Header Image

 

கானல் 10 (இறுதி)

“இன்ஸ்டாக்ராம் சமூக செயலியானது குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் வயது குறைந்த சிறார்களுக்கு உள்நுழைவு தடை வைத்திருப்பதை போல இண்ஸ்டாகிராமில் எத்தடையும் இல்லை என்பதால் இக்குற்றச்சாட்டு பரவலாக அனைவராலும் வைக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 மில்லியன் குழந்தைகளின் புகைப்படங்கள் இண்ஸ்டாகிராமில் ஆபாசப்படங்களாக மாற்றி பகிரப்பட்டுள்ளதை அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான National center for missing and exploited children (NCMEC) புள்ளிவிவரத்தோடு … Continue reading “கானல் 10 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கானல் 4

“சில நேரங்களில் பெரியவர்கள் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக காட்சிப்படுத்தியதற்கான வழக்குகள் பதியப்படுகின்றன. ஜூலை 2021ல் டெல்லி பெண்கள் ஆணையம் ஓரு பெண் மீது அவரது சிறுவயது மகனுடன் நடனமாடிய வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. காரணம் அந்தப் பாடலின் வரிகள் ஒரு ஆண் பெண் மீது கொண்ட வேட்கையை விவரித்த விதமும், அதற்கு அந்தக் குழந்தை தன்னை வேட்கை கொண்ட ஆணாக சித்தரித்து நடனமாடிய … Continue reading “கானல் 4”

 

Share your Reaction

Loading spinner

கானல் 1

“சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இக்காலத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பின் தரவுப்படி ஐந்து முதல் பதினோரு வயதுக்கு இடைப்பட்ட 66 மில்லியன் பயனர்கள் இணையத்தை இந்தியாவில் உபயோகிக்கின்றனர். இந்தியாவின் இணையப்பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 12 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அடைக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கு மாணவர்கள் மாறியது தான் இணையப்பயன்பாட்டைக் குழந்தைகள் மத்தியில் … Continue reading “கானல் 1”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 5 (இறுதி)

“நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு… உங்களுக்கு எப்போ ஆச்சிய பாக்கணும்னு தோணுதோ அப்போ வாங்க… இந்தத் தடவை சின்னாவும் குட்டிமாவும் எதேச்சையா வந்தாங்கடா… என்னமோ நாங்க ப்ளான் பண்ணி கெட் டுகெதர் அரேஞ்ச் பண்ணுன மாதிரி பேசாத முன்னா” தங்களை மட்டும் அழைக்காமல் ஆச்சி வீட்டில் ஜாலியாக நாட்களைக் கழிப்பதாக குறைபட்ட மூத்தமகன் முகுந்தனிடமும் மருமகள் கார்த்திகாவிடமும் சமாதானப்புறாவைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் சந்திரகலா. முகுந்தன் அவரது மாமனாரின் பெயர். சாகேதராமனோ அவரது தந்தையின் நாமம். பெரியவர்களின் … Continue reading “கழிமுகம் 5 (இறுதி)”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 4

அன்று செங்கோட்டைக்கு ஆதவனின் அனுகிரகம் சற்று தாமதமாக கிடைத்ததன் விளைவு புஷ்பம்மா காய்ச்சி வைத்திருந்த அரிசி வடகத்திற்கான கூழினை மட்டப்பாவில் துணி விரித்து வட்ட வடிவில் ஊற்றி முடித்திருந்தனர் அவரும் குட்டிமாவும். அரிசிமாவை கூழ் போல காய்ச்சி அதில் சீரகமிட்டு வட்ட வடிவில் இடப்படும் அந்த வடகம் என்றால் குட்டிமாவிற்கு உயிர். இளம்பிராயத்தில் பள்ளி தேர்வு விடுமுறை காலங்களில் செங்கோட்டைக்கு வரும் சமயங்களில் ஆச்சியுடன் அம்மா, பெரியம்மாக்கள் மற்றும் சித்தி என அனைவரும் சேர்ந்து கூழ் வடகம் … Continue reading “கழிமுகம் 4”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 3

“இந்த மல்லிமொக்கு ஆரத்தை மாட்டிக்கடி… நம்ம போறது கல்யாண வீட்டுக்கு… உன்னோட ஆபிஸ் பார்ட்டிக்கு இல்ல” கையகல ஜரிகை வைத்த பட்டுப்புடவையின் முந்தானையை நீவியபடி அவள் அணிந்த ரூபி கழுத்தாரத்தை ஆட்சேபித்தபடி நின்றார் பூரணி, குட்டிமாவின் அன்னை. “ப்ச்! நீ ரொம்ப ஓவரா பண்ணுறம்மா… விட்டா என்னை அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி நடமாடும் நகைக்கடையா மாத்திடுவ போல” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவர் சொன்ன மல்லிமொக்கு ஆரத்தை அணிந்து கொண்டாள் குட்டிமா. … Continue reading “கழிமுகம் 3”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 2

“நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா? கேட்காத வரமா?” காதில் கீதமிசைத்த மொபைலை போர்வைக்குவியலுக்குள் பொதிந்து கிடந்த தனது தலையை உயர்த்தி பார்த்தான் சின்னா. தொடுதிரையில் சாந்தப்புன்னகை தவழும் அன்னையின் புகைப்படம் ஒளிர்ந்து பச்சை மற்றும் சிகப்பு வண்ண தொலைபேசி அடையாளங்களை நர்த்தனமாட விட்டிருக்க உடனே போர்வையை எறிந்துவிட்டு மொபைலைக் காதுக்குக் கொடுத்தான் அவன். “சொல்லுங்கம்மா” பேசும் போதே கைமறைவில் கொட்டாவி வந்துவிட்டது. “என்ன சொல்லுங்கம்மா? இன்னையோட குட்டிமா செங்கோட்டைக்குப் போய் மூனு … Continue reading “கழிமுகம் 2”

 

Share your Reaction

Loading spinner

கழிமுகம் 1

சலசலத்து ஓடும் குண்டாற்றின் நீரோட்டத்திற்கு எதிராக புஷ்பம்மாள் துணியை அலசுவதை வேடிக்கை பார்த்தபடி படித்துறையில் அமர்ந்து கால்களை நீரில் அலைய விட்டுக் கொண்டிருந்தாள் அவள். நீரின் ஜில்லிப்பு கால்களினூடே உடலுக்குள் பரவி அந்தக் காலைப்பொழுதின் குளுமையில் இன்னும் இருபது சதவிகிதத்தை இலவச இணைப்பாக அளித்ததைப் போல உணர்ந்தாள். “குட்டிமா நீ சின்னப்புள்ளையா இருக்கச்ச ஒரு தடவை இதே படிக்கட்டுல பின்னாடி பாக்க உக்காந்து விளையாடுறேனு சொல்லி தண்ணிக்குள்ள விழுந்துட்ட… அது உனக்கு ஞாபகம் இருக்குதா?” புஷ்பம்மா கேட்டதும் … Continue reading “கழிமுகம் 1”

 

Share your Reaction

Loading spinner

அன்பு 8

நம்மில் பலருக்கு வாழ்க்கையின் எதார்த்தம் புரிவதில்லை. காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் நாம் ‘Pure soul’ வகையறா ஆட்களையோ அல்லது ‘Evil hearted’ வகையறா ஆட்களையோ எதிர்பார்க்கிறோம், தேடுகிறோம். ஆனால் இங்கே பரிசுத்தமான மனிதன் என யாருமில்லை என்ற நிதர்சனம் நமக்குப் புரிபடுவதற்குள் அனேகம் முறை வாழ்க்கை அனுபவப்பாடத்தை எடுத்திருக்கும். யாரும் இறகில்லாத தேவதைகள் / தேவதூதர்கள் போல இருப்பதில்லை. அதே நேரம் கொம்பு முளைத்த சாத்தானாக யாரைக் கெடுக்கலாம் என்று முழுநேரமும் சிந்திப்பவர்களும் இல்லை. சூழ்நிலை ஒரு … Continue reading “அன்பு 8”

 

Share your Reaction

Loading spinner

எபிலாக்

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு… என்.எஸ்.என் நிவாசம், குலவணிகர்புரம்… “இன்னும் பெரிய சர்க்கிள் போடுங்கம்மா,” மலர்விழியிடம் தனது உள்ளங்கையில் இருக்கும் மருதாணியால் போடப்பட்ட வட்டத்தை இன்னும் பெரிதாக்குமாறு கேட்டான் கதிர்காமன். “போதும்டா குட்டி. இதுக்கு மேல பெருசா போட்டா உள்ளங்கை முழுக்க ரெட்டிஷ் ஆகிடும்,” மகனிடம் அவனைப் போலவே மழலையில் மிழற்றியபடி மருதாணி வட்டத்தைப் போட்டு முடித்தாள் மலர்விழி. “ஐ! உங்க கை ஆரஞ்ச் கலர் ஆகிடுச்சு!” குழந்தை ஆச்சரியமாய்ப் பார்த்துக் குதூகலமாய் சொல்லும்போதே, “உங்கம்மாவுக்குப் பித்த உடம்புடா குட்டி. … Continue reading “எபிலாக்”

 

Share your Reaction

Loading spinner