சர்வீஸ் டிப்பார்ட்மென்ட் மொத்தமும் அங்குக் கூடியிருக்க நடு நாயகமாக நின்றுகொண்டிருந்த அவந்திகா லேரன் வெளியே சென்ற பிறகு அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.
“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்க எல்லாரோட பேரையும் நான் தெரிஞ்சிக்க விரும்புறேன்… என்னோட நேம் ஆல்ரெடி நான் சொல்லிட்டேன்” என்றாள் சிரிப்புடன்.
முதலில் எழுந்தான் மாதவ். தன்னைப் பற்றிக் கூறிய பிறகு புன்னகையுடன் கேட்ட அவந்திகாவிடம் “தேங்க்யூ மேம்” என்று சொல்லி அமர அடுத்து வர்ஷா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
பின் ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகப்படுத்திய பிறகு அவந்திகா மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“உங்க எல்லாரையும் மீட் பண்ணதுல ரொம்பச் சந்தோஷம். ஆக்சுவலி எனக்கு ரெண்டு பேர் மட்டும் அஸிஸ்ட் பண்ணுனா போதும். பிகாஸ் இன்னைக்கு மார்னிங்தான் ராகவ் சார் அட்வர்டைஸ்மென்ட் ஷூட் பத்திச் சொன்னாரு. சோ வர்ஷு அண்ட் மேடி மட்டும் இருங்க. மத்தவங்க உங்க ரொட்டின் வொர்க்கைப் பாக்கப் போகலாம்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தாள்.
அனைவரும் சென்ற பிறகு நின்றுகொண்டிருந்த மாதவையும் வர்ஷாவையும் அமரச் சொன்னவள் “முதல்ல இப்பிடி ஓவரா ரெஸ்பெக்ட் குடுக்குறத நிறுத்துங்க! கொஞ்சம் நார்மலா பிஹேவ் பண்ணுங்க” என்று சொல்லவும் அவர்கள் சிரித்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“குட்.. அப்புறம் என்னை அவந்திகானு கூப்பிடுங்க. இந்த மேடம்கிற வேர்டைக் கேட்டா ஏதோ கெழவி மாதிரி ஃபீல் ஆகுதுப்பா” என்று சொல்லவும் அதற்கும் தலையாட்டினர்.
“தென் உன்னை நான் மேடினுதான் கூப்பிடுவேன். அண்ட் யூ ஆர் ஆல்வேஸ் வர்ஷு ஃபார் மீ” என்று சொல்ல அதற்கும் தலையாட்டவே கடுப்பானவள் “கம் ஆன் கய்ஸ்! இப்பிடித் தலையை ஆட்டாம ஓகே அவந்திகானு சொன்னா நான் கொஞ்சம் சந்தோஷப்படுவேன்” என்று சொல்ல மாதவ் “ஓகே அவந்திகா” என்று சொல்லிக் கை கொடுக்க அவள் “தட்ஸ் மை பாய்” என்று சொல்லிக் கைகுலுக்கினாள்.
அடுத்த சில மணி நேரங்களில் அவந்திகா அவர்களுக்கு ஒரு நல்ல நண்பியாக ஆகிவிட்டாள் என்றே சொல்லலாம். அவள் சொன்ன விவரங்களைக் குறித்துக்கொண்டே மூவரும் காபி அருந்தச் சென்றனர்.
அங்கிருந்த காபிமேக்கரில் மூவருக்கும் காபியைத் தயாரித்தவள் அவர்களுடன் அமர்ந்து அந்தப் பேப்பரில் இருந்த விவரங்களை விளக்கிக்கொண்டிருக்கும்போதே வெளியே ஏதோ சத்தம் கேட்கவே மூவரும் எட்டிப் பார்த்தனர் தலையை மட்டும் வெளியே நீட்டித்தான்.
அங்கே ஒரு உயரமான பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளுடன் வேண்டாவெறுப்பாக லாரா நடந்து வரவே “இது யாரு புதுவரவு” என்று கேட்ட அவந்திகாவைப் பார்த்த மேடி “அவங்கதான் நம்ம அட்வர்டைஸ்மென்ட் ஷூட்டுக்கு வந்திருக்கிற மாடல்” என்று சொல்ல அவந்திகா உச்சுக் கொட்டினாள்.
பின்னர் அவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியே வந்தவள் உஷாவிடம் தன்னுடைய அஸிஸ்டெண்ட்ஸ் பற்றிக் கூறிவிட்டுத் தாங்கள் மூவரும் ஹாலைப் பார்வையிடச் செல்வதாகக் கூறிக் கிளம்ப ஆயத்தமானாள்.
மெயின் ஹாலில் இன்னும் அந்த மாடலின் அலப்பறை ஓயவில்லை. அங்கிருந்து கிளம்பத் தயாரானவள் ராகவ் அங்கே வரவும் சற்று நிதானித்தாள்.
வந்தவன் நேரே மாடலிடம் சென்றவன் “ஹாய் லிசா! ஹவ் ஆர் யூ? லண்டன் ஷூட் நல்லபடியா முடிஞ்சிதா?” என்று விசாரிக்க அவள் “ஹே ராகவ்!” என்று முப்பத்திரெண்டு பற்களையும் காட்டியவள் அவனை அணைத்துக்கொள்ள அவந்திகாவிற்கு ப்ளட் பிரஷர் கடகடவென்று ஏற ஆரம்பித்தது.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த உஷாவையும் ரித்திமாவையும் கண்ணாலே அழைத்தவள் அவர்களுக்கான கேபினுக்குள் சென்றாள்.
உள்ளே வந்தவள் அவர்களை நோக்கி “என்னடி நடக்குது இங்க? ஆளாளுக்கு அவனை ஹக் பண்ணுறாங்க! அவனோட வைஃப் நானு. நானே அவனை இப்பிடி ஹக் பண்ணது கெடையாது. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அந்த லிசார்ட்டைக் கழுத்தை நெறிச்சுக் கொல்லப் போறேன்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறிவிட்டு மூச்சு வாங்கினாள்.
“அவ நேம் லிசா… லிசார்ட் இல்ல” என்று திருத்திய ரித்திமாவை முறைத்தவள் “அவ என்னோட புருஷனை ஹக் பண்ணிட்டு இருக்கானு நானே கடுப்புல இருக்கேன். இப்போ உனக்கு இந்தக் கரெக்ஷன் ரொம்ப முக்கியம். பை தி வே அவ பாக்குறதுக்குப் பல்லி மாதிரிதானே இருக்கா. சோ இந்த நேம் அவளுக்கு நல்லாவே சூட் ஆகும்” என்று கொதித்தவளை அமரவைத்த உஷா அவளுக்குத் தண்ணீரைக் கொடுத்துவிட்டு ரித்திமாவை வேலையைக் கவனிக்க அனுப்பினாள்.
ஒருவாறு அவந்திகாவைச் சமாதானப்படுத்தி மேடியுடனும் வர்ஷாவுடனும் ஹாலைப் பார்க்க அனுப்பி வைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டாள் உஷா.
அவந்திகா அந்த ஹாலைக் கடந்து செல்லும்போது லிசாவை முறைத்தவள் உஷாவின் காதில் “மை டியர் லிசா மூவில வர்ற பேய் மாதிரியே இருந்துட்டு இவள்லாம் மாடலாடி?” என்று கடுகடுக்க உஷா மிகவும் கஷ்டப்பட்டு அவந்திகாவை அனுப்பிவைத்தாள்.
கடுகடுப்புடன் ஹாலைப் பார்வையிடச் சென்றவள் அங்கே சென்றதும் வேலையில் மூழ்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நடந்தவற்றை மறந்தாள்.
மூவரும் ஹாலைப் பார்வையிட்டுவிட்டு டெக்கரேஷன் பற்றிப் பேச ஆரம்பித்தனர். கம்பெனி சிம்பல் வைத்த ஃப்ளாக் வைத்தால் வித்தியாசமாக இருக்கும் என்று மேடி கூறிய யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஃப்ளாகிற்கான டிசைனை ரெடி பண்ணுமாறு ரித்திமாவிற்குக் கால் செய்து சொன்னவள் வேறு என்ன புதிதாகச் செய்யலாம் என்று அவர்களிடம் ஆலோசிக்க ஆரம்பித்தாள்.
இனி அவர்களுக்குப் பிரிண்டிங் வொர்க் இருக்கவே அதை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை அனுப்பிவைத்தவள் நேராகச் சன் டியூவிற்குச் சென்றாள்.
உஷாவிற்கும், ரித்திமாவுக்கும் கால் செய்து தான் இன்று அங்கேயே தங்கப் போவதாகக் கூற அவர்கள் மறுத்தனர் முதலில். பின்னர் வேலை இருப்பதாகக் கூறி விளக்கவும் உஷா தான் வீட்டில் சமாளித்துக்கொள்வதாகக் கூறினாள். பின்னர் திடீரென்று யோசித்தவள் ரித்திமாவையும் தங்கள் வீட்டுக்கு அழைத்தவள் நேரே வீட்டுக்குச் சென்றாள்.
தான் அலுவலகத்தில் தங்கினால் தாதி டென்ஷனாகி விடுவார் என்று தெரிந்து கிளம்பினாள்.
வீட்டுக்கு வந்தவள் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு லேப்டாப்புடன் கார்டனின் ஓரமாகச் சென்று உட்கார்ந்தாள். சிறிது நேரத்தில் வந்த ரித்திமாவுடன் சேர்ந்து வேலையைத் தொடரவே இருவரும் டின்னர் கூடச் சாப்பிடாது வேலையில் மூழ்கிவிட்டனர்.
பின்னர் உஷா கொண்டு வந்ததைச் சாப்பிட்டுவிட்டு வேலையைத் தொடர அது முடிய நள்ளிரவு ஆனது. ராகவ் அவந்திகாவும் ரித்திமாவும் வேலை செய்துகொண்டிருப்பதால் அவர்களைத் தொல்லை செய்ய வேண்டாமென்று நினைத்தவன் தன் அறைக்குச் சென்று நித்திரையில் ஆழ்ந்தான்.
காலையில் அலாரம் சத்தத்தில் விழித்தவன் படுக்கையைத் தடவிப் பார்க்க அவந்திகா தூங்கும் இடம் வெறுமையாக இருக்கவே அவள் எழுந்துவிட்டாளோ என்று மனதில் எண்ணிக்கொண்டே குளியலறை கதவில் கை வைக்க அது திறந்துகொண்டது. யோசனையுடன் ஜிம்முக்குச் செல்வதற்காக வந்தவன் அந்த ஹாலின் தோட்டம் பார்த்த பெரிய ஃப்ரெஞ்ச் விண்டோவிற்குப் பக்கத்தில் உள்ள சோஃபாவில் படுத்திருந்த ரித்திமாவையும் அவள் மடியில் தூங்கிக் கொண்டிருந்த அவந்திகாவையும் பார்த்துவிட்டு நிம்மதியானான்.
ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி முடித்துவிட்டுத் திரும்பும்போது இருவரையும் காணவில்லை. அவந்திகா தங்களது அறையில் இருப்பாள் என்று எதிர்பார்ப்புடன் சென்றவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவசரமாகக் கீழே வந்தவன் பூஜையறையிலிருந்து உஷாவுடன் வெளியே வந்த தாதியின் கையிலிருந்த ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக்கொண்டவன் உஷாவிடம் “பாபி! அவந்திகா எங்க?” என்று கேட்க “அவ ஆபிஸ் போயிட்டா ராகவ்… உங்களுக்கு ஏதாச்சும் வேணுமா?” என்று அவள் பதிலளித்துக்கொண்டே கேட்டாள்.
“இல்ல பாபி! நீங்க கன்டினியூ பண்ணுங்க” என்று தாதியின் கையிலிருந்த ஆரத்தி தட்டைக் கண்ணாலே காண்பித்துவிட்டு அவசரமாகத் தனது அறைக்குச் சென்று தயாராக ஆரம்பித்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் கீழே வந்தவன் வருணிடமும் உஷாவிடமும் சொல்லிவிட்டுச் சன் டியூவிற்குச் செல்ல அதில் பூட்டுதான் தொங்கியது.
“இந்த ஜான்சி ராணி எங்கதான் போயிருப்பா?” என்று யோசித்துக்கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தான். ஒரு போன் செய்தால் தெரியப் போகிறது என்று யோசித்துக்கொண்டே கால் செய்தான்.
அவள் போனை எடுத்தால்தானே! ஃபுல் ரிங் சென்றும் காலை எடுக்காததால் ரித்திமாவுக்கு முயற்சி செய்ய அதே நிலைதான் அங்கும்!
இவ்வாறே மறுநாளும் நடக்க ராகவ் செம கடுப்பில் இருந்தான் அவந்திகா மீது! பின்னே அவளை இரண்டு நாட்களாகக் கண்ணில் காண்பதே அரிதாகிவிட அவனுக்கு எரிச்சலானது. அவனது கால்களையும் அட்டெண்ட் செய்யாததால் கூடுதல் எரிச்சலானான் அவன்.
“இந்த ஹைட் அண்ட் சீக் கேம்க்கு நான் ஃபுல்ஸ்டாப் வைக்கிறேன் அவந்திகா” என்று மனதிலேயே சபதம் செய்தவன் உஷாவை அழைத்து அவளது எண்ணிலிருந்து அவந்திகாவிற்குக் கால் செய்யச் சொன்னான்.
அவள் அட்டெண்ட் செய்ததும் “லுக் ஜான்சி ராணி! நீ இப்போ எங்க இருக்க என்ன பண்ணுற எதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்ல. ஆனா இன்னும் 15 நிமிஷத்துல நீ விஹானுக்கு வந்தாகணும்… இல்லைனா இந்தக் கான்ட்ராக்ட்டை மறந்துடு” என்று சொல்லிக் காலை கட் செய்தான்.
அவனது முகத்திலிருந்த எரிச்சலைப் பார்த்ததும் உஷாவிற்குப் பதற்றமானது.
“ராகவ்! எதும் பிரச்சனை இல்லையே?”
“நோ பாபி! இது ஒரு ஸ்மால் இஷ்யூ. உங்க ஃப்ரெண்ட் வந்தா தானா சரியாயிடும். நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க” என்று சமாளித்து அவளை அனுப்பிவைத்தான்.
சொல்லி வைத்தாற்போல் அடுத்த 15வது நிமிடத்தில் அவனது அறைக்குள் நுழைந்தாள் அவந்திகா. உள்ளே வந்ததும் நேரே ராகவிடம் சென்றவள் “உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க? இப்போ கான்ட்ராக்ட்டக் கேன்சல் பண்ணுற அளவுக்கு என்ன நடந்துடுச்சு?” என்று சத்தமாகக் கேட்டாள்.
“உஷ்! எதுக்கு இவ்ளோ லவுடா பேசுற? எனக்குக் காது நல்லாவே கேட்கும்” என்றவனை முறைத்தாள் அவந்திகா.
“கிண்டலா இருக்கா உனக்கு?”
“இல்லையே! எரிச்சலா இருக்கு. நீ பண்ணிட்டிருக்கிறதப் பாத்தா” என்று ராகவும் பதிலடி கொடுக்க “நான் என்ன பண்ணேன்?” என்று திகைத்தவாறு கேட்டாள் அவள்.
“உனக்குத் தெரியவே தெரியாதுல்ல… அச்சச்சோ பாவம் கொழந்தை” என்று கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவனின் கைகளைத் தட்டிவிட்டாள் அவந்திகா.
“டூ டேய்ஸா நீ அப்பிடி என்ன ராத்திரி பகல் பாக்காம வொர்க் பண்ணுறமா? ஐ அக்ரீ இது உங்களைப் பொறுத்தவரைக்கும் பெரிய கான்ட்ராக்ட்தான். பட் அதுக்கு இப்பிடி நேரம் காலம் பாக்காம அழையனும்னு அவசியம் இல்ல. அப்பிடி உனக்கு வொர்க் இருந்தாலும் அதை நீ இங்க வச்சுப் பண்ண வேண்டியதுதானே”
“எனக்கு இந்த ஆபிஸ் வர்றதுக்குப் பிடிக்கல, போதுமா?”
“வாட்? நீ என்ன பேசுறனு புரிஞ்சுதான் பேசுறியா? இந்த ஆபிஸ்ல அப்பிடி என்ன உனக்குப் பிரச்சனை?” என்றான் ராகவ்.
நேரடியாக அவனிடம் உன்னை மற்ற பெண்கள் கட்டியணைப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லத் தயங்கியவள் “என்ன பிரச்சனைனு கேக்குற நீ!! இங்க வந்தா தேவையில்லாத சில விஷயங்களைப் பாக்க வேண்டியதா இருக்கு… என்னால வொர்க்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியல. அதச் சொன்னேன்” என்று சொல்லிச் சமாளித்தாள்.
“அவந்திகா எதுவா இருந்தாலும் புரியுற மாதிரி சொல்லு. ஓகே” என்று அவள் அருகில் வரவும் விலகி நின்றாள் அவந்திகா.
“கிட்ட வராத! கேர்ள்ஸ்கிட்ட டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும்னு உனக்குத் தெரியாது? அது தெரிஞ்சா நீ எதுக்கு அன்னைக்கு லாராவையும் லிசாவையும் ஹக் பண்ணிருக்கப் போற” என்று வாய் தவறிச் சொல்லித் தலையைத் திருப்பிக்கொள்ளவும்தான் ராகவிற்கு விஷயம் புரிந்தது.
“இதனாலதான் மீட்டிங்க்ல கூட உர்ருனு இருந்தாளா இந்த ஜான்சி ராணி” என்று மனதில் சொல்லிக்கொண்டவன் அங்கிருந்த மேஜையில் சாய்ந்தவாறே “அவந்திகா! நீ ஜெலஸா ஃபீல் பண்ணுறியா என்ன?” என்று கேட்டுவிட்டுக் குறுகுறுவென்று அவளையே பார்த்தான்.
“ஆமா நீ பெரிய சூர்யா! உன்கிட்ட கேர்ள்ஸ் நெருக்கமா இருந்தா எனக்குப் பொறாமை வர்றதுக்கு. எனக்கு ஒன்னும் ஜெலஸ் இல்ல” என்று சொல்லிவிட்டு முகத்தை உம்மென்று வைத்துக்கொள்ள ராகவிற்கு அவளைப் பார்த்துச் சிரிப்புதான் வந்தது.
சிரிப்பை அடக்கியவன் “லிசன் ஜான்சி ராணி! லேரன் என்னோட ஸ்கூல்ல இருந்து ஒன்னாப் படிச்ச க்ளோஸ் ஃப்ரெண்ட். அண்ட் லிசா அது ஜஸ்ட் ஒரு ப்ரொஃபசனல் ஹக்.. அதுல நீ டென்ஷன் ஆகிறதுக்கு என்ன இருக்கு?” என்று குழந்தைக்குப் புரிய வைப்பது போல விளக்கினான்.
அவன் கூறவும் அவள் முகம் சிறிது சிறிதாகத் தெளியவே “இன்னும் ஏதாச்சும் இங்க ட்ரபிள் பண்ணுதா?” என்று அவளின் தலையைத் தொட்டுக் கேட்டான் ராகவ். ஆமென்று தலையாட்டினாள் அவந்திகா.
“நீ என்னதான் சொன்னாலும் என்னால இதை அவ்ளோ ஈஸியா எடுத்துக்க முடியல. நான் உன்னோட வைஃப். என் கண்ணு முன்னாடி உன்னை யாராச்சும் ஹக் பண்ணுனா எனக்கு எப்பிடி இருக்கும்? இவ்ளோத்துக்கும் நான் கூட உன்னை அவ்ளோ க்ளோஸா ஹக் பண்ணது கெடையாது” என்று சிறு வருத்தத்துடன் கூறி முடித்தாள்.
அவள் கூறியதும் அவளைப் பார்த்து “இதுதான் உன்னோட பிரச்சனையா? சரி வா!!” என்று சொல்லித் தன்னுடைய கைகளை விரித்துக் காட்டினான் ராகவ்.
“எங்க வரணும்?” என்று திருதிருவென்று விழித்தவளை “இங்க” என்று சொல்லிக்கொண்டே இழுத்துத் தன் அணைப்புக்குள் கொண்டு வந்தான் ராகவ்.
“ஆர் யூ ஹாப்பி ஜான்சி ராணி?” என்று அவனது அக்மார்க் சிரிப்புடன் கேட்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அந்தச் சிரிப்பில் தொலைந்து “ம்ம்” என்று தலையாட்டிக்கொண்டே கன்னம் குழிவிழச் சிரித்தாள்.
ராகவிற்கு இதைவிடச் சந்தோஷம் இந்த உலகில் எதுவும் இல்லை என்று தோன்ற அவந்திகா அவனின் இதயத்துடிப்பின் ஓசையைக் கேட்டுக்கொண்டே அவன் அணைப்பில் அசையாது நின்றாள்.
எவ்வளவு நேரம் இப்படியே நின்றார்களோ, மொபைலின் ரிங் டோன் கேட்கவும் அவந்திகா பதறி விலகினாள்.
ராகவ் சிகையைக் கோதிக்கொண்டு போனை அட்டெண்ட் செய்து பேசியவன் அவந்திகாவின் கையை மட்டும் விடவில்லை.
போனைப் பாக்கெட்டில் போட்டவன் “லுக் ஜான்சி ராணி! உனக்கு எதாச்சும் பிராப்ளம்னா யூ கேன் டாக் டேரக்ட்லி. இந்த மாதிரி என்கண்ணுல படாம என்கிட்ட பேசாம இருக்காத. ஓகேவா. எனக்கு வொர்க்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியல” என்று சொல்லவும் அவந்திகா தலையசைத்தாள்.
“ஓகே! வீட்டுக்குப் போலாமா?” என்று ராகவ் கேட்க அவந்திகா “நான் ரித்திகிட்ட கொஞ்சம் வொர்க்……” என்று ஆரம்பித்தவள் அவன் முகபாவத்தை வைத்தே அவன் மனதை ஊகித்து “வொர்க்தானே நாளைக்குக் கூட முடிச்சிக்கலாம். நம்ம வீட்டுக்கே போலாம் ராகவ்” என்று சொல்லிச் சிரித்தே சமாளித்தாள்.”
“லெட்ஸ் கோ” என்று அவளின் கையுடன் கைகோர்த்துச் சென்றான் ராகவ்….
அன்றைய நாள் போராட்டத்துடன் ஆரம்பித்து இனிய நிகழ்வுகளுடன் முடிந்தது.
மறுநாள் காலையில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவள் யாரோ உலுக்கவும் பதறியடித்துக்கொண்டு எழுந்தாள் அவந்திகா. எதிரில் நின்றுகொண்டிருந்தவனைப் பார்த்ததும் அவள் கண்கள் தானாகவே சுவர்கடிகாரம் மீது படிந்து மீண்டது.
“அன்னைக்குத்தான சொன்ன ராகவ், என்னை வொர்க் அவுட் பண்ணக் கூப்பிடமாட்டனு. இப்போ எதுக்குடா எழுப்புன?” என்று பாவமாகக் கூறினாள் அவந்திகா.
“சும்மா வெளையாடிப் பாத்தேன் ஜான்சி ராணி. நாட் பேட், எங்க இவன் ஜிம்முக்குத் தூக்கிட்டுப் போயிடுவானோங்கிற கலவரம் உன் கண்ணுல தெரியுதே” என்று அவளைக் கிண்டல் செய்ய “எனக்கு வர்ற கோவத்துக்கு” என்று அவள் கண்ணை மூடித் திறக்கவும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.
“டென்ஷன் ஆயிட்டியா? இந்த டென்ஷனோட இருக்கிற முகத்தை டூ டேய்ஸ் மிஸ் பண்ணிட்டிருந்தேன். இன்னைக்குத்தான் ஐ ஃபீல் ஹாப்பி. ஓகே நான் கீழே போறேன். உடனே சண்டேதானனு படுத்துத் தூங்கிடாத” என்று சொல்லிவிட்டு அவளது முடியைக் கலைத்துவிட்டுச் சென்றான்.
ஆத்திரத்துடன் “போடா வளந்து கெட்டவனே! உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்ல டவுன்லோட் பண்ணாங்களா?” என்று தமிழில் கத்த ரூம் வாசல் வரை சென்றவன் திரும்பி வந்து அவளை நோக்கி “இப்போ நீ தமிழ்லதானே பேசுன?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
மாட்டிக்கிட்டியா என்று மனதிலேயே எண்ணியவள் “சே சே! இது தமிழ் இல்ல… தெலுங்கு” என்று சமாளித்து வைத்தாள்.
ஆனால் அவன் அதை நம்பினால்தானே? “உனக்குத் தெலுங்கு தெரியும்னு நீ சொல்லவேயில்லையே..” என்று மறுபடியும் சந்தேகமாகப் பார்க்கவும் அவந்திகா “தெலுங்குனா சொன்னேன்? நான் மலையாளம்னுதான் சொன்னேன்” என்று உளறிக் கொட்டினாள்.
அவன் இன்னும் அதே மாடுலேஷனில் குறுகுறுவென்று பார்க்க “ஹலோ என்ன லுக்கு? நெஜமாவே நான் மலையாளம்னுதான் சொன்னேன். போய் உன் காதைச் செக் பண்ணு. இப்போ நான் ரெஃப்ரெஷ் ஆகணும். கொஞ்சம் கெளம்புறீங்களா சார்?” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்க்காமலே குளியலறைக்குள் சென்றாள் அவந்திகா.
அவனும் தோளைக் குலுக்கிவிட்டுக் கீழே சென்றான்.
குளியலறைக்குள் சென்ற அவந்திகா “இந்த மைதாமாவுக்குலாம் பயந்து பயந்து நான் தமிழ் பேச வேண்டியதா இருக்கு… ” என்று புலம்பிக்கொண்டே குளித்து முடித்தாள்.
உடை மாற்றிவிட்டுக் கீழே வந்தவள் மொத்த குடும்பமும் வளவளத்துக் கொண்டிருக்க உஷாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
அவள் காதில் “என்ன ஃபேமிலி டைமா?” என்று கேட்க அவள் தலையாட்டினாள்.
சிறிது நேரத்தில் ரித்திமா வர மூவரும் ஒன்றாக அமர்ந்து அவர்களின் வேலை சம்மந்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரும் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்காக டைனிங் டேபிளில் ஆஜராக இந்த மூவர் மட்டும் மிஸ்ஸிங்.
“என்ன மருமகள்களே! இன்னைக்கு மார்னிங் மூணு பேரும் ஃபாஸ்ட்டிங்கா” என்ற குணாலின் குரல் கேட்டதும் வேகமாகச் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.
வீணா மூவரையும் ஒரு பார்வை பார்த்தவர் “புது மருமகளுங்க வந்த நாள்ல இருந்து கிச்சன் பக்கம் போயி நான் பாத்ததே இல்ல சாஸும்மா. அட்லீஸ்ட் பரிமாறுறதுலயாச்சும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்தானே” என்று சொல்லவும் வருண் “வீணா சாச்சி” என்று அழைத்தவன் பார்வையாலே அவரை அமைதியாக்கினான்.
மூவரும் எழுந்து ராதிகாவையும் பிரியாவையும் அமரச் சொல்லிவிட்டுப் பரிமாறத் தொடங்கினர்.
அவந்திகா மட்டும் இருவரின் காதிலும் “இது வீணா சாச்சி இல்ல. வீணா போன சாச்சி” என்று முணுமுணுக்க ராகவ் திரும்பி அவளைப் பார்க்கவும் “நான் தமிழ் பேசுனா மட்டும் இவனுக்கு மூக்குல வேக்குது. இவன் வேற என்னைப் ரொம்ப டார்ச்சர் பண்ணுறான்டி” என்று சொல்லிவிட்டுப் பரிமாற ஆரம்பித்தாள்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் வீணாவை அழைத்தவள் “சோட்டிமா! நானும் இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து பாக்குறேன். உங்க பசங்க அதான் எங்க ஹஸ்பெண்ட்ஸ் கிச்சன் பக்கம் போயே நான் பாத்தது இல்ல” என்று அவரை மாதிரியே பேசிக் காண்பிக்க அவர் அவளை முறைத்தார்.
“அவங்களே வீக்கெண்ட் தான் ஃப்ரீயா இருக்காங்க! அதுவுமில்லாம பிசினஸ் வொர்க்னு சுத்துறவங்களை இன்னைக்கும் வேலை வாங்க முடியுமா?” என்று சொல்லிவிட்டுக் கால் மீது கால் போட்டு அமர்ந்து அவளைத் தோரணையாகப் பார்த்தார்.
அவரின் இப்பேச்சில் அவந்திகா எரிச்சலானாள். “அவங்க வொர்க் பண்ணுறாங்கன்னா அப்போ நாங்கல்லாம் என்ன ஆபிஸ் போய்ட்டு ஜாலியா ஊஞ்சலா ஆடிட்டு வர்றோம்?” என்று மனதிலேயே பொருமியவள் வாய்விட்டே அதைக் கேட்டும் விட்டாள்.
“சோட்டிமா! ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் நாங்களும் வொர்க்கிங் விமன்தான்…. இந்த வீக்கெண்ட் ரெஸ்ட் எங்களுக்கும் தேவைதான்…” என்று எரிச்சலை விழுங்கிய குரலில் அவள் சொல்ல “அதுக்காக ஆம்பிளைங்க கையில கரண்டியக் குடுக்கச் சொல்லிறியா மருமகளே” என்று கேலியாகக் கேட்டார் வீணா.
“குடுத்தா ஒன்னும் தப்பில்லனு சொல்லுறேன்”
அவள் இவ்வாறு கூறியதும் அங்கே குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு அமைதி… அனைவரும் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்பதை எதிர்பார்த்து நின்றனர்.
அதைப் பொருட்டாகக் கருதாது “எந்த வேலையும் ஆம்பிள வேலை, பொம்பள வேலைனு கெடையாது. அந்தக் காலத்துல லேடீஸ் படிக்க, வொர்க் பண்ணனு எங்கயும் போகாம வீடே கதினு இருந்தாங்க. சோ புருசனுக்கு ஒரு மாதிரி, மாமியார் மாமனாருக்கு ஒரு மாதிரினு மூணு வேலையும் சமைச்சுப் போடுறத விட அவங்களுக்கு வேற வேலை இல்ல. ஆம்பிள்ளைங்க வெளி வேலை பாத்தா லேடீஸ் வீட்டு வேலைகளைக் கவனிச்சிகிட்டாங்க. ஆனா நாங்க அவங்க மாதிரி இல்லையே. நாங்க இன்னைக்கு ஆம்பிள்ளைங்களுக்கு ஈக்குவலா படிக்கிறோம். வொர்க் பண்றோம். அப்பிடி வெளிவேலை எல்லாமே பண்ணிட்டு வீட்லயும் வந்து கிச்சனுக்குள்ள போனு சொன்னா என்ன அர்த்தம்? நீங்க உங்க பசங்களை எங்களுக்குச் சமைச்சுப் போடச் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் கொஞ்சம் ஹெல்ப் பண்ணச் சொல்லிக் குடுக்கலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.
அவள் கூறியதைக் கேட்ட தாதிக்கு அதுவும் சரிதானே என்று தோன்றத் தன்னுடைய மருமகள்களையும் மகன்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றார்.
அவரின் பேரன்களோ இதைத் தாங்கள் இவ்வளவு நாட்கள் யோசிக்கவில்லையே என்று எண்ணியபடி அவரவர் அறைக்குச் சென்றனர்.
மறுநாள் திங்கட்கிழமை விஹானில் விளம்பரத்திற்கான படப்பிடிப்பு ஒரு தளத்தில் நடந்துகொண்டிருக்க இன்னொரு புறம் உஷாவும் ரித்திமாவும் தங்கள் வேலையில் பிஸியாக இருந்தனர்.
அவந்திகா, மேடி, வர்ஷா மட்டும் ஃப்ரீயாக ஒவ்வொரு டிப்பார்ட்மென்ட்டாகச் சுற்றி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் லாராவின் பார்வையில் விழுந்ததும் மூவரையும் அழைத்தவள் மேடியையும் வர்ஷாவையும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் போய் உதவி செய்யுமாறு அனுப்ப அவந்திகா தானும் அவர்களுடன் வருவதாகக் கூறி அங்கே சென்றாள்.
அங்கே ஷூட்டிங் பரபரப்பாக நடக்க அவந்திகா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த சீன்படி மேலிருந்து லிசாவின் தலையில் பூக்கள் கொட்ட வேண்டும். அதனுடன் சேர்ந்து விஹான் லோகோவுடன் பெரிய சிம் கார்டு விழுவதாகவும் அதை அவள் கையில் தாங்க வேண்டும் என்றும் கிரியேட் செய்திருந்தனர்.
சிம் கார்டு விழும் காட்சியைக் கிராஃபிக்ஸில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் இப்போது பூக்கள் விழும் காட்சியை மட்டும் எடுக்கலாம் என்று டைரக்டர் சொல்லிவிட காலையிலிருந்து அந்த ஒரு காட்சியை எடுப்பதற்காக அனைவரையும் படுத்தி வைத்தாள் லிசா.
இதை வேடிக்கை பார்த்த அவந்திகாவுக்கு அவள் மீது எரிச்சல்தான் வந்தது. பூக்கள் மேலிருந்து விழத் துவங்க லிசாவின் பெர்ஃபாமென்ஸ் போதாது என்று டைரக்டருக்குத் தோன்றவே மீண்டும் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது. ஒரு வழியாகப் படப்பிடிப்பு முடிந்து அவளும் சேரில் அமர்ந்தாள்.
அங்கே அமர்ந்தவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவைச் சொடக்கிட்டு அழைத்தாள்.
“லுக்! போய் எனக்கு ஜூஸ் எடுத்துட்டு வா” என்று அவளை ஏவ அவந்திகா அதைப் பெரிதுபடுத்தாமல் அமைதியாகப் பேண்ட்ரியை நோக்கிச் சென்றாள். அவள் எப்போதுமே அப்படித்தான். எந்த வேலையையும் அவள் தகுதிக் குறைவானதாகக் கருதியதில்லை. இப்போது மேடியும் வர்ஷாவும் வேறு டைரக்டருக்கு ஏதோ உதவி செய்துகொண்டிருந்ததால் அவள் பெரிதுபடுத்தாமல் தானே ஜூஸ் போட்டு எடுத்து வந்தாள்.
ஆனால் அந்த லிசாவோ அவள் கையிலிருந்த ஜூஸைப் பார்த்ததும் “வாட்? நான் உன்கிட்ட மேங்கோ ஜூஸா கேட்டேன்?” என்று அவளுக்கே உரித்தான கர்வமான குரலில் கேட்க “மேம்! நீங்க வெறும் ஜூஸ்னுதான் சொன்னீங்க… ஃப்ரூட் நேம் சொல்லல” என்று பொறுமையுடனே பதிலளித்தாள் அவந்திகா.
“கம் ஆன்! எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாமலா நீ இத்தனை வருஷம் இங்க வொர்க் பண்ணுற” என்று சொல்லிவிட்டு யோசித்தவள் “ஓ! நீ நியூ அப்பாயின்மென்ட், ரைட்” என்று கேட்டுவிட்டு அவளே பதில் சொல்லிக்கொண்டாள். பெருமூச்சு விட்ட அவந்திகா கடுப்பை மறைத்துக்கொண்டு பேன்ட்ரிக்குள் சென்றாள்.
அவள் பைனாப்பிள் ஜூஸ் கேட்க அமைதியாகப் பழத்தை வெட்டி ஜூஸ் போட்டு எடுத்து வந்தாள். அதை அமைதியாகக் குடித்தவள் திடீரென்று நினைவு வந்தவளாக அவந்திகாவிடம் “இதுல சுகர்ஃப்ரீ கேப்ஸூல்ஸ் எத்தனை போட்ட?” என்று கேட்க அவந்திகா திகைத்தாள்.
“மேம்! நான் இதுல நார்மல் சுகர்தான் போட்டிருக்கேன்” என்று சொல்லவும் ஜூஸைக் குடித்துக்கொண்டிருந்த லிசாவுக்குப் புரையேறியது.
“வாட்? நார்மல் சுகர்? அதுல எவ்ளோ கலோரி இருக்கும்னு தெரியுமா உனக்கு? ஆர் யூ அன் இடியட்? இந்த மாதிரி முட்டாள் எல்லாம் எப்பிடி ராகவ் அப்பாயிண்ட் பண்ணுனான்?” என்று அங்கேயே நின்று கத்தினாள். அவள் போட்ட சத்தத்தில் அந்தத் தளம் முழுவதும் அவர்களையே வேடிக்கை பார்த்தது.
“சாரி மேம்” என்று அமைதியாகக் கூறினாள் அவந்திகா. தான் அவசரப்பட்டு எதாவது சொன்னால் அது தேவையில்லாமல் இன்று நடந்த ஷூட்டிங்கைப் பாதித்துவிடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்கு!
“சாரி சொன்னா சரியாப் போயிடுமா? ஒரு ஜூஸ் ப்ரிப்பேர் பண்ணுற வேலையைக் கூட உருப்படியா பண்ணத் தெரியாத நீயெல்லாம் எதுக்குச் சர்வீஸ் டிப்பார்ட்மென்ட்ல எர்ரெண்டா ஜாயின் பண்ண?” என்று குத்திக்காட்ட அதற்கு மேல் பொறுமை காக்க அவந்திகாவால் முடியவில்லை.
லிசா கீழே வைத்த ஜூஸை எடுத்தவள் அதை அவள் முகத்திலேயே ஊற்ற மொத்த யூனிட்டும் அதை வேடிக்கை பார்த்தது.
அதிர்ச்சியில் முகத்தில் வழிந்த ஜூஸைத் துடைத்தவள் “ஹவ் டேர் யூ? ஆஃப்டர் ஆல் ஒரு எர்ரென்ட் ஸ்டாஃப் நீ… உனக்கு இவ்ளோ திமிரா?” என்று அவள் கூப்பாடு போட அந்தச் சத்தத்தில் ஓடிவந்த லாரா லிசாவின் முகத்தில் வழிந்த ஜூஸையும் அவந்திகாவின் கையிலிருந்த டம்ளரையும் பார்த்தவள் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துவிட்டாள்.
இரண்டு நாட்களாக லிசா செய்யும் அலப்பறையில் மூளை சூடாகி இருந்தவளுக்கு அவந்திகாவின் செயல் மனதுக்கு இதம் தரக் கூடியதாக இருக்கவே சந்தோஷத்தை முகத்தில் காட்டாது அமைதியாக விசாரித்து அவந்திகாவைக் கீழ்த்தளத்துக்குப் போகச் சொல்லவே லிசாவுக்கு ஆத்திரம் மிகுதியானது.
“கால் ராகவ் ரைட் நவ்.. அவனோட ஸ்டாஃப் எவ்ளோ மோசமா பிஹேவ் பண்ணிருக்கானு அவனுக்கு நான் காட்டியே ஆகணும்” என்று டைரக்டரிடம் கத்த அவர் அவனுக்குப் போன் செய்தார்.
அவசர அவசரமாக மேலே வந்தவன் அவள் நின்ற கோலத்தைக் கண்டு அதிர்ந்து “லேரன்! என்ன நடந்திருக்கு? லிசா ஏன் இந்தக் கோலத்துல நிக்கிறாங்க?” என்று கேட்க லாரா விளக்கினாள்.
ராகவ் லிசாவைச் சமாதானப்படுத்த முயற்சிக்க அவள் பிடிவாதமாக ஷூட்டிங்கைக் கேன்சல் செய்வேனென்று பிடிவாதமாகக் கூறினாள்.
ராகவ் அவளைச் சமாதானப்படுத்த முயன்றவன் முடியாமல் போகவே கடினமான குரலில் “ஓகே! கேன்சல் பண்ணிக்கோ! பட் உன்னோட லைஃப்ல நீ எந்த அட்வர்டைஸ்மென்ட்லயும் இனிமே நடிக்க முடியாது? புரியுதா?” என்று ஒரிஜினல் முகத்தைக் காட்டவும் அமைதியானாள்.
“டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அடுத்த ஷாட்டுக்கு ஒழுங்கா ரெடியாகுற. டூ டேய்ஸ் பண்ண மாதிரி ஓவரா எதுவும் பண்ணாம பெர்ஃபெக்டா ஷூட்டை முடிச்சுக் குடுக்குற” என்று கட்டளையிட்டவன் அடுத்து நேரே அவந்திகாவைப் பார்த்து “அவந்திகா கம் டு மை கேபின்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று செல்ல லாரா அவன் பின்னே அவந்திகா மீது எந்தத் தவறும் இல்லையென்று விளக்கிக்கொண்டே ஓடினாள்.
அவந்திகா பொறுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு லிஃப்டுக்குள் சென்றாள்.
ராகவின் கேபினை அடையும்போது லாராவின் குரல் கேட்டது.
“லிசன் ராகவ்! அந்தப் பொண்ணு மேல எந்தத் தப்பும் இல்ல. இந்த லிசா ஓவர் ரியாக்ட் பண்ணுறா” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவந்திகா “மே ஐ கம் இன் சார்?” என்று கதவைத் தட்டிவிட்டு அவன் அனுமதிக்குக் காத்திருக்காமல் உள்ளே நுழைந்தாள்.
அவள் நுழைந்ததும் லாரா அவள் காதில் “கொஞ்சம் பொறுமையாப் பேசு” என்று எச்சரித்துவிட்டு வெளியேறினாள்.
ராகவின் குற்றம்சாட்டும் பார்வையைக் கண்டு அலட்டிக்கொள்ளாமல் நின்றாள் அவந்திகா.
“நீ என்ன காரியம் பண்ணிருக்கனு உனக்குப் புரியுதா? உன்னை யாரு அங்க போகச் சொன்னது? உன்னோட வொர்க்க மட்டும் பாத்துட்டு உனக்கு அலாட் பண்ண கேபின்ல இருந்தா நீ கொறஞ்சாப் போயிடுவ?”
“சாரி” என்றாள் அவள் வேண்டா வெறுப்பாக.
“வாட் சாரி? லிசாவோட ஃபேஸ்ல ஜூஸை ஊத்த வேண்டிய அவசியம் என்ன?”
“பிகாஸ் அந்த லிசாவுக்கு அவ பேசுன வார்த்தை எவ்ளோ மோசம்னு புரியவைக்கணும்னுதான்…”
“இனாஃப்… அவ என்னதான் பேசுனாலும் நீ இப்பிடி ரூடா பிஹேவ் பண்ணது தப்பு அவந்திகா”
“ஷீ இஸ் இன்சல்டிங் எர்ரெண்ட் ஸ்டாஃப்ஸ்… உனக்குப் புரியுதா? என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல திருடுறது மட்டும்தான் கேவலமான வேலை… அவ என்னை இன்சல்ட் பண்ணுறப்போ கேட்டுட்டுச் சும்மா போக நான் ஒன்னும் காந்தி இல்ல” என்றாள் அவள் அவனுக்குச் சற்றும் குறையாத எரிச்சலான குரலில்.
“அதனால அவ ஃபேஸ்ல ஜூஸைக் கொட்டுன…..” என்று அவன் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்கவும் ஆமாமென்று தலையாட்டினாள் அவந்திகா.
“இடியட்… அவ சொன்னதுல என்ன தப்பு இருக்கு? அவளுக்கு என்ன வேணும்னு பாத்துச் செய்யத்தான் சர்வீஸ் டிப்பார்ட்மென்ட்னு ஒன்னு இருக்கு. அவங்க ஒழுங்கா வேலை செய்யலனா அவ பேசத்தான் செய்வா” என்று ராகவ் சொல்லவும் அவந்திகாவுக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
“நீ இப்பிடித்தான் பேசுவனு எனக்கு எப்போவோ தெரியும். கரெக்ட் அவளுக்கு வேணுங்கிறதச் செய்யத்தான் அந்த டிப்பார்ட்மென்ட் இருக்குனு நானும் ஒத்துக்கிறேன். பட் அதுக்கு அவ கிளியரா அவளுக்கு என்ன வேணுங்கிறதச் சொல்லிருக்கணும். அவ மனசுல நெனைக்கிறதப் புரிஞ்சிக்க இங்க யாருக்கும் மைன்ட் ரீடிங் தெரியாது” என்று கடுப்புடன் உரைத்தவள் சற்று இடைவெளி விட்டாள்.
பின்னர் இறுகிய குரலில் ராகவைப் பார்த்து “உன்கிட்ட இதல்லாம் நான் எதுக்குச் சொல்லிட்டுருக்கேன்? சொன்னா மட்டும் உனக்குப் புரியவா போகுது? உனக்கு உன்னோட ஸ்டாஃப்ஸை அவ கேவலமாப் பேசுனது தப்பாத் தெரியாது… அவங்களோட கேடரைச் சொல்லி இன்சல்ட் பண்ணதும் தப்பாத் தெரியாது. பட் அவ பேசுனதுக்கு நான் ரியாக்ட் பண்ணதுதான் ரொம்பப் பெரிய தப்பாத் தெரியும்…. நான் ஃபர்ஸ்ட் டைம் பாத்தப்போ எப்பிடி இருந்தியோ அதே ஸ்டேட்டஸ் பாக்குற மனுஷங்கள கிளாஸ் வச்சு இன்சல்ட் பண்ணுற ஹைகிளாஸ் இடியட்டாதான் நீ இப்போவும் இருக்க. யூ ஆர் இம்பாஸிபிள் மிஸ்டர் ராகவ் கபூர்” என்று சொன்னவளைப் பார்த்து ஆத்திரத்துடன் பேச வந்தவனைக் கண்ணாலேயே தடுத்தாள் அவந்திகா.
“இந்த மாதிரி சரவுண்டிங்க்ல என்னால வொர்க் பண்ண முடியாது. உன்னோட கான்ட்ராக்ட்ல என்னோட ஷேர் எப்போவோ முடிஞ்சுடுச்சு. இனி எதுவா இருந்தாலும் நீ உஷாகிட்ட, ரித்திகிட்ட கேட்டுக்கோ. குட் பை” என்று சொல்லிக் கோபமாக வெளியேறினாள் அவந்திகா.
அவளைத் தடுக்கத் தோணாமல் நின்றவன் அவள் சென்றதும் ஆத்திரத்துடன் தன் கையை மேஜையில் குத்திக்கொண்டான் ராகவ்….
அவள் சென்று சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தாள் லாரா ஷூட்டிங் முடித்த டைரக்டருடன். அமைதியாக அமர்ந்திருந்தவனிடம் லாரா நடந்த விஷயங்களை டைரக்டர் உதவியுடன் விளக்க அவனுக்கு அவந்திகாவின் கோபத்திற்கான நியாயம் புரிந்தது. லிசா பேசிய வார்த்தைகளை யார் அவளிடம் பேசியிருந்தாலும் அவந்திகா அப்படித்தான் நடந்துகொள்வாள் என்பதை அனுபவத்தில் இருமுறை கண்டவன் ராகவ். ஒரு சர்வென்ட்டைத் திட்டினான் என்று ராகவையே திட்டியவள்தான் அவள். அவளுக்கு இந்த லிசா எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்று நினைத்தவன் அவளைச் சமாதானப்படுத்தும் வழியறியாது திகைத்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


