
பராசக்தி – தீ
இது அரசியல் படம் இல்ல. அரசியல் பின்னணியில நடக்குற மாணவர் போராட்டம் பத்தின கதை. தலைவர்களை மட்டுமே வச்சு எடுக்கப்பட்ட படங்களுக்கு மத்தியில, இந்தித் திணிப்பை எதிர்த்த சாமானிய மக்களும், மாணவர்களும் என்ன மாதிரியான சவால்களைச் சந்திச்சாங்கனு காட்டுற படம் இது. "தமிழ்நாட்டுல இந்தி எதிர்ப்பு இருந்ததால நான் இந்தி படிக்காம போயிட்டேன்னு" வரலாறு தெரியாம புலம்புறவங்க இந்தப் படத்தைப் பாத்தா, தமிழ்நாடு ஏன் இந்தித் திணிப்பை எதிர்த்துச்சுனு புரிஞ்சுக்கலாம். மொத்தத்துல தாய்மொழி நம்மளோட அடையாளம். அதை விழுங்க வர்ற எதையும் எதிர்க்கலாம். அவ்ளோதான் படம்.
தமிழ் மட்டுமில்லாம தென்னிந்திய மொழிகள் எல்லாமே ஒரு கட்டத்துல இந்தித் திணிப்பை எதிர்த்ததை இந்தப் படம் மூலமா தெரிஞ்சுக்க முடிஞ்சுது. படத்தோட தயாரிப்பு நிறுவனம், வெளியீட்டு நிறுவனத்தை வச்சு கருத்தியல் மற்றும் அரசியல்ரீதியான வன்மத்தைக் கக்குறவங்க, ஆச்சரியக்குறிகள் எல்லாம் இந்தப் படத்தைத் தாராளமா தவிர்க்கலாம். ஏன்னா பாத்தாலும் படம் சொல்ல வர்ற கருத்து அவங்களுக்குப் புரியப்போறதில்ல. சோ, வழக்கம் போல புரபகேண்டா படங்கள், மாஸ் மசாலா படங்களுக்குச் சில்லறையைச் சிதறவிடட்டும் அவங்க எல்லாரும்.
சிவகார்த்திக்கேயன்ங்கிற கதாநாயக பிம்பத்தை ரசிக்கிறதுக்கான படம் இல்ல இது. எப்படி 'அமரனை' நம்மளால உணர்வுப்பூர்வமா ரசிக்க முடிஞ்சுதோ, அப்படியே 'பராசக்தியையும்' ரசிக்கலாம். பெங்களூருல இந்தப் படத்தைப் பாத்ததுல எனக்குச் சின்னதா ஒரு சந்தோஷம் – இங்க எந்த ஆச்சரியக்குறியும் சம்பந்தமில்லாம அரைவேக்காட்டுக் கூச்சல் போடல. வந்தவங்கள்ல பெரும்பான்மையானவங்க ஜென் ஜி (Gen Z). அவங்க தமிழ் மொழி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வசனத்தையும் ஆர்ப்பரிப்போடவும் விசிலோடவும் ரசிச்சதை என்னால கவனிக்க முடிஞ்சுது. எங்க வீட்டு விஜய் ரசிகர் "கடனே"னு படத்துக்கு வந்தாப்ல. ஆனா அவருக்குமே படம் பிடிச்சிருந்துச்சு. இந்த வருஷத்தை ஒரு நல்ல படத்தோட ஆரம்பிச்ச திருப்தியோட வீட்டுக்கு வந்தோம்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



