Header Image

 

ஸ்வரம் 9

என் அதிகாரத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை, அவளை மயக்கும் மெல்லிசையாகவே ஒலிக்கவிட்டேன்; அவளது வெட்கம் கலந்த மறுப்புகளையெல்லாம் மூழ்கடித்து அவளை முழுமையாக எனக்காய் அடிபணிய வைக்க! நேத்ரன் நிச்சயதார்த்தத்திலிருந்து கிளம்பியது எதனால் எனப் புரியாமல் மறுநாள் பள்ளிக்குச் சேர்ந்தாள் வெண்பா. காலை அவளது வகுப்பு மாணவர்களைப் பெற்றோர் கொண்டு வந்துவிடும் இடத்தில் அவள் நிற்கவேண்டும். அங்கிருந்து வகுப்பறைக்கு அழைத்துச் செல்லவேண்டும். நேரே ஸ்டாஃப் ரூமுக்குச் சென்றவள் அவளது ஹேண்ட்பேக்கிலிருந்து கைக்குட்டையை எடுத்தபோது பேனா ஒன்று கீழே விழுந்து … Continue reading “ஸ்வரம் 9”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 7

ஹோட்டல் டெய்சி கிராண்டே…   நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஒன்று. மேல்தட்டு மக்கள் மட்டுமே வந்து செல்லக் கூடிய இடமும் கூட. ஆறடுக்குகளில் கண்ணாடியாய் மின்னிய கட்டிடமும், பரந்த வாகன தரிப்பிடமும், பிரமிக்க வைக்கும் அதன் உள்கட்டமைப்பும் காண்போரைத் திகைக்க வைக்கும். அங்கே தான் பவானி மற்றும் நவீனின் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது. அமைச்சர் செழியனின் தரப்பில் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அவர்களைத் திருமணத்துக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் அவர். எனவே அவரது உறவினர்கள், நண்பர்கள் … Continue reading “கண்மணி 7”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 6

பவானி சிவசங்கரின் மனதிலுள்ளதை அறிய விரும்பி மனம் புண்பட்டுத் திரும்பிய தினத்தன்று இரவில் அவள் தந்தை சொன்னபடி நவீனை மணக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டாள். ஜெகத்ரட்சகனுக்குத் தன் மகள் தனது பேச்சைத் தட்டமாட்டாள் என்ற எண்ணம் மீண்டும் ஒரு முறை வலுப்பட அஞ்சனாதேவியும் அருணும் பவானிக்கு அமையப் போகும் நல்வாழ்வை எண்ணி மகிழ்ந்தனர். அதன் பின்னர் அனைத்துமே வேகமாக நடந்தது. ஒரு நல்ல நாளில் அமைச்சர் செழியனும் அவரது மனைவி கயல்விழியும் பவானியைப் பார்த்துவிட்டுப் பூ வைத்துச் சென்றனர். … Continue reading “கண்மணி 6”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 5

ஜெகத்ரட்சகன் அமைச்சர் செழியன் வீட்டுச் சம்பந்தம் மகளுக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருக்கும் செழியனுக்குமான பழக்கம் தொழில்ரீதியான நட்பையும் தாண்டி இன்று இருவரும் சம்பந்திகள் ஆகிவிட்ட பூரிப்பு அவர் முகத்தில் தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. அஞ்சனாதேவியும் மகளுக்கு அமையப் போகிற ராஜவாழ்க்கையை எண்ணி மகிழ்ந்திருக்க அருண் மட்டும் நவீனைப் பற்றி யாருமறியாது விசாரிக்க ஆரம்பித்தான். விசாரித்த வரையில் அவனைப் பற்றி யாரும் குறைவாகச் சொல்லாத நிலையில் அவனுக்கும் இச்சம்பந்தத்தில் சம்மதமே! ஆனால் இதையெல்லாம் நினைத்து யார் மகிழ … Continue reading “கண்மணி 5”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 4

அஞ்சனா விலாசம்… அன்று வார விடுமுறை நாள் என்பதால் பவானி மிகவும் தாமதமாக தான் கண் விழித்தாள். முந்தையநாளின் சம்பவங்கள் உண்டாக்கிய சோகம் மனதில் இன்னும் மிச்சமிருந்தது. சோர்வாய் எழுந்து அமர்ந்தவளின் கரம் படுக்கையின் அருகே கிடந்த மேஜையின் அறையிலிருந்து ஒரு டைரியை எடுத்தது. அளவில் சற்று பெரியது தான். கிட்டத்தட்ட ஆறு வருடத்தின் முக்கிய நினைவுகளை உள்ளடக்கிய பொக்கிஷம் அல்லவா! அதன் பக்கங்களில் இருப்பது வெறும் எழுத்துக்கள் அல்ல! பதின்பருவத்தின் முடிவில் அவள் மனதில் சிவசங்கரின் … Continue reading “கண்மணி 4”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 3

சாந்திவனம்… எப்போதுமே உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லா இல்லம் அது. வீட்டுத்தலைவரான சுவாமிநாதனின் நேர்மைக்குணமும் அவரது சகதர்மிணி அன்னபூரணியின் அன்பும் தான் அந்தப் பெரியக் குடும்பத்தைக் கட்டிப் போட்டிருக்கும் கயிறுகள். அவரது வார்த்தைக்கு மறுபேச்சு பேசாத தவப்புதல்வன் தான் ஞானதேசிகன். தந்தையின் வழக்கறிஞர் தொழிலின் மேல் உண்டான பிரேமையால் தானும் சட்டம் படித்து தந்தையிடம் தொழில் நுணுக்கங்களைக் கற்றறிந்தவர் நகரின் பெரிய வணிகநிறுவங்களுக்கு இன்று சட்ட ஆலோசகர்! அவருக்கேற்ற அன்பான வாழ்க்கைத்துணைவியாக வாய்த்தவர் தான் லோகநாயகி. அன்பான அன்னை; … Continue reading “கண்மணி 3”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 8

உன் மீது மென்னிலவின் ஒளியைப் பொழிவதற்காகவே, எனக்குள் இருக்கும் காட்டுத்தீயை மறைத்து வைத்திருக்கிறேன். ஆனால் நான் விட்டுச்செல்லும் சாம்பலை நீ காண நேர்ந்தால், அப்போதும் என்னை உனக்கான ஒருவன் என்று ஏற்பாயா?  துர்கா புகழேந்தியிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள். “அவங்க ரெண்டு பேரும் நம்ம எல்லாரோடவும் ஐஸ்பால் விளையாடுறாங்க புகழ். அதெல்லாம் பிடிச்சிருக்கு அவங்களுக்கு. நம்மகிட்ட காட்டிக்கவும் செய்றாங்க. ஐயோ அன்னைக்கு ஆரெம்கேவில நடந்துச்சே ஒரு சீன். அதை அப்பிடியே ரெக்கார்ட் பண்ணி இன்ஸ்டால ரீல்ஸா போட்டிருந்தோம்னா வைரல் … Continue reading “ஸ்வரம் 8”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 2

மாநகரத்தின் இயந்திரத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் அழகான மலர்வனமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது ‘அஞ்சனாவிலாசம்’ என்ற பங்களா. வீட்டுக்கு அரணாய் நிற்கும் காம்பவுண்ட் சுவர்களும் அந்த அரணின் நடுவே இரும்பினாலான கேட்டும் அந்த வீட்டுக்குக் கோட்டை போன்ற உருவமைப்பைத் தந்தது என்றால் அது மிகையாகாது. வீட்டைச் சுற்றிலும் உள்ள நெடிய மரங்களில் தஞ்சமடைந்திருந்த பறவைகளின் கீச் கீச் என்ற ஒலியுடன் அந்த வீட்டின் மகாராணியும் இல்லத்தரசியுமான அஞ்சனாதேவியின் குரலில் கணீரென்ற கானம் … Continue reading “கண்மணி 2”

 

Share your Reaction

Loading spinner

கண்மணி 1

கதிரவனின் பொற்கதிர்களின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்றைய தினம் அழற்கதிரவன் கொஞ்சம் கருணை காட்டியதால் வெயிலின் கடுமை சற்று குறைந்திருந்தது. அந்தச் சிவாலயத்தில் உலகாளும் ஈசனுக்கும் உமையவளுக்கும் அபிசேகம் நடந்து கொண்டிருக்க கருவறைக்கு வெளியே பக்தர்கள் கூட்டத்துடன் நின்றாலும் தன் உயரத்தால் தனித்துத் தெரிந்த அந்த எழுபது வயது முதியவர் கரம் கூப்பி விழி மூடி உருக்கத்துடன் ஈசனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். வயோதிகத்திலும் கம்பீரம் மின்னும் முகத்தில் திருநீற்றுப்பட்டை ஜொலிக்க, கழுத்தில் ருத்திரனின் … Continue reading “கண்மணி 1”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 7

நமது உலகங்களுக்கு இடையிலான வேலிகளைத் தகர்க்கும் காட்டுத்தீயாய் மாறவே என் இதயம் ஏங்குகிறது. ஆனாலும், உன் மனமெனும் அழகிய வனத்தைப் பாதுகாப்பதற்காக என்னை நானே தூரத்தில் நிறுத்திக் கொள்கிறேன். அழகான மெஜந்தா பிங்கில் கட்டங்களாய் ஓடும் ஜரிகைக்கு இடையே பூ வடிவ மோட்டிஃப்கள் உடலெங்கும் பரவிக்கிடக்க பெரிய ஆலிவ் பிரவுன் நிற பார்டரில் மலர்க்கொடிகள் ஜரிகையாய் விரிந்துகிடந்த பட்டுப்புடவையை வருங்கால மருமகளுக்கான பரிசாகத் தேர்வு செய்திருந்தார் குந்தவை. அவர் தேர்வு செய்தபோதே ஓரக்கண்ணால் மகனோடு பேசிக்கொண்டிருக்கும் வெண்பாவைப் … Continue reading “ஸ்வரம் 7”

 

Share your Reaction

Loading spinner