மெதுவாக நடந்து கடற்கரையோரமாக வந்தனர் ராகவும், அவந்திகாவும். கடற்கரை மணலில் கால் புதைய நடக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்தாள்.
ராகவ் போனில் அந்த டாக்குமெண்டை டிஜிட்டல் சிக்னேஷருக்காக அனுப்பிவிட்டதைத் தனது செகரட்டரியிடம் தெரிவித்துவிட்டு அந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு கூறிப் போனை வைத்துவிட்டான்.
அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அவந்திகாவிடம் ஒரு கண்ணை வைத்தபடி வருணுக்குக் கால் செய்தான். இருவரும் பிசினஸ் விஷயங்களைப் பேசி முடித்துவிட்டுத் தங்களுடைய டிரிப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
வருண் உஷா செய்த ஷாப்பிங் பற்றிப் புலம்பித் தள்ளுவதைக் கேட்ட ராகவ் அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரிக்க அவந்திகா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் விளையாட்டைத் தொடர்ந்தாள்.
“பய்யா! நான் ஆல்ரெடி சொன்னேன்தானே! உங்க ஃப்ரீடம் எப்போவோ போயிடுச்சு! மேரேஜ் ஆயிடுச்சுல்ல, இனி இதுக்குலாம் பழகிக்கோங்க” என்று கிண்டலாகக் கூறினான்.
“நீ ஏன்டா சொல்ல மாட்ட? அவந்திகா உன்னை எதுக்கும் டிஸ்டர்ப் பண்ண மாட்டா., அதனால நீ ஜாலியா இருக்க”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வாட்? நான் ஒன்னு சொல்லவா? எந்த நேரத்துல நான் என்னைக் கேள்வி கேக்காத பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொன்னேனோ, அந்த காட் என்னை 24 ஹவர்ஸும் கேள்வியே கேட்டுச் சாகடிக்குற ஒருத்திகிட்ட மாட்டி விட்டுட்டாரு! அது மட்டும் இல்ல பய்யா! இந்த சிராஜ் இடியட்டால மேரேஜ் ஆன நாள்ல இருந்து நான் பாடிகார்ட் மாதிரி அவ பின்னாடிதான் சுத்திட்டு இருக்கேன். அவளோட தாட்ஸ் எல்லாமே ரொம்ப வியர்டா இருக்கு, அவளை மாதிரியே” என்று அவந்திகாவைக் கிண்டல் செய்தான்.
இவ்வாறு இரு சகோதரர்களும் தங்கள் வாழ்க்கைத் துணைகளைப் பற்றிப் பேசிமுடித்துவிட்டுத் தங்கள் பாரத்தை இறக்கிக் கொண்டனர்.
அவந்திகா கடலில் விளையாடிவிட்டு ரிசார்ட்ஸை நோக்கித் திரும்புகையில் அவளுக்குப் போனில் அழைப்பு வந்தது. அதைப் பேசி முடித்தவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க, அவளைப் பார்த்த ராகவ் எதுக்கு இந்த ஜான்சி ராணி இப்பிடி எக்ஸைட் ஆகுறா என்று யோசித்தபடியே அவளைப் பார்த்தான் ராகவ்.
“பெருமாளே! ரொம்ப தேங்க்ஸ்! இந்த ஈவண்ட் மட்டும் பிரச்சனை இல்லாம நடந்து முடியட்டும். நான் நடந்தே திருப்பதி வர்றேன்” என்று தமிழில் மொழிய ராகவ் வழக்கம் போலப் புரியாமல் பார்த்தான்.
அவன் தன்னை வித்தியாசமாகப் பார்ப்பதைக் கண்டவள் “எங்களுக்கு ஒரு பெரிய கார்ப்பரேட் ஈவண்ட் நடத்துறதுக்கான கான்ட்ராக்ட் கெடச்சிருக்கு” என்று ஆனந்தமாகக் கூற ராகவ் கையைக் கட்டிக்கொண்டு அவளைக் கண் எடுக்காமல் பார்த்தான்.
உடனே சுதாரித்த அவந்திகா “ஓகே! உனக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லனு புரியுது! பட் எங்களுக்கு இது ரொம்ப ரொம்பப் பெரிய கான்ட்ராக்ட் தெரியுமா? இது சம்மந்தமா நானும் ரித்தியும் இன்னும் 2 டேஸ்ல அவங்க எம்.டிய மீட் பண்ணப் போகணும். நான் ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன்” என்று சிலாகித்தவாறே சொல்ல ராகவ் மனதிற்குள் பாவம் அந்த எம்.டி., இவகிட்ட மாட்டிகிட்டு என்ன பண்ணப் போறானோ என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றான்.
