ட்ராக் சூட்டுடன் கீழே வந்த அவந்திகா அந்தப் பரந்த தோட்டத்தின் ஒரு புறம் நின்றுகொண்டிருந்த தன் இரு மாமனார்களையும் கூடவே அவர்களிடமிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த நேஹா, பிந்துவையும் பார்த்தவள் மெதுவாக அங்கே சென்றாள்.
“வாமா மருமகளே! உனக்காகத்தான் நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். இன்னைக்கு உங்க மூணு பேருக்கும் சூரிய நமஸ்காரம் பண்ணச் சொல்லித் தரப் போறோம். எங்க நாங்க நிக்கிற மாதிரி நில்லுங்க பாப்போம்” என்று சொல்லிச் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தார் குணால்.
அவரைத் தொடர்ந்து மோகனும் அதே பாணியில் நிற்கப் பெண்கள் மூவரும் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
“பாபி! நீங்க டாடிஸ்கிட்ட இருந்து எங்களைக் காப்பாத்துவீங்கனு பாத்தா நீங்களும் அதே மாதிரி நிக்கிறீங்க?” என்று அவந்திகாவின் காதில் முணுமுணுத்தாள் பிந்து.
“வெயிட் பிந்து. இப்போ என்னோட பெர்ஃபார்மன்ஸ மட்டும் பாரு” என்று சொல்லிவிட்டுக் காலைத் தரையில் ஊன்றியவள் ஒரு காலைப் பிடித்துக்கொண்டு “ஆவ்! என் காலுக்கு என்னாச்சு? வலிக்குதே” என்று அங்கேயே அமர குணால் “அட என்னம்மா இது? நல்லாக் காலை இப்பிடி நேரா வச்சா கால் ஏன் வலிக்கப் போகுது? கம் ஆன். எழுந்திரு. ஐ செட் ஸ்டாண்ட் அப்” என்று கட்டளையிட அவந்திகா வேகமாக எழுந்தாள்.
“என்ன மாதிரி நின்னு இப்போ நமஸ்காரம் பண்ணு” என்று கட்டளையிட்டுவிட்டு அவள் நின்ற பாணியைக் கவனித்துவிட்டு அவரும் செய்ய ஆரம்பித்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவந்திகா தடுமாறியபடியே அவரிடம் “இந்த வீட்ல யாரும் அன்பாவே எதையும் சொல்ல மாட்டீங்களா? உங்க பையன் என்னடான்னா ஒரு சைட் எனக்கு ஆர்டர் போடுறான், அப்புறம் உங்க மாதாஜி அன்னைக்கு நீ கார்லதான் போகணும் மருமகளேனு என்னைக் கம்பல் பண்றாங்க. இன்னைக்கு நீங்க இப்பிடிக் காலைலயே ஒத்தகால்ல நிக்கச் சொல்லி ஆர்டர் போடுறீங்க., இங்க யாருக்குமே அன்பா எதுவுமே சொல்லத் தெரியல” என்று ஆடிக்கொண்டே சொன்னவளின் காதில் “அன்பா சொன்னா மட்டும் நீ கேட்டுடுவியா ஜான்சி ராணி?” என்ற ராகவின் குரல் விழத் திடுக்கிட்டவள் மொத்தமாக விழப்போனாள்.
அதற்குள் அவளைத் தாங்கியவன் “ஃபர்ஸ்ட் ரெண்டு கால்ல நிக்கப் பழகு! அப்புறமா ஒரு கால்ல நின்னு சூரிய நமஸ்காரம் பண்ணலாம்” என்று சொல்லிக் கண் சிமிட்டிவிட்டு அவளை நேராக நிறுத்தினான்.
“ஹாய் டாட்! மார்னிங்கே ஹெவி பனிஷ்மென்ட் குடுத்திருக்கீங்க. என்ன பண்ணுனாங்க மூணு பேரும்?” என்று அவரைக் கேட்க மோகனோ “நத்திங் மை சன்! ஆக்சுவலி இவங்க மூணு பேருக்கும் ஹெல்த் கான்சியஸே இல்ல. அதான் வொர்க் அவுட் யோகா பண்ணா நல்லதுனு சொல்லி டெய்லி மார்னிங் நானும் பய்யாவும் அவங்கள ட்ரெய்ன் பண்றோம்” என்று பெருமையாகக் கூறினார்.
“நம்ம மூணு பேரையும் சர்க்கஸ்கு ட்ரெய்ன் பண்ணுற மாதிரி சொல்லுறாங்க பாபி” என்று நேஹா அவந்திகாவின் காதில் கூறினாள். அவளைப் பார்த்துக் கண்ணை விரித்து அப்படியா என்று கண்ணாலேயே கேட்க அவள் ஆமாம் என்று கண்ணாலேயே பதிலளித்தாள்.
“இன்னைக்கு ஒரு நாள் விட்டுருங்க டாட். யூ கேன் ஸ்டார்ட் ஃப்ரம் டுமாரோ. இந்த ரெண்டு பேர நீங்க ட்ரெய்ன் பண்ணுங்க. அண்ட் அவந்திகா உனக்கு நான் சொல்லிக் குடுக்கிறேன்” என்று ராகவ் சொல்லவும் அவந்திகாவின் முகம் பிரகாசமானது. அவனிடம் ஏதாவது சொல்லித் தப்பித்துவிடலாம் என்று ஐடியா உதயமானது அவளுடைய குட்டித் தலையில்!
“ஓகே, டபுள் ஓகே! நீ சொல்லிக் குடுத்தா நான் சீக்கிரமா கத்துப்பேன் ராகவ். ஷல் வீ கோ?” என்று கேட்க அவன் சிரித்துக்கொண்டே அவளுடன் சென்றான்.
செல்லும்போது அவந்திகா ராகவிடம் “தேங்க்யூ ராகவ்! நீ என்னைக் காப்பாத்திட்ட தெரியுமா? இந்த 5 டேய்ஸ் நான் எப்பிடியோ அவங்களை ஏமாத்திட்டேன். இன்னைக்கு மாட்டிக்குவேனோனு நெனச்சேன். பட் நீ காப்பாத்திட்ட. தேங்க்யூ” என்று சொல்லி அவன் தாடையின் இருபுறமும் பிடித்துக் கிள்ளிவிட்டுச் சொல்ல ராகவ் “ரொம்ப சந்தோஷப்படாத ஜான்சி ராணி, அவங்கள விட வொர்க் அவுட் விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.
“ஹேய்! நில்லு மேன்” என்று அவன் பின்னே ஓடிவந்தவள் ஹாலுக்குள் சென்றவன் தன் அம்மாவுடனும் பெரியம்மாவுடனும் பேசியவன் டயர்டாக இருப்பதாகக் கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான். அவந்திகா அவர்களின் அறைக்குச் சென்றபோது அங்கே ராகவ் அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் வெளிச்சம் படாமல் திரைச்சீலையை இழுத்துவிட்டவள் குளிக்கச் சென்றுவிட்டாள். குளித்து முடித்துச் சத்தமில்லாமல் தயாரானவள் பூனை போன்று அடி வைத்து மெதுவாக அறையை விட்டு வெளியேறினாள்.
கீழே சென்றவள் அங்கே அமர்ந்து உஷாவுடன் பேசிக் கொண்டிருந்த ரித்திமாவைப் பார்த்தவள் அவர்களுடன் சேர்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தாள்.
அனைவரும் வந்ததும் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். ராதிகா பரிமாறினார்.
“அவந்திகா! ராகவ் எங்கேமா? சாப்பிடாம என்ன செய்றான்?”
“தாதி! அவரு டயர்டா இருக்குனு குளிச்சிட்டுத் தூங்கிட்டு இருக்காரு. இப்போ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தவளை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். திருமணநாளன்று ஆர்ப்பாட்டம் செய்தவளா இவள் என்று அவளது தோழிகள் கூட ஒரு நிமிடம் வியந்துவிட்டனர்.
சாப்பிட்டு முடித்த மூவரும் விஹான் அட்வர்டைசிங்கான லான்ச் பற்றித் திட்டமிட ஆரம்பித்தனர். நேரம் போவதே தெரியாமல் மூவரும் அமர்ந்திருக்க வருண் அலுவலகத்திலிருந்து 12 மணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டான்.
வந்தவனிடம் ரித்திமாவும் அவந்திகாவும் பேசிக் கலாய்க்க உஷாதான் அவர்களை அடக்குவதற்குள் பெரும்பாடுபட்டுப் போனாள்.
அங்கே அவர்களின் அறையில் மொபைலின் ரிங் டோன் ஒலியில் விழித்த ராகவ் அந்த காலுக்குப் பதிலளித்துவிட்டுப் படுக்கையை விட்டு எழுந்தான். திரைச்சீலை இழுத்துவிடப்பட்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே முகம் கழுவி ஃப்ரெஷ் ஆனவன் கீழே வந்தான்.
அங்கே அவந்திகா ரித்திமா, வருண், உஷாவிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக்கொண்டிருக்க அவர்களிடம் வந்தவன் சோஃபாவில் அமர்ந்துகொண்டு அவந்திகாவைப் பார்த்து “நீ பொறக்குறப்போவே மைக் ஏதாச்சும் முழுங்கிட்டுப் பொறந்தியா?” என்று கேட்க அவள் புரியாமல் விழித்தாள்.
“ஏன் கேக்கிற? எனக்குப் புரியலயே!”
“பின்ன என்ன! உன் சத்தத்துல மனுஷனுக்குத் தூக்கமே வரலேனா பாத்துக்கோ! சரியான லவுட் ஸ்பீக்கர்” என்று அவன் கலாய்க்கவும் அவந்திகா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
பின்னர் “நான் சொல்லல, இவனுக்கு என்னை வம்பிழுக்கலனா பொழுதே போகாதுனு., வந்த உடன் ஆரம்பிச்சிட்டான்” என்று மற்ற மூவரையும் பார்த்துக் கூறினாள்.
“பெருமாளே! இந்த மைதாமாவுக்கு நல்ல புத்தியக் குடுக்க மாட்டியா?” என்று தமிழில் பேச ரித்திமா “ஏய்! ராகவ் காதுல விழப் போகுதுடி” என்று பதறினாள்.
“அவனுக்குத் தமிழ் சுத்தமா புரியாது டார்லிங்” என்று அவந்திகா கண் சிமிட்டவும் ராகவிற்கு இன்று எப்படியாவது அவள் தமிழில் என்னதான் பேசுகிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது.
நேரே வருண் உஷாவிடம் அமர்ந்தவன் “பாபி உங்களுக்குத் தமிழ் புரியும்தானே! அந்த ஜான்சி ராணி இப்போ சொன்னதை எனக்கு டிரான்ஸ்லேட் பண்ணுங்க ப்ளீஸ்” என்று கேட்க உஷா மொழிபெயர்க்க ஆரம்பித்தாள்.
“ஷீ இஸ் டாக்கிங் வித் காட் டு கிவ் யூ சம் சென்ஸ்” என்று அவன் காதில் மெதுவாகச் சொன்னாள் உஷா.
“இஸிட்? நெக்ஸ்ட்” என்று பல்லைக் கடித்தான் ராகவ்.
“ஷீ இஸ் காலிங் யூ பை அ நிக் நேம்” என்று சொல்லி இடையில் நிறுத்தினாள் உஷா
“வாட்ஸ் தட்?” என்று அவன் விடாப்பிடியாகக் கேட்க “மைதா மாவு தட் மீன்ஸ் மைதா ஃப்ளார்” என்று சொல்லிவிட்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
“வாட்? இஸ் ஷீ காலிங் மீ பை திஸ் நேம்? யே லட்க்கி பாஹல் ஹோஹயா. கித்னி ஹிம்மத் (இந்தப் பொண்ணு பைத்தியமாயிட்டா, எவ்ளோ தைரியம்?)” என்று அவன் கடுப்புடன் கூற உஷா அவனை அமைதிப்படுத்தினாள்.
“டோண்ட் டேக் இட் ராங். ஷீ ஹேஸ் சூசன் தட் நேம் டியூ டு யுவர் காம்ப்ளெக்ஷன். தட்ஸ் ஆல்” என்று அவள் அவனைச் சமாதானப்படுத்தினாள்.
வருண் வாய்க்குள் சிரிப்பை விழுங்கியவன் சீரியஸாக “பட் ராகவ்! அந்த நேம் உனக்கு 100 பர்செண்ட் சூட் ஆகும்டா” என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பிக்க அவனது சிரிப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அவந்திகா.
“வாட் ஹேப்பண்ட் வருண்?”
“நத்திங் சீரியஸ் ஹனிபி” என்றவன் ராகவைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போன் காலை அட்டெண்ட் செய்யச் சென்றுவிட்டான்.
ராகவ் எழுந்து அவந்திகாவின் அருகில் அமர்ந்தவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தான்.
அவந்திகா முதலில் கவனிக்காதது போல இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்தாள்.
