Header Image

 

பூங்காற்று 38

நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி “அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே … Continue reading “பூங்காற்று 38”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 37

ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும், ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு ஏதோ மீட்டிங்குக்காக அனுப்பிவிட வீட்டில் தனித்திருக்க பிடிக்காதவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். வழக்கமாக இப்படி வெளியூர் பயணங்களில் அவனுடன் அவளும் செல்வது வழக்கம். ஆனால் அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கருத்தில் கொண்டு ராகுல் அவளை  வரவேண்டாமென்று கூறிவிட்டான். சகோதரனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள பிறந்த வீட்டுக்கு வந்தவள் … Continue reading “பூங்காற்று 37”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 2

“பரபரப்பான இந்த உலகத்துல, நம்மள அமைதியா புரிஞ்சிக்கிற ஒரு இதயம் கிடைச்சா அது எவ்வளவு பெரிய வரம்! தேடல் முடியுற அந்த நிமிஷம் எவ்வளவு அழகா இருக்கும்?” -ப்ரியம்வதா தனது உடைமைகளை ரோலர் சூட்கேசிலும், ஷோல்டர் பேகிலும் எடுத்து வைத்துக்கொண்டிருந்த ப்ரியம்வதாவுக்குக் காலையுணவை ஊட்டிக்கொண்டிருந்தார் அவளது அன்னை வனஜா. “என்னோட குட்டி பவுச்சைக் காணும்.” டிரெஸ்ஸிங் டேபிளில் தேடி எடுத்து வைத்தவர் சாப்பாட்டை ஊட்டியும் முடித்திருந்தார். “உன் வெண்பொங்கலுக்கு ஈடு இணையே கிடையாதும்மா.” பாராட்டிய மகளைக் கொஞ்சம் … Continue reading “பிரியம் 2”

 

Share your Reaction

Loading spinner