அமைதியாகச் சென்றவனைப் பார்த்துவிட்டுத் தோளைக் குலுக்கியபடியே பின்தொடர்ந்தாள் அவந்திகா. அவன் வேலையைப் பார்க்க ஆரம்பிக்க அவளோ தோட்டத்துக்குச் சென்றாள்.
அவந்திகா தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவள் யாருக்கோ வீடியோ கால் செய்துகொண்டிருந்தாள்.
“அஜ்ஜூ! வாட் ஆர் யூ டூயிங்டா? நான் நல்லா இருக்கேன்! அம்பு பாட்டியக் கொஞ்சம் காமிங்க பாப்போம்” என்று கூறிப் போன் ஸ்கிரீனைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் அவந்திகா.
யார்கிட்ட பேசிட்டு இருக்கா என்று ஆர்வக்கோளாறாக அவள் உட்கார்ந்திருந்த ஊஞ்சலுக்குப் பின்புறம் இருந்த சேரில் உட்கார்ந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தான் ராகவ். அவனும் என்னதான் செய்வான்? இங்கு அவனுக்கு ரொம்பவே போர் அடிக்கவே தோட்டத்திற்குச் செல்லலாம் என்று வந்தவன் அவந்திகா போனில் யாரிடமோ கொஞ்சிப் பேசியதைக் கேட்டு அங்கேயே அமர்ந்துவிட்டான்.
அவனைக் கவனிக்காமல் பேச்சைத் தொடர்ந்தாள் அவந்திகா.
“அம்பு பேபி! ஹவ் ஆர் யூ? ஐ மிஸ் யூ சோ மச்” என்று அவள் கூறவும் ராகவுக்கு உள்ளே புகைய ஆரம்பித்தது.
அதற்குக் கிடைத்த பதிலில் திருப்தியடைந்தவள் பதிலுக்கு “மீ டூ பேபி! லவ் யூ சோ மச்! பை” என்று போனை வைத்துவிட்டுத் திரும்பியவளுக்குக் கையைக் கட்டிக்கொண்டு அவளையே முறைத்துப் பார்த்த ராகவின் தரிசனம் கிடைக்கவே இவன் எப்போ வந்தான் என்று யோசித்தபடியே அவனைச் சாதாரணமாகப் பார்த்தாள்.
“ஹேவ் யூ ஃபினிஷ்ட் யுவர் கால்?” என்று அவளைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டான்.
“ஓ! பேசிட்டேனே!” என்றாள் அவள் சாதாரணமாக.
ராகவ் அவளின் பதிலைக் கேட்டவன் நெற்றியை விரலால் தேய்த்துக்கொண்டே “யூ மிஸ் ஹிம் சோ மச்னா?” என்று கேட்டபடி அவளை ஊடுருவிப் பார்த்தான்.
“யா ராகவ். ஐ மிஸ் ஹிம் சோ மச்” என்று அவள் உருகவே கடுப்பானான் ராகவ்.
“வாட் த ஹெல்? அவனை மிஸ் பண்ணுறேனு நீ என்கிட்டயே சொல்லுற” என்று அவன் பல்லைக் கடித்தபடிக் கூற அவந்திகா இவனுக்கு என்னாச்சு என்று அவனைப் பார்த்தாள்.
“நீதான கேட்ட? அப்போ உன்கிட்டதான சொல்லணும்! இப்போ எதுக்கு நீ இவ்ளோ கோவப்படுற நீ?”
“ஓ! லாஜிக் பேசுற நீ? என் முன்னாடியே யாரோ ஒருத்தன்கிட்ட ஐ லவ் யூ, ஐ மிஸ் யூனு சொல்லுவ! அதைக் கேட்டுட்டு நான் கோவப்படாம என்ன பண்ணணும் அவந்திகா?” என்று அவன் வெடிக்க ஆரம்பிக்க அவனது இந்த அவதாரத்தைக் கண்டவள் திகைப்புடன் “யாரோ ஒருத்தனா? என்னடா சொல்லுற நீ? நான் அஜ்ஜுகிட்ட பேசிட்டு இருந்தேன்” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்க்க
அவன் விடாப்பிடியாக “அந்த அஜ்ஜுதான் யாரு?” என்று கேட்டுவிட்டு அவளது பதிலுக்காக எதிர்பார்த்துக் கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.
