Header Image

 

பூங்காற்று 28

நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆஃப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை நீரஜாட்சிக்கு. அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான் ரகுநந்தன். தோட்டத்தில் அமர்ந்திருப்பவளைக் கண்டதும் அவளை நோக்கிச் சென்றவன் “இங்கே உக்காந்து என்ன பண்ணிண்டிருக்க?”என்ற கேள்வியுடன் அவனும் ஊஞ்சலில் அமர நீரஜாட்சி நகம் கடிப்பதை நிறுத்திவிட்டு கவலையுடன் அவனைப் பார்த்தாள். “கிருஷ்ணாவும் லின்னும் வரலை! அவங்களுக்கு … Continue reading “பூங்காற்று 28”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 25

மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நீரஜாட்சி திரும்பிய போது நேரம் கிட்டத்தட்ட ஏழு மணியை நெருங்கியிருந்தது. ஸ்கூட்டியைப் பூட்டிவிட்டு சாவியுடன் அவுட் ஹவுஸை நோக்கி நடைப்போட்ட போது ரகுநந்தனின் கார் வீட்டின் நுழைவாயிலில் உள்ளே வருவதைக் கண்டவள் அதைக் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் செல்ல முற்பட அதற்குள் காரில் இருந்து இறங்கியவன் “நீரு” என்று அழைத்ததில் அங்கேயே நின்றபடி திரும்பினாள் அவள். என்ன என்றவாறு அவனைப் பார்க்க ரகுநந்தன் சாவகாசமாக அவள் அருகில் வந்தவன் அவள் கையைப் … Continue reading “பூங்காற்று 25”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 23.1

நீராஜாட்சி கிருஷ்ணஜாட்சியுடன் தோட்டத்தில் கால் பதித்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தது ரகுநந்தனின்  கார். காரிலிருந்து பட்டாபிராமனின் தோளைப் பிடித்து அவரை இறக்கி விட்டவன் அவர்களுடன் வந்த கரோலினிடம் அவரை அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு “மெதுவா நடங்க தாத்தா” என்றபடி பார்வையை வீட்டை நோக்கித் திருப்பவும் அங்கே கையில் சூட்கேசுடன் நின்று கொண்டிருந்த சகோதரிகளையும் கண்டு அதிர்ந்தான். இந்த திருமணம் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது அவன் அறிந்தது தான். ஆனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு என்னவாயிற்று … Continue reading “பூங்காற்று 23.1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 22

பத்மாவதி நடந்த எதையும் நம்ப இயலாதவராய் இடிந்து போய் நின்றவர் மீண்டும் ஒரு முறை மணமேடையில் மகனுடன் நின்றிருந்த கிருஷ்ணஜாட்சியை நோக்க அவள் கழுத்திலிருந்த மாங்கல்யம் அவரைப் பார்த்துச் சிரித்தபடி நடந்தது அனைத்தும் உண்மையே என்று அவர் முகத்தில் அறைந்தது. அவரின் மனக்கண்ணில் அரை மணி நேரத்துக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் நிழலாடத் தொடங்கின. பட்டாபிராமன் பேத்தியின் பேரனின் கையையும் சேர்த்து வைத்து கண்ணீர் உகுக்க கூட்டத்தினர் இன்னும் சளசளத்துக் கொண்டு தான் இருந்தனர். வேங்கடநாதன் பேரன் … Continue reading “பூங்காற்று 22”

 

Share your Reaction

Loading spinner

கானல் 1

“சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இக்காலத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பின் தரவுப்படி ஐந்து முதல் பதினோரு வயதுக்கு இடைப்பட்ட 66 மில்லியன் பயனர்கள் இணையத்தை இந்தியாவில் உபயோகிக்கின்றனர். இந்தியாவின் இணையப்பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 12 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அடைக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கு மாணவர்கள் மாறியது தான் இணையப்பயன்பாட்டைக் குழந்தைகள் மத்தியில் … Continue reading “கானல் 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 18

அன்று வீட்டுக்குத் திரும்பிய ரகுநந்தனுக்கு அவன் தந்தையிடமிருந்து கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு வருமாறு அழைப்பு வர நீரஜாட்சியை வீட்டில் இறக்கிவிட்டு கம்பெனியை நோக்கிச் சென்றான். அண்ணன் நிச்சயதார்த்தம் ஒரு புறம் இருந்தாலும் அவனது இலட்சியமான அந்த கம்பெனியும் அவனது மனதிலிருந்து அகலவில்லை. அங்கே சென்றதும் கம்பெனி செகரட்டரி, ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகர் அனைவருக்கும் மகனை அறிமுகப்படுத்தி வைத்த வேங்கடநாதன் இனி கம்பெனியின் பொறுப்பை அவன் தான் பார்த்துக் கொள்ளப் போகிறான் என்பதையும் அவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அவனுக்கு … Continue reading “பூங்காற்று 18”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 17

ஹர்சவர்தனுடன் காரில் ஏறிய கிருஷ்ணஜாட்சி ஹோட்டலை அடையும் வரை அவனுடன் எதுவும் பேசவில்லை. காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அவனுடன் இறங்கி நடந்து வரும் போது அவன் கீழே கவனிக்காமல் சென்றதில் கல் தடுக்கி விழப் போக அவனை விழாமல் கைப்பற்றி தடுத்தவள் “ஹர்சா பார்த்து நடக்க மாட்டிங்களா?” என்று அக்கறையுடன் கூற ஹர்சவர்தன் அவனது பெயரே அன்று அழகாக மாறிவிட்டது போல தோன்றியது. கிருஷ்ணஜாட்சியை புருவம் உயர்த்தி நோக்கியபடி “கிருஷ்ணா நீ என் பேரை சொல்லி கூப்பிட்டியா?” … Continue reading “பூங்காற்று 17”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 16

பத்மாவதியிடம் தான் அவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்வதாகச் சொல்லிவிட்டு வந்தாலும் நீரஜாட்சிக்கு இப்போதும் அங்கே செல்வதில் தயக்கமே. தேவை இல்லாத விஷயத்துக்கு மாமி பயப்படுகிறாரோ என்று எண்ணியவள் இன்னொரு முறை அவரிடம் சென்று பேசிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கிருஷ்ணஜாட்சியிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள். விஜயலெட்சுமி இரவாகியும் இன்னும் கிளம்பாமல் பத்மாவதியுடனே சுற்றிக் கொண்டிருந்தவர் நீரஜாட்சியைக் கண்டதும் “பத்மா குழந்தே உன்னைத் தான் பார்க்க வந்திருக்கா போலிருக்கு. நேக்கும் நாழியறதுடி. நான் ஆத்துக்கு கிளம்பறேன்” என்றுச் … Continue reading “பூங்காற்று 16”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 15

வீட்டுக்குள் நுழையும் போதே வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும் பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார். அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை. மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின் குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால் அவரிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. … Continue reading “பூங்காற்று 15”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 14

நீரஜாட்சியை அமர்த்திக் கொண்டு கற்பனையில் மிதந்தபடி சென்றவனின் பைக் என்னவோ சாலையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் சொந்தக்காரன் தான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். பைக்கை ஓட்டியபடியே “ஏன் நீரு கன்சாலிடேட்டட் மார்க் ஷீட், புரொவிஷனல் சர்டிஃபிகேட் வாங்க ஏன் இவ்ளோ ஆர்வமா போற? எப்பிடியும் மன்த் ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட் பண்ணுவாங்களே? மெதுவா வாங்கிக்க கூடாதா?”என்று வாயை விட அவன் பின்னே கடமையே என்று அமர்ந்து வந்த நீரஜாட்சி “எவ்ளோ சீக்கிரம் அதை கையில வாங்குறேனோ … Continue reading “பூங்காற்று 14”

 

Share your Reaction

Loading spinner