
ஹலோ மக்களே!
இன்னைக்குக் கொரியன் சீரீஸ், கே-பாப், கொரியன் உணவு வகைகள், கொரியன் ஸ்கின்கேர் உலகம் முழுக்க பரவி பிரபலமாகியிருக்கு. அதோட ஆரம்பத்தை ஹல்யூ (Hallyu)னு சொல்லுவாங்க. அதாவது கொரியன் அலை! சின்னதா ஆரம்பிச்ச இந்த அலை கொரியா முழுக்க பரவி இன்னைக்கு உலகத்தையே நனைச்சிடுச்சு. இதைப் பத்தி பாக்கலாமா?
ஹல்யூ (Hallyu)
நம்ம எல்லாரும் ஆர்வமா பார்க்கிற கொரியன் சீரியஸ் (K-dramas), BTS, BLACKPINK-னு உலகமே கொண்டாடுற K-pop பாட்டுங்க, 'பாரசைட்' மாதிரியான ஆஸ்கார் வாங்குன கொரியன் படங்கள், நம்ம ஊரு ஃபுட் கோர்ட்ல கூட கிடைக்கிற கிம்சி, பிபிம்பாப் போன்ற கொரியன் உணவுகள், அவங்களோட ஃபேஷன், அழகுசாதனப் பொருட்கள்னு... இப்படி கொரியாவோட கலாச்சாரத்துல உள்ள ஒவ்வொரு விஷயமும் ஒரு அலை மாதிரி உலகம் முழுக்க பரவி, எல்லாரையும் ஈர்க்கிறதுதான் இந்த Hallyu. ஒரு நாட்டோட மொழி தெரியாமலே அவங்க கலாச்சாரத்தை நம்ம ரசிக்க முடியுதுன்னா, அதுக்கு இந்த Hallyu தான் முக்கியமான காரணம்!
இந்த ஹல்யூ உலகம் முழுக்க எப்பிடி ஃபேமஸ் ஆச்சுன்னு ஒரு டைம்லைன் மாதிரி பார்க்கலாம். செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்! 🤩
1990கள் - கொரியன் அலையின் தொடக்கம் 🌊
கொரியாவோட சினிமா, சீரிஸ் எல்லாம் வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பிச்சது இந்த டைம்லதான்.
1997-ல வந்த "Star in My Heart" சீரியல் சீனாவில செம ஹிட்! லட்சக்கணக்கான மக்கள் பார்த்தாங்க.
இப்படி அவங்க கலாச்சாரம் மெதுவா பரவ ஆரம்பிச்சதுதான் Hallyu-ன்னு சொல்றாங்க.
2000கள் - ஆசியாவையே ஆட்டிப் படைத்த K-dramas 😎
"Winter Sonata"ஜப்பான்ல பயங்கர ஃபேமஸ் ஆகிச்சு. அந்த சீரியல் ஷூட்டிங் நடந்த இடமெல்லாம் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிப் போச்சுன்னா பாத்துக்கோங்க!
"Boys Over Flowers," "Full House"மாதிரியான சீரிஸ்கள் மலேசியா, தாய்லாந்து, வியட்நாம்னு ஆசியா முழுக்க ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்குச்சு.
அந்த நேரம் K-pop-உம் சேர்ந்து வந்ததால, மொத்தமா இரட்டைத் தாக்கம்! சீரியல் பார்க்கப் பார்க்க K-pop-உம் பிடிக்கும், K-pop கேட்கக் கேட்க சீரிஸ் பார்க்கணும்னு தோணும்.
2010கள் - உலகளவில் ஒரு ஜம்ப் 🚀
Netflix, YouTube மாதிரி ஸ்ட்ரீமிங் தளங்கள் வந்ததும், மொழியே ஒரு தடையில்லை. சப்-டைட்டில், அப்புறம் டப்பிங்னு உலக மக்கள் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
"Descendants of the Sun" (2016) ஆசியாவைத் தாண்டி அமெரிக்கா, மத்திய கிழக்குனு எல்லாரும் பேசினாங்க.
"Crash Landing on You" (2019) Netflix-ல் ஒரு மெகா ஹிட்! இந்தியாவிலகூட இதுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க.
2020கள் - உலக சாதனை, உச்சம் தொட்ட புகழ் 🏆
2021-ல் வந்த "Squid Game"-ஐ மறக்க முடியுமா? Netflix வரலாற்றிலேயே அதிகம் பேர் பார்த்த தொடர் இதுதான்.
90-க்கும் மேற்பட்ட நாடுகள்ல நம்பர் 1 இடத்துல இருந்தது! அதோட மீம்ஸ், விளையாட்டு, டிரஸ்னு எல்லாமே வைரல் ஆகி உலகத்தைக் கலக்குச்சு.
எதுக்கு இவ்வளவு ஃபேமஸ் ஆச்சு? 🤔
மனதைத் தொடும் கதைகள்:காதல், நட்பு, குடும்பம்னு நம்ம மனசுக்கு நெருக்கமான கதைகளை சொல்றாங்க.
தரமான தயாரிப்பு:ஒவ்வொரு சீனும் அழகா இருக்கும், மியூசிக் அட்டகாசமா இருக்கும்.
ஈஸி ஆக்சஸ்:Netflix இருந்தா போதும், எப்போ வேணா பார்க்கலாம்.
K-pop கனெக்ஷன்:நிறைய K-pop பாடகர்கள் நடிக்கிறாங்க.
கலாச்சார கவர்ச்சி: அவங்களோட ஃபுட், ஃபேஷன், பியூட்டி ட்ரெண்ட்ஸ் எல்லாமே மக்களை ஈர்க்குது.
ஹல்யூ ஸ்டார்ஸ்
கொரிய கலாச்சாரத்தை உலகம் முழுக்க பரப்புன சீரீஸ், கே பாப் பேண்ட்ஸ்ல இருந்த ஐடல்கள், நடிகர்களை ஹல்யூ ஸ்டார்ஸ்னு சொல்லுவாங்க.
லீ மின்-ஹோ (Lee Min-ho):
Boys Over Flowers,The King: Eternal Monarchமாதிரி சீரிஸ்கள் மூலமா உலகமே இவரோட ஃபேனா மாறிடுச்சு. ஹல்யூ அலை ஆரம்பிச்சப்போ இருந்த டாப் ஸ்டார்ஸ்ல இவரும் ஒருத்தர்.ஹியூன் பின் (Hyun Bin):
Crash Landing on Youசீரிஸ் இவரை உலகம் முழுக்க செம ஃபேமஸ் ஆக்கிடுச்சு. அந்த சீரிஸ் ஹீரோயினையே நிஜ வாழ்க்கையிலும் கல்யாணம் பண்ணிக்கிட்டதால இன்னும் கூடுதல் ஸ்பெஷல்.காங் யூ (Gong Yoo):
Goblin,Train to Busan,Coffee Princeனு இவர் நடிச்ச ஒவ்வொரு படமும், சீரிஸும் ஹிட். அது மூலமா தனக்குன்னு ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கிட்டாரு.சாங் ஜூங்-கி (Song Joong-ki):
Descendants of the Sun,Vincenzoமாதிரி சீரிஸ்கள் மூலமா நிறைய பேரை கவர்ந்தவர்.பாக் சியோ-ஜூன் (Park Seo-joon):
Itaewon Class,What's Wrong with Secretary Kimசீரிஸ் பார்த்துட்டு, இளம் வயசுல இருக்கிறவங்க இவரோட தீவிர ஃபேன்ஸ் ஆயிட்டாங்க.
BTS: உலகத்துலேயே நம்பர் 1 பாய் பேண்ட் இவங்கதான். இவங்க பாட்டும், டான்ஸும் உலகத்தின் எல்லா மூலைக்கும் போய் K-pop-ஐ கொண்டு சேர்த்தது.
BLACKPINK: இது உலக அளவுல அதிக ரசிகர்கள் கொண்ட கேர்ள் பேண்ட். இவங்க பாடுற ஸ்டைல், டான்ஸ், டிரெஸ்ஸிங்னு எல்லாமே யூத்ஸை ரொம்பவே கவர்ந்துச்சு.
EXO, Twice, Stray Kids: இவங்களும் நிறைய ரசிகர்களை வச்சிருக்கிற டாப் K-pop குழுக்கள்.
Super Junior, Girls' Generation: ஹல்யூ அலை ஆரம்பிச்ச காலத்திலேயே கொரியன் மியூசிக் உலகத்துல ஃபேமஸ் ஆக இந்த குழுக்கள் தான் முக்கியமான காரணம்.
முடிவுரை
ஒரு சீரியல் ஜப்பான்ல ஃபேமஸ் ஆனப்போ ஆரம்பிச்ச அந்த அலை, இன்னைக்கு "Squid Game" வரை வந்து, கொரியன் சீரிஸ் உலகத்தோட ஒரு அங்கமா ஆகிடுச்சு. எந்த மொழியா இருந்தாலும், சந்தோஷமும், சோகமும், அன்பும் ஒன்னுதான் அப்படின்னு நிரூபிச்சது இந்த K-dramas தான்! 👍 நம்ம சைட்ல கொரியன் சீரீஸ் ரெகமெண்டேசன், ரிவியூக்குனு தனி பகுதி இருக்கு. விருப்பமிருந்தா அதை ஃபாலோ பண்ணுங்க. நீங்க பார்த்த முதல் கொரியன் சீரீஸ் என்னனு கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க. ஓகே மக்களே! அடுத்த வாரம் இன்னொரு சுவாரசியமானத் தகவலைக் கொண்டு வர்றேன். குட் நைட்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
நான் கொரியன் சீரிஸ் பார்த்ததே இல்லை கா, ஆனால் அவங்களோட சமைக்குற விதம் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்!!!... அவங்க அதை செய்யுற விதத்தை பார்க்கவே நல்லா இருக்கும்!!!
Share your Reaction
@gowsalya-m ஆமாடா.. நிறைய ஷீ ஃபுட், நான் வெஜ் எல்லாம் சமைப்பாங்க... பாக்க அழகா இருக்கும்... அவங்க ஸ்கின் இவ்ளோ நல்லா இருக்க அதுவும் ஒரு காரணம்.. 😍 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