“ஹி இஸ் மை லிட்டில் ப்ரதர், லிவ்விங் இன் சென்னை வித் மை கிரானி., எக்ஸ்ப்ளனேஷன் போதுமா?” என்று அவள் கண்ணை விரித்துச் சொல்லிவிட்டு அவனை மாதிரியே கையைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
அவள் தம்பியிடம் பேசியதாகக் கூறவும் ராகவிற்கு ஏனோ மனம் லேசான உணர்வு. முகத்திலிருந்த கடுகடுப்பு மாயமாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “ஓகே! நவ் ஐயாம் ஆல்ரைட்” என்று சொன்னவன் “உன்னோட லிட்டில் ப்ரதர் மீன்ஸ்?” என்று மறுபடியும் ஐயமாகக் கேட்டான்.
“என் சித்தியோட பையன்., நேம் அர்ஜூன். நான் அவனை அஜ்ஜுனு செல்லமாக் கூப்பிடுவேன். ரொம்பச் சுட்டி. நான் ராஜஸ்தான் போறதுக்கு முன்னாடி அவனைப் பாத்தது. அவன் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் போக ஆரம்பிச்சிட்டானா சோ லீவ் கெடைக்கல. ரொம்ப மிஸ் பண்றேன் அவனை” என்று பாசத்துடன் கூறினாள்.
ராகவுக்கோ “வாட்? ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்டா? கௌசிமாக்கு அவ்ளோ குட்டிப் பையனா?” என்று மனதில் தோன்றவே அதை வாயால் கேட்டுவிட்டான்.
“கௌசிமா பாக்க உன்னோட எல்டர் சிஸ்டர் மாதிரிதான் இருக்காங்க. பட் நீ அவங்களைச் சித்தினு கூப்பிடுற. இந்த டவுட் ரொம்ப நாளா இருந்துச்சு. இன்னைக்குதான் கேக்க டைம் கெடச்சிருக்கு” என்று கூறியவனை ஊஞ்சலில் அமரச் சொல்லிவிட்டுத் தானும் அமர்ந்தவள் தங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.
“என்னோட அம்மாவுக்கும் சித்திக்கும் 10 இயர்ஸ் டிஃபரென்ஸ். நான் பொறந்தப்போ சித்திக்கு 10 வயசுதான். சித்திக்கு நான்னா அவ்ளோ பிடிக்கும் தெரியுமா?” என்று அவள் சொல்ல ராகவ் அதை மனதிற்குள்ளேயே ஆமோதித்தான்.
“அப்பா அம்மா என்னை விட்டுட்டுப் போனப்போ எனக்குச் சித்தியத் தவிர வேற யாருமே கெடையாது. ஒரு 22 வயசுப் பொண்ணா என்னோட சித்திக்கும் லைஃப் பத்தி நெறைய கனவு இருந்திருக்கு. பட் அதையெல்லாம் எனக்காக அவங்க ஒதுக்கி வச்சிட்டு இந்தப் பெங்களூருக்கு வந்தாங்க. சித்தப்பா எங்க பக்கத்து வீடுதான். சித்தியை அவரு உருகி உருகி லவ் பண்ணதுலாம் எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். பட் சித்தி தனக்கு லைஃப்ல மேரேஜே வேண்டாம்னு அவர்கிட்ட டேரக்டா சொல்லிட்டாங்க” என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
பின் “நானும் அம்புவும் ப்ளான் பண்ணோம். அது மாதிரி நான் டென்த் போர்ட் எக்ஸாம் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் சித்தி ரகு அண்ணாவ மேரேஜ் பண்ணாதான் நான் ஸ்கூலுக்குப் போவேனு பிடிவாதமா சொல்லிட்டேன்” என்று சொல்லவும் ராகவ் அவளது அண்ணா என்ற சொல்லில் குழம்பினான்.
“அப்போ நான் சித்தப்பாவ அண்ணானுதான் கூப்பிடுவேன். அவர் என்னோட குளோஸ் ஃப்ரெண்ட்” என்று அவனுக்கு விளக்கிவிட்டுத் தொடர்ந்து “சித்தி ரித்திமா, உஷா மூலமா என்னோட மனசை மாத்த எவ்ளோவோ ட்ரை பண்ணாங்க. பட் அவங்களும் என்னோட க்ரைம் பார்ட்னர்ஸுனு அவங்களுக்குத் தெரியாது. இப்பிடி நெறைய கலாட்டாக்கு அப்புறமா சித்தி சித்தப்பாவோட கல்யாணம் நடந்துச்சு. அதுக்கு அப்புறமா நானும் அம்புவும் சேந்து ப்ளான் பண்ணி அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறதுக்காக நெறைய யோசிச்சோம். சோ அம்பு சென்னைக்கு அவங்க பூர்வீக வீட்டுக்குப் போய்ட்டாங்க. நானும் உஷா ரித்திமாகூட சேந்து போர்டிங் ஸ்கூல் போய்ட்டேன்” என்று சொன்னதைக் கதை கேட்பது போல் கேட்டுக்கொண்டிருந்தான் ராகவ்.
