அவள் சென்றபிறகும் அங்கேயே அமர்ந்திருந்த ராகவ் அன்று அவந்திகாவின் அழகான இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டான்..
அதே நேரம் பெங்களூருவில் கிஷோர் பிரியாவிடமும், ராதிகாவிடமும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.
“இப்போ அவங்க இங்க வரலைனு யாரும் வருத்தப்படல பெரியம்மா!” என்று கோபத்துடன் கூறினான் கிஷோர்.
“கிஷோர் என்ன இருந்தாலும் அவங்க உன்னோட அம்மா., இப்பிடிலாம் பேசக் கூடாது” என்று கண்டித்தார் பிரியா.
“யாரு என்னோட அம்மா? அவங்களா? ஓகே! நீங்க எங்க மூணு பேருக்கும் யாரு? பெரியம்மாதானே. பட் இன்னைக்கு வரைக்கும் நீங்களோ ராதிம்மாவோ எங்களைப் பிரிச்சுப் பாத்திருக்கீங்களா? ஆனா அவங்க எல்லாரும் எவ்ளோவோ எடுத்துச் சொல்லியும் வருண் பய்யா மேரேஜுக்குக் கூட வரல. இப்போ கூட ஏன் வர்றாங்க தெரியுமா? ராகவ் பய்யா இன்னைக்கு டாக்குமெண்ட் ஃபார்வேர்ட் பண்ணதைப் பாத்துட்டு ஏ.ஜி.எம்ல ஏதாச்சும் கலாட்டா பண்ணலாம்னுதான் வர்றாங்க” என்று கசப்புடன் கூறி முடித்தான்.
கிஷோர் இவ்வளவு மனக்கசப்புடன் பேசியது அவனது சொந்த அன்னையைப் பற்றியே! அவன் தந்தை நிரஞ்சன் கபூரின் அகால மரணத்துக்குப் பிறகு மூன்று குழந்தைகளுக்கும் தாயாகவும், தந்தையாகவும் இருக்க வேண்டிய கடமையைச் செய்யாமல் அவரது சோகத்தை மறைப்பதற்காக வெளிநாட்டுக்குப் பறந்து சென்றவர் அவனது தாய் வீணா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இளம்வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பின்றித் தவித்த கிஷோரையும் அவனது இரு சகோதரிகளையும் பிரியாவும், ராதிகாவும் சொந்தப் பிள்ளைகளாகக் கருதி அன்பு செலுத்தி இன்று அவர்கள் வளர்ந்தும் விட்டனர். ஆனால் இன்னும் வீணா மட்டும் அதே விட்டேற்றியான போக்கோடு இருக்கவே அவரது சொந்தப் பிள்ளைகள் கூட அவரிடம் ஒட்டவில்லை.
ஆனால் அவனது கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக “அவங்க எப்பிடி வேணாலும் இருக்கட்டும்டா. நீ என்னோட பையன்! நான் உன்னை இப்பிடி வளக்கலையே!” என்று வருத்தமாகக் கூறினார் ராதிகா.
“அவங்க வந்தா நல்ல மாதிரி பேசு. ஏ.ஜி.எம் பத்தி ஆல்ரெடி ராகவும், வருணும் பேசி முடிச்சிட்டாங்க. சோ நீ வொர்ரி பண்ணிக்காத. போய் ரெஸ்ட் எடு. தேவையில்லாம டென்ஷன் ஆகக் கூடாது” என்று அவனைச் சமாதானப்படுத்தி அவனது அறைக்கு அனுப்பி வைத்த பிரியா அடுத்துச் செய்த காரியம் ராகவுக்குப் போன் செய்ததே!
“ஹலோ! படிமா! (பெரியம்மா)” என்றான் ராகவ் போனைக் காதில் வைத்தபடியே. அவர் போனில் விவரத்தைக் கூறியதும் பேசி முடித்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றவன் அவந்திகாவிடம் இன்று இரவு பெங்களூரு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு அவனுடைய உடைமைகளை எடுத்து வைத்தான்.
