Header Image

 

கழிமுகம் 1

சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள். “குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?” புஷ்பம்மா கேட்டதும் … Continue reading “கழிமுகம் 1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 100 (இறுதி)

கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் … Continue reading “அத்தியாயம் 100 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 99

கேரளாவில் பதினான்கு மாவட்டங்களில் சாத்தான் வழிபாட்டு குழுவினர் தங்களுக்கென சர்ச்களை நிர்மாணித்துள்ளதாக ராஜிவ் சிவசங்கர் கூறுகிறார். இத்தகைய சர்ச்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட வீடுகளிலும் அப்பார்ட்மெண்ட்களிலும் செயல்படுகின்றன. இவர்கள் ‘சாத்தான் சேவா’ என்ற நிகழ்வை செய்கிறார்கள். அந்நிகழ்வின் போது சாத்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குவார், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பார் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலுகிறார்கள். அதிலும் தொழில் நொடிந்த பிசினஸ்மேன்கள் தான் இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களின் இலக்கு என்கிறார் … Continue reading “அத்தியாயம் 99”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 98

குழந்தைகளுக்குப் இளஞ்சிறார்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதும் சாத்தானிஷ வழிபாட்டின் முக்கியமான சடங்காகும். 2016ல் கேரள காவல்துறையினர் சாத்தான் கல்ட் கும்பலைச் சேர்ந்த பதினோரு பேரைக் கைது செய்தார்கள். அவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் பல ஆண்டுகளாக வன்புணர்வு செய்து வந்தது தெரிய வந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களின் ஊடுருவலால் போதைப்பொருள் மாஃபியாவும் பெருகியுள்ளது என்கிறார்கள் கேரள காவல்துறையினர். சாத்தானிஷத்தில் ஈடுபடுபவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை சுலபமாகப் பணமீட்டும் முறையாகத் … Continue reading “அத்தியாயம் 98”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 96

2017ல் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேடல் ஜேசன் ராஜா என்பவர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் உறவுக்காரப்பெண்மணியை சாத்தான் வழிபாட்டிற்காக கோடாரியால் வெட்டிக் கொலை செய்து அக்கொலையை தீவிபத்து போல சித்தரித்து அதில் தானும் மரணித்தது போல ஒரு டம்மியை வைத்து நாடகமாடிய சம்பவம் மாபெரும் அதிர்வலையை உண்டாக்கியது. அவரை இரயில் நிலையத்தில் கைது செய்து விசாரித்தபோது சாத்தான் வழிபாட்டில் ஒரு பகுதியாக ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கும் சோதனையை அவர்களை வைத்து செய்ததாகக் கூறியுள்ளார். சாத்தான் … Continue reading “அத்தியாயம் 96”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 95

2004ல் போலீசுக்கு உதவிய விக்கி ஹட்சசன் என்ற பெண்மணி காவல்துறையினரின் அவசரத்தாலும், தங்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்லவில்லை என்றால் கொலைவழக்கில் அவரையும் குற்றவாளியாக்கிவிடுவோமென்ற மிரட்டலாலும் தான் மிஸ்கெல்லி, எகோல்சுக்கு எதிராக பாலிகிராப் சோதனையில் பேசியதாகக் கூறினார். 2007ல் கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் உடலில் கட்டியிருந்த ஷூ லேஷ்களில் இருந்த தலைமுடி டி.என்.ஏ சோதனைக்காக அனுப்பப்பட்டது (90களில் இச்சோதனை கிடையாது). அதில் எகோல்ஸ், பால்ட்வின், மிஸ்கெல்லி மூவரது டி.என்.ஏவோடும் அந்த தலைமுடியிலிருந்த டி.என்.ஏ ஒத்துப்போகவில்லை. அதற்கு மாறாக அந்த … Continue reading “அத்தியாயம் 95”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 94

