சன் டியூ அலுவலகத்தில் அவந்திகாவை விட்டவன் “ஐயாம் வெயிட்டிங் ஃபார் யுவர் ரிப்போர்ட்” என்று சொல்லிவிட்டுக் காரை எடுத்துக்கொண்டு சென்றான்.
அவன் செல்லும் வரை பார்த்திருந்துவிட்டு உள்ளே நுழைந்தவள் ரித்திமாவிடம் சொல்லிக்கொண்டு கான்ஃபரன்ஸ் ஹாலைத் தேர்வு செய்யக் கிளம்பினாள்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்வுகள் நடக்கும் ஒரு 10 ஹால்களின் டீடெய்ல்ஸைச் சேகரித்தவள் அவைலபிலிட்டி பற்றி விசாரிக்க நேரில் சென்றாள்.
லான்சிங்கிற்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் அனைத்திலும் அந்தச் சமயத்தில் எந்த நிகழ்வும் புக் ஆகாமல் இருந்ததை நினைத்துத் திருப்திபட்டுக்கொண்டவள் அங்கிருந்த மேலாளர்களின் அனுமதியுடன் அவற்றைக் குறிப்பிட்ட சில கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.
பின்னர் தங்கள் அலுவலகத்திற்குச் சென்றவள் அதை ரிப்போர்ட்டாகத் தயார் செய்ய ஆரம்பித்தாள். ரித்திமா ஏதோ கேட்க வந்தவள் அவள் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்க அவளைத் தொல்லை செய்ய விரும்பாமல் ராகவிற்குப் போன் செய்து அவன் அலுவலகத்துக்குக் கிளம்பினாள்.
மதியம் 3 மணி…
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
விஹான் டெலிகாம் அலுவலகத்தில் ஏ.ஜி.எம்முக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருந்ததால் ஊழியர்கள் அனைவரும் பரபரப்பாக இருக்க ஒரு புறம் மேலதிகாரிகளான கம்பெனியின் ஆடிட்டர், சி.இ.ஓ, கம்பெனி செகரட்டரி என அனைவரும் குழுமியிருக்கக் கம்பெனியின் சேர்மேன் குணால் கபூர் தலைமையில் கான்ஃபரன்ஸ் ஹாலில் ஒரு மீட்டிங் நடந்துகொண்டிருந்தது.
கம்பெனி டைரக்டர்களான வருண், மோகன், கிஷோர் என அனைவரும் கூடியிருந்த அந்த மீட்டிங்கில் விஹானின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்தவர்கள் ஏ.ஜி.எம் மூலமாகக் கம்பெனியின் மேலாண்மையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டது.
மீட்டிங் முடிந்து வெளியே வந்த கிஷோர் வருணிடமும் ராகவிடமும் “பய்யா! இவ்ளோ பெரிய ரெஸ்பான்ஸிபிலிட்டியை எனக்குக் குடுக்குறீங்க! என்னால இதைச் சரியாக் கொண்டு போக முடியுமானு தெரியல. பட் எப்போவுமே இவனுக்குப் போய் கம்பெனி மேனேஜ்மெண்ட்ட குடுத்தோமேனு நெனைக்கிற மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்று சொல்ல அவர்கள் அவன் தோளில் தட்டியபடி அவரவர் கேபினுக்குச் சென்றனர்.
உள்ளே சென்ற சில நிமிடங்களில் அவனது பி.ஏ வந்து ரித்திமா வந்திருப்பதைக் கூற அவளை அனுப்புமாறு கூறியவன் அவள் வந்ததும் நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு விஷயத்தைக் கேட்க ஆரம்பித்தான்.
ரித்திமா லான்ச் புரோகிராமுக்கான வரைவு அட்டவணைகளையும் சில அடிப்படை வேலைகளுக்கான டிசைன்களையும் அவனிடம் காட்டி அவனுடைய கருத்தைத் தெரிந்து குறித்துவைத்துக்கொண்டாள்.
