Header Image

 

அத்தியாயம் 15

ரிசப்ஷனில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள் அவந்திகா. அவளுக்குக் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ‘ரித்துவக் கூட்டிட்டு வந்திருக்கலாம் போல’ என்று நூறாவது முறையாக நினைத்தவளை “மிஸ் அவந்திகா ரவி., ப்ளீஸ் வாங்க” என்று அழைத்தாள் ஒரு இளம்பெண். எம்.டியின் செகரட்டரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவள் அவந்திகாவை இரண்டாவது தளத்திலிருந்த எம்.டியின் கேபினுக்கு அழைத்துச் சென்றாள்.

கேபினுக்குள் நுழைந்தவளை “ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்று சொல்லி அமரவைத்துவிட்டுச் சென்றாள். எம்.டியின் நாற்காலிக்குப் பின் மெஹ்ரா குரூப் என்ற வார்த்தை வெள்ளி எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது.

“வெல்கம் மிஸ் அவந்திகா ரவி” என்ற குரலில் திரும்பியவள் அங்கே நின்றுகொண்டிருந்தவனைப் பார்த்ததும் சிரித்த முகத்துடன் “ஹலோ சார்” என்று சொல்லிக் கைகுலுக்கினாள்.

“ப்ளீஸ் சிட் டவுன்.,” என்று சொல்லித் தானும் தன்னுடைய நாற்காலியில் அமர்ந்தான் அவன்.

“ஐயாம் சிராஜ் மெஹ்ரா. மேனேஜிங் டைரக்டர் ஆஃப் திஸ் கன்ஸர்ன்” என்று சொல்ல அவந்திகா “கிளாட் டு மீட் யூ சார்” என்று சொல்ல அவர்கள் கான்ட்ராக்ட் விதிமுறைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

அவந்திகாவின் கவனம் முழுவதும் வரப்போகிற நிகழ்வைப் பற்றி இருக்க சிராஜோ தான் போட்ட திட்டத்தின் முதல் படியில் ஏறிவிட்டதாகக் கர்வப்பட்டுக்கொண்டான். விவேக் மூலமாக அவந்திகாவின் போட்டோவை ராகவிற்கு அனுப்பியவன் இதைப் பார்த்ததும் அவன் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்று மனதிற்குள்ளேயே கற்பனை செய்து பார்த்தபடியே அவந்திகாவின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தான்.

PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

எல்லா விஷயங்களும் இருவருக்கும் திருப்திகரமாக இருந்ததால் அவந்திகா கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டாள். அவனிடம் அந்தக் கோப்புகளை ஒப்படைக்கும்போது கதவு வேகமாகத் திறக்கும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தவள் அங்கே நின்ற ராகவைப் பார்த்ததும் திகைத்தாள்.

“ராகவ்” என்று சிராஜும் அவளும் ஒரே குரலில் சொல்லிக்கொண்டு எழும்பவும் அவர்கள் அருகில் வந்தவன் அவந்திகாவின் கையிலிருந்த கோப்புகளைப் பிடுங்கிப் பார்வையிட அவந்திகா அழுத்தமான குரலில் “ராகவ்! வாட் ஆர் யூ டூயிங் ஹியர் மேன்? எதுவா இருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம்., ப்ளீஸ்” என்று கூறினாள்.

அவளைக் கூர்மையாகப் பார்த்தபடியே “நீ சொன்ன கார்ப்பரேட் கான்ட்ராக்ட் இதுதானா?” என்று கேட்க அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்.

“அப்போ இந்தக் கான்ட்ராக்ட் உனக்குக் கெடைக்கலனு நெனச்சுக்கோ. பிகாஸ் நீ இந்தக் கன்ஸர்னோட சேந்து ஒர்க் பண்ணப் போறதில்ல” என்று சொல்லவும் அவந்திகா அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க சிராஜோ தெனாவட்டாகப் பார்த்தான்.

“லிசன் மிஸ்டர் ராகவ் கபூர்! உங்க வைஃப் அந்த அக்ரிமென்ட்ல சைன் பண்ணிருக்காங்க! அதை மறந்துட்டுப் பேசாதீங்க” என்று கேலி செய்யவும் சிரித்த ராகவ் “இதுலதான” என்று சொல்லிவிட்டு அந்தக் கோப்பிலிருந்த தாள்களை உருவிக் கிழித்தான்.

அவந்திகா பதறிப்போய் “ராகவ் என்ன பண்ணுற நீ? அது எவ்ளோ இம்பார்டெண்ட் தெரியுமா?” என்று சொல்ல அவளைப் பார்த்து “ஐ டோன்ட் நோ மை டியர் வைஃப்., பட் எனக்கு அதைவிட நீ முக்கியம்” என்று கண் சிமிட்ட அவள் இவன் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறான் என்று விழித்தாள்.

அவளைத் தோளோடு அணைத்தவன் “நீ ஒரு ரெண்டு நிமிஷம் வெளியே குட் கேர்ளா வெயிட் பண்ணு. நான் சார்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்திடுறேன்., ஜஸ்ட் டூ மினிட்ஸ்” என்று கதவைத் திறந்து அவளை வெளியே அனுப்பியவன் கோபத்தோடு சிராஜிடம் திரும்பி “திஸ் மஸ்ட் பி த லாஸ்ட் டைம். நெக்ஸ்ட் உனக்கு நான் வார்னிங்லாம் குடுக்க மாட்டேன். பீ கேர்ஃபுல்” என்று எச்சரித்துவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்தான்.

