மறுநாள் காலை அலுவலகத்திற்கு ராகவ் சீக்கிரமாகவே கிஷோரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். குணாலும், மோகனும் மகனுடனே சென்றுவிட்டனர்.
அவந்திகாவும் தன்னுடைய அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள். கிளம்புகையில் தாதி “அவந்திகா! டிரைவரைக் கார் எடுக்கச் சொல்லிக் கார்லயே ஆபிஸ் போ. இது என்னோட ஆர்டர்” என்று கட்டளையிட அவந்திகா “பட் தாதி நான் பஸ்லயே போய்ப்பேன். அதுதான் ஜாலியா இருக்கும்” என்று கண்ணை மூடி ரசனையுடன் கூறினாள்.
அவளைப் பார்த்துச் சிரித்த தாதி சிரிப்பை அடக்கியபடியே முறைத்துவிட்டு “வீட்டுப் பெரிய மனுஷி சொன்னா கூட நீ கேக்க மாட்டியா? மருமகளா லட்சணமா ஒழுங்கா நா சொல்லுறத கேப்பியா? மாட்டியா?” என்று சொல்ல அவந்திகா “ஓகே! ஓகே! நான் கார்லயே போறேன். தயவு பண்ணி நீங்க சீரியல்ல வர்ற மாமியார் மாதிரி ஆக்ட் பண்ண ட்ரை பண்ணாதீங்க. உங்களுக்கு அது கொஞ்சம் கூட செட் ஆகாது தாதி” என்று சொல்லி அவரின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுச் சென்றாள்.
“சரியான வாயாடி” என்று அவளது பேச்சை நினைத்துச் சிரித்துவிட்டு ரெஸ்ட் எடுக்கச் சென்றார் சுமித்ரா.
அவர் சொன்னபடியே அன்று காரிலேயே அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள் அவந்திகா. அலுவலகத்தில் நுழையும்போதே ரித்திமா அங்கிருப்பது தெரிந்தது அவந்திகாவுக்கு.
பின்னாலேயே வந்து அவள் கண்களை மூடியவள் அமைதியாக நிற்க ரித்திமா “ஹனிபி ஐ நோ இட்ஸ் யூ! கையை எடுங்க மிஸ் அவந்திகா ரவி” என்று சொல்ல அவந்திகா கையை எடுத்துவிட்டு “உனக்கு ஒரு குட் நியூஸ்” என்று பிரகாசமான முகத்துடன் கூறினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“விஹான் அட்வர்டைசிங்கோட நெக்ஸ்ட் லான்சிங் கேம்பைன் ஈவன்ட்ட நாமதான் நடத்தப் போறோம்.,” என்று சொல்ல அவள் அவந்திகாவைப் பொருள் விளங்காமல் பார்த்தாள்.
அவளிடம் நேற்று இரவு நடந்ததைக் கூற அவள் அவந்திகாவை ஒரு மார்க்கமாகப் பார்த்துக்கொண்டே சிரிக்க அவந்திகா “ஏன்டி இப்போ பல்லக் காட்டுற?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.
சிரிப்பை நிறுத்திவிட்டு அவளையே குறுகுறுவென்று பார்த்த ரித்திமா “ஒன்னும் இல்ல. இப்போலாம் ராகவ் சொல்லுறத நீ கேக்குறதும், உனக்காக ராகவ் ஒவ்வொண்ணா செய்யுறதும் பாத்தா சம்திங்க் சம்திங்க்!” என்று கண் சிமிட்ட அவந்திகா அவளைக் கேலியாகப் பார்த்தாள்.
“ஏய்! அந்த மைதாமாவு அவனாலதான் என் கான்ட்ராக்ட் கேன்சல் ஆயிடுச்சுனு புரிஞ்சுகிட்டு இந்த டீல எனக்குக் குடுத்திருக்கான். அவ்ளோதான்! இதுல வேற எதுவும் இல்ல தாயே! பை த வே என்னோட மனசுல சூர்யாதான் இருக்காரு” என்று கண்ணில் கனவுடன் கூற இப்போது விழிப்பது ரித்திமாவின் முறையாயிற்று.
இதுவரை அவந்திகாவின் வாயிலிருந்து எந்த ஆண்மகனின் பெயரும் வந்து அவள் கேட்டதில்லை. திடீரென்று அவள் சூர்யா என்று யாரையோ குறிப்பிடத் திகைத்தாள் ரித்திமா.
“ஏய்! யாருடி அவன்? எங்ககிட்ட சொல்லவேயில்ல?” என்று ரித்திமா டென்ஷன் ஆகவும் அவந்திகா “கூல் ரித்தி! ஃபர்ஸ்ட் என்னோட சூர்யாவ அவன் இவன்னு சொல்லாத! எனக்கு அவரை மரியாதை இல்லாமப் பேசுனா பிடிக்காது” என்று சாதாரணமாகக் கூறினாள்.
ரித்திமா அதிர்ச்சியில் வாயைப் பிளக்க “போதும்! க்ளோஸ் பண்ணு! சூர்யாவை எனக்கு 2005ல இருந்து ரொம்ப பிடிக்கும்” என்று சொல்ல ரித்திமா “அது என்ன 2005ல இருந்து?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.
“அப்போதானே கஜினி மூவி ரிலீஸ் ஆச்சு. வாவ்! வாட் அ மேன்!” என்று சிலாகிக்க ரித்திமா “ஆக்டர் சூர்யாவயா சொன்ன நீ?” என்று கடுப்புடன் கேட்க ஆமாம் என்று தலையாட்டினாள்.
“அப்புறம் அயன் மூவி பாத்ததும் விழுந்துட்டேன்” என்று ரசனையுடன் கூற ரித்திமா “அஹான்” என்று பல்லைக் கடித்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“என்ன தேடுற ரித்தி?” என்ற அவந்திகாவைப் பார்த்து “இல்லடி இங்க டேபிள் வெயிட், கட்டை ஏதாச்சும் இருக்கானு தேடுறேன்” எனப் பதில் கூறினாள்.
“ஏன்டி?” என்றாள் அவந்திகா கலவரத்துடன்…
“உன் தலைல போடத்தான்” என்று ரித்திமா அவளைத் துரத்த அவந்திகா ஓடிக்கொண்டே “ரித்தி! நீ கோவத்துல என்னைக் கொன்னுட்டா அப்புறம் அந்த மைதா மாவு உன்னைச் சும்மா விட மாட்டான்” என்று கூறினாள்.
அவர்கள் இவ்வாறு ஓடிக்கொண்டிருக்கும்போது அவந்திகாவின் போன் அடித்தது.
ஓடுவதை நிறுத்திவிட்டு யாரென்று பார்த்தவள் ராகவின் பெயர் வந்ததும் இவன் எதுக்குக் கால் பண்ணுறான் என்று எண்ணியபடியே “ஹலோ” என்றாள்.
“மை டியர் ஜான்சி ராணி! நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கனு எனக்குத் தெரியாது, பட் அத அப்பிடியே விட்டுட்டு இப்போ என்னோட ஆபிஸுக்கு வா” என்று கட்டளையிட்டான் ராகவ்.
“வாட்? நீ கூப்பிட்ட உடனேலாம் வர முடியாது ராகவ். எங்களுக்கு நெறைய வேலை இருக்கு” என்றாள் அவந்திகா அமர்த்தலாக.
“இஸிட்? ஆக்சுவலி நான் கான்ட்ராக்ட்ல லீகல் பாயிண்ட்ஸ் ஆட் பண்ணுறப்போ நீ இருந்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன், இப்போ நீ வரமுடியாதுனு சொல்லுறதால நான் எனக்கு ஃபேவரா சில டேர்ம்ஸ் ஆட் பண்ணிக்கிறேன்” என்று அவன் சொல்லவும் அவள் இன்னும் அலட்சியமாகப் பேச ஆரம்பித்தாள்.
“ஆமா அப்பிடி என்ன ஆட் பண்ணுவ? நீ என்ன வேணா பண்ணிக்கோ., என்னால வர முடியாது” என்று தெனாவட்டாகச் சொல்ல ராகவ் அதைக் கேட்டு மனதில் சிரித்துக்கொண்டவன் “ஓகே. அப்போ ஃபர்ஸ்ட் டேர்ம் என்னன்னா இந்தக் கான்ட்ராக்ட் முடியுற வரைக்கும் நீ என்கூட என்னோட ஆபிஸ்லதான் இருக்கணும், சப்போஸ் இது சம்மந்தமா அவுட் ஸ்டேஷன் போனாலும் நீ என்கூட வரணும்” என்று கூலாகக் கூறினான்.
அதைக் கேட்டு ஷாக்கான அவந்திகா “வாட்? உன்கூட நான் 24 ஹவர்ஸ் இருக்கணுமா? நோ வே! அப்புறமா அவுட் ஸ்டேஷன் வேற வரணுமா? ஆல்ரெடி உன்கூட வந்து பட்டது பத்தாதா?” என்று அவசரமாக மறுத்தாள்.
“தென் கம் டு மை ஆபிஸ் அஸ் சூன் அஸ் பாஸிபிள்” என்று சொல்லிக் காலை கட் செய்தான்.
போனை முறைத்தபடியே வைத்த அவந்திகா ரித்திமாவிடம் விவரத்தைக் கூறி அவளையும் அழைத்துக்கொண்டு ராகவின் அலுவலகத்துக்குச் சென்றாள்.
உள்ளே நுழைந்ததும் ரீட்டாவின் சிரித்த முகத்தைப் பார்த்தபடியே அவளுக்கு குட் மார்னிங் சொன்ன அவந்திகா ரித்திமாவை அழைத்துக்கொண்டு இரண்டாவது தளத்துக்குச் சென்றாள்.
அங்கே ராகவின் கேபினுக்குள் நுழைந்தவர்களைக் கிஷோர் வரவேற்க அவந்திகா “ஹேய்! கிஷோர்! நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?” என்று சொல்லிவிட்டு அவனுக்கு ஹை-ஃபை கொடுத்தாள்.
அவளுக்குப் பதிலளித்தபடியே ரித்திமாவுக்குக் கை கொடுத்தவன் அவள் கை கொடுக்காமல் வணக்கம் சொல்வதைக் கண்டு அவந்திகாவிடம் “பாபி! உங்க ஃப்ரெண்ட் எப்போவுமே இப்பிடிதானா?” என்று கேட்டுவிட்டு ரித்திமாவைப் பார்த்துக் குறும்பாகப் புன்னகைத்தான்.
“அவ எப்போவுமே இப்பிடிதான் அப்நார்மலா பிஹேவ் பண்ணுவா. டோண்ட் டேக் இட் சீரியஸ்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே வந்த ராகவ் “உன்னை விடவா?” என்று கேட்டுக்கொண்டே தன் நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
அவந்திகா “என்னைக் கிண்டல் பண்ணச் சின்ன சான்ஸ் கெடச்சா கூட இவன் மிஸ் பண்ணவே மாட்டான்” என்று எண்ணியபடியே அவன் எதிர்ப்புற நாற்காலியில் அமர, ரித்திமாவும் கிஷோரும் அவள்கூடவே அமர்ந்தனர்.
அவந்திகாவின் முன் கான்ட்ராக்ட் பேப்பர்ஸ் அடங்கிய ஃபைலை வைக்கவும் அவந்திகா அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.
அதை வாசிக்கும்போதே அது முழுவதும் முடிக்கப்பட்டுக் கையெழுத்திடப்பட்டிருப்பதைப் பார்த்தவள் “இது எப்போ ரைட் அப் பண்ணுனீங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்க ராகவ் “ஜஸ்ட் டூ ஹவர்ஸ் பிஃபோர்” என்று நிதானமாகக் கூறினான்.
“அப்போ எதுக்கு மேன் லீகல் பாயிண்ட்ஸ் ஆட் பண்ணனும்னு சொல்லி என்னை இங்க வர வச்ச?”
“வேற ரீசன் சொன்னா நீதான் வர மாட்டியே மா” என்று கிண்டலாகக் கூறினான் ராகவ்.
அவனது பதிலால் கடுப்பான அவந்திகா “உன்னை அப்பிடியே” என்று சொல்லி அவன் கழுத்தை நெறிக்க வர ரித்திமா அவசரமாக “ஹனிபி என்ன பண்ணுற நீ?” என்று அவள் கையைப் பிடித்து அமர வைத்தாள்.
அவளிடமிருந்து ஃபைலை வாங்கிய கிஷோர் அதை வாசித்துக் காட்டினான்.
ஒரு பாயிண்ட் வரும்போது ஷாக் ஆன அவந்திகா “வாட்? ஹவ் இஸ் இட் பாஸிபிள்? என்னால முடியாது” என்று மறுத்தாள்.
“ஏன் பாஸிபிள் இல்ல? இந்தக் கான்ட்ராக்ட் முடியுற வரைக்கும் நீ என்கூட என்னோட ஆபிஸ்லதான் இருக்கணும். அப்போதான் என்னோட வியூஸ நான் ஷேர் பண்ணிக்க முடியும்” என்றான் ராகவ் பிடிவாதமாக.
“அதுக்கு நான் எதுக்கு? கிரியேட்டிவ் வொர்க் எல்லாமே ரித்திதான் பாத்துப்பா” என்று சொல்லிவிட்டு ரித்திமாவைப் பார்த்துக் கண் காட்டினாள்.
அதைக் கவனித்த ராகவ் “சோ வாட்? எக்ஸிகியூட் பண்ணப் போறது நீதான? சோ நீ என்கூடதான் இருக்கணும். அண்ட் திஸ் இஸ் ஃபைனல்” என்று உறுதியாகக் கூறினான்.
அவந்திகா யோசிக்கவே அவளைக் கேலி செய்வதற்காக “நீ ஏன் இவ்ளோ யோசிக்கிற ஜான்சி ராணி? எங்க என்கூடவே இருந்தா என் மேல அட்ராக்ஷன் வந்திரும்னு பயமா இருக்கா உனக்கு?” என்று கேட்க அவந்திகா அவள் தோளின் மேல் இல்லாத தூசியைத் தட்டிவிட்டு “இந்தக் கொசு தொல்லை தாங்கலப்பா” என்று அவனைப் பார்த்து முகம் சுளித்தாள்.
“ஆமா நீ பெரிய சூர்யா, நான் உன்னைப் பாத்து அப்பிடியே ஃப்ளாட் ஆகுறதுக்கு! ஏதோ கொஞ்சம் மைதாமாவு கலர்ல இருக்க, அதுக்கு இவ்ளோ பில்டப்பா? மூணு வேளையும் காம்ப்ளான் குடிச்சே உயிர் வாழுவ போல, லேம்ப் போஸ்ட் மாதிரி இவ்ளோ ஹைட்டு வேற. இதுல இவரப் பாத்து நான் அட்ராக்ட் ஆயிடுவேனாம்” என்று கடுப்புடன் அதே நேரம் கிண்டலாகச் சொல்ல அந்த அறையிலிருந்த அனைவரும் சிரித்தனர்.
ராகவ் சிரிப்பை நிறுத்திவிட்டு “ஹூ இஸ் தட் சூர்யா?” என்று கூரிய பார்வையுடன் கேட்க ரித்திமா “அவ ஆக்டர் சூர்யா பத்திப் பேசுறா ராகவ் சார். அவ அவரோட தீவிர ஃபேன்” என்று சொல்ல ராகவ் முகம் சாதாரணமானது.
சில மணிநேரங்களுக்குப் பிறகு அவந்திகா ஒரு வழியாகச் சம்மதித்தாள். அனைவருக்கும் அதுவே பெரிய விஷயம் என்று தோன்றியது.
ரித்திமா ராகவிடம் அவர்கள் எப்போது வேலையை ஆரம்பிப்பது என்பது பற்றி ஆலோசிக்கக் கிஷோர் அவந்திகாவிடம் தன்னுடைய ஸ்டாக் லிஸ்டில் உள்ள அனைத்து ஜோக்குகளையும் கூறிச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
ரித்திமாவிடம் உரையாடும்போதே ராகவின் கண்கள் அவந்திகாவைத் தொட்டுத் தொட்டு மீள ரித்திமா சிரித்துக்கொண்டாள். அவளிடம் எல்லாவற்றையும் விளக்கியவன் அவளுக்குக் கை கொடுக்கவே ரித்திமாவும் கைகுலுக்கினாள்.
நேரே அவந்திகாவிடம் வந்தவன் “நீ வொர்க் டைம்லயும் இப்பிடி ஜோக் பண்ணிட்டு இருந்தா அதை நான் உன் பேமண்ட்லதான் டிடக்ட் பண்ணுவேன் ஜான்சி ராணி” என்று சொல்ல அவனைப் பார்த்த அவந்திகா “அப்பிடி ஒரு நாளும் நடக்காது” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.
“எதுக்கும் நீ எல்லா விஷயத்துக்கும் ஆல்டர்நேடிவ் ரெடி பண்ணி வச்சுக்கோ அவந்திகா” என்றான் அவன் கேலி நிறைந்த குரலில்.
“எதுக்கு?” என்றவாறு திரும்பினாள் அவள்.
“சப்போஸ் சங்கீத் ஃபங்க்ஷன் அரேஞ்ச்மெண்ட்ல வந்த மாதிரி சடன்னா இதுலயும் சேஞ்சஸ் வரலாம்” என்று ராகவ் இழுக்கவும் கடுப்பானாள்.
“இங்க பாரு” என்று அவன் முன் ஆட்காட்டி விரலை நீட்ட அதைப் பிடித்தவன் “நான் உன்கிட்ட ஆல்ரெடி சொல்லிருக்கேன் என் முன்னாடி விரல நீட்டிப் பேசாதனு, மறந்துட்டியா பேபி?” என்று கிண்டல் செய்யவும் அவனிடமிருந்து கஷ்டப்பட்டுத் தன் விரலைப் பிடுங்கிக்கொண்டாள் அவந்திகா.
பின் புன்னகைத்துக்கொண்டே “வெல்கம் டு விஹான்” என்று இரு கையையும் விரிக்க அவந்திகா குழம்பினாள்.
அவளது செயலைக் கண்டு அழகாகச் சிரிக்கத் தொடங்கியவனைப் பார்த்துத் தானும் முறுவலிக்கத் தொடங்கினாள் அவந்திகா. சிரித்துக்கொண்டே அவனது கையைக் குலுக்கியவள் “தேங்க்யூ” என்று சொல்ல ராகவ் காதில் கை வைத்துக் கேட்கவில்லை என்று சைகை காண்பித்தான்.
சத்தமாக “தேங்க்யூ ஃபார் எவ்ரிதிங்” என்று சொல்ல ராகவ் அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தவாறு “இட்ஸ் மை ப்ளெஷர்” என்று கூறிக்கொண்டே சிரித்தான்.
அந்தச் சிரிப்பில் எப்போதும் போலத் தொலையத் தொடங்கியவளைப் பார்த்த கிஷோர் இருவரையும் ரித்திமாவிடம் காண்பித்தவாறே வெளியே செல்ல அவனைத் தொடர்ந்து ரித்திமாவும் வெளியேறினாள்.
“அவந்திகா வந்த வேலையை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்க” என்று அவளது மனசாட்சி கூப்பிடவும் சுய நினைவுக்கு வந்தவள் கிஷோரையும் ரித்திமாவையும் எங்கே என்று கேட்க ராகவ் “நம்ம ரொமான்ஸ் பண்றோம்னு நெனச்சிட்டு எப்போவோ வெளியே போய்ட்டாங்க” என்று கிண்டலாகக் கூறினான்.
“வாட் த ஹெல்? ரொமான்ஸ்? நான் அதுவும் உன்கூட?” என்று அவள் கிண்டலாகப் பதிலளிக்க ராகவ் “ஏன்? எனக்கு என்ன கொறச்சல் ஜான்சி ராணி?” என்று கேட்டபடியே அவள் அருகில் வர அவனது நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவள் “நல்லாக் கேட்டுக்கோ. நீ எப்போவுமே என்னை விட்டுத் கொஞ்சம் தள்ளியே இரு” என்று எச்சரித்தாள்.
அவளது கையைப் பிடித்துக்கொண்டவன் இன்னும் நெருங்கவே அவள் ஒன்றும் செய்யத் தோணாமல் சிலையாக நின்றாள்.
சில மில்லிமீட்டர் இடைவெளியில் இருந்த அவளது கண்கள் அவனை ஏதோ செய்ய அவனது பார்வை அதை விட்டுவிட்டு அவளது சிறிய ஸ்ட்ராபெர்ரி இதழ்களை நோக்க அவனது மூளை அந்நேரத்தில் விழித்துக்கொண்டு “ராகவ் டோண்ட் கிராஸ் யுவர் லிமிட். அப்புறம் அதுக்கும் இன்னொரு யுத்தம் நடக்கும் இந்த ஜான்சி ராணி கூட. பீ கேர்ஃபுல்” என்று அறிவுறுத்த அவளின் கன்னத்தைத் தட்டிவிட்டு விலகினான்.
அவந்திகா அவனை விழிவிரித்துப் பார்க்க அவனது அக்மார்க் புன்னகை அவனது இதழில் விரிந்தது. அதை ரசித்த அவந்திகா “இப்பிடிச் சிரிச்சே என்னை யோசிக்க விடாம பண்ணுறியேடா” என்று மனதிற்குள் நினைத்தவள் “ஓகே! நான் கெளம்புறேன்” என்று சொல்லிப் புன்னகைத்துக்கொண்டே வெளியேறினாள்.
அந்தப் புன்னகை அவளது அலுவலகத்துக்குத் திரும்பி வரும் வரை அவளது இதழில் நிலைத்திருந்தது. இந்த நினைவுகளோடு அவர்களின் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு வந்தனர் இருவரும்.
அடுத்து வந்த நாட்களில் ரித்திமா அடிக்கடி வேலை விஷயமாக விஹான் டெலிகாம் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால் கிஷோரும் அவளும் நன்கு பேசிப் பழக ஆரம்பித்திருந்தனர்.
அவந்திகா சன் டியூவில் உஷாவின் திருமணத்திற்கான செலவுகளைக் கம்ப்யூட்டரில் ஏற்றும் வேலையைச் செய்ததால் அவளால் அங்கிருந்து நகர இயலவில்லை.
ராகவ் ரித்திமாவுடனும், அவந்திகாவுடனும் கான்ட்ராக்ட் பற்றிப் பேசிவிட்டு அன்று மாலை மும்பை சென்றவன் இன்னும் பெங்களூரு திரும்பவில்லை. விஹான் அட்வர்டைசிங் சம்மந்தமான வேலைகளில் பிஸியானவன் பொறுப்பைக் கிஷோரிடம் ஒப்படைத்துவிட்டு முழுமையாகப் புது வேலைகளில் மூழ்கினான்.
அவந்திகா ஒருவாறு அந்த வீட்டில் செட்டாக ஆரம்பித்தாள். காலையில் எழுந்ததும் யோகா செய்வதாகக் கூறி குணாலுடனும், மோகனுடனும் அரட்டையடிப்பாள். பின்னர் சுமித்ராவுடன் சேர்ந்து பூஜையறையில் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டிருப்பாள்.
பின்னர் அலுவலகம் சென்றுவிட்டுத் திரும்புபவள் மாமியார்களிடம் அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டுத் தூங்கச் செல்வாள்.
ஞாயிற்றுக்கிழமை என்றால் ஏதாவது சொல்லிக் கிச்சனில் செஃபை வேலை வாங்கிக்கொண்டு பாத்திரங்களை உருட்டுவாள். அதுபோக போர் அடித்தால் இருக்கவே இருக்கிறார் வீணா, அவருடன் ஏதாவது வாக்குவாதம் செய்வாள். இவ்வாறு ராகவ் என்ற ஒருவன் இருந்தாலும் இல்லையென்றாலும் அவனுடைய நினைவு இன்றி அவள் மகிழ்ச்சியாகவே அந்த வீட்டில் சுற்றி வந்தாள்.
ராகவுக்குமே வேலையில் கவனம் இருந்ததால் அவளைப் பற்றிப் பெரிதாக நினைக்கவில்லை. இந்த நிலையில் ஹனிமூன் சென்றிருந்த பிரதியுஷாவும் வருணும் இந்தியா திரும்பினர்.
உஷா வீடு திரும்பியதும் முதலில் அவந்திகாவைத்தான் தேடினாள். அவளைக் காணாமல் ராதிகாவிடம் கேட்க அவர் அவள் காலையிலேயே சன் டியூவுக்குச் சென்றதாகக் கூற வருணிடம் சொல்லிக்கொண்டு அவளும் கிளம்பினாள்.
அலுவலக அறையில் அவந்திகா சின்சியராக வேலை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அமைதியாக உள்ளே வந்தவள் பின்னாலிருந்து அவந்திகாவின் கன்னத்தைக் கிள்ளப் பதறிய அவந்திகா “ஏய்! மைதாமாவு உனக்கு இதே வேலையாப் போச்சு!” என்று சொல்லிவிட்டுத் திரும்ப அங்கே நின்ற உஷாவைக் கண்டதும் “உஷா நீயா?” என்று கேட்டாள் அசட்டுப் புன்னகையுடன்.
“நான்தான். நீ யாருனு நெனைச்ச?” என்று கேட்டுவிட்டுக் கைகட்டி அவளையே குறுகுறுவென்று பார்க்க உஷாவைப் பார்த்து அசடு வழிந்தவள் “யாரையும் நெனைக்கலையே” என்று சமாளிக்க உஷா அவளைப் பார்த்த பார்வையே அவளை நம்பவில்லை என்பது தெரிந்தது.
“அது யாரு மைதாமாவு? அவங்க இந்த வேலைய ரொட்டீனா பண்ணுறாங்க போல, கன்னத்தைக் கிள்ளினாலே அவங்க நியாபகம் வருது உனக்கு?” என்று உஷா கேட்க “உஷா அது அந்த ராகவ்கு நான் வச்ச நிக்நேம்” என்று சொல்ல உஷா “அப்போ ராகவ்தான் உன்னோட கன்னத்தைக் கிள்ளிருக்காரு போல” என்றாள் கிண்டலுடன்.
“வாட்? அவனுக்கு அவ்ளோ தைரியம் கெடையாது. பட் இன்னைக்கு மார்னிங் என்னோட ட்ரீம்ல சேம் சீன் வந்துச்சா அதான் அவன் திரும்ப வந்துட்டானோனு நெனச்சேன்” என்றாள் அவந்திகா சாதாரணமாக.
“அஹான்! சோ நீ பிரதர் இன் லாவ ரொம்ப மிஸ் பண்ணுற” என்று கேலி செய்தாள் உஷா.
“ஐயோ! அப்பிடிலாம் இல்ல, உண்மைய சொல்லணும்னா அவன் தொந்தரவு இல்லாம நான் நிம்மதியா தூங்குறேன்” என்று அவந்திகா பதறியபடி சொல்லவும் உஷா கண் சிமிட்டி “ஓ உன்னைத் தொல்லை வேற பண்ணுறாரா? சொல்லவே இல்ல” என்று கேலி பண்ண அவந்திகா “நீ வேற என்னைப் ரொம்ப டார்ச்சர் பண்றியேம்மா” என்று எண்ணிக்கொண்டே அமர்ந்தாள்.
“ஏய் எதுக்கெடுத்தாலும் டபுள் மீனிங்கா? போடி, எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லிக் கீபோர்டைத் தட்ட ஆரம்பித்தாள்.
அவள் அருகில் அமர்ந்து அவளது முகத்தைப் பார்த்த உஷா “ஹனிபி, நீ ஹாப்பியாதான இருக்க? ஐ மீன் உனக்கும் ராகவ்கும் எதும் பிரச்சனை இல்லையே” என்று கவலையுடன் கேட்க அவந்திகா தலையாட்டி மறுத்தாள்.
“ச்சே ச்சே! எனக்கும் அவனுக்கும் இடையில ஒரு பிரச்சனையும் இல்ல. பட் என்னோட பிராப்ளமே அவன்தான்” என்றாள் யோசனையாக.
“வாட்? ஏன்டி ராகவ் உன்னை ஏதும் சொன்னாரா?” என்றாள் உஷா பதற்றத்துடன்.
அதை மறுத்துத் தலையாட்டிய அவந்திகா “நோ நோ! சொன்னாதான் பரவாயில்லயே! அவன் சிரிச்சே என்னைச் சாகடிக்கிறான் உஷா” என்று சொல்ல “நீ சொல்றது புரியலடி” என்று புரியாமல் விழித்தாள் உஷா.
“இது கூடப் புரியாம நீயெல்லாம் என்ன லவ் மேரேஜ் பண்ணுனியோ?” என்று தலையில் அடித்தவள் “அவனோட சிரிப்பப் பாத்தாலே எல்லாமே மறந்து போயிடுது உஷா” என்று சொல்லவும் உஷாவுக்குச் சிரிப்பு வந்தது.
“ஹனிபி, ரொம்ப யோசிக்காத! இனிமே ராகவ் சிரிக்கிறப்போ நீ முகத்தத் திருப்பிக்கோ. பிராப்ளம் சால்வ்ட்” என்று சொல்லவும் அவந்திகா சரியென்று தலையாட்டினாள்.
அதே நேரம் மும்பையில் சுக்லா குரூப் ஆஃப் கம்பெனிஸ் அலுவலகத்தில் இருந்தான் ராகவ்.
“சார் இந்த டாக்குமென்ட்ல உங்க சைன் வேணும்” என்று கேட்டபடியே நின்ற நேனா சுக்லாவின் செகரட்டரியிடம் கையெழுத்துப் போட்டு அனுப்பியவன் அவள் வெளியே போகத் திரும்பியதும் “எக்ஸ்கியூஸ் மீ” என்று சொல்ல அவளோ தன் வாய்க்குள்ளேயே “பெருமாளே இப்போ எதுக்கு இவர் கூப்பிடுறாரு” என்று தமிழில் முணுமுணுக்க ராகவ் “நீங்க தமிழா?” என்று கேட்டான்.
“யெஸ் சார்” என்று சொல்லவும் அவளை அனுப்பி வைத்தவனின் மனம் அவந்திகாவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது.
நேனா வந்து அவனை அழைத்ததும் கவனம் கலைந்தவன் அவளிடம் கான்ட்ராக்ட் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே தடுமாற நேனா “என்னாச்சு டியூட்? வைஃப் நியாபகமா?” என்று கேலி செய்தாள்.
தொடர்ந்து “காலேஜ் டேஸ்ல உனக்குப் ப்ரபோஸ் பண்ணுன எத்தனை கேர்ள்ஸ நீ அவாய்ட் பண்ண? இப்போ அதுக்குலாம் சேத்து வச்சு உன்னோட வைஃப் உன்னைப் படுத்துறாங்க போல?” என்று கிண்டலடித்தாள்.
“நேனா! ப்ளீஸ்யார், அவ ரொம்ப வியர்ட் டைப். ஏதாச்சும் வினோதமா பண்ணிட்டே இருப்பா. அவளைச் சமாளிக்கவே நான் ஏதாச்சும் ஸ்பெஷல் கோர்ஸ் பண்ணணும் போல” என்று சலித்துக்கொண்டான் ராகவ்.
“உனக்கு அவங்களைப் பிடிச்சிருக்கா?” என்று நேனா குறும்பாகப் பார்த்தபடிக் கேட்க ராகவ் “ம்ம்ம், யோசிக்க வேண்டிய விஷயம்தான். பட் ஐ டோன்ட் நோ! எனக்கு அவளைப் பிடிக்கும்னு நான் நெனைக்கிறப்போ அவ ஏதாச்சும் பண்ணி என்னைத் டென்ஷன் ஆக்கிடுறா. பிடிக்காதுனு கோவமா இருந்தா ஏதாச்சும் கியூட்டா பண்ணி என்னோட ப்ரைன ஆஃப் பண்ணி வச்சிடுவா” என்றான் ரசனையுடன்.
“இன்ட்ரஸ்டிங்” என்று நேனா வாய்விட்டுப் பாராட்ட ராகவ் “இன்ட்ரஸ்டிங் மட்டும் இல்ல. ஷீ இஸ் சோ அடோரபிள் யூ நோ. ரொம்ப இண்டலிஜெண்ட். எந்த மாதிரி சிச்சுவேஷனையும் சமாளிச்சிடுவா. ஆனா என்னைப் போலவே ரொம்பக் கோவப்படுறதால ரெண்டு பேரும் கோவமா இருக்கிறப்போ யாரும் விட்டுகுடுத்துப் போக மாட்டோம்” என்று இருவரின் பொதுவான பிரச்சனையைக் கூறினான் ராகவ்.
நேனா அதை ஒதுக்கியவள் “கம் ஆன் ராகவ்! டூ யூ லைக் ஹெர்?” என்று கேட்க “கொஞ்சம் பிடிக்கும். நான் ஏதாச்சும் சொன்னாப் புரியாம முழிக்கிறப்போ, தென் ஏதாச்சும் வினோதமா பண்ணி என்கிட்ட மாட்டுறப்போ, கன்னத்துல டிம்பிள் விழுற மாதிரி ஸ்மைல் பண்றப்போ, இந்த மாதிரி சில நேரம் அவள ரொம்பப் பிடிக்கும்” என்று அவன் தெளிவாகச் சொல்ல “ஃபைனலி உன்னையும் பொலம்ப வைக்க ஒரு ஆள் இருக்காங்கனு நெனைக்கிறப்போ ஐயாம் ஹாப்பி” என்று அவள் சொல்லிச் சிரிக்கவும் ராகவ் அழகாக முறுவலித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டாலும் அவன் பெங்களூரு திரும்பும் நாளுக்காக இருவருமே காத்திருந்தனர்..
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