விக்கி ஹட்சசன் காவல்துறையினருக்கு உதவ முன்வந்தார். அதன் அடிப்படையில் சாத்தான் வழிபாடு நடக்கும் இடத்திற்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பதைக் கண்காணித்து அதில் சந்தேகப்படும்படியான நடத்தை கொண்ட மிஸ்கெல்லி என்ற பதினேழு வயது இளைஞனின் பெயரைக் குறிப்பிட்டார். மிஸ்கெல்லி, எகோல்ஸ் இருவரும் கலந்துகொண்ட சாத்தான் வழிபாடு கூட்டத்தில் அவரும் கலந்துகொண்டு அங்கே நடந்தவற்றை காவல்துறையினரிடம் கூறியுள்ளார். கூடவே அவருக்கு உண்மை கண்டறியும் சோதனையான பாலிக்ராப் டெஸ்டும் நடந்துள்ளது. அதன் மூலம் காவல்துறையினர் மிஸ்கெல்லியை விசாரிக்க ஆரம்பித்தார்கள். முதலில் குற்றத்தின் … Continue reading “அத்தியாயம் 94”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 92

1980களில் அமெரிக்காவை சாத்தானிஷ வழிபாடு திகிலூட்டியது எனலாம். நியூபெர்ரியும் அவனது மற்ற மூன்று நண்பர்களும் வசித்து வந்தது சிறிய நகரமொன்றில். அங்கே சாத்தானிஷத்தின் கொடும் கரங்கள் பரவிய விதம் ஒரு கொடூர கொலையில் முடிந்தது. அவர்களிடமிருந்து சாத்தானின் உருவப்படங்கள், சாத்தானிஷத்தின் அடையாளங்கள் பதித்த பொருட்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. காவல்துறையினர் நன்கு விசாரித்தபோது தான் இந்நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள் என்ற விபரம் தெரியவந்தது. அதிலும் ஜிம் ஹார்டி மற்றும் ரான் க்ளமெண்ட்ஸ் இருவருக்கும் மனரீதியான பாதிப்பும் போதைமருந்து உபயோகத்தால் … Continue reading “அத்தியாயம் 92”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 91

சாத்தானிஷத்தின் மீதான நம்பிக்கையால் உலகெங்கும் ஏகப்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 1987ல் அமெரிக்காவின் மிசோரி கம்யூனிட்டியை உலுக்கிய ஒரு கொலைவழக்கு தான் ஸ்டீவன் நியூபெர்ரி என்ற இளைஞனின் மரணம். அதே ஆண்டு டிசம்பர் ஆறில் தனது நண்பன் ஜிம் கார்டி மற்றும் பெட்டி ரோலண்ட், ரான் க்ளமெண்ட்ஸ் என்ற இருவரோடும் சேர்ந்து தொடர்வண்டி ட்ராக் அருகே ஒரு பூனையோடு சென்றுள்ளான் நியூபெர்ரி. இந்நால்வரும் சிறிய மிருகங்களை வதைத்துக் கொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். நியூபெர்ரி அந்தப் பூனையைக் கொல்ல … Continue reading “அத்தியாயம் 91”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 90

‘தி பீஸ்ட் ஆப் சாத்தான்’ குழுவினர் ஃபேபியோவையும் மேரினோவையும் கொன்று யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டார்கள். அவர்களைத் தேடிக் களைத்த போலீசாரும் காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போய்விட்டார்கள் என்று வழக்கை முடித்துவிட்டார்கள். ஆனால் ஃபேபியோவின் தந்தை மிச்செல் மற்றும் மேரினோவின் அன்னை லிசா இருவரும் சேர்ந்து ஆறு ஆண்டுகள் தங்கள் பிள்ளைகளைத் தேடும்படி அதிகாரிகளுடன் போராடினார்கள். அவர்களின் போராட்டம் வீணாய் தான் போனது. இது குறித்து இத்தாலிய ப்ளாக் ஒன்றுக்கு மிச்செல் பேட்டி கொடுத்தபோது அதிகாரிகள் எவ்வாறு … Continue reading “அத்தியாயம் 90”

 

Share your Reaction

Loading spinner