அன்னைக்கு நான் லைப்ரரிக்குப் போறப்ப சரியான மழை! குடுகுடுனு உள்ள ஓடிப்போயி சேர் ஒன்னை இழுத்துப்போட்டு உக்காந்து ஒரு நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன். வெளிய மழை சத்தம், உள்ள புத்தகங்களின் அமைதி… அடேயப்பா, சொர்க்கம்ன்னா இதுதானோனு தோணுச்சு. பக்கத்துல ஒரு அண்ணா, கம்பராமாயணத்தை ஆழ்ந்து படிச்சுக்கிட்டு இருந்தாரு. அவரு முகத்துல அவ்ளோ நிம்மதி. மதியம் போல லைப்ரரிக்கு எதிர்ல இருக்குற கடைல ஒரு காபி குடிச்சுட்டு, மறுபடியும் புத்தகக் கடல். நல்லவேளை லைப்ரரிக்கு எல்லாம் வெள்ளிகிழமை லீவுனு கவர்மெண்ட் சொன்னாங்க. இல்லனா என்னை மாதிரி ஆளுங்க சண்டே லைப்ரரிக்கு வர முடியாம தவிச்சுப் போயிடுவோம். புதுசா நிறைய இங்கிலீஸ் நாவல்களையும் எடுத்துப் பார்த்தேன். சில புத்தகங்களோட அட்டைப்படம் அவ்வளவு அழகா இருந்துச்சு. பட் நாவல் படிக்குற அளவுக்கு நமக்கு இங்கிலீஸ் வராதே! அதனால எடுத்த இடத்துலயே வச்சிட்டேன். நமக்கு நம்ம தாய்மொழி போதும்பா!
-விழியின் மொழி
காலையில் கண் விழித்ததும் மலர்விழியின் செவிகளில் வழக்கமான எந்தச் சத்தமும் கேட்கவில்லை. காகங்களின் சத்தம், ஊர்க்காரர்கள் வேலைக்குச் செல்லும் பரபரப்பில் பேசும் சத்தமென எதுவும் கேட்காமல் இருக்கவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவளுக்குக் கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றைப் பார்த்ததும் திருமணமாகிவிட்டது என்பது நினைவுக்கு வந்தது.
அருகில் மகிழ்மாறனைக் காணவில்லை. சுவரில் மாட்டியிருந்த குக்கூ கடிகாரத்தைப் பார்த்தவள் அதில் ஏழே முக்கால் எனக் காட்டவும் பதறியடித்து எழுந்தாள்.

புகுந்த வீட்டில் முதல் நாளே தாமதமாக விழித்தது அவளுக்குள் சொல்லவொண்ணா பரபரப்பை விதைத்துவிட வேகவேகமாகக் குளித்து முந்தைய தினம் ஷண்மதி அறிவுறுத்தியது போல புடவை ஒன்றை உடுத்திக்கொண்டு ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்.
முதலில் எதிர்ப்பட்டார் சிவகாமி. மருமகளின் பதற்றத்தைக் கண்டுகொண்டவர் “இப்பதான் குளிச்சியா? தலை ஈரம் போகவேல்ல பாரு” என்று கனிவாகப் பேச
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சாரி. நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன்” என்றாள் அவள்.

“இதுக்கு ஏன் சாரி? இங்க நீ ரிலாக்ஸா எழுந்திருக்கலாம். ஒன்னும் தப்பில்ல” என்றவர் பணியாளிடம் அவளுக்குக் காபி கொண்டு வருமாறு பணித்தார்.
காபி வந்ததும் அருந்தியவள் அங்கே வந்த புவனேந்திரனைக் கண்டதும் முகம் மலர “குட் மானிங் புவன் சார்” என்று வணக்கம் சொல்ல, அவள் சொன்ன விதத்தில் சிவகாமிக்குச் சிரிப்பு!
“இன்னும் உன்னை கரெஸ்பாண்டெண்டாவே நினைச்சிட்டிருக்கா மருமக” என்றார் புன்னகையோடு.
புவனேந்திரனும் புன்னகைத்தபடியே வந்தவன் “என்னம்மா வீடு உனக்குச் செட் ஆகிடுச்சா?” என வாஞ்சையாய் விசாரித்தான்.
“செட் ஆகிடுச்சு சார்” என்றவள் மதுமதியின் நினைவில் முகம் சுருக்க
“வேற எதையும் யோசிக்காதம்மா. நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம். நீ மட்டும் மறுத்திருந்தா ரெண்டு குடும்பத்தோட மரியாதையும் நேத்து சபைல போயிருக்கும். பேப்பர் டிவினு இந்நேரம் இந்தக் கல்யாணம் ஒரு கண்டெண்ட் ஆகிருக்கும். நீ பெரிய ரிஸ்க்ட் எடுத்து எங்க கௌரவத்தைக் காப்பாத்திருக்க. மாறன் கொஞ்சம் கறார் டைப். ஆனா ஒருத்தர் மேல அன்பு வச்சிட்டான்னா அதை மாத்திக்கமாட்டான்.” என்றான் புவனேந்திரன் அவளது மனவருத்தத்தை அறிந்தவனாக.
மலர்விழி மனதுக்குள் ‘நான் எங்கே சம்மதிச்சேன்? முதல் தடவை நான் எனக்காகச் சண்டை போடத் தயாராகி குரலை உசத்துனேன். உங்க தம்பி அந்தக் குரலை மறுபடி தொண்டைக்குள்ள சமாதி ஆக்கிட்டார். மௌனம் சம்மதம்னு என்னை மணமேடைல உக்காரவச்சிட்டாங்க’ என்று சொல்லிக்கொண்டாள்.
ஆயுசு நூறு போல அங்கே நரசிம்மனோடு வந்து சேர்ந்தான் மகிழ்மாறன்.
டீசர்ட், ட்ராக் பேண்ட் அணிந்து பார்க்கையில் ஃபார்மல்சில் தெரியும் கரெஸ்பாண்டெண்டின் இறுக்கம் காணாமல் போயிருந்தது.
“இந்த வீக்கெண்ட் யூ.ஜி.சில இருந்து வருவாங்கனு பிரின்சிபல் சொல்லுறார்ப்பா” எனக் கல்லூரி விவகாரத்தைப் பேசிக்கொண்டே வந்தவன் மலர்விழி புடவை அணிந்து நிற்பதைப் பார்த்ததும் யோசனையாய் புருவம் சுருக்கினான்.
நரசிம்மன் மருமகளிடம் வீடு பிடித்திருக்கிறதா எனக் கேட்க அவளும் ஆர்வமாகத் தலையை ஆட்டினாள்.
“நீ உங்கப்பா அம்மாவ மிஸ் பண்ணுனா அத்தை கிட்ட சொல்லு. கார் அனுப்பி கூட்டிட்டு வந்துடுவோம்” என இலகுவாகப் பேசிய மாமனார், சற்று முன்னர் இதமாக விசாரித்த புவனேந்திரன், அன்பான மாமியாரோடு கறார் கணவனை ஒப்பிட்டுப் பார்த்தாள் மலர்விழி.
இவர்கள் மூவரும் ஒரு ரகம். இவன் மட்டும் தனி ரகம்.
“காபி குடிச்சிட்டனா என் கூட வா. கொஞ்சம் பேசணும்”
கண்ணாடியை ஆட்காட்டிவிரலால் அழுத்திவிட்டு அதை விட அழுத்தமாக அவன் சொல்லிவிட்டுக் கடந்த விதம் மலர்விழிக்கு மட்டும் கட்டளையாகவேத் தோன்றியது.
“போம்மா!” என்று புன்னகை முகமாக அவளை அனுப்பிவைத்த சிவகாமி “நீ என் கூட வா புவன்” என மூத்தவனையும் கணவரையும் தன்னோடு அழைத்துப் போய்விட்டார்.
அவனுக்கு மனதிற்குள் இருக்கும் வருத்தத்தைப் போக்கவேண்டியது அன்னையின் கடமைதானே!
மறுபுறம் அறைக்குள் நுழைந்த மலர்விழியைத் தலையிலிருந்து கால் வரை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தான் மகிழ்மாறன்.
“எ…என்ன?” தடுமாறிக்கொண்டே கேட்டவளிடம்
“இதென்னக் கோலம்?” எனக் கேட்க
“அக்கா தான் என்னைப் புடவை கட்டிக்க…” என அவள் பதிலளித்துக் கொண்டிருக்கையிலேயே
“ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்ச டிபிக்கல் மருமகளை மனசுல வச்சுக்கிட்டு அவங்க சொல்லிருப்பாங்க. அதை நீ எதுக்கு ஃபாலோ பண்ணுற?” என்று தடாலடியாகக் கேட்டு அவளைத் திகைக்க வைத்தான் மகிழ்மாறன்.
மலர்விழி ‘ஃபர்ஸ்ட் நைட்’ என்ற வார்த்தையில் அரண்டு விழிக்கவும் அவனது இதழில் குறுஞ்சிரிப்பு மலர்ந்தது.
“காலேஜுக்குப் போகுற ஐடியா இல்லயா உனக்கு?” இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டாமென மெதுவாகவே வினவினான்.
“போகணும் சார்… போகணும் மாமா” என்று இருமுறை வேகமாகப் பதிலளித்தாள் அவள்.
“அப்ப இந்தக் கெட்டப் எல்லாத்தையும் மாத்திட்டுக் காலேஜுக்கு ரெடியாகு. மானிங் உன் அண்ணன் உன்னோட காலேஜ் பேக், புக்ஸ் எல்லாம் கொண்டு வந்து குடுத்தான். அங்க வச்சிருக்கேன்” என்று மேஜையைக் காட்டினான்.
மலர்விழி தாமதமாக விழித்தக் காரணத்தால் எதையும் கவனிக்கவில்லை. இப்போதுதான் அவளது பேக்கும் புத்தகங்களும் கண்களில் பட்டன.
“சரி” என்றவள் பின்னர் தயக்கத்தோடு “நான் பார்ட் டைம் ஜாபுக்குப் போகலாம் தானே?” என்று கேட்கவும்
“நீ பிறக்குறப்பவே மகிழ்மாறனுக்குப் பொண்டாட்டி ஆகனும்னு வரம் வாங்கிட்டுப் பிறந்தியா? என கேட்டான் அவன்.
மலர்விழி அப்பாவியாய் கருவிழிகளை உருட்டியவள் “தெரியலையே!” என்று சோகமாகக் கூறவும் அவனால் வெகு நேரத்துக்குச் சிரிப்பை அடக்கிவைக்க முடியவில்லை.
கையை வைத்துச் சிரிப்பை மறைத்துக்கொண்டவன் கூந்தல் இழையிலிருந்து அவளது கன்னத்தில் தெறித்திருந்த நீர்த்துளியைத் தனது பெருவிரலால் துடைத்து விட்டான்.
அப்படி செய்கையில் அவனது முழுக்கையும் மலர்விழியின் மோவாயைப் பற்றியிருக்க, மீதமிருந்த நான்கு விரல்களும் அடுத்தக் கன்னத்தை அழுந்தப் பற்றியதால் உதடுகள் குவிந்து அதிலிருக்கும் மெல்லிய ரேகைகள் வரிவரியாகத் தெரிய ஒரு நொடியில் மகிழ்மாறனே தடுமாறித்தான் போனான்.

சில வினாடிகள் அவனது பார்வை அவளது முகத்திலும் உதட்டிலும் நிலைத்தவிதம் மலர்விழிக்குள் மெல்லிய சலனத்தை விதைக்க, அடுத்தச் சில வினாடிகளில் அந்தக் கை விலக்கப்பட்டதும் சலனத்தின் இழைகள் முழுவதுமாகப் பின்னப்படாமல் பாதியில் நின்றதைப் போலதொரு மாயை அவளுக்கு!
மகிழ்மாறன் பெருமூச்சை வெளியிட்டவனாக “அப்பாவியா இருக்கலாம். அதுக்குனு இவ்ளோ அப்பாவியா இருந்தா எல்லாரும் உன்னை ஈசியா ஏமாத்திடுவாங்க” என்றான் குறுஞ்சிரிப்போடு.