வெளியே வந்தவன் “லெட்ஸ் கோ” என்று அவந்திகாவின் கையைப் பிடிக்க கேபினிலிருந்து வந்த சிராஜ் “ராகவ் இதுக்காக நான் இந்த அவந்திகா ரவி மேல ப்ரீச் ஆஃப் கான்ட்ராக்ட்னு கேஸ் ஃபைல் பண்ண வேண்டியிருக்கும்” என்று கோபத்துடன் கத்தினான்.

அவனைப் பார்த்து “உஸ்ஸ்! ஏன் கத்துற? எனக்குக் காது நல்லாவே கேட்கும் மேன்! எந்தப் பாயிண்ட்ல இத நீ ப்ரீச் ஆஃப் கான்ட்ராக்ட்னு சொல்லுவ? அப்பிடியே கேஸ் ஃபைல் பண்ணாலும் மிஞ்சி மிஞ்சிப் போனா பெனால்ட்டி பே பண்ணச் சொல்லுவாங்களா? வீ கேன் பே தட் ஃபார் ஹெர். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு அவந்திகாவைத் தோளோடு அணைத்தவன் “ஷீ இஸ் அவந்திகா கபூர். ஃபர்ஸ்ட் அவ நேம ஒழுங்கா சொல்லு! அப்புறமா கேஸ் ஃபைல் பண்ணிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவளோடு சென்றுவிட்டான்.

சிராஜ் கத்திய சத்தம் அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்த பிறகும் அவந்திகாவின் காதில் தெளிவாகக் கேட்டது.

ராகவும் அவந்திகாவும் அமைதியாக வீட்டுக்கு வந்தவர்கள் அதே அமைதியுடன் அவர்கள் அறைக்குச் செல்ல உள்ளே நுழைந்ததும் அவந்திகா “யாரைக் கேட்டு நீ இப்பிடிலாம் பண்ணிட்டு இருக்க ராகவ்? இது எங்க ஃபர்ம் சம்மந்தப்பட்டது. இதுல தலையிட உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல” என்று கடுப்புடன் கூறிவிட்டு அவனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“ஐ நோ தட். பட் உன்னை அவன்கிட்ட இருந்து சேஃப்கார்ட் பண்ண எனக்கு வேற வழி தெரியல” என்று அவன் அவனுடைய பக்கத்து நியாயத்தைத் தெளிவாகக் கூறினான்.

ஆனால் அவந்திகாவுக்கு இன்னும் விஷயம் முழுவதுமாகப் புரியாததால் “நீங்க ரெண்டு பேரும் பிசினஸ் ரைவல்னா அது உங்க ரெண்டு பேர் சம்மந்தப்பட்டது. அதுக்கு ஏன்டா எங்க டீலை உள்ளே புகுந்து கொழப்பி வச்ச?” என்று விடாமல் சண்டை போட ஆரம்பித்தாள்.

“இந்த டீலே ஒரு சீட்டிங்னு சொல்றேன்., புரியலையா உனக்கு?” பதிலுக்கு அவனும் கடுகடுக்க அவந்திகா தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிடவும் அவனுக்குப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது.

இந்தக் கான்ட்ராக்ட் கிடைத்ததற்கு அவள் குதூகலித்தது அவன் கண் முன் வந்து செல்ல, அவளின் ஏமாற்றம் நிறைந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க ராகவுக்குச் சிராஜ் மீது கொலைவெறியே வந்தது.

அவளை இப்படிப் பார்க்க முடியாமல் அவனது அலுவலகத்துக்குச் சென்றவன் அங்கே ஏ.ஜி.எம் வேலைகளில் மூழ்கியதால் அவந்திகாவை மறந்தான்….

இரவு ராகவ் வீடு திரும்பும்போது அங்கே வீணா மட்டும் இருக்க மற்றவர்கள் எல்லாரும் மதியமே கௌசல்யாவைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றதாகவும் வீணா கூறவே அதைக் கேட்ட ராகவ் தன் அறைக்குச் சென்றான்.

அறை இருளில் மூழ்கிக் கிடக்க விளக்கைப் போட்டான்.

உள்ளே சென்றவன் சோஃபாவில் படுத்திருந்த அவந்திகாவை இவள் ஏன் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டே ஃப்ரெஷ் ஆகச் சென்றான்.

அவன் திரும்பி வரும்போதும் அவள் அங்கேயே படுத்திருக்க அமைதியாக அவளைப் பார்த்தபடியே கீழே டின்னர் சாப்பிடச் சென்றவன் அப்போது அனைவரும் வந்திருக்கவே பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

கிஷோரையும் வீணாவையும் அழைத்து “விஹான் டெலிகாம்” கம்பெனிக்கான ஏ.ஜி.எம் பேப்பர்ஸைக் காண்பித்தவன் தான் மேனேஜிங் டைரக்டர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அதற்குப் பதிலாகக் கிஷோரை வழிமொழிவதாகவும் கூறினான்.

