அத்தியாயம் 55

Dissocial Psychopaths என்பவர்கள் அளவுக்கடந்த போதைமருந்து உபயோகத்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வகையறாக்கள். சொல்லப் போனால் சமுதாயம் காட்டும் ஒதுக்கத்தையும், உதாசீனத்தையும் தவிர்க்கவே இவர்கள் போதைமருந்து பழக்கத்தை ஆரம்பிப்பார்கள். பின்னர் அதற்கு அடிமையாகிக் குற்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். Pseudopsychopaths வகையினரோ போதைமருந்து பழக்கம் மற்றும் விபத்தின் காரணமாக உண்டான காயத்தால் ப்ரீ-ஃப்ரென்டல் கார்டக்ஸ் பகுதி சேதமுற்றதால் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் ஒழுக்க விழுமியங்கள், நன்னடத்தை, நல்லுணர்வுகளை முற்றிலுமாக இழந்திருப்பார்கள். -By Dan Baxter, ESTP Primary […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 54

Secondary psychopath எனப்படும் சோசியோபாத்கள் வெகு சுலபத்தில் வன்முறைக்கான தூண்டுதல்களால் பாதிக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு நீங்கள் சொல்லும் ஏதோ ஒரு வார்த்தை, உங்களின் ஏதோ ஒரு செயல் அவர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டால் யோசிக்காமல் உங்களைத் தாக்கத் துணிவார்கள். அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு என்பது கிஞ்சித்தும் இருக்காது. அந்தத் தூண்டுதல் அவர்கள் பட்ட காயம், கசப்பான அனுபவம், வன்கொடுமை, உதாசீனம், குடும்ப உறுப்பினர்களின் இறப்போடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையதாக இருக்கும். சாதாரண மனிதர்கள் அச்சமயத்தில் பெரிதாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். ஆனால் சோசியோபாத்களோ […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 53

Secondary psychopaths பொதுவாக Sociopaths என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தனிமை, வன்கொடுமை, உதாசீனம் மற்றும் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் காரணமாக சைக்கோபாத் ஆகிறார்கள். இந்த வகை சைக்கோபாத்களுக்கு ஆக்ரோசம், முரட்டுத்தனம் அதிகமாக இருக்கும். தற்கொலை எண்ணம் கொண்ட இவர்களது செயல்கள் எப்போது எப்படி இருக்குமென யாராலும் கணிக்க முடியாது -From psychology today பாம்பு சீறுவது போல சீறிக்கொண்டிருந்தாள் அந்த இளம்பெண். அவளது கண்களில் தான் அவ்வளவு கோபம். “இன்னும் எத்தனை நாள் நான் உனக்காக வெயிட் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 52

சைக்கோபாத்களை Primary psychopaths, Secondary Psychopaths (Sociopaths), Dissocial Psychopaths, Pseudopsychopaths என நான்கு வகைப்படுத்தலாம். Primary Psychopaths என்பவர்கள் பிறக்கும்போதே குறைவான ஆர்ப்பிட்டோஃப்ரண்டல் கார்டக்ஸ் மற்றும் உணர்வு செயலிகள், சிறிய அமிக்டலா, அமிக்டலாவுக்கும் ப்ரீ ஃப்ரண்டல் கார்டக்சுமிடையே உள்ள இணைப்புகளில் வேறுபாடுகள், நீளமான மற்றும் பெரிய கார்பஸ் கலோசம் கொண்ட மூளை அமைப்போடு பிறப்பார்கள். சாதாரண மனிதர்களுடைய மூளையோடு ஒப்பிடும்போது இந்த ப்ரைமரி சைக்கோபத்களின் மூளை அதிக தீட்டா மூளை அலைகளை விழித்திருக்கும்போது கொண்டிருக்கிறது. அவர்களுக்கு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 51

டெட் பண்ட்டி என்ற அமெரிக்க சீரியல் கில்லருக்கு 1970களில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்குக்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவனது குழந்தைப்பருவத்தில் தாத்தாவிடம் அனுபவித்த கொடுமைகளால் மனப்பிறழ்வுக்கு ஆளானவன். அவனது அன்னை திருமணத்துக்கு முன்னரே அவனைப் பெற்றதால் சமுதாயத்தின் முன்னே அவரது தம்பியாகக் காட்டப்பட்டே வளர்க்கப்பட்டான். கூடவே அவனது அன்னையின் கணவரான ஜான் பண்ட்டியோடு அவனுக்குச் சுமூக உறவில்லாமல் போய்க் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான். எனவே இளமைப்பருவத்திலேயே சமுதாயத்திலிருந்தும் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 50

சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் ஆக்ரோசத்தையும் முரட்டுத்தனத்தையும் கையாளுவதற்கு தேவையான ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ அளிக்கப்படுகிறது,. என்ன தான் மருந்துகள் அளிக்கப்பட்டாலும் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபியே முதன்மையானது. சைக்கோபதி என்பது குழைந்தைகளின் மென்மையையும் பச்சாதாபத்தையும் இல்லாமல் செய்துவிடும். இதனால் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இது அவர்களைச் சுற்றியுள்ள மற்ற குழந்தைகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும். -From the therapyroute.com காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்யாவோடு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 49

சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கான அத்தியாவசியத்தை உணர்வதில்லை. தங்களது குறைபாட்டை அவர்கள் உணராத பட்சத்தில் சிகிச்சைக்கு உடன்படவே மாட்டார்கள். கூடவே சிகிச்சைக்கு உடன்படக்கூடிய மனவலுவும் அவர்களிடம் இருக்காது. அப்படியே சிகிச்சைக்கு உடன்பட்டாலும் தங்களிடம் அச்சிகிச்சையால் உண்டாகும் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சைக்கோபாத்கள் தயங்குவார்கள். சிலர் கடந்தகாலத்தில் இத்தகைய சிகிச்சைக்கு உடன்பட்டு அது தோல்வியில் முடிந்ததால் இன்னும் அதீத பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள அஞ்சுவார்கள். கூடவே இத்தகைய சிகிச்சைக்கான செலவும் அதிகம். […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 48

சமூகவிரோத நடத்தை கோளாறுகளில் மிகவும் தீவிரமானது சைக்கோபதி எனப்படும் மனப்பிறழ்வுக்குறைபாடு. இதற்கு சிகிச்சை முறைகள் இருந்தாலும் அந்தச் சிகிச்சையை முழுவதுமாக செய்து முடிப்பதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன. சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குச் சரியாக உடன்படமாட்டார்கள். தங்களது குறைபாட்டைப் பற்றிய எவ்வித கவலையுமின்றி சிகிச்சையே தேவையில்லை என்ற மனப்பாங்குடன் வாழ்பவர்கள் அதிகம். அவர்களுக்குப் புரிந்துணர்வு குறைவு என்பதால் தங்களது சைக்கோபதியின் தீவிரம், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறினாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. தங்களது […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 47

மனப்பிறழ்வுக்குறைபாடு எனப்படும் சைக்கோபதிக்கான அடுத்த கட்ட சிகிச்சை முறை ‘ஆன்டி-சைக்காடிக்ஸ்’ எனப்படும் மருந்துகளை அளிப்பது. வன்முறையும் ஆக்ரோசமும் கொண்ட சைக்கோபாத்களுக்கு இந்த மருந்துகளை அளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்கவேண்டுமென்ற அவர்களின் தூண்டுதல் கட்டுப்படுத்தப்படும். அடுத்த மருந்து, ‘மூட் ஸ்டெபிளைசர்கள்’ எனப்படும் உணர்வு நிலையாக்கிகள். இவை சைக்கோபாத்களுக்கு உண்டாகும் கிளர்ச்சிகளையும், மாயைகளையும் கட்டுப்படுத்தும். இந்தக் கிளர்ச்சிகளும், மாயை உணர்வுகளும் தான் அவர்களை வன்முறையாகச் செயல்படவைக்கும் காரணிகள். இவை கட்டுப்படுத்தப்பட்டால் சைக்கோபாத்களின் வன்முறையும் கட்டுக்குள் இருக்கும். -From therapist.com […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 46

சைக்கோபதியைப் பூரண குணமடையச் செய்வது என்பது இயலாத காரியம். ஆனால் சில சிகிச்சை முறைகளை வைத்து அதை அபாயகரமான நிலையிலிருந்து கட்டுக்குள் கொண்டு வரலாம். அதன் மூலம் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபரால் யாருக்கும் ஆபத்து வராத வண்ணம் தடுக்க முடியும். அதில் முதல் வகை சிகிச்சை Cognitive Behaviourial Therapy. இது பாதிக்கப்பட்ட நபரின் சிந்தனைகள், உணர்வுகள், நடவடிக்கைகள் போன்றவற்றைச் சீர்செய்ய உதவும் சிகிச்சை ஆகும். சைக்கோபதி அல்லது நடத்தை சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு […]

 

Share your Reaction

Loading spinner