Header Image

 

கழிமுகம் 1

சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள். “குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?” புஷ்பம்மா கேட்டதும் … Continue reading “கழிமுகம் 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 7

பத்மாவதி வந்துவிட்டுப் போனதற்கு அடையாளமாய் அவரது மல்லிகைப்பூ வாசம் இன்னும் அறையைச் சுற்றி வர, கிருஷ்ணஜாட்சி மெதுவாக எழுந்து சுவரில் மாட்டி வைத்திருந்த அன்னையின் போட்டோவைத் தடவியவள், “மா! உங்க அப்பா அந்தக் காலத்துலயே உங்களை பி.ஏ. படிக்கவச்சார்னு எவ்ளோ பெருமையா சொல்லிப்பீங்க? ஆனா இன்னைக்கு உங்கப் பொண்ணுக்கு மேல படிக்கிற அதிர்ஷ்டம் இல்லம்மா. படிப்பா, சுயமரியாதையா பார்த்தா எனக்கு இப்போதைக்கு என்னோட சுயமரியாதை தான் எனக்கு முக்கியம். இப்ப படிக்கலைனா என்னமா, நான் கொஞ்ச நாள் … Continue reading “பூங்காற்று 7”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 6

ரகுநந்தன் அன்று நீரஜாட்சியிடம் தான் பேசிய விதம் அதிகப்படி என்பதை உணர்ந்து கொண்டவன், “அது என்னவோ குழந்தைத்தனமா நடந்திண்டா நானும் இப்பிடியா அவளண்ட பேசி வைக்கணும்? நந்து, நோக்கு ஏன்டா இவ்வளவு கோவம் வர்றது? உன்னை விட மூணு வயசு சின்னப் பொண்ணு கிட்ட இப்பிடி பேசிருக்கப்படாது தான்” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான். மறுநாள் காலையில் அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுடன் உறங்கியவன், காலையில் எழுந்ததும் சித்தியிடம் சென்று தான் அவளிடம் … Continue reading “பூங்காற்று 6”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 5

நீரஜாட்சி கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் வெளியே வந்தவள், கையில் அவற்றை வைத்துக்கொண்டு அந்தச் சிறுவர்களின் முன் அங்கும் இங்குமாக நடக்க, அவள் கையில் மின்னிய புத்தம் புது கிரிக்கெட் மட்டையைக் கண்டவர்கள் ஆர்வத்துடன், “அக்கா புது பேட்டாக்கா?” என்று கேட்க, நீரஜாட்சி அப்போதுதான் அவர்களைக் கவனித்தது போல, “இதுவா? இது என் தாத்தா நேத்து வாங்கித் தந்தாரு. எப்பிடி இருக்கு?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, அந்தச் சிறுவர்கள் “சூப்பரா இருக்குக்கா. எனக்கு ஒரு தடவை … Continue reading “பூங்காற்று 5”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 4

மறுநாள் விடியலின் பூபாள ராகத்தைப் பறவைகள் பாட விழித்துக் கொண்டாள் கிருஷ்ணஜாட்சி. அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் நீரஜாட்சிக்குப் போர்வையை நன்றாக மூடிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவுட் ஹவுஸின் கதவைத் திறந்தவளின் பார்வை, துளசிமாடத்தில் விளக்கேற்றி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த பாட்டியின் மீது பட, காலை நேரத்தின் இனிமை அவரது தரிசனத்தால் இன்னும் அதிகரித்ததுப் போலத் தோன்ற, புன்னகையோடு பாட்டியை நோக்கிச் சென்றாள். “பாட்டி!” என்ற அழைப்புடன் வந்த பெரிய பேத்தியைக் கண்ட சீதாலெட்சுமி, “கிருஷ்ணா, முதல்ல … Continue reading “பூங்காற்று 4”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 3

பட்டாபிராமன் இரு பேத்திகளையும் அவுட் ஹவுஸில் கொண்டு சென்று விட்டவர், அவர்களிடம் “ரெண்டு பேரும் இருங்கடா. நான் போய் மைத்தியை உங்களுக்கு உதவிக்கு அனுப்பிவிடுறேன்” என்றுச் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் செல்ல, சீதாலெட்சுமி பேத்திகளுடன் இருந்து அவர்களது உடைமைகளை எடுத்துவைக்க உதவிக் கொண்டிருந்தார். அவர்கள் வீட்டின் அவுட் ஹவுஸ் முறைப்படி பராமரிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு ஒதுங்க வைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. தோட்டத்துக்கு நடுவே கலைநயத்தோடு கட்டப்பட்டிருந்த அந்த அவுட் ஹவுஸ் இரண்டு படுக்கையறை, சமையலறை, … Continue reading “பூங்காற்று 3”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 2

பட்டாபிராமன் மூத்த பேத்தியை அணைத்தபடி கண்ணீர் வடித்தவர், நிமிர்ந்து மருமகளை வெறித்தவாறே, “அன்னைக்கு உன்னோட அண்ணா மணமேடையில என் பொண்ணால அவமானப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உயிரோட இருந்தவரைக்கும் என் பொண்ணு முகத்தை நான் பார்க்கல. அவளும், அவ ஆத்துக்காரரும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல காலமாயிட்டான்னு நேக்கு கும்பகோணம் போனப்போ தான் தெரிய வந்தது. என் பொண்ணோட பிரதிபிம்பமா நிக்கறவாளை கோவத்துல ஒதுக்கி வைக்கற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரன் இல்லடிம்மா!” என்றுச் சொல்லி விழிநீரைத் துடைத்தவர், மருமகளின் முகம் … Continue reading “பூங்காற்று 2”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 1

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கத் திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் புரள, அதை காதின் பின்புறம் ஒதுக்கியவள், தன் நீண்ட விழிகளைச் சுழற்றித் தன் அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தாள். அவளைப் போலவே ஒல்லித் தேகம்தான். ஆனால் தந்தையின் பால்நிறம், கூர்நாசியை உரித்து வைத்தபடி கழுத்தைத் தொட்டக் கூந்தலுடன், இன்னும் குழந்தைத்தனம் போகாத அந்த முகம் உறக்கத்திலும் அதில் தெரிந்த தெளிவு என அவளை ரசித்தவள், … Continue reading “பூங்காற்று 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 44

“மத்தவங்களோட இரக்கத்தைச் சம்பாதிச்சு அதுல வாழணும்னு சுயமரியாதை இருக்குற எந்த மனுசனும் யோசிக்க மாட்டான்… முக்கியமா என்னை மாதிரி டிபரன்ட்லி ஏபிள்ட் பீபிள் யோசிக்கமாட்டாங்க… எங்களைப் பாத்து ஐயோ பாவம்னு யாரும் பரிதாபப்படுறதை நாங்க விரும்புறதில்ல… எங்களால உங்களை மாதிரி எல்லா வேலையும் செய்யமுடியும்… நாங்க உங்க கிட்ட எதிர்பாக்குறது எல்லாமே எங்க இயலாமைய சுட்டிக்காட்டி கேலி கிண்டல் பண்ணாம சகமனுசங்களா நடத்தணும்ங்கிறதை மட்டும் தான்… ஏன்னா அப்பிடிப்பட்ட கீழ்த்தரமான மனுசங்களும் இந்த உலகத்துல இருக்காங்க… அதுக்கு … Continue reading “பூங்காற்று 44”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 20

இந்த உலகம் நம்மை எவ்வளவு எளிதில் ‘ஜட்ஜ்’ செய்துவிடும் தெரியுமா? நீ எப்படி இதைச் செய்யலாம், நீ அன்று செய்த காரியத்தின் விளைவால் உன்னை என்னால் நம்ப முடியாது என்று இஷ்டத்துக்கு பழித்துப் பேசும். இந்த உலகம், சமூகம் எல்லாம் வேறு யாரோ அல்ல. நீங்களும் நானும் நம்மை போல பிற மனிதர்களும் தான். அடுத்தவரின் சூழலை அறியாமல் பேசி காயப்படுத்துவது, அவர்கள் அப்படிதான் என்று முத்திரை குத்துவதும் நமக்கு எவ்வளவு எளிதான காரியமாக இருக்கிறது! எந்த … Continue reading “அன்பு 20”

 

Share your Reaction

Loading spinner