கிஷோர் ஏதோ சொல்லவர அவனைத் தடுத்த வீணா “நீ நல்ல காரியம்தான் செஞ்சிருக்க ராகவ். நான் உனக்குச் சப்போர்ட் பண்ணுவேன்” என்று கூறவும் ராகவ் அவரை அணைத்துக்கொண்டான்.

கிஷோர் “பய்யா அப்போ நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என்று கவலையுடன் கேட்க ராகவின் முகம் பிரகாசமானது.

“விஹான் அட்வர்டைசிங் என்னோட கன்ட்ரோல்ல வரப் போகுது கிஷோர்” என்று சொல்ல கிஷோர் “பட் பய்யா அது நாம நெனைக்குற லெவலுக்கு ப்ராஃபிட் குடுக்குற கம்பெனி இல்ல” என்று கூறினான்.

“சோ வாட்? எதையும் ஜீரோல இருந்து ஆரம்பிச்சாதான் அதுல ஜெயிக்கிறப்போ மனசுக்குச் சந்தோஷம் வரும் கிஷோர்” என்று சொல்லிவிட்டு இருவரையும் தூங்கப் போகச் சொல்லிவிட்டு அவனும் அறைக்குத் திரும்பினான்.

அவந்திகா இன்னும் எழும்பாமல் அங்கேயே படுத்திருக்க முதல் முறையாக அவனுக்குச் சந்தேகம் வந்தது.

அருகில் சென்றவன் அவளை எப்படி எழுப்புவது என்று ஒரு நிமிடம் தயங்கி நின்றான். பின் அவளது தோளில் தட்டி “அவந்திகா! பெட்ல வந்து படுத்துக்கோ” என்று எழுப்பச் சத்தமே வரவில்லை அவளிடமிருந்து.

பதறியவன் இன்னும் இரண்டு மூன்று முறை உலுக்கவே மெதுவாகக் கண்ணைத் திறந்தவள் ராகவைப் பார்த்தபடியே எழும்பவும் ராகவ் தன் இடத்திற்குப் படுக்கச் சென்றான்.

அவந்திகா மெதுவாக எழுந்து நடந்தவள் திடீரென்று மயங்கிக் கீழே விழப்போக ராகவ் தன் கையில் தாங்கிக்கொண்டான்.

அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு அவள் மயக்கத்தில் இருப்பதைப் பார்த்துத் தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிக்க மயக்கம் தெளிந்தது.

அவள் மெதுவாக எழும்பி உட்காரவும் “என்னாச்சு அவந்திகா? ஏன் உனக்கு மயக்கம் வந்துச்சு?” என்று டென்ஷனுடன் கேட்க அவளோ தலையைப் பிடித்தபடி “காலைல இருந்து சாப்டலை, சோ கொஞ்சம் மயக்கமா இருந்துச்சு” என்று சொல்லிவிட்டு உடையை மாற்ற எழுந்திருக்க மீண்டும் தடுமாறி விழப்போனாள்.

அவளைத் தாங்கிப் பிடித்தவன் “நீ ஒன்னும் பண்ணாம இங்கேயே இரு., நான் இப்போ வர்றேன்” என்று சொல்லிவிட்டுக் கீழே சென்றான்.

சில நிமிடங்களில் திரும்பியவன் கைகளில் ஒரு கண்ணாடி டம்ளரில் பால் இருக்க அதைப் பார்த்ததும் அவந்திகா முகம் சுளித்தாள்.

“முதல்ல இதைக் குடி. அதுக்கு அப்புறமா மத்த விஷயங்களைப் பேசிக்கலாம்” என்று அவன் சொல்ல “எனக்குப் பால் சுத்தமா பிடிக்காது., நான் குடிக்க மாட்டேன்பா” என்று அவள் முகம் சுளிக்கவும் ராகவிற்குக் கடுப்பானது.

“இப்போ இதுதான் இருக்கு. சோ இதைக் குடி” என்று குழந்தைக்குச் சொல்வது போல் சொல்ல அவந்திகா அதைக் கையில் கூட எடுக்கவில்லை.

பொறுத்துப் பார்த்தவன் டம்ளரைக் கையில் எடுத்து அவள் முகம் அருகில் கொண்டு செல்ல அவளோ முகத்தைப் பின்னே கொண்டு சென்று குடிக்க மறுத்தாள்.

இது வேலைக்கு ஆகாது என்று ஒரு கையால் டம்ளரைப் பிடித்தவன் மற்றொரு கையால் அவளது கன்னத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாகப் பாலைக் குடிக்க வைத்தான்.

குடித்துமுடித்துவிட்டு அவள் முகத்தைச் சுளிக்க அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன் “இம்பாஸிபிள் ஜான்சி ராணி” என்று அவளைக் கிண்டலடித்தான்.

“கோ டு ஹெல்! எனக்கு மில்க் ஸ்மெல்லே ஆகாது. என்னைப் போய் அதைக் குடிக்க வச்சிட்டியே” என்று அவள் அழத் துவங்க ராகவ் அவளைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தான்.

பின்னர் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு வந்தவன் “நாளைக்கு மார்னிங் எழுந்து பொறுமையா அழுதுக்கோ! எனக்குத் தூக்கம் வருது” என்று சொல்லி விளக்கை அணைத்துவிட வேறு வழியின்றி அவளும் உறங்கினாள்.

மறுநாள் காலை….

எல்லாரும் சாப்பிட உட்காருகையில் ராகவ் அவந்திகாவை “ஸ்டாண்ட் அப்” என்று சொல்ல அவள் திகைப்புடன் எழுந்தாள்.

மற்றவர்கள் அவனை ஆச்சரியமாகப் பார்க்க அவனோ “நீங்க ஏன் என்னையே பாத்துட்டு இருக்கீங்க? கம் ஆன். சாப்டுங்க” என்று சொல்லிவிட்டு அவனும் சாப்பிட ஆரம்பிக்க எல்லாரும் சாப்பிடாமல் அவனைப் பார்த்தனர்.

ராதிகா “ஏன் ராகவ் அவந்திகாவைச் சாப்டாம நிக்க வச்சிருக்க? நீ வாமா, வந்து சாப்டு” என்று சொல்ல அவரைத் தடுத்தான் ராகவ்.

“நோ மா. அவ சாப்டலனா யாருக்கு என்ன கவலை? உங்க எல்லாரோட ப்ளேட்ல ஃபுட் இருக்குதானே. அதச் சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு அவன் நாணை விழுங்க அவந்திகாவோ எச்சிலை விழுங்கினாள்.

மனதிற்குள்ளேயே “மைதாமாவு! என்னையா சாப்ட விடாம பண்ற? உன் சாப்பாட்டுல உப்பு அள்ளிப் போடுறேன் பாரு” என்று மனதிற்குள் கறுவிக்கொண்டே அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

சுமித்ரா “என்ன இது வெளையாட்டு ராகவ்? அவளைச் சாப்ட விடு. பாவம், எவ்ளோ நேரம் சாப்டாம இருப்பா?” என்று அக்கறையுடன் சொல்ல மற்றவர்களும் அதையே திருப்பிக் கூறினர்.

அவர்கள் அனைவரையும் பார்த்து “எல்லாருக்கும் உன் மேல எவ்ளோ அக்கறை பாத்தியா? இந்த அக்கறை நேத்து ஃபுல்லா அவ சாப்டாம இருக்கிறப்போ எங்க போச்சு?” என்று சொல்லிவிட்டு அனைவரையும் கூர்மையுடன் பார்த்தான்.

ராதிகா “என்ன? நேத்து ஃபுல்லா நீ சாப்டலயா?” என்று அதிர மற்றவர்களோ அந்த விவரமே தெரியாது என்பது போலப் பார்த்தனர்.

அவந்திகா என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க தாதி அவளிடம் கண்ணால் கேட்க அவள் ஆமாம் என்றாள்.

“என்னோட வைஃப் நேத்து ஃபுல்லா சாப்டாம பட்டினியா இருந்துருக்கா. அது உங்க யாருக்குமே தெரியல? வாவ்! வாட் அ ஃபேமிலி?” என்று கூற அனைவருக்கும் அவமானமாகவே இருந்தது.

அவந்திகா “ராகவ் இட்ஸ் நாட் அ பிக் டீல்” என்று சொல்ல அவன் அவளைப் பார்த்த பார்வையில் அடங்கினாள்.

“சோ உங்க யாரையும் நம்பி என்னோட வைஃபை இந்த வீட்ல விட்டுட்டுப் போக முடியாது. அப்பிடிதானே! அவளுக்கு உடம்பு சரியில்லாமப் போனா கூட நீங்க எல்லாரும் இப்பிடி இர்ரெஸ்பான்சிபிளாதானே நடந்துக்கப் போறீங்க?” என்று குற்றம் சாட்டும் குரலில் கூறிவிட்டுப் பாதி சாப்பாட்டிலேயே கை கழுவினான்.

ராதிகா “ராகவ் சாப்டாமப் போறியே?” என்று கேட்க அவரை அமைதியாகப் பார்த்தவன் “சின்ன வயசுல இருந்து நான் நோட் பண்ணிருக்கேன்மா. நீங்க சாப்டாம அப்பா என்னைக்குமே சாப்டது இல்ல. என்னோட வைஃப் பட்டினியா இருந்திருக்கா. அது கூடத் தெரியாம நான் இருந்திருக்கேன். இது அதுக்கான பனிஷ்மெண்ட்” என்று சொல்லிவிட்டுச் சென்றவனையே விழி அகலாமல் பார்த்தாள் அவந்திகா.

ஏனோ அன்று ராகவ் அவளுக்கு முற்றிலும் வேறு ஒருவனாகத் தெரிந்தான்…

அவன் சாப்பிடாமல் சென்றுவிட்டது பிரியாவுக்கும், ராதிகாவுக்கும் மிகுந்த வருத்தத்தைத் தரவே அவனுக்குப் போன் செய்ய, அவனோ அவர்களின் அழைப்பைத் துண்டித்துவிட்டான். அவந்திகா இதையெல்லாம் கவனித்தவள் அவர்களிடம் அவனுக்குப் பிடித்ததை மதிய உணவுக்குச் செய்து தருமாறு கூறியவள் தானே அவனது அலுவலகத்துக்குச் சென்று கொடுத்துவிட்டு வருவதாகக் கூறவும் இருவரும் கவலை நீங்கியவர்களாய் அவனுக்குப் பிடித்தவற்றைச் சமைக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் சமைத்ததை எடுத்துக்கொண்டு அவந்திகா விஹான் டெலிகாம் அலுவலகத்தை நோக்கி ஆட்டோவில் பயணிக்கத் தொடங்கினாள். அரைமணி நேரத்தில் வந்து இறங்கினாள் அதன் முன்.

