Header Image

 

பூங்காற்று 13

நீரஜாட்சி ரகுநந்தன் வெளியேறியதும் கதவை அறைந்துச் சாத்திவிட்டு வந்தவள், ஹாலின் வாயிலில் நின்று கொண்டிருந்த சீதாலெட்சுமியைக் கண்டதும் அவரிடம் வந்து, “என்னாச்சு சித்தம்மா, நான் ரொம்ப சத்தமா பேசி உன் தூக்கத்தைக் கெடுத்துட்டேனா?” என்று அக்கறையுடன் கேட்க, அவளின் கூந்தலை வருடிக் கொடுத்தபடி, “இல்லடி ராஜாத்தி! உன்னை ரொம்ப சின்னப் பொண்ணுனு நெனைச்சிண்டிருந்தேன். ஆனா உன்னால இவ்ளோ விஷயத்தைப் பேச முடியும்கிறதை நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன். நோக்கு இந்த தாத்தா பாட்டி மேல ஏதும் கோவம் … Continue reading “பூங்காற்று 13”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 12

காலை கதிரவனின் ஒளியில் எழில் தேவதையாக நின்ற நீரஜாட்சியை விழியெடுக்காமல் பார்த்த ரகுநந்தனை அவளும் தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுவிட்டாள். எப்போதும் ஜீன்ஸிலேயே தலையைக் கூட வாராமல் கால்பந்துடன் ஓடிக்கொண்டிருந்தவனா இவன் என்னும் அளவுக்கு வேஷ்டி சட்டையில் பொறுப்பான ஆண்மகனாக நின்றவனைக் கண்டு அவளது மனம் துணுக்குற்றாலும், தன்னை விழுங்கும் அந்தப் பார்வையைக் கண்டதும் அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவளின் இயல்பான குணம் தலைதூக்க, அவனை முறைத்தபடி அவன் அருகில் வந்து சேர்ந்தாள் அவள். அவளால் எப்போதும் அவனைத் … Continue reading “பூங்காற்று 12”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 11

ரகுநந்தன் வெளிநாடு சென்று படிக்கப் பெற்றோரிடம் அனுமதி பெறும் முன் ஹர்சவர்தனுக்கு நாக்கு வெளியே வந்துவிட்டது. வேங்கடநாதனோ, கோதண்டராமனோ இதற்குப் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவன் சிறிது காலம் வீட்டை விட்டுப் பிரிந்திருந்தால்தான் அவனுக்கும் கால்பந்து, பைக்கைத் தவிர வெளியுலகமும் இருக்கிறது என்பது புரியவரும் என்பது வேங்கடநாதனின் கருத்து. அதனால் அவர் அவன் வெளிநாடு செல்வதற்குச் சுலபமாக அனுமதி கொடுத்துவிட்டார். அதற்கு முன் தந்தையிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்தார். ஆனால் பத்மாவதி ஒரேயடியாக … Continue reading “பூங்காற்று 11”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 10

நீரஜாட்சியின் பொதுத்தேர்வு முடிந்தநிலையில் மைத்ரேயியின் திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்தது. சேஷனின் தூரத்து உறவினர் ஒருவரின் பேரனுக்கு மைத்ரேயியைப் பார்க்கலாம் என்றப் பேச்சு வர வீடே அன்று பரபரப்பாக இருந்தது. மாப்பிள்ளை வருமானவரித்துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதால் அவருக்கு வசதியாக ஞாயிறு அன்று பெண் பார்க்க வருமாறு கூறியிருக்க கிருஷ்ணஜாட்சியும் அன்று வீட்டில் இருந்து அவளது இளைய மாமிக்கு வேலையில் உதவிக் கொண்டிருந்தாள். நீரஜாட்சி வழக்கம் போல பட்டாபிராமனிடம் “பட்டு ட்வெண்டி ஃபோர்லாம் கல்யாணத்துக்கான ஏஜா? மைத்திக்காவை ஏன் … Continue reading “பூங்காற்று 10”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 9

கிருஷ்ணஜாட்சியின் வாழ்க்கை சீராகப் பராமரிக்கப்படும் இயந்திரம் பழுதின்றி ஓடுவது போல எந்தவிதத் தடையுமின்றி ஒழுங்கானப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அவளது நான்கு மாத பயிற்சி நல்ல முறையில் முடிய, அவளது தோழி கரோலின் ஒரு மாத சிறப்புப் பயிற்சியிலும் கிருஷ்ணஜாட்சியைக் கலந்துகொள்ளுமாறு கூற, அவளும் சந்தோஷமாகவே அதையும் முடித்தாள். இதற்கு இடையில் மாமாவின் ஹோட்டலிலும் அனைத்து ஊழியர்களிடமும் அன்போடு பழகுவதாகட்டும், தலைமை செஃபிடம் பணிந்து நின்று அவரது கட்டளைப்படி வேலையை முடிப்பதாகட்டும், அவளுக்கு நிகர் அவளே என்று … Continue reading “பூங்காற்று 9”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 8

ஒருவாறு அனைத்துக் கலவரங்களும் அடங்கி, மாலையில் சேஷன் கிருஷ்ணஜாட்சியின் கைப்பட நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ஸ்ரீநிவாசவிலாசத்திலிருந்துப் புறப்பட்டு விட்டார். பட்டாபிராமன் கும்பகோணத்திலிருக்கும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து கிருஷ்ணஜாட்சியின் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கொடுக்கப்படும் என்பதை விசாரிக்கச் சொல்லிவிட்டு, அக்கடாவென்று தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்துவிட்டார். இன்று ஒரு நாளில் மட்டும் தன் கணவருக்குத் தான் எத்தனை மனவேதனை என்ற வருத்தத்துடன் அவரருகில் அமர்ந்தார் சீதாலெட்சுமி. “ஏண்ணா! ரொம்ப களைப்பா தெரியறேளே? முடியலையா?” என்று ஆதரவாகக் கேட்க, … Continue reading “பூங்காற்று 8”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 3

“இந்த மல்லிமொக்கு ஆரத்தை மாட்டிக்கடி… நம்ம போறது கல்யாண வீட்டுக்கு… உன்னோட ஆபிஸ் பார்ட்டிக்கு இல்ல” கையகல ஜரிகை வைத்த பட்டுப்புடவையின் முந்தானையை நீவியபடி அவள் அணிந்த ரூபி கழுத்தாரத்தை ஆட்சேபித்தபடி நின்றார் பூரணி, குட்டிமாவின் அன்னை. “ப்ச்! நீ ரொம்ப ஓவரா பண்ணுறம்மா… விட்டா என்னை அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி நடமாடும் நகைக்கடையா மாத்திடுவ போல” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவர் சொன்ன மல்லிமொக்கு ஆரத்தை அணிந்து கொண்டாள் குட்டிமா. … Continue reading “கழிமுகம் 3”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 2

“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?” காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன். “சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது. “என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு … Continue reading “கழிமுகம் 2”

 

Share your Reaction

Loading spinner