“சார்! பட் ஒன் சஜஷன்! இந்த வொர்க் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாமே நாங்க பாத்துப்போம். பட் எங்களுக்கு விஹான் அட்வர்டைசிங் ஸ்டாஃப்ஸோட ஒத்துழைப்பும் கொஞ்சம் தேவைப்படும். பிகாஸ் சில பேஸிக் வொர்க்ஸ் அந்தந்த இண்டஸ்ட்ரில இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும்”
“இட்ஸ் ஓகே! இந்தப் போர்ட் மீட்டிங் முடிஞ்சதும் என்னோட ஆபிஸை அங்கதான் ஷிஃப்ட் பண்ணப் போறேன். அதுக்கு அப்புறமா விஹான் அட்வர்டைசிங்கோட ஸ்டாஃப்ஸை நானே உங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன். தென் டெய்லி நீங்க அவங்க கூட வொர்க் பண்ணா உங்களுக்கே அவங்க எந்த மாதிரி வொர்க்குக்குக் கரெக்டா இருப்பாங்கனு புரியும்” என்று ராகவ் அவளது அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டதோடு அதைச் செயல்படுத்தும் வழியையும் சொல்ல ரித்திமா அவனிடம் மற்ற விவரங்களையும் கேட்டுவிட்டுக் கிளம்பினாள்.
கிளம்பும் முன் ராகவ் ரித்திமாவிடம் “ரித்திமா! நீங்க உங்க வொர்க்கை 25 பர்சென்டேஜ் ஸ்டார்ட் பண்ணிட்டீங்க. வாட் அபவுட் அவந்திகா?” என்று மறக்காமல் கேட்டு வைத்தான்.
“ஷீ இஸ் பிரிப்பேரிங் அ ரிப்போர்ட். இன்னும் லஞ்ச்க்கு கூடப் போகல உங்க ஜான்சி ராணி. அவகிட்ட வொர்க் குடுத்திட்டீங்கல்ல இனிமே அத முடிக்காம அவளுக்குச் சாப்பாடு இறங்காது” என்று சொன்னவள் அவனிடம் விடைபெற்றுவிட்டுச் சென்றாள்.
அவள் சென்ற சில நிமிடங்களில் அவந்திகாவிற்கு ராகவிடமிருந்து கால் வந்தது. போனை ஸ்பீக்கரில் போட்டவள் “ஹலோ” என்றாள்.
“ரிப்போர்ட் எந்த ஸ்டேஜ்ல இருக்கு அவந்திகா?” என்று ராகவ் கேட்கவும் அவந்திகா கம்ப்யூட்டரில் டைப் செய்துகொண்டே பதிலளித்தாள்.
“75% முடிஞ்சிருச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல பாக்கியையும் முடிச்சிட்டு உன்னை வந்து பாக்குறேன் ராகவ்”
“நோ ப்ராப்ளம். நான் வீட்டுக்கு வந்ததும் பொறுமையாப் பாத்துக்கிறேன்”
“ம்ம்.. ஓகே”
“தென் நீ இன்னும் சாப்பிடலையா?”
“ம்ம் யெஸ்” என்று சொன்னவளின் கவனம் வேலையில் இருந்ததால் அவனது குரலிலிருந்த உணர்வை அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை.
“டைம் 4 ஓ க்ளாக் ஆகுது. இன்னும் சாப்பிடாம என்ன பண்ணுற?”
“வொர்க் இருக்குல ராகவ்”
“நீ சாப்டு முடிச்சிட்டு வொர்க்க கன்டினியூ பண்ணு”
“ம்ம்”
அவளின் இந்த ஒரு வார்த்தை பதிலில் எரிச்சலானான் ராகவ்.
“வாட் த ஹெல்? பிராப்பரா ஆன்சர் பண்ணக் கூட முடியாதா உன்னால?”
“ம்ம்.. வாட்?” என்று கேட்கவும் தலையிலடித்துக்கொண்டவன் “நத்திங்” என்று சொல்லிக் காலை கட் செய்துவிட்டான்.
அவந்திகா இது எதையும் கவனிக்காமல் வேலையிலேயே கண்ணாயிருந்து மாலையில் அதை முடித்தாள்.
ரிப்போர்ட்டுடன் வீட்டுக்கு வந்தவள் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு ராகவின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அவன் வந்ததும் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றவன் அவள் கொடுத்த ரிப்போர்ட்டைப் பார்த்துக்கொண்டே அவள் கூறிய விவரங்களைக் கேட்டான்.
“இந்த ஹால் மெயின் ப்ளேஸ்ல இருந்தாலும் பார்க்கிங் ஏரியா கொஞ்சம் வசதியா இல்ல. தென் இது மெயின் ப்ளேஸ் ப்ளஸ் எக்ஸ்க்ளூசிவ்லி ஃபார் கார்பரேட் ஈவன்ட்ஸ் ஒன்லி” என்று அவள் நின்றுகொண்டே விளக்க ஒரு நாற்காலியை இழுத்து உட்கார்ந்தபடியே சொல்லுமாறு கை காட்ட அவந்திகா அமர்ந்தபடியே விளக்கினாள்.
ஒரு மணி நேர விவாதத்துக்குப் பிறகு இருவரும் மஹாதேவபுராவில் இருக்கும் ஒரு ஹாலைத் தேர்வு செய்தனர். தான் மறுநாள் அந்த ஹாலின் மேலாளரிடம் பேசி ஹாலை புக் செய்துவிடுவதாக அவந்திகா கூறிவிட்டுக் கீழே செல்ல ராகவ் ரெஃப்ரெஷ் ஆக அறைக்குச் சென்றான்.
கீழே பிந்துவுடன் பேசிக்கொண்டிருந்தவள் ராகவ் வந்ததும் அனைவருடனும் சேர்ந்து டின்னர் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடும்போதே உஷா கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தவள் பின்னர் ராகவுடன் டிசைனிங் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.
பேசிக்கொண்டே சாப்பிட்டதால் புரையேற ராதிகா வந்து தண்ணீரைக் கொடுத்து அவளின் முதுகில் தட்டிக் கொடுத்துக்கொண்டே ராகவை முறைத்தவர் “எப்போவுமே அப்பா, பையங்கனு எல்லாருமே பிசினஸ் பேசிட்டு இருந்தது மாறி இப்போ வீட்டு மருமகள்களையும் சாப்பிட விடாமப் பேசுனா என்ன அர்த்தம்? ராகவ் அவளைச் சாப்பிட விடு. எதுவா இருந்தாலும் நாளைக்கு ஆபிஸ்ல போய்ப் பேசிக்கோங்க. உனக்கும் சேத்துதான்” என்று அவந்திகாவையும் செல்லமாக எச்சரித்துவிட்டுச் சென்றார்.
சாப்பிட்டு முடித்ததும் தூக்கம் வராதவள் தோட்டத்திலிருந்த ஊஞ்சலில் அமர்ந்தவள் யூடியூபில் பாடல்களைப் பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்குப் பிடித்த சூர்யாவின் 24 படப் பாடலைப் பார்க்க ஆரம்பித்தவள் அதில் மூழ்கினாள்.
நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்!!
உன் முகம் தாண்டி மனம் சென்று
உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்!!
ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவள் அருகில் வந்து நின்று அவளையும் போனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த ராகவைக் கவனிக்கவில்லை. திடீரென்று யாரோ பக்கத்தில் அமர்ந்ததை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தவள் அவனைப் பார்த்ததும் முறைத்தாள்.
பாடலைப் பாஸ் செய்தவள் “சொல்லிட்டு வரமாட்டியா நீ? ஒரு நிமிஷம் எனக்கு ஷாக் ஆயிட்டு தெரியுமா?” என்று கண்ணை விரித்துச் சொல்லவும் அழகாக முறுவலித்தான் ராகவ்.
“என்ன பண்ணிட்டு இருக்க ஜான்சி ராணி?”
“நான் சூர்யா சாங் கேட்டுட்டு இருக்கேன்”
“இஸிட்? எங்க குடு, நானும் கேட்டுப் பாக்குறேன்” என்று அவளது ஹெட்போனின் ஒரு முனையைத் தன் காதில் மாட்டியவன் பாடலை ப்ளே செய்ய ஏ.ஆர். ரஹ்மானின் இசை காதில் தவழ ஆரம்பித்தது.
என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சும் உலகைக் காண்போம் காதல் ஒளியில் காலவெளியில் கால்கள் பதித்துப் போவோம் இதுவரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை உயிரே அதையே நீ உணர்ந்ததால்
என்ற வரியில் பாடலைப் பாஸ் செய்த ராகவ் “இந்த வாய்ஸ் அர்ஜித் சிங்கோடது தானே?” என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டவன் பின்னர் முழுப் பாடலையும் அவளுடன் சேர்ந்து பார்த்து முடித்துவிட்டுப் போனை அவள் கையிலிருந்து வாங்கி ஒரு புறமாக வைக்கவும் அவந்திகா இவனுக்கு என்னாச்சு என்று எண்ணிக்கொண்டாள்.
“ஓகே! இப்போ இந்தப் பாட்டை டிரான்ஸ்லேட் பண்ணு பாப்போம்” என்று சொல்லவும் “வாட்?” என்று அதிர்ந்தாள்.
“ஆர் யூ சீரியஸ் ராகவ்?” என்று கண்ணை விரித்துக் கேட்க அவன் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு அவளது மொழிபெயர்ப்புக்காகக் காத்திருந்தான்.
