டெட் பண்ட்டி என்ற அமெரிக்க சீரியல் கில்லருக்கு 1970களில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்குக்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவனது குழந்தைப்பருவத்தில் தாத்தாவிடம் அனுபவித்த கொடுமைகளால் மனப்பிறழ்வுக்கு ஆளானவன். அவனது அன்னை திருமணத்துக்கு முன்னரே அவனைப் பெற்றதால் சமுதாயத்தின் முன்னே அவரது தம்பியாகக் காட்டப்பட்டே வளர்க்கப்பட்டான். கூடவே அவனது அன்னையின் கணவரான ஜான் பண்ட்டியோடு அவனுக்குச் சுமூக உறவில்லாமல் போய்க் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான். எனவே இளமைப்பருவத்திலேயே சமுதாயத்திலிருந்தும் […]
Share your Reaction

