளை வெறுப்பேற்றிவிட்டுச் சென்றவன் பின்னே ஓடியவள் அவன் பின்னால் ஒளிந்தே தன் அறைக்குச் செல்ல முயற்சிக்க ராகவ் பிரியாவைப் பார்த்து “படிம்மா! அவந்திகா உங்ககிட்ட ஏதோ சொல்லணுமாம்” என்று சொல்லித் தன் பின்னே ஒளிந்து நின்றவளை அவர் முன்னிலையில் நிறுத்திவிட்டுச் சென்றான்.
அவரிடம் விளக்கம் சொல்லி இனிமே இப்படி நடக்காது என்று கெஞ்சிக் கூத்தாடி அவரைச் சமாளித்தாள் அவள்.
பிரியா பாலாவை அழைத்தவர் ஏதோ சொல்ல அவன் ஒரு தட்டில் லட்டுகளுடன் வர அவந்திகாவின் கண்கள் ஆவலுடன் விரிந்தது.
“உங்க பாட்டி உனக்காகச் சித்திகிட்ட செஞ்சுக் குடுத்து விட்டுருக்காங்க” என்று சொல்லவும் அவள் “வாவ்! அம்புவோட லட்டு எவ்ளோ டேஸ்டா இருக்கும் தெரியுமா?” என்று சொல்லியபடியே அதை வாங்கிக் கொண்டவள் தட்டுடன் தங்கள் அறைக்குச் சென்றாள்.
சோஃபாவில் அமர்ந்து லட்டுகளை உள்ளே தள்ளியவள் ராகவ் வருவதைப் பார்த்ததும் “உனக்கு லட்டு வேணுமா?” என்று கேட்கவும் அவன் “இதுல கலோரி நெறைய இருக்கும்” வேண்டாமென்று தலையசைத்து மறுத்தான்.
அதைக் கண்ட அவந்திகா ஒரு சின்ன உதட்டுச் சுழிப்புடன் “இவனும் அந்த லிசார்ட் கூடச் சேர்ந்தவன்” என்று வாய்க்குள் முணுமுணுத்தவள் “கம் ஆன் ராகவ்! இந்த வயசுல சாப்டாம தாத்தா ஆனதுக்கு அப்புறமா சாப்டப் போற? அப்போ உனக்கு சுகர் வந்துருக்கும்.. நீயே நெனச்சாலும் உன்னால ஸ்வீட் சாப்பிட முடியாது” என்று அடுக்க ஆரம்பிக்க அவன் நிறுத்து என்று சைகை காட்டியவன் தட்டிலிருந்த ஒரு லட்டை எடுத்துக் கொண்டான்.
பாதி சாப்பிட்டவன் “போதும்” என்று அவந்திகாவிடம் மீதியைக் கொடுக்க அவளோ “எதுக்கு வேஸ்ட் பண்ணனும்?” என்று அதைச் சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் “இப்போ நான் என்ன பண்ணுனேன்?” என்று ஷாக்காகி யோசிக்கப் பக்கத்திலிருந்த ராகவ் அவளின் முகபாவத்தைக் கவனித்தவன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
அவளோ கடுப்பாகி “நான் மத்தவங்க குடிச்ச கிளாஸ்ல கூடத் தண்ணி குடிக்க மாட்டேன்.. இன்னைக்கு உன்னால நீ சாப்ட மிச்சத்த சாப்டுட்டேனே” என்று அழ ஆரம்பிக்க ராகவ் “ஒரு நல்ல வைஃப்க்கு அடையாளம் இதுதான் ஜான்சி ராணி” என்று கண் சிமிட்டி அவளை இன்னும் கடுப்பாக்கிச் சந்தோஷப்பட்டுக்கொண்டான்…
மறுநாள் காலையில் வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸுடன் டெனிம் ஜீன்ஸும் விண்டேஜ் டி-ஷர்ட்டுமாக வந்தவளைப் பார்த்தவன் புருவம் உயர்த்த அவந்திகாவோ “நான் எப்போவுமே கேஷுவலாதானே ட்ரஸ் பண்ணுவேன். இன்னைக்கு மட்டும் இவன் ஏன் கண்ணாலேயே என்னைக் கொஸ்டீன் பண்றான்” என்று யோசித்தபடியே அவனைப் பார்த்தாள்.
பின்னர் “இன்னைக்கு ஹால்ல டெக்கரேஷன் இருக்கு ராகவ்.. அதுக்கு இதான் ஃபிட்டா இருக்கும்” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறினாள்.
