பூங்காற்று 4

மறுநாள் விடியலின் பூபாள ராகத்தைப் பறவைகள் பாட விழித்துக் கொண்டாள் கிருஷ்ணஜாட்சி. அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் நீரஜாட்சிக்குப் போர்வையை நன்றாக மூடிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவுட் ஹவுஸின் கதவைத் திறந்தவளின் பார்வை, துளசிமாடத்தில் விளக்கேற்றி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த பாட்டியின் மீது பட, காலை நேரத்தின் இனிமை அவரது தரிசனத்தால் இன்னும் அதிகரித்ததுப் போலத் தோன்ற, புன்னகையோடு பாட்டியை நோக்கிச் சென்றாள். “பாட்டி!” என்ற அழைப்புடன் வந்த பெரிய பேத்தியைக் கண்ட சீதாலெட்சுமி, “கிருஷ்ணா, முதல்ல … Continue reading “பூங்காற்று 4”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 3

பட்டாபிராமன் இரு பேத்திகளையும் அவுட் ஹவுஸில் கொண்டு சென்று விட்டவர், அவர்களிடம் “ரெண்டு பேரும் இருங்கடா. நான் போய் மைத்தியை உங்களுக்கு உதவிக்கு அனுப்பிவிடுறேன்” என்றுச் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் செல்ல, சீதாலெட்சுமி பேத்திகளுடன் இருந்து அவர்களது உடைமைகளை எடுத்துவைக்க உதவிக் கொண்டிருந்தார். அவர்கள் வீட்டின் அவுட் ஹவுஸ் முறைப்படி பராமரிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு ஒதுங்க வைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. தோட்டத்துக்கு நடுவே கலைநயத்தோடு கட்டப்பட்டிருந்த அந்த அவுட் ஹவுஸ் இரண்டு படுக்கையறை, சமையலறை, … Continue reading “பூங்காற்று 3”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 20

“இப்ப ‘டிக்டாக்’னு ஒரு ஆப் வந்திருக்கு. இலக்கியா அதுல டான்ஸ் ஆடி வீடியோ போடுறா. கண்டிப்பா அந்த வீடியோவ நீ பாத்திருப்ப. உனக்கு ஷேர் பண்ணிருப்பானு தெரியும். நீ மட்டும் இங்க இருந்தா அவளை வச்சு செஞ்சிருப்ப! நீ அவளை ரோஸ்ட் பண்ணுன மொமண்ட்சை எல்லாம் நாங்க ரொம்ப மிஸ் பண்ணுறோம் அருள்.” -வானதியின் கடிதம்…. தங்களது திருமணத்தில் நடந்த குழப்பத்தில் ‘இன்ஸ்டண்ட் கல்யாணத்தில்’ இணைந்த வேதவதி – அட்சரனைக் காண அட்சரனின் நுங்கம்பாக்கம் வீட்டுக்குச் சென்றிருந்தாள் … Continue reading “யுத்தம் 20”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 2

பட்டாபிராமன் மூத்த பேத்தியை அணைத்தபடி கண்ணீர் வடித்தவர், நிமிர்ந்து மருமகளை வெறித்தவாறே, “அன்னைக்கு உன்னோட அண்ணா மணமேடையில என் பொண்ணால அவமானப்பட்டாங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உயிரோட இருந்தவரைக்கும் என் பொண்ணு முகத்தை நான் பார்க்கல. அவளும், அவ ஆத்துக்காரரும் ஒரு ஆக்ஸிடெண்ட்ல காலமாயிட்டான்னு நேக்கு கும்பகோணம் போனப்போ தான் தெரிய வந்தது. என் பொண்ணோட பிரதிபிம்பமா நிக்கறவாளை கோவத்துல ஒதுக்கி வைக்கற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரன் இல்லடிம்மா!” என்றுச் சொல்லி விழிநீரைத் துடைத்தவர், மருமகளின் முகம் … Continue reading “பூங்காற்று 2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 19

“இன்னைக்குச் செம மழை. ஸ்கூல் பேண்ட்ரில நான் மட்டும் போய் ரோஸ் மில்க் குடிச்சேன். அதுவும் தனியா. நீயும் நானும் சேர்ந்து உக்காந்திருக்குற பெஞ்ச் என்னைச் சோகமா பாக்குற மாதிரி தோணுச்சு அருள். அந்த மழையும் ரோஸ் மில்க்கும் ஒரு மாதிரி ஏஸ்திட்டிக்கா இருந்தாலும் அதை ரசிக்க முடியல. எனக்குப் பக்கத்துல நீ இருக்க வேண்டிய இடத்துல வெற்றிடம் இருக்குறப்ப என்னால எப்பிடி ரசிக்க முடியும்டா?” –வானதியின் கடிதம்… காலையுணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் முகிலகவாசிகள். … Continue reading “யுத்தம் 19”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 1