“ஹலோ! இப்போ எதுக்கு என்னையே பாத்துட்டிருக்க?”
“தீஸ் ஆர் மை அய்ஸ். ஐ கேன் ஸீ எனிதிங் வித் மை அய்ஸ். ஐ டோண்ட் நீட் யுவர் பெர்மிஷன்” என்றான் அவன் அமர்த்தலாக.
“வாட்? ஆர் யூ க்ரேஸி? எனக்கு அன்கம்ஃபர்டபிளா இருக்கு மேன்” என்று அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“இஸிட்., பட் எனக்குப் பிடிச்சிருக்கே” என்று சொல்லிச் சிரிக்க அவந்திகா அவனது வார்த்தைகளில் குழம்பினாள். ‘இவன் என்ன சொல்ல வர்றானு புரிஞ்சிக்கவே நான் இன்னொரு டிகிரி படிக்கணும் போல’ யோசித்துக்கொண்டே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
இவர்கள் பேச ஆரம்பிக்கும்போதே உஷாவும் ரித்திமாவும் நகர்ந்துவிட அவர்கள் தனித்துவிடப்பட்டனர்.
அப்போது டிவியில் தமிழ் மொழி சேனல் ஓடிக்கொண்டிருக்க அதில் அயன் படத்திலிருந்து ‘நெஞ்சே நெஞ்சே’ பாடல் ஓட அவந்திகா சூர்யாவைப் பார்த்த உற்சாகத்தில் “வாவ்! சூர்யா, மை டார்லிங்” என்று பாடலை ரசிக்க ஆரம்பித்தாள்.
அவள் பாடலிலேயே மூழ்கிவிட அவளையே பார்த்துக்கொண்டிருந்த ராகவைக் கவனிக்கவில்லை. பாடல் முடிந்து திரும்பியவள் ராகவ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தவள் தன் தலையில் தட்டிக்கொண்டே “அது சூர்யானா எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லி நாக்கைக் கடித்துக்கொள்ள ராகவ் அவளுடைய குழந்தைத்தனமான செய்கையில் தன்னை மறந்தான்.
அவனுடைய முகத்தைப் பார்த்த அவந்திகாவும் தன் கண்ணை அவனிலிருந்து எடுக்கவில்லை……….
மனதிற்குப் பிடித்தவர்களை ரசிக்கும்போது நாம் நம்மை மட்டுமன்றி இவ்வுலகையே மறந்துவிடுகிறோம் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பதை அவர்கள் அன்று புரிந்துகொண்டனர்.
மறுநாள் காலையில் போன் அலாரம் ஒலிக்கக் கண் விழித்தான் ராகவ். அலாரத்தை ஆஃப் செய்தவன் தன் பக்கத்தில் பொம்மை போன்று உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவைப் பார்த்தான்.
நேற்று உஷா கூறியது நினைவில் வந்தது.
“ஷீ இஸ் காலிங் யூ பை அ நிக் நேம்”
“வாட்ஸ் தட்?”
“மைதா மாவு தட் மீன்ஸ் மைதா ஃப்ளார்”
தூங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து “டூ ஐ லுக் லைக் மைதா ஃப்ளார்? வெயிட் ஜான்சி ராணி” என்று சொன்னவன் “அவந்திகா கெட் அப்” என அவளை எழுப்ப அவள் அசையக்கூட இல்லை.
என்ன செய்யலாம் என்று யோசித்தவனின் கண்ணில் தண்ணீர் வைத்திருந்த ஜக் விழவே ‘நல்லா மாட்டினியா ஜான்சி ராணி’ என்று மனதில் நினைத்துக்கொண்டே தண்ணீரை அவந்திகாவின் மீது ஊற்றினான்.
அலறியடித்துக்கொண்டு எழுந்தவள் தன் அருகில் கையில் ஜக்குடன் புன்னகை தவழும் முகத்துடன் நின்றுகொண்டிருக்கும் தன் பார்வையாலே பொசுக்கியபடி படுக்கையை விட்டு இறங்கினாள்.
தண்ணீரோடு சேர்ந்த ஏசி குளிரில் வெடவெடத்த உடலைச் சமாளித்துக்கொண்டு “இப்போ எதுக்கு என் மேல தண்ணி ஊத்தி என்னோட தூக்கத்தக் கெடுத்த?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டவளைப் புன்னகையுடன் எதிர்கொண்டான் ராகவ்.