அவந்திகாவும் அவனது முகம் இருந்த போக்கைப் பார்த்ததும் அமைதியாகப் பொருட்களை எடுத்துக்கொண்டு அவன் பின்னே வந்து காரில் ஏறிக்கொண்டாள்.
வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசாதவள் இறங்கும்போது “எதும் பிரச்சனையா ராகவ்? நீ டென்ஷனா இருக்கற மாதிரி தெரியுது” என்று அக்கறையுடன் கேட்க
அவள் கேட்டதும் திரும்பி ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தவன் “வாவ்! அவந்திகாவா இது? ஐயாம் இம்ப்ரெஸ்ட்! கடைசில இப்போவாச்சும் உனக்கு நீ என்னோட வைஃப்னு நியாபகம் வந்துச்சே” என்று கேலி செய்தான்.
அவனைப் பார்த்து முறைத்த அவந்திகா “உன்கிட்ட போய் கேட்டேன் பாரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.
நுழையும்போதே ஏதோ வித்தியாசமாக உணர்ந்தவள் அங்கே சோஃபாவில் தாதியின் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணியைப் பார்த்ததும் அப்படியே நின்றாள்.
“சாஸுமா! இது உங்களுக்கு” என்று சொல்லி தாதிக்கு ஒரு சால்வையைக் கொடுத்தவர் வாசல் அருகில் நின்ற அவந்திகாவைப் பார்த்ததும் கேள்விகுறியுடன் அவளைப் பார்த்தார்.
அவளைப் பின்தொடர்ந்து வந்த ராகவ் அவரின் பார்வையை உணர்ந்து அவந்திகாவை அணைத்தபடியே “ஹலோ சாச்சி! (சித்தி) ஹவ் ஆர் யூ? லண்டன் ட்ரிப் எப்பிடிப் போச்சு?” என்று கேட்க அவந்திகா அவர் யார் என்பதைப் புரிந்துகொண்டாள்.
இருவரும் உள்ளே வர ராகவ் அவந்திகாவுக்கு அவரை அறிமுகப்படுத்தினான்.
“இவங்க வீணா சாச்சி. கிஷோர், நேகா, பிந்துவோட அம்மா” என்று அவன் கூறியதும் அவருக்கு வணக்கம் சொன்னவள் அவரின் காலில் விழப்போக அவளைத் தடுத்தவர் “அந்தக் காலத்துப் பழக்க வழக்கம்லாம் எனக்குச் சுத்தமா பிடிக்காது” என்று சொல்ல அவந்திகா அவரின் காலில் விழாமல் எழுந்தாள்.
அவரைப் பார்த்தபடியே சென்று சோஃபாவில் அமர்ந்தவள் “ஓகே சோட்டிமா! (சின்னம்மா) உங்களுக்கே பிடிக்கலைங்கிறப்போ நான் ஏன் அத ஃபாலோ பண்ணப் போறேன்” என்று சொல்லியபடியே அவர் முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
இதைப் பார்த்த கிஷோருக்குத் தன் தாயின் முகம் போன போக்கைப் பார்த்ததும் சிரிப்புப் பொங்கியது. ராதிகா, பிரியாவின் கண்டிப்பான பார்வையை எதிர்கொண்டதும் சிரிப்பைக் கன்ட்ரோல் செய்து அமைதியாக நின்றான்.
“ஏன் நிக்கிறீங்க? ப்ளீஸ் ஸிட் டவுன் சோட்டிமா. நான் ஒன்னும் தப்பா நெனச்சுக்க மாட்டேன்” என்று கெத்தாகச் சொல்லிவிட்டு தாதியிடம் தாங்கள் ரிசார்ட்ஸ் சென்று வந்ததைப் பற்றிக் கதையளக்க ஆரம்பித்தாள் அவந்திகா.
ராகவ் “இவ என்னையே இவ்ளோ டார்ச்சர் பண்றா. இன்னைக்குச் சாச்சி வேற இவகிட்ட வாயக் குடுத்துட்டாங்க! பாவம் அவங்க” என்று எண்ணியபடியே கிஷோரை அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான்.
அவந்திகா தன்னைக் கண்டுகொள்ளாததைப் புரிந்துகொண்ட வீணா அவளிடம் “சின்ன மருமகளே! உன்னோட கிராண்ட் வெட்டிங் பத்தி நியூஸ் சேனல்ஸ்ல பாத்தேன்! நாட் பேட்!! எங்க ராகவ் மாதிரி ஒரு புருஷன் கெடைப்பான்னு நீ கனவுல கூட நெனச்சிருக்க மாட்ட” என்று அவளை மட்டம் தட்ட அவந்திகா அதைப் பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
“சோட்டிமா! யூ ஆர் ரைட்! உங்க ராகவ் மாதிரி ஒருத்தன் எனக்குப் புருஷனா வரணும்னு நான் என்னைக்குமே நெனச்சதில்ல” என்று அழுத்திச் சொல்ல தாதி அதைக் கேட்டுச் சிரித்தார்.
“வாயாடி! என் பேரனைப் பாத்தா உனக்கு எப்பிடி தெரியுது?”
“உங்க பேரனைப் பாத்தா மைதா மாவுதான் நியாபகத்துக்கு வருது” என்றாள் கிண்டலாக.
அதைக் கேட்ட ராதிகா “இந்தப் பொண்ணுக்கு வாயைப் பாருங்க அக்கா! என் செல்லப் பையனை எப்பிடிக் கிண்டல் பண்ணுறா” என்று பொய்க்கோபத்துடன் பிரியாவிடம் முறையிட அவர் சிரித்தார்.
“மாமியாரே! நான் கிண்டல் பண்ணாம உங்க பையனை வேற யாரு கிண்டல் பண்ணப் போறாங்க? அவனே அதைக் கண்டுக்கல” என்று சாதாரணமாகக் கூறவும் அங்கிருந்த வீணாவுக்கு ராகவ் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து இந்த வீட்டில் தன்னுடைய ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிவிட்டானோ என்று தோன்றியது.
ராகவுடன் அவன் அறைக்குச் சென்ற கிஷோர் ராகவிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தான்.
கிஷோர் “பய்யா அவங்க புரியாம பேசுறாங்கனா நீங்களுமா? என்னால எப்பிடி டெலிகாம் பிசினஸைத் தனியா மேனேஜ் பண்ண முடியும்? இவ்ளோ நாள் நீங்க என்கூட இருந்தீங்க. இப்போ என்னைப் பாத்துக்கச் சொன்னா எப்பிடி?” என்று ஆதங்கத்துடன் கூற
“லிசன்! நீ ஒன்னும் தனியா இல்ல கிஷோர். வருண் பய்யா உனக்குக் கைட் பண்ணுவாரு. அண்ட் என்னோட ட்ரீம் பத்தி உனக்கே நல்லா தெரியும். சோ ப்ளீஸ் என்னைக் கம்பல் பண்ணாத! யூ கேன் டூ இட் மேன்” என்று ராகவ் அவனை ஒருவழியாகத் தன் முடிவுக்குச் சம்மதிக்க வைத்தான்.
அதே நேரம் அவனது அறைக்குள் நுழைந்தாள் அவந்திகா. கூடவே பிந்துவையும், நேஹாவையும் அழைத்துக்கொண்டு..
அவளைக் கண்ட ராகவ் “அவந்திகா! சாச்சிகிட்ட சண்டைலாம் போட்டு முடிச்சாச்சா” என்று கிண்டல் செய்ய கிஷோர் அதைக் கேட்டுச் சிரித்தான்.
அவனை முறைத்தவாறே தன்னுடைய உடைமைகளை அடுக்கத் தொடங்கிய அவந்திகா “உன்னோட சாச்சிகிட்ட சண்டை போடுறத விட்டா எனக்கு வேற வேலை இல்லை பாரு!” என்று சொல்லிவிட்டு ரெஃப்ரெஷ் ஆகச் சென்றுவிட்டாள்.