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கத் திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் புரள, அதை காதின் பின்புறம் ஒதுக்கியவள், தன் நீண்ட விழிகளைச் சுழற்றித் தன் அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தாள். அவளைப் போலவே ஒல்லித் தேகம்தான். ஆனால் தந்தையின் பால்நிறம், கூர்நாசியை உரித்து வைத்தபடி கழுத்தைத் தொட்டக் கூந்தலுடன், இன்னும் குழந்தைத்தனம் போகாத அந்த முகம் உறக்கத்திலும் அதில் தெரிந்த தெளிவு என அவளை ரசித்தவள், … Continue reading “பூங்காற்று 1”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 18

“வாட்ஸ்அப்ல குரூப் ஒன்னு ஸ்டார்ட் பண்ணிருக்கோம் அருள். அதுல சஞ்சய் மொக்கை ஸ்டிக்கர்ஸ் போட்டுச் சாகடிக்குறான். அச்சு எப்பவும் போல அவனுக்குப் பிடிச்ச இங்கிலீஷ் நாவல்ஸ்ல இருந்து கோட்ஸ் ஷேர் பண்ணுறான். நானும் இலக்கியாவும் அவங்களை ரோஸ்ட் பண்ணுறதுல பிஸி. நீ ஏன் அந்தக் குரூப்ல ஜாயின் பண்ணக்கூடாது? ரொம்ப பேசலனாலும் ஹாய் ஹலோ இப்பிடியாச்சும் சொல்லலாம்ல?” –வானதியின் கடிதம்… அருள்மொழியும் வானதியும் குடும்பத்தினரோடு சென்னைக்கு வந்துவிட்டார்கள். அவனுக்கு மான்கடா குழும வழக்கின் ஹியரிங் இன்னும் பதினைந்து … Continue reading “யுத்தம் 18”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 17

“லைப்ரரில நீ உக்காந்து படிக்குற அதே இடத்துல தான் இப்ப நான் உட்கார்ந்து படிக்கிறேன். அங்க உன்னோட பார்க்கர் பேனா கறை இன்னும் அப்படியே இருக்கு. அதைப் பாக்குறபப் நீ பக்கத்துல இருக்குற மாதிரியே ஒரு ஃபீல் அருள். You are the lover of that library. நீ இல்லாத தனிமைய போக்க இப்ப லைப்ரரிக்கு நான் கம்பெனி குடுக்குறேன்.” -வானதியின் கடிதம்… அருள்மொழி காலையில் உறக்கம் கலைந்து விழித்தபோது, அவனருகே நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் … Continue reading “யுத்தம் 17”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 16.2

“நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்க அருள். நடந்த பிரச்சனைல இன்னைக்கு உனக்கும் வானதிக்கும் நிறைய அழுத்தம். போப்பா” என ராஜேஸ்வரி அவனை அனுப்பி வைத்தார் அவனது அறைக்கு. இடையே வழிமறித்த ரமா வேறு இன்று அவன் வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டிய நாள் என்று சொல்ல, “இங்க இவ்ளோ கலவரம் நடந்திருக்கு பெரியம்மா. வானதி ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிருப்பா. அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். மெதுவா பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டான். அறைக்கு வந்து பார்த்தவனுக்கு அதன் அலங்காரத்தில் எரிச்சல் … Continue reading “யுத்தம் 16.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 16.1

“இன்னைக்கு நான் அச்சுவோட ரேஸ் போயி வின் பண்ணிட்டேன்! நீ இருந்தா ‘சின்ன பொண்ணு ஜெயிக்கட்டும்‘னு எனக்கு வழி விடுவ, ஆனா அச்சு அப்படி இல்ல. உன்னோட அந்த பெரிய சைக்கிள் இப்ப தூசு படிஞ்சு நிக்குது.” -வானதியின் கடிதம்… வரவேற்பு மேடையில் அருள்மொழியுடன் நின்றுகொண்டிருந்தாள் வானதி. அவளது தோழிப்பெண்கள் அவளைப் போலவே மிண்ட், பாஸ்டல் மஞ்சள், லேவண்டர் வண்ண கவுன்களில் ஆரணங்குகளாய் மின்னினார்கள். அருள்மொழியின் இரு தோழர்களுக்கும் அவனைப் போன்ற வடிவமைப்பில் வெவ்வேறு வண்ணங்களில் உடைகள். … Continue reading “யுத்தம் 16.1”

 

Share your Reaction

Loading spinner