அதில் கடுப்பானவள் “பக்வாஸ் பந்த் கர் ராகவ்! துமே கியா லக்தா? (உளறாத ராகவ்! நீ என்ன நெனைச்சிட்டு இருக்க?) டூ ஐ லுக் லைக் அன் இடியட்?” என்று படபடவென்று பொரியவும் அவனுக்கு அது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
“தும் பேவகூஃப் யா நா, முஜே நஹி பதா. ஆவோ ஔர் பைதோ. டிரான்ஸ்லேட் கரோ (நீ முட்டாளா இல்லையானு எனக்குத் தெரியாது. வந்து உக்காந்து டிரான்ஸ்லேட் பண்ணு)” என்று கட்டளையிட்டு அமருமாறு கை காட்ட அவளுக்குக் காதிலிருந்து புகை வராத குறைதான்.
“தேரா திமாக் கராப் ஹோஹயா ராகவ் (உனக்கு மூளை குழம்பிப் போச்சு). ஐ வோண்ட் எக்ஸ்ப்ளெய்ன் எனிதிங். டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று சொல்லிவிட்டு நகர முயன்றவளை இழுத்து அமரவைத்தவன் அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டதால் தன்னைச் சுற்றி இருக்கும் அவனது கைகளைத் தாண்டி அவளால் செல்ல இயலவில்லை.
அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். அதற்கெல்லாம் மசிபவனா அவன்?
ஒரு முறை முறைத்துவிட்டுப் பாடலை மொழிபெயர்த்துக் கூற ஆரம்பித்தாள். முழுவதும் சொல்லிவிட்டு “ஆர் யூ ஹாப்பி நவ்?” என்று கேட்க ராகவ் “வெரி ஹாப்பி” என்று சொல்லி எழுந்தவன் அவளது கையையும் தன் கையுடன் சேர்த்துக்கொண்டு உள்ளே செல்ல அவனைப் பார்க்க அவளுக்கு வினோதமாக இருந்தது.
“ரொம்ப ரசிக்காத ஜான்சி ராணி” என்று அவன் மெதுவான குரலில் கூற அவந்திகா விளையாட்டாக “அப்பிடித்தான் பாப்பேன் மேன். ஐ ஹேவ் ஃபுல் ரைட்ஸ்” என்று சொல்லிக் கண் சிமிட்டினாள்.
“இஸிட்?”
“யெஸ்! ஒன்லி ஐ ஹேவ் தட் ரைட். ஐ வோண்ட் அலோவ் எனிஒன் டு டூ தட்”
“சப்போஸ் யாராச்சும் பாத்தாங்கன்னா நீ என்ன பண்ணுவ?” என்று கிண்டலாகக் கேட்டுக்கொண்டே தங்களின் அறைக்குள் நுழைய அவந்திகா இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.
பின்னர் “அப்பிடி யாராச்சும் பாத்தாங்கன்னா அவங்க கண்ணை எடுத்துட வேண்டியதுதான்” என்று கடுப்புடன் கூற ராகவிற்கு அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தது.
“வாவ்! உனக்கு வேற நிக் நேம் வைக்கலாமானு யோசிக்கிறேன். ம்ம்.. இன்செக்யூர்ட் பீவி.. ஹவ் இஸ் தட்?” என்று சொல்லிவிட்டு அவளைக் கூரிய விழிகளால் பார்த்தான் ராகவ்.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலாதவள் “உவ்வக்! கேவலமா இருக்கு. நிக்நேம் வைக்கிறதுல்லாம் ஒரு கலை. அது எல்லாருக்கும் வராது மேன்” என்று அவன் பார்வையைத் தவிர்த்தவளாய்ப் படுக்கையில் விழுந்தாள்.
“அஹான்! ஓகே ஜான்சி ராணி! குட் நைட்” என்று சொல்லி விளக்கை அணைத்தான் ராகவ்.
“குட் நைட்” என்று சொன்னவள் அடுத்த சில நிமிடங்களில் உறங்கிப் போனாள்.
“யூ ஆர் மை ஸ்ட்ரெஸ் பஸ்டர்” என்று எண்ணிக்கொண்ட ராகவ் போர்வையை மூடி உறங்க ஆரம்பித்தான். மனதிற்குப் பிடித்தவர்களின் சிறு வேடிக்கையான செய்கைகள்தான் நம் வாழ்வை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகின்றது…
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