அவள் திரும்பி வரும்போது ராகவ் மட்டும் ஆபிஸ் ரூமில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவனைத் தொல்லை செய்யவேண்டாமென்று நினைத்தவள் தன்னுடைய லேப்டாப்பை எடுத்து நாளை நடக்கப் போகிற மீட்டிங்கிற்கான கான்ட்ராக்டை ஓப்பன் செய்து லீகல் டேர்ம்ஸைச் சரி பார்த்தாள்.
அவளுக்குத் திருப்திகரமாக இருக்கவே ரித்திமாவை அழைத்து விஷயத்தைக் கூறினாள். இருவரும் பேசிமுடிக்கும்போது இரவு வெகு நேரமாகிவிட்டது. டின்னருக்காகக் கீழே இறங்கி வந்தவள் அமைதியாக ராகவிற்கு அடுத்த நாற்காலியில் சென்று அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
தட்டில் இருந்த சப்பாத்தியைப் பார்த்ததும் அவள் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல மாறியது. அவள் முகமாற்றத்தைக் கண்ட வீணா “புது மருமகளுக்குச் சப்பாத்தி பிடிக்கல போல இருக்கு. அவளுக்கு ஏத்த மாதிரி எதாச்சும் பண்ணிக் குடுக்க வேண்டியதுதானே பிரியா” என்று சொல்ல அவந்திகாவுக்கு முதல்முறையாக வீணா மீது மரியாதை பிறந்தது.
ஆனால் அந்நேரம் பார்த்து ராகவ் “பட் அவ எப்போவுமே பிடிக்காத விஷயத்தைக் கூட ஈஸியா அக்செப்ட் பண்ணிப்பா சாச்சி. சோ டோண்ட் வொர்ரி அபவுட் ஹெர்” என்று சொல்லி வைக்க அவந்திகா வேறு வழியின்றி அதையே சாப்பிட வேண்டியதாயிற்று.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே வீணா ஏ.ஜி.எம் பற்றிப் பேச ஆரம்பிக்க கிஷோர் “நீங்க அதப் பத்திக் கவலைப்பட வேண்டாம். ஆல்ரெடி பய்யா எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டாரு” என்று அவரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டான்.
சாப்பிட்டு எழும்பியவர்கள் குட் நைட் சொல்லிவிட்டுத் தங்கள் அறைக்கு வர அவந்திகா முகத்தை உர்ரென்று வைத்திருப்பதைப் பார்த்த ராகவ் ‘இன்னைக்கு என்ன வினோதமா பண்ணி வைக்கப் போறாளோ’ என்று யோசித்துக்கொண்டே பெட்டில் சென்று அமர்ந்தான்.
கொஞ்சம் நேரம் கழித்து அவந்திகா “ராகவ்! உன்னோட சித்தியே பெரிய மனசு பண்ணி என்னை அந்தச் சப்பாத்திகிட்ட இருந்து காப்பாத்தினாலும் நீ விட மாட்ட போல” என்று கடுப்பாகக் கூறினாள்.
“அது நல்லாதான இருந்துச்சு! உனக்கு என்ன ப்ராப்ளம்?” என்ற ராகவை வினோதமாகப் பார்த்தவள் “எனக்குப் பிடிக்கல” என்றாள் முகத்தைச் சுளித்தபடி.
ஆனால் அவள் அருகில் அமர்ந்து “என்கூட சண்டை போடணுமா?” என்று ராகவ் தலையைச் சரித்துக் குறும்பாகக் கேட்க அவந்திகா அவனது அந்தப் பாவனையில் சிரித்துவிட்டாள்.
“இல்லையே” என்று சொல்லிவிட்டு அமைதியாகத் தூங்கச் செல்ல ராகவ் அவளை அமைதியாக இருக்க விடவில்லை. பின்னே அவள் அமைதியாகிவிட்டால் அவனுக்குப் பொழுது எப்படிப் போகும்?
“சோ இனிமே இந்தப் பில்லோ ப்ரிட்ஜ் மெத்தட்டை ஃபாலோ பண்ற ஐடியா உனக்கு இல்ல? அப்பிடிதானே?” என்று அவளைச் சீண்ட “ம்ம்” என்று ஒரு வார்த்தையில் பதிலளித்தாள் அவள்.
ராகவ் விடாமல் “ஸோ தூக்கக் கலக்கத்துல என்னோட கையோ காலோ உன் மேல பட்டா கூட நீ என்னை மன்னிச்சுடுவ? அப்பிடிதானே?” என்றபடி அவளைப் பார்க்க “ம்ம்.. யாராச்சும் வேணும்னு அப்பிடிப் பண்ணுவாங்களா?” என்றாள் அவந்திகா.
அதைக் கேட்ட ராகவ் “ஓகே! எப்பிடிப் பாத்தாலும் நீ குட் கேர்ளா ஆனதால நானும் ஒரு முடிவு பண்ணிருக்கேன்” என்று அமைதியாகச் சொல்ல “என்ன முடிவு?” என்று திரும்பிப் படுத்து அவனை ஆழ்ந்து அதே நேரத்தில் கூர்மையாகப் பார்த்தபடிக் கேட்டாள் அவந்திகா.
“2 டேய்ஸா நாம மார்னிங் எழுந்திருக்கும்போது ஹக் பண்ணிட்டுதான் இருக்கோம்., சோ நைட்டே ஹக் பண்ணிட்டுத் தூங்குனா என்ன?” என்று கேட்டுவிட்டு அவளையே குறுகுறுவென்று பார்த்தான் ராகவ்.
“என்னது?” என்று துள்ளி எழுந்தாள் அவந்திகா.
அவனைக் கொலைவெறியுடன் பார்த்தவள் “இங்க பாரு மைதா மாவு! உன்னோட விரல் நுனி என் மேல பட்டா கூட நீ காலி! என்ன நெனச்சிட்டிருக்க நீ?” என்று படபடவென்று பொரிய ஆரம்பிக்க அவனோ அவளைச் சாவகாசமாகப் பார்த்தபடியே புன்னகைத்தான்.
“ஃபைனலி ஜான்சி ராணி இன்னைக்கு டென்ஷன் ஆயிட்டா! ஐயாம் ஹாப்பி! இனிமே நான் நிம்மதியா தூங்குவேன். குட் நைட் மை டியர் வைஃப்” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடித் தூங்க ஆரம்பித்தான் ராகவ்.
அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்த அவந்திகா “இவனை” என்று தலையணையை எடுத்து அவனை அடிக்க முயல அவளது கண்கள் அவனது முகத்தைப் பார்த்ததும் தலையணையைத் தானே அவளது கைகள் கீழே போட்டது.
அப்படியே அமைதியாகத் தலையணையை வைத்துவிட்டு அவளும் தூங்க ஆரம்பித்தாள்.
மறுநாள் காலை அவந்திகா எழுந்தபோது வழக்கம் போல ராகவ் அங்கே இல்லை. அவள் குளித்து முடித்து ரெடியாகிக் கீழே வந்தவள் அதிசயமாகக் காபி போடலாம் என்று ஆர்வத்தில் கிச்சனுக்குள் சென்றாள்.
அங்கே மதிய சமையலுக்கு எடுத்து வைக்கப்பட்டிருந்த சிக்கனைக் கண்டதும் அதிர்ந்து பின்னே சென்றாள்.
“சே! பெருமாளே! காலங்காத்தால இதையா என் கண்ணுல காட்டுவ” என்று சொல்லிவிட்டு வெளியே வரும்போது செஃபைப் பார்த்தவள் “செஃப் எதுக்கு இன்னைக்குச் சிக்கன் எடுத்து வச்சிருக்கீங்க?” என்று கேட்டாள்.
“பட்டர் சிக்கன் சமைக்கிறதுக்கு மேம்”
“வாட்? யாரு சமைக்கச் சொன்னாங்க?”
“இது இந்த வீட்டோட ரொட்டீன் குக்கிங் ஷெட்யூல்., அதுபடி பாத்தா இன்னைக்கு லஞ்ச்கு பட்டர் சிக்கன் அண்ட்..” என்று அவர் அடுக்கத் துவங்க அவந்திகா தன் காதுகளைக் கைகளால் மூடிக்கொண்டாள்.
“பெருமாளே! வெள்ளிக்கிழமையும் அதுவுமா சிக்கனா? நல்ல குடும்பம்” என்று தமிழில் புலம்பக் கீழே இறங்கி வந்த ராகவை அவள் கவனிக்கவில்லை.
நேரே செஃபிடம் திரும்பியவள் “இங்க பாருங்க செஃப்! டு டே இஸ் ஃப்ரை டே., வெரி ஆஸ்பீஷியஸ் டூ. ஹவ் கேன் யூ குக் நான் வெஜ் ஆன் திஸ் டே? ஐ நெவர் அலோ யூ டு குக் திஸ் டுடே. அண்டர்ஸ்டாண்ட்?” என்று சொல்ல அவர் என்ன சொல்லவென்று ராகவைப் பார்க்க அவன் வாயில் விரலை வைத்துச் சைகை காட்ட அவர் சரியென்று தலையாட்டிவிட்டுக் கிச்சனுக்குள் சென்றார்.
“ஃபர்ஸ்ட் இந்த வீட்ல குக்கிங் ஷெட்யூல சேஞ்ச் பண்ணனும் அவந்திகா., முக்கியமா இனிமே இந்த வீட்ல நோ மோர் சப்பாத்தி” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டிருந்தாள்.
பின்னே நின்ற ராகவ் “இம்பாஸிபிள்” என்று அவள் காதருகில் சொல்லத் திடுக்கிட்டவள் தடுமாறி விழப் போனாள். அவளை விழாது தாங்கியவன் நேரே நிறுத்திவிட்டுச் சோஃபாவில் அமர்ந்தான்.
“என்ன இம்பாஸிபிள்? எனக்கு நான் வெஜ் சாப்பிட்டுப் பழக்கம் இல்ல.” என்றாள் அவந்திகா அவனை முறைத்தவாறே.
அவனோ சாதாரணமாக “சோ வாட்? யாரும் உன்னைச் சாப்பிடச் சொல்லிக் கம்பல் பண்ணலையே!” என்று சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டுச் சோஃபாவில் வசதியாகச் சாய்ந்துகொண்டான்.
அவந்திகா “பட் ஸ்மெல் வருமே?” என்று பரிதாபமாகக் கூற அவளைப் பார்த்த ராகவ் சிரித்தான்.
“உன்னால முடியலனா நீ பட்டினியா கூடப் போ ஜான்சி ராணி! அதுக்காகக் குக்கிங் ஷெட்யூல சேஞ்ச் பண்ண முடியாது” என்று உறுதியாகக் கூறிவிட்டுத் தனக்கு வந்த காபியை மிடறு மிடறாக ரசித்துக் குடித்தான்.
அவந்திகா அவனை முறைத்துவிட்டு வெளியே கிளம்ப ராகவ் “ஜான்சி ராணி நான் வேணா டிராப் பண்ணவா?” என்று கேட்டான்.
“அவசியம் இல்லடா! நானே போய்ப்பேன்” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல ராகவ் மீதமுள்ள காபியை அருந்த ஆரம்பித்தான்.
அவளது இந்தச் சிறுபிள்ளைத்தனமான கோபத்தால் இன்று நாள் மிகவும் அழகாகச் செல்வது போல அவனுக்குத் தோன்றியது. காலையிலேயே அவந்திகாவைக் கடுப்பாக்கிப் பார்த்த சந்தோஷத்துடன் அலுவலகம் சென்றான்.
அந்தச் சந்தோஷம் இன்னும் சில கணங்களில் மறையப் போகிறது என்பதை அறியாமல் இருவரும் அவரவர் உலகத்துக்குள் நுழைந்தனர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


