Header Image

 

அத்தியாயம் 23

மனப்பிறழ்வுக்குறைபாடு அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறைபாடு ஆகும். ஆனால் இக்குறைபாட்டைக் கண்டறிய மருத்துவ சோதனைகளான இரத்தச் சோதனை, மூளை ஸ்கேன், மரபியல் பரிசோதனை போன்று எந்தச் சோதனையும் கிடையாது. அவர்களை சில குணாதிசயங்களை வைத்து கண்டுகொள்ளலாம். பெரும்பாலும் அவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், அதீத கவர்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தங்களது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறுவார்கள். யாரிடமும் அன்பு பாராட்டத் தெரியாமல் அடுத்தவர்களை தங்களது பேச்சு சாதுரியத்தால் ஏமாற்றும் குணம் கொண்டவர்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாமல் விளைவுகளைப் பற்றிய … Continue reading “அத்தியாயம் 23”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22

மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு மரபியல் மற்றும் சூழல் காரணங்களும் ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஆனால் இவை நேரடி காரணிகள் அல்ல. அதாவது சிலவிதமான நரம்பியல் கட்டமைப்புகளை கொண்ட மூளை வடிவமைப்பு மனப்பிறழ்வுக்குறைபாட்டை ஒரு மனிதனுக்குள் உண்டாக்கும். மனித மூளையில் தற்காப்பு மற்றும் பயத்தை உணர்வதற்காக இருக்கும் பகுதி ‘அமிக்டலா’. இதுவே ஒரு சூழலில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் பகுதியாகும். சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அமிக்டலா பகுதி மற்ற குழந்தைகளின் அமிக்டலாவை விட கொஞ்சம் மாறுபட்ட அமைப்போடு காணப்படும். … Continue reading “அத்தியாயம் 22”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும், மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுவதில்லை. அதே போல உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் மனப்பிறழ்வுக்குறைபாடு இருப்பதுமில்லை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சவால்கள் இருக்கும். சில நேரங்களில் மனப்பிறழ்வுக்குறைபாடு வன்முறையாக வெளிப்படுவதில்லை. திருடுதல், ஏமாற்றுதல் போன்ற சமூக விரோத செயல்களாகவும் மனப்பிறழ்வுக்குறைபாடு வெளிப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாம் வயது மற்று பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகின்றனவாம். … Continue reading “அத்தியாயம் 19”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14

உளப்பிறழ்வுக்கான காரணங்கள் என்னவென இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும் வளர்ந்து வரும் ‘நியூரோ இமேஜிங்’ ஆராய்ச்சியானது மனித மூளையிலுள்ள நரம்பியல் அசாதாரணங்களையும் அதன் அறிகுறிகளையும் அடையாளம் கண்டுள்ளது. உதாரணமாகஉளப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களின் மூளைக்குப் பயம் என்ற உணர்வை உணரும் தன்மை குறைவு என்கிறது அந்த ஆராய்ச்சி. இதே அறிகுறி சில பெண்களுக்கும் இருக்கலாமென அந்த ஆராய்ச்சி கூறுகிறது. மூளையிலுள்ள உணர்வுகளைக் கையாளக்கூடிய பகுதியான அமிக்டலாவின் நரம்பியல் சுற்றுகளில் ஏற்படும் சில வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சில … Continue reading “அத்தியாயம் 14”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் கெவின் டட்டன் தன்னுடைய ‘The wisdom of Psychopaths: What Saints, Spies and Serial Killers can teach us about success’ என்ற புத்தகத்தில் உளப்பிறழ்வுக்குறைபாட்டின் நேர்மறையான பண்புகள் சிலவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளார். உளப்பிறழ்வு என்பது காய்ச்சல் தலைவலி போல முழுமையான ஒரு நோய் அல்ல. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அளவில் பாதிப்பை உண்டாக்கும். சிலர் அதனால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுத் தீவிரநிலையை அடைவார்கள். சிலருக்கோ அறிகுறியோடு முடிந்துவிடும் … Continue reading “அத்தியாயம் 13”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 11

தாமஸின் ‘சோசியோபாத் வேர்ல்ட்’ என்ற வலைப்பூ உளப்பிறழ்வுக் குறைபாட்டாளரோடு வாழும் வாழ்க்கை எப்படி இருக்குமென்பதை பற்றிய பதிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் தாமஸ் ‘சைக்கோபாத்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘சோசியோபாத்’ என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார். அதை மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால் பயன்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார் அவர். தாமஸ் எழுதிய ‘A Life spent hiding in Plain Sight’ என்ற புத்தகம் 2012ல் வெளியாகி பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் … Continue reading “அத்தியாயம் 11”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 12

2012ல் ஜூரிச் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உளப்பிறழ்வுக்குறைபாடு அதாவது சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைத் தங்களது சிரிப்பால் தந்திரமாகக் கையாளுவதாகத் தெரிய வந்துள்ளது. பிறரோடு நடைபெறும் உரையாடலைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அவர்கள் சிரிப்பைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் புலனாகியிருக்கிறது. தாமஸ் தனது வலைப்பூவில் அவருக்குத் தினசரி தோன்றும் எண்ணங்களைப் பகிர்கிறார். அவரது வலைப்பூவின் வாசகர்களுக்கு அவரது தினசரி பதிவுகளும் வீடியோக்களும் ஆற்றுப்படுத்தும் இடமாக இருப்பதாகக் கூறுகிறார் அவர். ஏனெனில் அந்தப் பதிவைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களது … Continue reading “அத்தியாயம் 12”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 10

உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலை இருக்காது என்றும், அடுத்தவர்களின் எண்ணங்கள் அவர்களைப் பாதிக்காது என்றும் அந்நோயால் பாதிக்கப்பட்ட விக்டோரியா என்ற பெண்மணி கூறுகிறார். உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ‘Us’ என்ற ஆன்லைன் கம்யூனிட்டியைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அந்தக் கம்யூனிட்டியானது பெரும்பாலும் எழுத்தாளர் எம்.இ.தாமசின் வலைப்பதிவுகளை மையமாகக் கொண்டிருக்கும் என்கிறார் அவர். எழுத்தாளர் எம்.இ.தாமஸ் என்பவர் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே மிகவும் பிரபலம். டெக்சாஸ் ஏ&எம் … Continue reading “அத்தியாயம் 10”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 9

உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களை விட பெண்கள் ஏன் சமூக விரோத செயல்களிலும், குற்ற செயல்களிலும் குறைவாக ஈடுபடுகின்றனர் என்பதை பற்றி ஆராய்வது சுவாரசியமாக இருக்கக்கூடும் என்கிறார் அன்னா சான்ஸ் கார்சியா. இந்தக் காரணங்களைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் அரைகுறையாக நின்று போயிருந்தாலும் சமீபத்தில் ஃப்ரான்சில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் சாத்தியமான பதிலொன்று கிடைத்திருக்கிறது. சைக்கோபதி என்ற உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நட்புணர்வின்மை, ஜடத்தன்மை ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் இந்த உணர்வு குறைவு. … Continue reading “அத்தியாயம் 9”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 8

மாட்ரிட் பல்கலைகழகத்தில் உளவியல் ஆய்வு மாணவியான அன்னா சான்ஸ் கார்சியா தனது சகமாணவர்களோடு இணைந்து பதினோராயிரம் நபர்களை வைத்து உளப்பிறழ்வுக் குறைபாடு பற்றிய பகுப்பாய்வு ஒன்றை 2021ல் மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் பெண்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களிடமும் உளப்பிறழ்வுக் குறைபாடான சைக்கோபதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்பதை வலியுறுத்தியிருந்தார் அன்னா சான்ஸ் கார்சியா. பிபிசிக்கு அவர் கொடுத்த பேட்டியில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களை விட குறைவாகவே வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner