பரந்து விரிந்த நீலவானின் பின்னணியில் கம்பீரத்தை உடுத்திக்கொண்டு நின்றது தென்காசி காசிவிஸ்வநாதர் – உலகம்மன் கோவிலின் இராஜகோபுரம். கழுத்தை உயர்த்தி அதைப் பார்த்துக்கொண்டிருந்தான் நெடுநெடுவென வளர்ந்திருந்த வாலிபன் ஒருவன். பரமசிவனின் கழுத்திலிருக்கும் பாம்பு போல அவன் கழுத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தது கருப்பு நிற பெரிய ஸ்ட்ராபில் இணைந்திருந்த சோனி ஏ6700 கேமரா. “உஃப்” என்றபடி நெற்றியில் பூத்திருந்த வேர்வையை வழிந்தெறிந்தவன் தன்னுடன் வந்த மூன்று தோழமைகளைப் பார்த்தான். அவர்களோ சற்று தூரத்தில் தள்ளுவண்டியில் விற்றுக்கொண்டிருந்த மொறுமொறு உளுந்தவடையை சட்டினி … Continue reading “அத்தியாயம் 1”
Share your Reaction