பள்ளி வாழ்க்கை முடிந்து வீட்டுக்கு வந்த அவந்திகா கண்டறிந்த உண்மை இன்னும் கௌசல்யாவும் ரகுவும் முறையாக வாழ ஆரம்பிக்கவில்லையென அம்புஜாவின் மூலம் (ரகுவரனின் அம்மா) அறிந்துகொண்டவள் இதைப் பற்றிச் சித்தியிடம் பேச முடிவு செய்தாள்.
கௌசல்யாவோ தனக்கு அவந்திகாவைத் தவிர வேறு குழந்தை பிறந்தால் தன் கவனம் தன் குழந்தையின்பால் போய்விடுமென்ற பயத்தில் அவள் கூறிய எதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை.
ஆனால் அவந்திகா தான் சொல்வதைக் கேட்காவிட்டால் தான் வீட்டை விட்டு ஒரே அடியாகச் சென்றுவிடுவதாக மிரட்டப் பதறிய ரகுவரன் அவளைச் சமாதானப்படுத்திக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். அப்போதும் அவள் விடுதியிலேயே தங்கிக்கொள்வதாகச் சொல்லிச் சென்றுவிட்டாள்.
ஒரு வருடம் கழித்து விடுதி வார்டன் அவளைப் பார்க்கச் சித்தப்பா வந்திருப்பதாகக் கூற மூவரும் அவரைப் பார்க்கச் சென்றபோதுதான் தெரிந்தது அவர்களுக்கு ஒரு அழகான தம்பி பிறந்திருப்பது.
சந்தோஷத்தில் திக்குமுக்காடிய மூவரையும் வார்டன் அனுமதியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ரகு தொட்டிலில் அன்று பூத்த மலர் போல் உறங்கிக்கொண்டிருந்த மகனை அவந்திகாவின் கையில் கொடுத்தபோது அவள் உணர்ச்சிவசப்பட்டு அழுதேவிட்டாள்.
லட்டுகுட்டி என்று செல்லப்பெயர் வைத்தனர் மூவரும் அவனுக்கு. அவனை வீட்டுக்கு அழைத்து வந்து பெரிய அளவில் பெயர்சூட்டுவிழா நடத்திய பிறகுதான் அவந்திகாவுக்கு நிம்மதியாக இருந்தது.
பின் கௌசல்யாவுக்கும் ரகுவிற்கும் ஒரே நேரத்தில் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்ததும் அர்ஜூனுடன் அவர்கள் அம்புஜாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
அதன்பின் அவந்திகா, ரித்திமா, உஷா மூவரும் கல்லூரி முடித்த கையோடு ஆரம்பித்த சன் டியூ நிறுமம்தான் அவர்களின் உலகமாக மாறியது. இதற்கிடையில்தான் மறுபடி கௌசல்யா பெங்களூருக்கு வந்ததும், உஷா வருண் காதலும் நடந்தேற அனைத்தையும் ராகவிடம் ஒப்பித்து முடித்தாள் அவந்திகா.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு முடித்தவனுக்குக் கௌசல்யா மீது மரியாதை கூடியது. அவன் “தென் அந்த அம்பு யாரு?” என்று கேட்க அவந்திகா பெருமையுடன் “அம்புவோட ஃபுல் நேம் அம்புஜா. எனக்கும் அர்ஜூனுக்கும் பாட்டி அவங்க. ஆக்சுவலி அவங்க எனக்கு ஃப்ரெண்ட் ஆனதால நான் அவங்கள எப்போவும் அம்புனுதான் கூப்பிடுவேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவந்திகாவுக்குக் கால் வரவே “ஹலோ! அவந்திகா ரவி ஸ்பீக்கிங்!” என்று சொல்ல ராகவ் அவளைப் புருவம் உயர்த்திக் கூர்மையாகப் பார்த்தான்.
அவனது பார்வையில் நாக்கைக் கடித்தவள் “சொல்லுங்க” என்று பேசிக்கொண்டே தோட்டத்தின் மறுமுனைக்குச் சென்று பேசிமுடித்துவிட்டு வந்தாள்.
“சோ நீங்க இன்னும் அவந்திகா ரவிதான்!” என்று அவன் கேலி போலக் கேட்க அவந்திகா என்ன சொல்லவென்று தெரியாமல் விழித்தாள்.
பின்னர் “அது திடீர்னு எப்பிடி சேஞ்ச் பண்ணிக்க முடியும்? கொஞ்ச நாள் ஆகட்டும். அப்போவும் நான் இப்பிடியே சொன்னா நீ என்னை என்ன வேணாலும் சொல்லித் திட்டிக்கோ” என்று கெத்தாகச் சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்…
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