“ஆமா! என்னை ஏமாத்தி மணமேடைல உக்கார வச்சு தாலியே கட்டியாச்சாம். இன்னும் என்ன இருக்கு ஏமாறுறதுக்கு?” என்று குறை சொல்வது போல வாய்க்குள் முணுமுணுத்தாள் மலர்விழி.
“ஏதாச்சும் சொன்னியா நீ?” அதிரடியாய்க் கேள்வி வந்து விழுந்ததும்
“இல்லையே!” என அவசரமாகச் சமாளித்தவள் திருதிருவென விழித்துவைத்தாள்.
மகிழ்மாறன் சுவரிலிருந்த குக்கூ கடிகாரத்தைக் காட்டினான்.
“இப்ப எட்டே கால். எட்டரைக்கு ட்ரஸ் சேஞ்ச் பண்ணி, ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு ரெடியா இருந்தா உன்னை நான் என் கூட காலேஜுக்கு அழைச்சிட்டுப் போவேன்”
“உங்க கூடவா? நான் வரல”
வேகமாக மறுத்தாள் மலர்விழி. ஏன் என்பது போல அவன் உறுத்து விழிக்கவும் “அது… நீங்க கரெஸ்பாண்டெண்ட்.. நான் ஸ்டூடண்ட்.. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சா…” என்று தயக்கத்தோடு தனது சங்கடத்தை வெளியிட்டாள் அவள்.
“தெரிஞ்சா என்ன? நாம என்ன ஓடிப்போய் வீட்டுக்குத் தெரியாமலா கல்யாணம் பண்ணுனோம்? முறைப்படி தானே பண்ணுனோம். தெரிஞ்சா தப்பில்ல. நீ இந்தப் புடவை அவதாரத்துல இருந்து முதல்ல வெளிய வந்து காலேஜுக்கு ரெடியாகு” என்று கறாராகச் சொல்லிவிட்டுக் குளிக்கக் கிளம்பினான் அவன்.
அவன் சொன்னது போல மடமடவென சுடிதார் ஒன்றை அணிந்துகொண்டு கூந்தலை மேலே மட்டும் க்ளட்ச் மாட்டியவள் மறக்காமல் தாலி கோர்த்த மஞ்சள் கயிறை வெளியே தெரியாதவாறு சுடிதாருக்குள் தள்ளி பின் குத்திக்கொண்டாள்.
“மலர் இங்க வந்துட்டுப் போடா” என்று மாமியாரின் குரல் கேட்கவும் ஆர்வத்தோடு ஓடியவள் அவர் கையில் பந்தாய் சுருட்டிவைத்த மல்லிகைச்சரத்தைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
“கல்யாணமானப் பொண்ணு வெறும் தலையோட இருக்கக்கூடாது, இதை வச்சுக்க. நம்ம வீட்டுத்தோட்டத்துல பூத்தது. உனக்காகவே நேத்து பூத்துக் குலுங்கிடுச்சு பாரேன்”
“இங்க தோட்டம் இருக்குதா?” கண்களை விரித்துக் கேட்டாள் மலர்விழி,.
“ஆமா! நான் சண்டே உனக்குப் பொறுமையா தோட்டத்தைக் காட்டுறேன். மாறன் ரெடியாகிட்டான்னா ரெண்டு பேரும் வாங்க. சாப்பிட்டுட்டுக் காலேஜுக்குப் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் போனார் சிவகாமி.
மீண்டும் மலர்விழி அவர்களது அறைக்குள் வந்தபோது மகிழ்மாறன் குளித்து உடைமாற்றித் தயாராகி இருந்தான். கண்ணாடியைப் பார்த்து தலை வாரிக் கொண்டிருந்தவன் திடுமென அறைக்குள் அத்துமீறி நுழைந்த மல்லிகையின் நறுமணத்தால் கவரப்பட்டுத் திரும்பினான்.
அங்கே அவனது மனைவி மல்லிகைச்சரத்தைச் சிகையில் சூடிக்கொண்டிருந்தாள்.
“ரெடியாகிட்டியா?” ரசனைப்பார்வையைக் கட்டுக்குள் வைத்தபடி கேட்டவன்
“ஆமா!” என்றபடி ஷோல்டர் பேக்கை எடுத்து மாட்டியவளின் கழுத்தைக் கவனித்ததும் புருவம் உயர்த்தினான்.
“கொஞ்சம் கிட்ட வா” ஆட்காட்டிவிரலால் அவன் அழைக்க மலர்விழியோ தயங்கியபடியே நெருங்கிவந்தாள்.

இருவருக்கும் இடையே இரண்டு அடிகள் இடைவெளி. அதற்கே ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தவளின் பொறுமை அவனுக்கு இல்லை.
வேகமாகக் கையைப் பற்றி தன்னருகே இழுத்தவன் “என்ன இது?” என்று அவளது வெற்றுக்கழுத்தில் கோடிழுத்துக் காட்ட விரலில் தீண்டலில் விதிர்விதிர்த்தவளிடம் பேச்சு மூச்சில்லை.
மகிழ்மாறனின் விழிகள் ஆராய்ச்சியாய் சுடிதாரின் கழுத்தைச் சுற்றி வந்ததில் மாங்கல்யம் இணைத்த மஞ்சள் கயிறை அவள் பின் குத்தி மறைத்திருப்பதைக் கண்டுகொண்டன.
“சின்னப்பிள்ளைங்கிறதை நிரூபிக்கிற பாரு” என்று மெல்லியக் குரலில் கடிந்தவன் அவளிடம் அனுமதி எல்லாம் கேட்கவில்லை. வேகமாகப் பின்னை நீக்கி மஞ்சள் சரடை பார்வைக்குப் படுமாறு எடுத்துவிட்டான்.
பதில் பேசாமல் பொம்மையாய் நின்றவளுக்கோ இதயத்தில் தடதட உணர்வு. அவன் ஒன்றும் யாரோ ஒருவன் இல்லை. முந்தைய தினம் சபை நடுவே கணவனாவன்.
இந்த உரிமைத்தீண்டல் எல்லாம் இல்லற வாழ்வின் ஒரு பகுதி. அது அவளுக்கும் தெரியும். முந்தைய இரவில் ‘பழகிக்கொள்’ என்று அவன் சொன்னதில் இதெல்லாம் அடக்கமென அறியாத அளவுக்கு அவள் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை. ஆனால் முதல் முறை என்பதால் கொஞ்சம் தவித்துத்தான் போனாள் மலர்விழி.
“இப்ப தான் பாக்க மிசஸ் மகிழ்மாறன் மாதிரி இருக்குற”
சொன்னவனின் குரலில் இருந்த திருப்தியில் அனிச்சையாக அவளது இதழ்களிலும் புன்னகை ததும்பியது.
பின்னர் அவனுடன் போய் உணவு மேஜையில் அமரும் வரை மலர்விழி கப்சிப்.
மருமகளுக்கு ஆசையாகப் பரிமாறினார் சிவகாமி.
“நாளைக்கு உன் பெருமாள்புரம் அத்தை வீட்டுல விருந்து வைக்கலாம்னு இருக்காங்க மாறா. உனக்குத் தோதுபடுமானு கேக்கச் சொன்னா”
‘ஐய்! நாளைக்கு அக்கவுண்டன்சி ஹவரை கட் அடிக்கலாம்’ என்று மலர்விழி குதூகலித்தபோதே
“இல்லம்மா! எந்த விருந்தா இருந்தாலும் சண்டே மட்டும்தான் தோதுபடும்னு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டான் அவன்.
மலர்விழி பரிதாபமாக அவன் பக்கம் திரும்பினாள்.