அலுவலகத்திற்கு வரும்போதே அவளுக்காகக் காத்திருந்த மேடியிடம் போனில் தகவல்களைக் கூறியவள் நேரே வர்ஷாவிடம் சென்று ஹாலுக்குச் செல்லத் தயாராகும்படி கூறிவிட்டு லாராவைத் தேடிச் சென்றாள்.
ராகவ் டைரக்டரிடம் அட்வர்டைஸ்மென்ட் பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தவன் அங்கே தூரத்தில் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவனைப் பார்த்ததும் சந்தோஷத்தில் அவனை அணைத்துக் கொண்டான்.
“ஆர்யா! எப்பிடி இருக்க மேன்? வாட் அ சர்ப்ரைஸ் விசிட்” என்று அவன் தோளின் மீது கை போட்டுக்கொண்டே கேட்டவனை முறைத்தான் அந்த ஆர்யா..
“நானாச்சும் சர்ப்ரைஸா விசிட்தான் பண்ணேன். ஆனா நீ சர்ப்ரைஸாக் கல்யாணம் பண்றவன். நீ பேசாதடா! யாருக்கும் சொல்லாமக் கல்யாணம் பண்ணிகிட்டவன்தானே நீ” என்று சொல்லி அவனை விலக்கிவிட்டான், விளையாட்டாகத்தான்!
“கம் ஆன்டா! எல்லாமே எதிர்பாக்காம நடந்தது…” என்று சொல்லி நடந்ததை விளக்கும்போதே லாரா வந்துவிட “லாரா!” என்று அவளை அணைக்கச் சென்றான்.
அவளோ “லாரா இல்ல, லேரன்” என்று திருத்த “நீ இன்னும் திருந்தலையா?” என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டான்.
பின் ராகவை நோக்கி “வேர் இஸ் யுவர் வைஃப் மேன்? ஐயாம் ஈகர்லி வெயிட்டிங் டூ மீட் ஹெர்” என்று சொல்லவும் ராகவுக்கு அவந்திகா கூறியது நினைவுக்கு வந்தது..
“ராகவ் இந்தக் கான்ட்ராக்ட் முடியுற வரைக்கும் உன்னோட ஸ்டாஃப்ஸ் யாருக்கும் நம்ம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்னு தெரிய வேண்டாம்! என்னோட முகத்தை டிவில பாத்திருப்பாங்க! பட் அவ்ளோ கிளியரா நியாபகம் இருக்காது. சோ நீயா எதும் சொல்லி என்னை இன்ட்ரோ குடுக்க வேண்டாம். நான் அவங்க கூடச் சேந்து ஒரு ஆர்டினரி ஈவன்ட் மேனேஜராதான் வொர்க் பண்ண ஆசைப்படுறேன்”
அவளின் குரல் நினைவூட்ட ஆர்யாவிடம் “ஷீ இஸ் இன் சென்னை நவ்” என்று சொல்லிச் சமாளித்தான்.
பின்னர் மூவரும் அவர்களின் நண்பர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் லிசாவைப் பற்றி லாரா கூற மூவரும் அதை நினைத்துச் சிரித்தனர்.
லேரனைத் தேடிக்கொண்டிருந்த அவந்திகா அவள் ஹாலின் நடுவில் நின்று ராகவிடமும் இன்னொரு ஆடவனிடமும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் விறுவிறுவென்று அவர்கள் அருகில் சென்று “மேம்” என்று அழைக்க அவளது திடீர் குரலில் அந்தப் புதியவன் தடுமாறி விழப்போக ராகவ் அவனை நிறுத்துவதற்குள் அவனைத் தாங்கினாள் அவந்திகா.
தன்னைக் கைகளில் தாங்கிய அந்தப் பெண்ணை அப்போதுதான் கவனித்தான் ஆர்யா. அவளைப் பார்த்ததும் அவன் இதழ்களில் புன்சிரிப்பு விரிய, இதை வேடிக்கை பார்த்த ராகவிற்கோ காதில் மூக்கில் எல்லாம் புகை வர ஆரம்பித்தது.
வேகமாக அவனது கையைப் பிடித்து அவந்திகாவின் கரங்களில் சாய்ந்திருந்தவனை இழுத்து நேராக நிறுத்தினான்.
அவந்திகாவோ அந்தப் புதியவனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்க்க அவன் அவளிடம் கை நீட்டி “ஹலோ ஐயாம் ஆர்யா” என்று ஆர்வத்துடன் பார்த்தான்.
அதைக் கவனிக்காத அவந்திகாவோ “என்ன சூர்யாவா?” என்று கேட்க, ராகவ் பல்லைக் கடித்தபடியே “சூர்யா இல்ல ஆர்யா” என்று சொல்ல அவள் தலையசைத்துவிட்டு அவனுக்கு வணக்கம் சொன்னாள்.
பின்னர் லாராவிடம் “மேம்! நாங்க மூணு பேரும் ஹாலுக்குப் போறோம்.. அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப் போக வந்தேன்” என்று கூறியவளை விழி எடுக்காமல் பார்த்த ஆர்யாவைப் பார்த்த ராகவிற்குப் பற்றிக்கொண்டு வந்தது..
அவள் லாராவிடம் பேசிவிட்டுச் செல்லும் வரை பார்த்திருந்தவன் அவள் சென்ற பின் ராகவையும் லாராவையும் பார்த்து “வாட் அ கேர்ள்! என் மனசு என்கிட்ட இல்ல” என்று சிலாகித்தான்..
லாராவோ “இந்த டயலாக்கைக் கேட்டு கேட்டு எங்க ரெண்டு பேரோட காதும் தீஞ்சுப் போச்சு! அட்லீஸ்ட் அத இப்போவாச்சும் சேஞ்ச் பண்ணுடா” என்று கலாய்த்தாள்.
ராகவோ அவந்திகாவை மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டிருந்தவன் நினைவலைகளில் பயணிக்கத் தொடங்கினான். பொதுவாக அவள் தாலி அணிவதை விரும்புவதில்லை. ஒரு நாள் இது குறித்து அவளிடம் கேட்டேவிட்டான் அவன்.
“ஜான்சி ராணி உன்னோட கழுத்து ஏன் வெறுமையா இருக்கு?” என்று கேட்டவனைக் கூரிய விழிகளால் பார்த்தவள் “ஏன்? கண்டிப்பா அந்த லைசென்ஸைப் போட்டே ஆகணுமா?” என்று கிண்டலடிக்க அன்றிலிருந்து அவன் அவந்திகாவைத் தாலியை அணியச் சொல்லி வற்புறுத்துவதில்லை.
அதை நினைத்து இப்போது நொந்துகொண்டான் ராகவ்.
ஆர்யாவிடம் “டேய் ரொம்ப உருகாதடா.. ஷீ மே பி மேரிட்” என்று கேலி போலக் கூற அவனோ “பாத்தா அப்பிடி எதும் தெரியலயேடா” என்று இவன் கூறியதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை..
மாலை…
அந்தப் பெரிய ஹாலின் ஸ்டேஜ் நாளைய புரோகிராமிற்காகத் தயாராகிவிட்டது. ஹாலின் சீட் அரேஞ்ச்மென்ட் யாரை எங்கே அமர வைக்க வேண்டும் போன்ற விவரங்களை அவந்திகா லேரனுடன் சேர்ந்து தீர்மானித்தாள். அவரவர் இருக்கையில் பெயர் ஒட்டப்பட்டு அவையும் தயார் நிலையிலிருக்க லாரா திருப்தியுடன் பார்த்துவிட்டு ராகவை அழைத்துவிட்டு அதைக் காண்பித்துவிட்டு அவள் அலுவலகம் சென்றாள்.
ராகவும் ஏற்பாடுகள் அருமையாக இருப்பதாகக் கூறி மேடியையும், வர்ஷாவையும் பாராட்டத் தவறவில்லை. அங்கே அவனது சர்வீஸ் டிப்பார்ட்மென்ட் ஊழியர்கள் மட்டும் சிறுசிறு மாற்றங்களை அவனது கட்டளையின்படி செய்துகொண்டிருந்தனர்.
ஸ்டேஜில் நின்று சவுண்ட் சர்வீஸ் செக் பண்ணிக் கொண்டிருந்த அவந்திகாவுக்கு ஒரு வினோதமான ஆசை எழுந்தது. உடனே கீழே நின்றுகொண்டிருந்த உஷா, ரித்திமா, மேடியை அழைத்து அதைக் கூற மேடிக்கு டென்ஷனில் மயக்கம் வரும் போல இருந்தது..