“நேத்து மார்னிங் நடந்தது மறந்துடுச்சா? நான் உனக்கு வொர்க் அவுட் பண்ணச் சொல்லித் தரேனு சொன்னது நியாபகம் இருக்குதானே! நான் உன்னை எழுப்ப ட்ரை பண்ணேன்! பட் நீ ரெஸ்பான்ட் பண்ணல., சோ தேவையில்லாம வாட்டர் ஜக்கைக் காலி பண்ண வேண்டியதாப் போச்சு” என்றவனைப் பல்லைக் கடித்துக்கொண்டு முறைத்தாள் அவள்.
பின்னர் “நான் எழுந்துக்கலைனா நீ இன்னும் த்ரீ டு ஃபோர் டைம்ஸ் கூப்பிட்டுருக்கணும் மேன்! அதை விட்டுட்டுத் தண்ணியையா ஊத்துவ! எனக்கு எவ்ளோ குளிருது தெரியுமா?” என்றாள் நடுங்கும் குரலில்.
“எனக்கு எப்பிடித் தெரியும்?” என்று தோளைக் குலுக்கியவனைக் கொலைவெறியுடன் பார்த்தவள் “ரைட், உனக்கு எப்பிடித் தெரியும்? உன்னோட டிரஸ்ஸும் ஈரமானாதான உனக்குத் தெரியும்?” என்று சொல்லி அவனுடைய டி-ஷர்ட்டைப் பிடித்து இழுத்தவள் அவனைக் கட்டிக்கொண்டு அவளுடைய முகத்தை அதில் துடைத்தாள்.
பின்னர் அவனை விட்டவள் ஏதோ பெரிதாக அவனைப் பழிவாங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு கேலியுடன் “இப்போ குளிருதா உனக்கு?” என்று நக்கலாகக் கேட்டாள்.
திடீரென்று அவள் அணைத்ததை எதிர்பார்க்காதவன் அவளுடைய செய்கையில் சிரித்துவிட்டான். பின்னர் அருகில் வந்து “ஓ! ரிவென்ஜா?” என்று கேட்க அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்.
“உங்க ஊருல இதுக்குப் பேருதான் ரிவென்ஜா? ஐயோ நீ என்ன ரொம்பச் சூப்பராப் பழிவாங்கிட்ட போ!” என்று ராகவ் சிரிக்க “தெரியுதுல்ல! இனிமே என்கிட்ட நீ கொஞ்சம் கவனமாவே இரு, இல்லைனா..” என்று சொல்ல வந்தவளை இடைமறித்தவன் “இல்லைனா நீ இப்பிடித்தான் நடந்துப்ப” என்று சொல்ல அவள் அதற்கும் ஆமாம் என்று தலையாட்டினாள்.
“அப்போ இனிமே நீ அடிக்கடி ரிவென்ஜ் எடுக்கிற மாதிரியே நான் நடந்துக்கிறேன்” என்று சொல்லி அவன் அவந்திகாவின் தலைமுடியைக் கலைத்துவிட்டு வேறு டி-ஷர்ட் மாற்றச் செல்ல அவளோ ‘இவனுக்கு என்ன பைத்தியமா’ என்று தன் மனசாட்சியிடம் கேட்க அதுவோ ‘தெரியலயே’ என்று பதிலளித்தது.
டி-ஷர்ட் மாற்றிவிட்டு வந்தவன் “லுக்! இதே டிரஸ்ஸோட எவ்ளோ நேரம் நிப்ப? போய் ட்ராக் சூட் மாத்திட்டு வா” என்று சொல்ல அவந்திகா “முடியாது” என்று சொல்லிவிட்டு அதே இடத்தில் நின்றாள்.
அவளது பதிலில் கடுப்பானாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் வலுக்கட்டாயமாகச் சிரித்தவன் “இப்போ நீயா போய்ச் சேஞ்ச் பண்ணலனு வை, நானே என் கையால சேஞ்ச் பண்ணிவிட வேண்டியதா இருக்கும்” என்று சொல்லி அவளின் அருகில் வர அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள் “நோ நோ! நானே பண்ணிட்டு வர்றேன்” என்று வேகமாக உடையை மாற்றிவிட்டு வந்தாள்.
“குட் கேர்ள்! போலாமா?” என்று கேட்டபடியே அவளது கையை விடாமல் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்லவே அவந்திகா “போயும் போயும் இவனைப் போய் ட்ரெய்னியா ஏத்துப்பியா நீ? இன்னைக்கு என்ன ப்ளானோட இருக்கானோ?” என்று மனதிற்குள்ளேயே புலம்பியபடி செல்ல ராகவோ அவளது முகபாவத்திலிருந்தே மனதை அறிந்தவன் ‘நிக் நேமா வைக்கிற நீ?’ என்று எண்ணிக்கொண்டே உடற்பயிற்சிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே நுழைந்தவன் செல்ஃபிலிருந்த டம்பல்ஸை எடுத்து அவள் கையில் கொடுக்க அவளோ தடுமாறினாள்.”இதுதான் இருக்கிறதிலயே வெயிட் கம்மி. இதுக்கே டான்ஸ் ஆடுனா எப்பிடி ஜான்சி ராணி?” என்று கிண்டலடித்துவிட்டு அவனுடைய வழக்கமான பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தான்.
அவன் திரும்பியதும் டம்பல்ஸைக் கீழே வைத்தவள் ஷர்ட்டின் காலரைப் பின்னோக்கித் தள்ளிவிட்டுக் கைகளால் காற்று வீச ஆரம்பித்தாள். சிறிது நேரத்திலேயே அவளைக் கண்டுபிடித்துவிட்ட ராகவ் அவளை அழைத்து டம்பல்ஸை வாங்கி மறுபடியும் செல்ஃபிற்குள் வைக்க அவந்திகா தப்பிச்சிட்டோம் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.
ஆனால் அவளது சந்தோஷத்திற்கு ஆயுள் குறைவு. ராகவ் அடுத்து பைசெப்ஸ் பயிற்சிக்கான கேபிளைக் கையில் கொடுத்துச் செய்வதற்கான முறையையும் விளக்கிவிட்டு அவள் பக்கத்திலே நின்று “கம் ஆன்! டூ இட் நவ்” என்று சொல்லவும் அவந்திகா வேறு வழியின்றி அதைத் தொடர ஆரம்பித்தாள்.
ஆனால் சில நிமிடங்களிலேயே கை வலிக்க “என்னால முடியாது” என்று சொல்ல அவன் ட்ரெட்மில்லிற்கு அழைத்துச் சென்றான்.குறைவான ஸ்பீடை செட் செய்தவன் “வாக்!” என்று சொல்ல அவந்திகா அதில் பயத்துடனே நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் கழித்து ராகவ் “ஆர் யூ ஓகே வித் திஸ்?” என்று கேட்க அவந்திகாவோ அது சுலபமாக இருந்ததால் “டபுள் ஓகே” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு நடக்க அவளிடம் சொல்லிவிட்டு அதை நிறுத்தியவன் அவளைச் சில நிமிடம் அமைதியாக நிற்க வைத்தவன் ஸ்பீடை சற்று அதிகரித்துவிட்டு “நவ் யூ ஹேவ் டு ரன், டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று சொல்ல அவந்திகா தலையாட்டினாள்.
ஆனால் அதில் ஓடத் தொடங்கிய பிறகுதான் அவளுக்கு அந்த வேகத்துக்குத் தன்னால் ஓட முடியாது என்பதே புரிந்தது. இருந்தாலும் ஓடியவள் ராகவ் அதை நிறுத்தி அவள் நிதானிப்பதற்காகத் தன்னுடைய கையைக் கொடுத்தபோது அதைப் பிடித்தபடியே இறங்கியவள் வியர்வையைத் துடைத்துவிட்டு அவனையே கடுப்புடன் பார்த்தாள்.
“ஜான்சி ராணி, வொய் ஆர் யூ ஸ்டேரிங் மீ லைக் திஸ்? நான் அவ்ளோ ஹேண்ட்சம்மா இருக்கேனா?” என்று கண் சிமிட்ட அவள் படபடவென்று அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய்! ஸ்டாப் இட் கேர்ள்! ஆர் யூ க்ரேஸி? இனாஃப்” என்று சொல்லச் சொல்ல அவனை அடித்தவள் அவன் அவளது கைகளைப் பிடித்துக்கொண்டதால் நிறுத்தினாள்.
“நீ வொர்க் அவுட் சொல்லித் தரியோ இல்லையோ என்னை உயிரோட வச்சுச் சாகடிக்கிற” என்று சொல்லிவிட்டு முறைக்க ராகவ் கூலாக அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
“இதெல்லாமே ரொம்ப ஈஸியானதுதான். பட் உனக்குத்தான் கஷ்டமா தெரியுது” என்று அவன் அலட்சியமாகச் சொல்ல “அஹான்! இனிமே நான் இந்த ரூமுக்கு வரவே மாட்டேன்பா” என்று சொல்லிக் கையை உருவ முயற்சிக்க அவனோ இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.
“ஏய் மைதா மாவு! கைய விடுடா” என்று சொல்லவும் ராகவுக்கு அந்த மைதாமாவு என்ற வார்த்தை மட்டும் புரிபட அவளிடம் “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கு இப்பிடி ஒரு நிக்நேம் வச்சிருப்ப?” என்று கேட்டான்.
அவந்திகா இவனுக்கு எப்படித் தமிழ் வார்த்தை புரியும் என்று குழம்பியவள் அதை அவனிடம் கேட்டே விட்டாள். உஷா தனக்குக் கூறிய விஷயங்களைச் சொல்லவும் அவந்திகா சிரித்தே சமாளிக்க முயன்றாள்.
“சோ இதுக்கு உனக்குப் பனிஷ்மென்ட் குடுத்தே ஆகணும்” என்று தீவிரமான குரலில் சொல்ல அவந்திகா மலங்க மலங்க விழித்தாள்.
“இனிமே எப்போல்லாம் நீ தமிழ் வேர்ட்ஸ் யூஸ் பண்ணுறியோ அப்போ எல்லாம் எனக்கு அதோட மீனிங்க டிரான்ஸ்லேட் பண்ணனும். அதுல எதாச்சும் சீட்டிங் பண்ண ட்ரை பண்ணா அதுக்கு வேற பனிஷ்மெண்ட் இருக்கு. நான் பாபிகிட்ட கேட்டு ஒவ்வொரு வேர்டையும் கன்ஃபர்ம் பண்ணிப்பேன்” என்று சொல்ல அவள் பரிதாபமாகத் தலையாட்டினாள்.
“இன்னைக்கு வொர்க் அவுட் போதும்! பட் டுமாரோ இப்பிடி உன் மேல பரிதாபம் காட்டவேமாட்டேன். யூ மே கோ நவ்” என்று சொல்லிவிட்டு அவனுடைய பயிற்சிகளைத் தொடர்ந்தான் ராகவ்.
தன் அறைக்கு வந்த அவந்திகா ராகவ் வருவதற்குள் குளித்துத் தயாரானவள் கீழே சென்று தாதிக்குப் பூஜையில் உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அவருடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.
ரித்திமாவின் கால் வர அதை அட்டெண்ட் செய்தவள் பேசிமுடித்துவிட்டு ராகவிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். ஏனென்றால் இது அவர்களின் வேலை சம்மந்தப்பட்ட விஷயம்.
ராகவ் கீழே இறங்கிவரவும் விஷயத்தைக் கூறியவளிடம் “ஹால் நல்லா கிராண்டா இருக்கிறது மஸ்ட். ஸோ நீ பெங்களூர் சரவுண்டிங்ல நல்ல ஹால் எதுனு செக் பண்ணிட்டு எனக்கு சஜெஸ்ட் பண்ணு. மத்த விஷயங்களை அதுக்கு அப்புறமா நானே உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட அமர்ந்தான். சாப்பிடும்போதே ஹால் பற்றிய அவனது எதிர்பார்ப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள் அவந்திகா.
பின்னர் இருவரும் ஒன்றாகவே அலுவலகம் சென்றனர். அங்கே கிஷோர், வருண், ராகவ் மூவரும் ஏ.ஜி.எம்முக்கான வேலைகளைக் கவனிக்க ரித்திமாவும் அவந்திகாவும் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கான பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
விஹான் அட்வர்டைசிங்கான வேலைகள் பரபரப்பாக நடக்க ஆரம்பித்தது..
ராகவிற்கு அது அவனது கனவு பயணத்துக்கான முதல் அடி என்றால் அவந்திகாவுக்கு அது அவர்களின் நிறுவனம் செல்லப்போகும் நீண்ட கால பயணத்திற்கான ஒரு முக்கியமான மைல் கல்.. அதனால் இருவரும் அந்த லான்சிற்கான பணியில் தீவிரமாக மூழ்கினர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