‘ஏன்டா இப்பிடி?’ என்பது போல அவள் பரிதாபமாகப் பார்க்கவும்
“அக்கவுண்டன்சி ஹவர் இருக்குதா நாளைக்கு?” என்று தலைசரித்து இரகசியமாக வினவினான்,
“ம்ம்”
“உன் முகத்துல பிரகாசம் வந்தப்பவே கண்டுபிடிச்சிட்டேன். விருந்து அது இதுனு காலேஜைக் கட் அடிக்கலாம்னு கனவு கூட காணாத” என்றவன் “எப்பவும் போல பார்ட் டைம் ஜாபுக்குப் போ. அந்தச் சேலரிய உன் பேரண்ட்ஸ் கிட்ட குடு. அதுக்கெல்லாம் என்னோட பெர்மிசன் தேவையில்ல” என்று சொல்லி முடிக்க மலர்விழியும் சரியெனத் தலையாட்டிவைத்தாள்.
இருவரும் சாப்பிட்ட பிறகு மகிழ்மாறன் கிளம்ப அவளும் புகுந்த வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
காரிலேறியதுமே குழலியிடமிருந்து அவளது மொபைலுக்கு அழைப்பு வர அதை ஏற்றவள் “சொல்லுமா” என்றாள்.
“அங்க எல்லாரும் உன்னை நல்லா பாத்துக்குறாங்களா மலர்? மறுவீட்டுக்கு அழைக்குறது பத்தி சம்பந்தியம்மா கிட்ட கேக்கணும். எப்பிடி கேக்கணும்னு தயக்கமா இருக்கு”
“நான் நல்லா இருக்கேன்மா. அத்தை நம்பர் உனக்கு மெசேஜ் பண்ணுறேன். நீ அவங்க கிட்ட பேசிக்க. ஞாயித்துக்கிழமை மட்டும்தான் போகணும்னு…” என்று நிறுத்தியவள் அருகிலிருந்து காரை ஓட்டுபவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு “ஞாயித்துக்கிழமை மட்டும்தான் விருந்துக்குப் போகனும்னு நினைச்சிருக்கேன்மா. ரெண்டாவது செமஸ்டர் வரப்போகுதுல்ல. ரொம்ப லீவ் போடமுடியாது. இப்ப காலேஜுக்குத்தான் போயிட்டிருக்கேன்” என்றாள்.
“சரிடி தங்கம். நீ நம்பர் அனுப்பு. அவங்க கிட்ட நான் பேசிக்குறேன்.” என்றார் குழலியும் நிலமையை உணர்ந்தவராக.
புதுமணப்பெண்ணான மகள் மறுவீடு வராமல் கல்லூரிக்குச் செல்வதே வினோதம்தான். ஆனால் வேறு வழியில்லையே! படிப்பைப் பாதியில் விடவா முடியும்!
அழைப்பைத் துண்டித்த மலர்விழி “அத்தை நம்பர் மட்டும் எனக்குச் சொல்லுறிங்களா?” என்று வினவ தனது மொபைலை எடுத்து நீட்டினான் மகிழ்மாறன்.
“இல்ல. நம்பர் மட்டும்…”

“எனக்கு அவ்ளோ மெமரி பவர் இல்ல. ஒரு கையால காரை ஓட்டிட்டு ஒரு கையால மொபைல் யூஸ் பண்ணுறது எனக்குப் பிடிக்காத பழக்கம்”
இதற்கு மேல் என்ன சொல்வது? மொபைலை வாங்கியவள் பாஸ்வேர்டையும் கேட்டுவிட்டு அதில் சிவகாமியின் எண்ணை மட்டும் தனது மொபைலில் பதிந்துகொண்டாள்.
“இந்தாங்க”
மகிழ்மாறன் அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் கவனமானான்.
“அம்மா நம்பர் மட்டும் போதுமா?”
“ம்ம்! போதும். எங்கம்மாக்கு அனுப்பிடுவேன்” என மொபைலில் மும்முரமானவள் ‘உங்கள் எண்ணையும் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கலாம். அவளே கேட்காதது மகிழ்மாறனுக்கு எரிச்சலை உண்டாக்கியதை அவனது முகமாற்றத்திலிருந்து அறிந்திருக்கலாம்.
எதையும் செய்யாமல் கருமமே கண்ணாக மாமியாரின் மொபைல் எண்ணை மெசேஜில் அன்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு வேடிக்கையில் ஆழ்ந்தவளை மகிழ்மாறன் மனதுக்குள் கரித்துக்கொட்டியது தனிக்கதை!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction