
Kiranmali nadesan review
வனவாசம் முடித்து போர் செய்ய வந்தவன் அருள்மொழி,
தன்னை மறந்தானே! என்று துடிக்கும் வானதி,
இவளை கண்டவுடன்
தான் வந்த காரியத்தை மறந்தவனாய் அவளுக்காக துடித்தான்
நினைவில் இல்லை என்றவளுடன் ஒரு திருமணம்.,
எதிராளியாக நின்று சமர் செய்தார்களா?? இல்லை,
சமரசம் செய்து கொண்டார்களா??
விடை யுத்த காண்டத்தில்!!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Bharani Sis Review
நித்யா மாரியப்பனின்
யுத்த காண்டம்.
பாலகன் வயதில் ஒட்டு மொத்த
குடும்பத்தையும் தீ வாரி அணைக்க அதன்
காரண கர்த்தாக்களை பழி
தீர்க்கும் வெறி அருள் மொழியின்
மனதில் அணையாத தீப்பொறியாக அவன் வயதுடன்
சேர்ந்தே பயணிக்கிறது.
இலக்கினை அடைய காலமும் நேரமும் கனிந்து வரும் போது
சிறு வயது நட்புப் பெண்ணான
வானதி அவனின் மனதில்
குளிர்ச்சியாகத்தான் இறங்குகிறாள்.
திருமணத்திற்குப் பின்னான
மோதல் இருவரையும் எதிர் எதிர்
துருவங்களாக நிற்க வைத்தாலும்
அடி மனதின் காதல் அவர்களின் உறவை விட்டுக் கொடுக்க நினைக்கவில்லை.
கணவன் மனைவி இடையே
நடக்கும் யுத்தத்தை காதல்
தடுத்து புரிதலுடனான இல்லறத்தை வளமையாக்குவது
மிகவும் சிறப்பு.
கடைசி மூன்று நான்கு அத்தியாயங்கள் நித்யாவின்
எழுத்துக்களில் சுவாரசியமாக
நகர்கிறது.
அருள் - வானதி மோதல்
கல்யாணம் காதலுடனான
யுத்த காண்டம் சுகமாக
மனதை வருடுவது நிஜம்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Shafna Rangarajan review
#யுத்தகாண்டம்_விமர்சனம்
அரசியல் கதை களம் 🔥
கதைக்கு ரொம்பவே பொருத்தமான தலைப்பு ❣️
அருள்மொழி - வானதி இந்த பெயர் கேட்டா உங்களுக்கு என்ன நியாபகம் வருது?
எனக்கு கொஞ்சமே கொஞ்சம் காதல், சூழ்ச்சி, வன்மம், கோபம்,இழப்பு, நட்பு, குடும்பம், பாசம், அதிகாரம், துரோகம் மற்றும் வலி இது எல்லாமே நியாபகம் வருது. இது அத்தனையும் இந்த கதையிலும் இருக்கு ♥♥
அரசியல் காரணத்தினால் தன் நண்பன் சுந்தரமூர்த்தியின் குடும்பத்தை அழித்துவிடுகிறார் ஜெயசந்திரன். அதில் தப்பி பிழைக்கும் அருள்மொழி🥺
பல வருட காத்திருப்பிற்க்கு பிறகு பழித்தீர்க்க பூகம்பமாய் வரும் அருள்.பூகம்பம் நல்லவர் கெட்டவர் பார்ப்பதில்லையே !!! இந்த பூகம்பத்தில் சிக்கிக்கொள்ளும் வானதி 😍 பிறகு என்ன இரணகளம் தான் 🤣🤣
சரி இந்த கதையில் என்ன சிறப்புனு பார்ப்போம்,
🔥 ஒவ்வொரு கதைக்கும் ஒரு நிறம் உண்டு. இறுதி வரையிலும் அந்த நிறம் மாறாமல் இருப்பது சிறப்பு 👌👌
🔥கதைக்கு ஏற்றதுபோல் வசனங்களும் கதாபாத்திர படைப்பும் அருமை 😍
அருள்நதி நான் இதுவரையிலும் இப்படி ஒரு கணவன் மனைவியை பார்த்ததே இல்லடா டேய்😅😅 இவங்க இரண்டுபேரும் ஒரு காட்சில இருந்தா அங்க சண்டையே பிரதானம் ஆனால் சண்டை போட போட திடீர்னு ஆஃப் ஆகிடுறா நதி எப்படிறா 😅😅😅
வானதி அவளின் நட்பும் எப்படியாவது அருளின் நினைவை மீட்டெடுக்க போராடும் முனைப்பும் அருமை ❣️ அவளின் கடிதங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தது 😍
நல்ல மகளும் கூட 😍😍
அருள் முழுமையாக வானதியை ஏற்கவும் முடியாமல் தள்ளி நிறுத்தவும் முடியாமல் அவளை காயப்படுத்தி அதில் இவன் வலி கண்டு அப்பப்பா ❣️❣️
தொழிலையும் தனிபட்ட வாழ்வையும் எப்படி இப்படி பிரித்து பார்க்க முடிகிறது. இன்னும் எனக்கு ஆச்சரியம் தான் 🙄🙄
அவனின் லொயாலிட்டியும் இவளின் ஓவர் ரேட்டட் காதலும் நல்லா இருக்கு 😍
அந்த அருள்மொழியும் இந்த அருள்மொழியும் பதவியை தவிர்த்து களப் பணியை தேர்ந்தெடுத்தது மிகவும் பிடித்தது ❣️❣️❣️
வித்தியாசமான கதை விரும்பிகளுக்கு இது நிச்சயம் நல்ல விருந்து 🔥
வாழ்த்துக்கள்👍🎉🎊
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan






