Header Image

 

அத்தியாயம் 2

அன்று மாலை. சந்தன்பூர் அரண்மனையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதற்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா அவளது லெஹங்காவின் பிளவுஸின் பின்பகுதியில் கயிறை முடிச்சிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அந்நேரம் பார்த்து “ஹனிபி! ரெடி ஆயாச்சா” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ரித்திமா. “யா ரித்து பேபி! கொஞ்சம் வந்து இந்த நாட் போட்டு விடு… என்னால போடவே முடியலடி!” என்று அந்தக் கயிறைக் கையில் பிடித்து நிற்க முடியாமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள் அவந்திகா. “திரும்பு கொஞ்சம்” என்று சொல்லி அவளுக்கு … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது சந்தன்பூரின் ராஜகுடும்பத்து மாளிகை. அந்த மாளிகையின் இளவரசியான பிரதியுஷா சிங்கின் திருமணத்திற்கான அழகான பதற்றம் தான் அது. அன்று அவளது நிச்சயதார்த்தம் இந்தியாவின் மிகப் பெரிய பிஸினஸ்மேன் குணால் கபூரின் மகனான வருண் கபூருடன் நடக்கப்போவதற்கான இனிமையான முன்னுரை தான் அந்த பரபரப்பு. மாளிகையின் மேல்மாடத்தில் நின்று கொண்டிருந்தாள் பிரதியூஷா. ஐந்தரையடி உயரத்தில் ராஜகுடும்பத்தின் கம்பீரம் எள்ளளவும் குறையாமல் அதே நேரம் எளிமையின் மறுவுருவாக இருப்பவள். ஒரு முறை பார்த்தவர்களை மீண்டும் பார்க்க … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 2

“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?” காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன். “சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது. “என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு … Continue reading “கழிமுகம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 100 (இறுதி)

கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் … Continue reading “அத்தியாயம் 100 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 99

கேரளாவில் பதினான்கு மாவட்டங்களில் சாத்தான் வழிபாட்டு குழுவினர் தங்களுக்கென சர்ச்களை நிர்மாணித்துள்ளதாக ராஜிவ் சிவசங்கர் கூறுகிறார். இத்தகைய சர்ச்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட வீடுகளிலும் அப்பார்ட்மெண்ட்களிலும் செயல்படுகின்றன. இவர்கள் ‘சாத்தான் சேவா’ என்ற நிகழ்வை செய்கிறார்கள். அந்நிகழ்வின் போது சாத்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குவார், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பார் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலுகிறார்கள். அதிலும் தொழில் நொடிந்த பிசினஸ்மேன்கள் தான் இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களின் இலக்கு என்கிறார் … Continue reading “அத்தியாயம் 99”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 98

குழந்தைகளுக்குப் இளஞ்சிறார்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதும் சாத்தானிஷ வழிபாட்டின் முக்கியமான சடங்காகும். 2016ல் கேரள காவல்துறையினர் சாத்தான் கல்ட் கும்பலைச் சேர்ந்த பதினோரு பேரைக் கைது செய்தார்கள். அவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் பல ஆண்டுகளாக வன்புணர்வு செய்து வந்தது தெரிய வந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களின் ஊடுருவலால் போதைப்பொருள் மாஃபியாவும் பெருகியுள்ளது என்கிறார்கள் கேரள காவல்துறையினர். சாத்தானிஷத்தில் ஈடுபடுபவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை சுலபமாகப் பணமீட்டும் முறையாகத் … Continue reading “அத்தியாயம் 98”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 97

கேடல் ஜேசன் ராஜா வழக்கைத் தொடர்ந்து இண்டலிஜென்ஸ் அதிகாரிகள் கேரளாவின் சாத்தான் வழிபாட்டு கல்ட் கும்பல்கள் தங்களது வலையை விரிப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்கள். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது இம்மாதிரி கல்ட் கும்பல்களின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். இம்மாதிரி சாத்தானிஷ குழுக்கள் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவர்கள் திருப்பலியைப் போல ‘ப்ளாக் மாஸ்’ என்ற நிகழ்வை சாத்தானிஷ கும்பல்கள் நடத்துவார்கள். கிறிஸ்தவம் மட்டுமன்றி ஏனைய மதங்களிலும் புனிதமானதாகவும் இறையருள் நிறைந்ததாகவும் … Continue reading “அத்தியாயம் 97”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 96

2017ல் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேடல் ஜேசன் ராஜா என்பவர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் உறவுக்காரப்பெண்மணியை சாத்தான் வழிபாட்டிற்காக கோடாரியால் வெட்டிக் கொலை செய்து அக்கொலையை தீவிபத்து போல சித்தரித்து அதில் தானும் மரணித்தது போல ஒரு டம்மியை வைத்து நாடகமாடிய சம்பவம் மாபெரும் அதிர்வலையை உண்டாக்கியது. அவரை இரயில் நிலையத்தில் கைது செய்து விசாரித்தபோது சாத்தான் வழிபாட்டில் ஒரு பகுதியாக ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கும் சோதனையை அவர்களை வைத்து செய்ததாகக் கூறியுள்ளார். சாத்தான் … Continue reading “அத்தியாயம் 96”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 95

2004ல் போலீசுக்கு உதவிய விக்கி ஹட்சசன் என்ற பெண்மணி காவல்துறையினரின் அவசரத்தாலும், தங்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்லவில்லை என்றால் கொலைவழக்கில் அவரையும் குற்றவாளியாக்கிவிடுவோமென்ற மிரட்டலாலும் தான் மிஸ்கெல்லி, எகோல்சுக்கு எதிராக பாலிகிராப் சோதனையில் பேசியதாகக் கூறினார். 2007ல் கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் உடலில் கட்டியிருந்த ஷூ லேஷ்களில் இருந்த தலைமுடி டி.என்.ஏ சோதனைக்காக அனுப்பப்பட்டது (90களில் இச்சோதனை கிடையாது). அதில் எகோல்ஸ், பால்ட்வின், மிஸ்கெல்லி மூவரது டி.என்.ஏவோடும் அந்த தலைமுடியிலிருந்த டி.என்.ஏ ஒத்துப்போகவில்லை. அதற்கு மாறாக அந்த … Continue reading “அத்தியாயம் 95”

 

Share your Reaction

Loading spinner