விஹான் டெலிகாம் ப்ரைவேட் லிமிடெட் வானுயர்ந்த ஏழு மாடி கட்டிடம். அதன் பளபளப்பு ஆட்டோவில் வந்து இறங்கிய அவந்திகாவைக் கண்கூச வைத்தது. ஆட்டோகாரருக்குப் பணம் கொடுத்துவிட்டுக் கையில் பிடித்திருந்த பேக்குடன் உள்ளே சென்றவள் ரிசப்ஷனிஸ்ட்டிடம் எம்.டியைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவள் பெயரைக் கேட்க “அவந்திகா ரவி” என்று பழக்க தோஷத்தில் சொல்லி அனுப்பினாள்.

சிசிடிவியில் அவந்திகா வந்ததைப் பார்த்த ராகவ் அவள் ரிசப்ஷனிஸ்ட்டிடம் பேச அவளது நடவடிக்கையையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

கதவு தட்டப்படும் சத்தத்தைத் தொடர்ந்து “மே ஐ கம் இன் சார்?” என்ற குரல் கேட்கவே ராகவ் “யெஸ் கம் இன்” என்று உள்ளே வர அனுமதித்தான்.

உள்ளே வந்த ரிசப்ஷனிஸ்ட் “சார் உங்களப் பாக்க ஒரு கேர்ள் வந்திருக்காங்க” என்று சொன்னதும் அவளது ‘கேர்ள்’ என்ற வார்த்தையில் சிரித்தவன் முகத்தைச் சீராக்கிக்கொண்டு “அவங்க நேம் என்ன சொன்னாங்க?” என்று கேட்க “அவந்திகா ரவி” என்று பதிலளித்தாள் ரிசப்ஷனிஸ்ட்.

அவள் கூறியதும் ஆட்காட்டி விரலால் நெற்றியைக் கீறியவன் மனதிற்குள் “அவந்திகா ரவி! வெயிட் ஜான்சி ராணி. இன்னைக்கு உன் வாயால உன்னை என்னோட வைஃப்னு சொல்ல வைக்கல, ஐயாம் நாட் ராகவ் கபூர்” என்று சபதமிட்டான்.

ரிசப்ஷனிஸ்ட்டிடம் திரும்பியவன் “அவந்திகா ரவிங்கிற நேம்ல எனக்கு யாரையும் தெரியாது., நீங்க அவங்களத் திரும்பிப் போகச் சொல்லிருங்க ரீட்டா” என்று சொல்லிவிட்டுப் புயலுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

தன் முன் நின்ற ரிசப்ஷனிஸ்ட்டின் பதிலால் கடுப்பானாள் அவந்திகா. கோபத்தில் “என்னையே யாருனு தெரியாதுனு சொன்னானா அந்த மைதா மாவு! இன்னைக்கு அவனுக்கு நான் யாருனு காட்டுறேன்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

“எக்ஸ்கியூஸ் மீ! ப்ளீஸ் மூவ் அ லிட்டில்! ஐ ஹேவ் டு ஸீ தட் ராகவ்!” என்று சொல்லி வேகமாக உள்ளே செல்ல அவள் பின்னே ஓடினாள் அந்த ரீட்டா.

தன் எதிரில் வந்த இன்னொரு பெண்ணிடம் ராகவின் அறையைக் கேட்க மூன்றாவது தளம் என்று பதிலளித்தாள்.

அவந்திகா லிஃப்டை நோக்கிச் செல்ல ரிசப்ஷனிஸ்ட் அவளைத் தொடர்ந்து வந்து “மேடம் இப்பிடிப் பெர்மிஷன் இல்லாம எங்க ஆபிஸ்குள்ள நீங்க வர்றது தப்பு. ப்ளீஸ் பிரச்சனை பண்ணாமப் போயிடுங்க” என்று சொல்ல அவள் சாவகாசமாக “இங்க பாருங்க! பிராப்ளம் எனக்கும் உங்களுக்கும் இல்ல. எனக்கும் உங்க எம்.டிக்கும்தான்! ஸோ மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்று சொல்லி லிஃப்டில் மூன்றாம் தளத்துக்கான சுவிட்சை அழுத்த அடுத்த சில நொடிகளில் அங்கே நின்றாள் அவந்திகா.

அந்தத் தளத்தில் மிகப்பெரிய கண்ணாடி சுவருள்ள கேபினில் அமர்ந்து எதிரிலிருந்த டிவியில் அவந்திகாவைப் பார்த்துக்கொண்டிருந்த ராகவைப் பார்த்தவள் “உக்கார்ந்திருக்கிற போஸைப் பாரு!” என்று எண்ணிக்கொண்டு அந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று நின்றாள்.

அவள் பின்னே வந்த ரிசப்ஷனிஸ்ட் “சார் நான் அவங்ககிட்ட சொன்னேன். பட் ஷீ ரெஃப்யூஸ்டு டு லீவ்” என்று சொல்லி விழிக்க ராகவ் இருக்கையிலிருந்து எழுந்தவன் நேரே அவந்திகாவிடம் சென்றவன் “ஹூ ஆர் யூ?’ என்று நிதானமாகக் கேட்டு அவந்திகாவின் மூன்றாவது கண்ணைத் திறந்து வைத்தான்.

பார்வையால் அவனைச் சுட்டுப் பொசுக்கியபடி “சோ உங்களுக்கு என்னை யாருனு தெரியாது?” என்று அவந்திகா கேட்க

தோளைக் குலுக்கிய ராகவ் “பாத்த உடனே தெரியுறதுக்கு நீ என்ன இந்த ஸ்டேட் சி.எம்மா இல்ல இந்தக் கன்ட்ரியோட பி.எம்மா?” என்று நக்கலாகச் சொல்லிவிட்டு அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்து அவந்திகாவின் பதிலுக்காக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரிசப்ஷனிஸ்ட் நடப்பதைச் சினிமா போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனது பதிலில் கடுப்பான அவந்திகா புருவத்தை உயர்த்திப் பார்த்துவிட்டு “நான் சி.எம்மும் இல்ல பி.எம்மும் இல்ல. ஐயாம் யுவர் வைஃப். அண்டர்ஸ்டாண்ட்?” என்று கோபத்தில் கூறிவிட்டு அவன் முகத்தைப் பார்க்க

அவனது கண்ணில் பிரகாசம் தெரிய அவளது மனசாட்சி “அவன் போட்டு வாங்குறது கூடத் தெரியாத மக்கு நீ” என்று தலையில் அடித்துக்கொள்ள அவந்திகா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.

அவள் ராகவின் மனைவி என்று தெரிந்ததும் ரிசப்ஷனிஸ்ட் “மேம்! அப்போ நீங்க ஏன் அவந்திகா ரவினு சொன்னீங்க?” என்று கேட்க ராகவ் “வாவ் ரீட்டா. இன்னைக்குதான் நீ ஒரு உருப்படியான வேலையைப் பாத்திருக்க. பதில் சொல்லுங்க அவந்திகா ரவி!” என்று அவந்திகாவைச் சீண்டினான்.

இந்த முறை சுதாரித்த அவந்திகா “மிஸ் ரீட்டா! ரவி இஸ் மை ஃபாதர். மத்த பொண்ணுங்க மாதிரி என்னால கல்யாணம் ஆனதும் என்னோட அப்பாவை மறந்துட முடியல. அது மட்டும் இல்ல. நான் மேரேஜ்தான் பண்ணிகிட்டேன். இது என்ன டிரான்ஸ்ஃபர் ஆஃப் ஓனர்ஷிப்பா? உடனே நேம சேஞ்ச் பண்ணுறதுக்கு? (பெங்களூர் டேய்ஸ் மூவி எஃபெக்ட்)” என்று கேட்கவும் ரீட்டா ராகவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

அவந்திகா பதில் சொல்லிவிட்டு ராகவைப் பார்க்க அவனோ “என்ன ஜான்சி ராணி! என்னப் பாக்காம இருக்க முடியலயா? ஆபிசுக்கே வந்துட்ட?” என்று கண் சிமிட்டிக் கேட்டான்.

“ஆமா, உன்னோட அழகுல மயங்குறத விட எனக்கு வேற வேலையே இல்ல பாரு!” என்று சொல்லவும் ராகவ் சிரித்தபடியே “சரி சொல்லு! கையில பேக்கோட என்னோட ஆபிஸ்ல உனக்கு என்ன வேலை?” என்று கேட்டான்.

“இன்னைக்கு மார்னிங் நீ சரியா சாப்டலனு உன்னோட மம்மிதான் இதைக் குடுத்து அனுப்புனாங்க” என்று நல்ல பெண்ணாகப் பதிலளித்தாள்.

“ஓகே! சாப்டுட்டாப் போச்சு!” என்று கை கழுவிவிட்டு அமர்ந்தவன் முன் பாத்திரங்களைப் பரப்பினாள் அவந்திகா. பிளேட்டில் வைத்த சாப்பாட்டைச் சாப்பிடாமல் தன்னையே குறுகுறுவென்று பார்த்த ராகவை “என்ன? வேற எதாச்சும் வேணுமா?” என்று கேட்டாள்.

ஆமாம் என்று தலையாட்டவே “இன்னைக்கு இதுதான் பண்ணிருக்காங்க! டுமாரோ உனக்கு வேணுங்கிற டிஷ்ஷைச் சொல்லிட்டு வா!” என்று அவள் சொல்ல அவன் கிண்டலாக அவளைப் பார்த்தான்.

“வாவ்! வாட் அ லவபிள் வைஃப் யூ ஆர்? ஹஸ்பெண்ட் மேல எவ்ளோ பாசம் இருந்தா வீட்ல அவ்ளோ சர்வென்ட்ஸ் இருந்தும் நீயே கொண்டு வந்திருப்ப? அப்பிடியே நீயே உன் கையால ஊட்டி விட்டா இன்னும் நல்லா இருக்கும்” என்று கூற அவந்திகா அவனை முறைத்தாள்.

“உனக்குப் போய் கொண்டு வந்தேன் பாரு! என்னைச் சொல்லணும்” என்று தலையில் அடித்துக்கொண்டவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சாப்பிட்டான் ராகவ்.

அவன் சாப்பிட்டதும் பாத்திரங்களை எடுத்து வைத்துக் கிளம்பியவளை “அவந்திகா” என்ற ராகவின் குரல் தடுத்து நிறுத்தியது.

என்னவென்று திரும்பிப் பார்த்தவளின் அருகில் வந்தவன் “தேங்க்யூ சோ மச் ஃபார் திஸ் வொண்டர்ஃபுல் லன்ச்” என்று சொல்ல அவந்திகா “பட் நான் சமைக்கவே இல்லையே” என்று பதிலளித்தாள்.

“இது எனக்குக் கம்பெனி குடுத்ததுக்குச் சொன்ன தேங்க்ஸ்” என்று சொல்ல அவந்திகா “யூ ஆர் வெல்கம்” என்று அவனை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே கூறினாள்.

“அண்ட் ஒன் மோர் திங்! நீ இப்பிடிப் பாக்கிறப்போ என்னோட கான்சென்ட்ரேஷன் மிஸ் ஆகுது” என்று சொல்லவும் பதில் சொல்லத் தெரியாமல் “நான் கெளம்புறேன் ராகவ்! பை” என்று சொல்லிவிட்டு அவள் செல்லவும் ராகவ் அவள் லிஃப்டுக்குள் செல்லும் வரை பார்த்துக்கொண்டே இருந்தான்.

அவந்திகா விறுவிறுவென்று அவன் கேபினை விட்டு வெளியேறியவள் அவன் சொன்ன வார்த்தைகளை அசை போட்டபடியே வீடு வந்து சேர்ந்தாள். வீட்டினுள் நுழைந்தவளைப் பிரியா பிடித்துக்கொண்டார்.

“அப்போ ராகவ் கோபம் குறைஞ்சிடுச்சுதானே?” என்று சந்தேகமாகக் கேட்டார் பிரியா.

“ப்ராமிஸ் சாஸுமா! நீங்க என்னை நம்ப மாட்டீங்களா?” என்று கண்ணை விரித்துக் கேட்டாள் அவந்திகா.

“அவந்திகா! உன்னை நம்பாம எப்பிடி? பட் அவன் அவ்ளோ ஈஸியா கோவத்த விடமாட்டானே!” என்று ராதிகா இழுத்தார்.

“கம் ஆன் மதர் இன் லா! உங்க பையனைப் பத்தி இவ்ளோ கவலைப்படுறீங்க! இந்த வேகாத வெயில்ல அவனுக்குச் சாப்பாடு குடுத்துட்டு வந்த என்னையும் கொஞ்சம் நெனச்சுப் பாருங்க!” என்று சொல்லவும் அவளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றார் பிரியா.

அன்று மாலை…..

ராகவ் தன் அறைக்குள் நுழையும்போதே அவந்திகா யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவளைத் தொல்லை செய்யாமல் தன் அறைக்குள் சென்றான்.

ஃப்ரெஷ் ஆகிவிட்டுத் திரும்பி வந்தபோது அங்கு அவள் இல்லாததைக் கண்டவன் கீழே இருப்பாள் என்று நினைத்து இறங்கிவர அங்கும் அவள் இல்லை.

வீட்டை விட்டு வெளியே வந்தவன் தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு அவள் அருகில் சென்றான்.

“ரித்தி! அவ்ளோ அமவுண்டுக்கு நாம என்னடி பண்ணுறது? நாம ஒர்க்கை ஸ்டார்ட் பண்ணக் கூட இல்லையே! அப்புறம் ஏன் இவ்ளோ ஹெவி பெனால்டி?” என்றவள் எதிர்முனையில் ரித்திமா ஏதோ சொல்ல “இதுல ப்ரீச் ஆஃப் கான்ட்ராக்ட்னு எப்பிடிச் சொல்ல முடியும்? கான்ட்ராக்ட் சைன் ஆகி, நம்ம ஒர்க் பண்றப்போ சொன்னா கூட ஓகேனு சொல்லலாம்.” என்றாள்.

“நோ ரித்தி! அப்பிடிப் பண்ணுனா நமக்கு இருக்கிற குட்வில் என்னாகும்? நான் என்னோட சேவிங்ஸ்ல இருந்து எடுக்கலாம்னு யோசிக்கிறேன். யா, குட்., அப்போ டுமாரோ மார்னிங் பேங்குக்குப் போறோம். ஓகேவா? பை” என்று சொல்லிவிட்டுப் போனைத் தன் நைட் டிரஸ்ஸின் பாக்கெட்டில் போட்டவள் திரும்பியபோது அவள் பின்னே நின்ற ராகவின் மீது வேகமாக மோதி நின்றாள்.

“ஆவ்! என்னோட மூக்கு!” என்று முனகியபடியே மூக்கைத் தடவிவிட்டவள் கையைக் கட்டி நின்றுகொண்டிருந்த ராகவைப் பார்த்து “ஏய்! மைதா மாவு! இப்பிடியா சத்தம் இல்லாம பின்னாடி வந்து நிப்ப? இன்னும் கொஞ்சம் வேகமா இடிச்சிருந்தா என்னோட மூக்கு ஒடஞ்சிருக்கும். ஆமா, நீ நார்மல் ஃபுட்தான சாப்பிடுற. இல்ல கல்லு மண்ணு இதச் சாப்பிடுவியா? ஏதோ பாறைல மோதுன மாதிரி இருக்கு” என்று கூறவே ராகவ் அவளையே ஊடுருவிப் பார்த்தான்.

“சிராஜ் நோட்டீஸ் அனுப்புனானா?”

அவனது கேள்வியைக் கண்டுகொஞ்சம் பதற்றமானவள் “ஆமா! ஒன்னு அந்தக் கான்ட்ராக்ட்டை அக்செப்ட் பண்ணிக்கணும். இல்லனா பெனால்டி பே பண்ணுங்கனு சொல்லி லீகல் நோட்டீஸ் அனுப்பிருக்காரு” என்றாள் அமைதியாக.

அவள் சொன்னதைக் கேட்டபடியே இருக்கையில் அமர்ந்தவன் “சோ வாட் ஆர் யூ கோயிங் டு டூ?” என்றான் கையைக் கட்டிக்கொண்டு.

அவந்திகா “நானும் ரித்தியும் எங்க சேவிங்ஸ வச்சு பே பண்ணலாம்னு..” என்று சொல்லும்போது ராகவ் சிரித்ததைப் பார்த்தவள் கடுப்பானாள்.

“இதுல நீ சிரிக்கிறதுக்கு எதுவும் இல்ல” என்று சொல்லித் திரும்பி நின்றுகொண்டாள்.

“லுக் அவந்திகா! டெல் மீ த அமவுண்ட். ஐ வில் பே தட்” என்று சொல்லவும் அவனை விசித்திரமாக அவள் பார்க்க ராகவ் “பிகாஸ் என்னால வந்த லாஸ் இது. சோ” என்று கூறி அவளைப் பார்த்தான்.

அவந்திகா தடுமாறியபடியே “இல்ல. நான் எப்பிடி உன்கிட்ட வாங்க முடியும்?” என்று சொல்ல ராகவ் “என்னோட பாதி நீனு சொல்லி நான் உன்னை மேரேஜ் பண்ணிருக்கேன் அவந்திகா! சோ உன்னோட ரெஸ்பான்ஸிபிளிட்டிலயும் நான் ஷேர் பண்ணிக்கணும்” என்று சொன்னாலும் அவந்திகாவால் ஒத்துக்கொள்ள இயலவில்லை.

“சும்மா இந்தப் பணத்தை என்னால வாங்கிக்க முடியாது” என்றாள் அவள் பிடிவாதமாக.

“ஓகே! லெட்ஸ் வொர்க் ஃபார் மீ” என்று அவன் சாதாரணமாகச் சொல்லவும் அவள் திகைத்தாள்.

“நான் என்னோட அட்வர்டைசிங் கம்பெனிய ரினோவேட் பண்ணப் போறேன். அதோட ஃபர்ஸ்ட் கேம்பெய்னே விஹான் டெலிகாமோட நியு ப்ராடக்ட் லான்சிங் தான். அந்த லான்சிங் ஈவண்ட்டை நீங்க பண்ணிக் குடுத்துடுங்க” என்று சொல்ல அவந்திகாவுக்கு அது சரியென்று தோன்றியது.

“ஓகே” என்று சொன்னவள் சிறிது தயங்கியபடியே “ரித்தி, உஷா இதப் பத்தி என்ன சொல்லுவாங்கனு கேக்காம” என்று இழுக்கவும் “அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க. உனக்குத் தேவையான கார்ப்பரேட் ஈவன்ட்டுக்கான சான்ஸ் இது. மிஸ் பண்ண மாட்டனு நம்புறேன்” என்று அவன் அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைக்கவும் சம்மதித்தாள் அவந்திகா.

“டீல்?” என்று சொல்லி ராகவ் தன் கையை நீட்ட அவந்திகா விழித்தாள்.

அவளுடைய கையைத் தன் கண்ணால் காண்பித்துக் கைகுலுக்குமாறு கூறவும் தன் கையை நீட்டினாள்.

அவள் கையைப் பற்றிக்கொண்டவன் “ஸீ யூ டுமாரோ அட் நைன் ஓ க்ளாக் இன் மை ஆபிஸ் அவந்திகா ரவி” என்று ரவியை அழுத்தமாக உச்சரிக்கவும் அவந்திகா சிரித்துக்கொண்டே அவனது தோளில் அடித்துவிட்டு உள்ளே சென்றாள்.

ராகவ் அவள் செல்வதைப் பார்த்துவிட்டுத் திரும்பி நின்று “ஓ மை காட்! திஸ் கேர்ள் இஸ் ஹாண்ட்டிங் மீ” என்று சொல்லித் தன் நெஞ்சைத் தடவிவிட்டுக்கொண்டே புன்னகைத்தான்.

NM Tamil Novel World

📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!

 

Share your Reaction

Loading spinner