Header Image

 

ஸ்வரம் 3

என் ஆன்மாவின் ஒரு பகுதி எப்போதும் உன்னைத் தேடிக்கொண்டே இருக்கும். அந்தச் சத்தம் உனக்குக் கேட்கிறதா, அல்லது என்னை விலக்கி வைக்க உனக்குள் பெருஞ்சுவர் எழுப்பிவிட்டாயா? தூரத்தில் நின்று என் தவிப்பை ரசிக்கிறாயா என்ன! அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழுந்தாள் வெண்பா. ஆனால் இல்லத்தரசிகளுக்கு வார விடுமுறை ஏது? அவளுக்கு முன்னரே எழுந்து வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள் அவளது அன்னை உமையாளும் அண்ணி ஹேமாவும். “ரொம்ப நேரம் தலையில ஹேர் பேக்கோட இருக்காதடி. அந்தக் கிழங்கை … Continue reading “ஸ்வரம் 3”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 2

“நான் கொண்டிருக்கும் கொள்கைகள் அனைத்திற்கும் முற்றிலும் எதிரானவள் நீ. ஆனாலும், விதிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு உண்டு போலும்; உன்னை மட்டுமே என் தலையெழுத்தாக எழுதி வைத்துவிட்டது.” ராஜவிலாசம், மகாராஜநகர்… சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது அந்த பங்களாவுக்குள். தோட்டமும் விருட்சங்களும் சூழ்ந்த பங்களா பெயருக்கேற்ற ராஜகம்பீரத்துடன் இருந்தது அந்த மாலை நேரத்துச் சந்திரோதயத்தில்! பூஜையறையில் இருக்கும் விநாயகர் சிலைக்கு முன்னே காராமணிச் சுண்டலும் கொழுக்கட்டையும் படைக்கப்பட்டிருக்க விநாயகர் அகவலைப் பாடி முடித்தார்கள் … Continue reading “ஸ்வரம் 2”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 1

இது நம் கதையின் முதல் பக்கம் மட்டுமே. இதற்கே விடைபெறுதல் என்று பெயர் வைக்க வேண்டுமா என்ன? இன்னும் எத்தனையோ அத்தியாயங்கள் நமக்கு மீதமிருக்கின்றன. இன்றைய நாளை நம் அழகிய தொடக்கமாகக் கருதிக்கொள். நாம் வெறும் நினைவாக மாறிப்போவதற்கு இந்தப் பிரபஞ்சம் நம்மைச் சந்திக்க வைக்கவில்லை. ரங்கநல்லூர் அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்த ஊரின் திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் கட்சிக் கொடிகள் படபடத்து பறந்துகொண்டிருந்தன. அது ஊரின் பிரதானப் பகுதி. அருகில் இருக்கும் கிராமங்களில் … Continue reading “ஸ்வரம் 1”

 

Share your Reaction

Loading spinner

கானல் 1

“சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இக்காலத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பின் தரவுப்படி ஐந்து முதல் பதினோரு வயதுக்கு இடைப்பட்ட 66 மில்லியன் பயனர்கள் இணையத்தை இந்தியாவில் உபயோகிக்கின்றனர். இந்தியாவின் இணையப்பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 12 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அடைக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கு மாணவர்கள் மாறியது தான் இணையப்பயன்பாட்டைக் குழந்தைகள் மத்தியில் … Continue reading “கானல் 1”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 3

“இந்த மல்லிமொக்கு ஆரத்தை மாட்டிக்கடி… நம்ம போறது கல்யாண வீட்டுக்கு… உன்னோட ஆபிஸ் பார்ட்டிக்கு இல்ல” கையகல ஜரிகை வைத்த பட்டுப்புடவையின் முந்தானையை நீவியபடி அவள் அணிந்த ரூபி கழுத்தாரத்தை ஆட்சேபித்தபடி நின்றார் பூரணி, குட்டிமாவின் அன்னை. “ப்ச்! நீ ரொம்ப ஓவரா பண்ணுறம்மா… விட்டா என்னை அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி நடமாடும் நகைக்கடையா மாத்திடுவ போல” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவர் சொன்ன மல்லிமொக்கு ஆரத்தை அணிந்து கொண்டாள் குட்டிமா. … Continue reading “கழிமுகம் 3”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 2

“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?” காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன். “சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது. “என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு … Continue reading “கழிமுகம் 2”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 1

சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள். “குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?” புஷ்பம்மா கேட்டதும் … Continue reading “கழிமுகம் 1”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 20

இந்த உலகம் நம்மை எவ்வளவு எளிதில் ‘ஜட்ஜ்’ செய்துவிடும் தெரியுமா? நீ எப்படி இதைச் செய்யலாம், நீ அன்று செய்த காரியத்தின் விளைவால் உன்னை என்னால் நம்ப முடியாது என்று இஷ்டத்துக்கு பழித்துப் பேசும். இந்த உலகம், சமூகம் எல்லாம் வேறு யாரோ அல்ல. நீங்களும் நானும் நம்மை போல பிற மனிதர்களும் தான். அடுத்தவரின் சூழலை அறியாமல் பேசி காயப்படுத்துவது, அவர்கள் அப்படிதான் என்று முத்திரை குத்துவதும் நமக்கு எவ்வளவு எளிதான காரியமாக இருக்கிறது! எந்த … Continue reading “அன்பு 20”

 

Share your Reaction

Loading spinner