“இப்போதான் இங்க யாரும் இல்லதானே! எனக்கு இந்தப் பெரிய ஹால்ல நின்னுகிட்டு எல்லாரோட பேரையும் சத்தமா சொல்லிட்டு அதோட எகோவக் கேக்கனும் போல இருக்கு” என்று கண்ணை உருட்டி அவள் ஆர்வத்துடன் சொல்ல அவன் மயக்க நிலைக்குப் போனான்.
பின்னே ராகவ் மற்ற சர்வீஸ் டிப்பார்ட்மென்ட் ஊழியர்கள் எல்லாரும் இருக்கும்போது அவளுக்கு இப்படி ஒரு வினோதமான விபரீத ஆசை வந்தால் அவனுக்கு மயக்கம் வராதா?
அவர்கள் தடுக்க அதைக் கண்டுகொள்ளாமல் அந்த மேடையில் ஏறியவளின் கண்களுக்கு அந்த ஹாலின் கடைசி இருக்கை வரை தெரிந்தது. ஆனால் அங்கே நின்றுகொண்டிருந்தவர்களின் முகம்தான் தெரியவில்லை.
மேடையின் நடுவில் நின்றவள் சத்தமாக “ஐ லவ் உஷா அண்ட் ரித்தி!” என்று கத்தவும் அது அந்தப் பிரம்மாண்டமான ஹாலின் சுவற்றில் பட்டு எதிரொலித்தது…
அதைக் கேட்டு சர்வீஸ் ஊழியர்கள் திரும்பிப் பார்க்க அவந்திகாவோ மேடையின் பக்கவாட்டு அறையில் இருந்த ராகவைக் கவனிக்கவில்லை.
அவளது இந்த வினோத விளையாட்டைக் கண்டு நகைத்தவனுக்குத் திடீரென்று ஒரு நாள் அவள் கூறிய விஷயம் நியாபகம் வந்தது..
அன்று தாதியிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தவள் அவர் சம்மதித்ததும் அவரைக் கட்டிப்பிடித்து “ஐ லவ் யூ தாதி” என்று சந்தோஷ மிகுதியில் உரைக்க அவரோ “இதை எல்லாம் போய் என் பேரன்கிட்ட சொன்னாலாச்சும் அவன் சந்தோஷப்படுவான்” என்று கேலி செய்தார்.
அதற்கு உதட்டைச் சுழித்தவள் “நான் உங்க பேரன்கிட்ட சொல்லணுமா? தாதி ஐ லவ் யூங்கிறது ரொம்ப விலைமதிப்பில்லாத வார்த்தை. அதை எல்லாருக்கும் சொல்ல முடியாது” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
அது இப்போது நினைவுக்கு வரவும் அவந்திகாவைப் போல அவனுக்கும் ஒரு வினோதமான ஆசை வந்தது.
அவந்திகா உற்சாக மிகுதியில் மீண்டும் “ஐ லவ் வர்ஷு அண்ட் மேடி” என்று கத்த அது மீண்டும் எதிரொலிக்கக் கீழே டென்ஷனாக நின்ற மேடி இன்னும் சிறிது நேரத்தில் மயக்கநிலைக்குச் சென்று விடுவான் போல..
ஏனெனில் மேடையில் அவந்திகாவின் பின்னே வந்து நின்ற ராகவைப் பார்த்துவிட்டான். இன்றோடு தங்கள் வேலை அவ்வளவுதான் என்று நினைத்தவனுக்குக் கை கால்கள் அவனை அறியாமல் உதறலெடுக்க ஆரம்பித்தது.
அவந்திகாவின் பின்னே நின்ற ராகவ் அவளின் காதில் “ஐ லவ் ராகவ்” என்று சொல்ல அவளோ அந்த வார்த்தையின் வீரியத்தை உணராமல் வேகமாக “ஐ லவ் ராகவ்” என்று கத்த அதன் எதிரொலியைக் கேட்டு இப்போது மேடி நிஜமாகவே மயங்கி விழுந்தான்.
ராகவிற்கு அவளைச் சொல்ல வைத்துவிட்ட சந்தோஷத்தில் அவன் மயங்கி விழுந்தது எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை. அவன் விழுந்ததைப் பார்த்ததும்தான் அவந்திகாவுக்கு அவள் சொன்ன வார்த்தை நினைவுக்கு வரத் திரும்பிப் பின்னே நின்ற ராகவை அதிர்ந்து பார்க்க அவனோ கேஷுவலாக ஷர்ட்டில் மாட்டியிருந்த கிளாஸை எடுத்துக் கண்ணில் மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


