
“ரெண்டு நாள் மட்டும் வெளிய தோசை மாவு வாங்கிக்கலாமா? எனக்கு மாவு அரைக்கத் தெரியாது”
மெதுவாக வினவிய வசுமதியைச் சின்ன அதிருப்தியோடு பார்த்தான் வசீகரன்.
“இதெல்லாம் நீ கத்துக்கலையா? சரி விடு! அம்மாக்குக் கால் பண்ணி தர்றேன். எப்பிடி அரைக்கணும்னு அவங்க சொல்லுவாங்க.” என்று மொபைலை எடுக்கப் போனவனை அவசரமாகத் தடுத்தாள் அவள்.
“இல்ல! நானே யூடியூப் பாத்து ட்ரை பண்ணி அரைச்சுக்குறேன்”
அவளது மறுப்பு அவனது புருவங்களை உயர வைத்தது.
“ஏன் பெரியவங்க கிட்ட கேட்டுச் செய்யுறதுல உனக்கு இவ்ளோ ஈகோ? நமக்குத் தெரியாததை தெரிஞ்சவங்க கிட்ட கேக்குறதுல என்ன தப்பு?” என்றான் சற்றே காட்டமானக் குரலில்.
வசுமதி அமைதியாய் நின்றாள்.
‘க்கும்! நான் சப்பாத்திய கோணலா போட்டதுக்கே அந்தம்மா ரெண்டு நாள் சொந்தக்காரங்க கிட்ட சொல்லி சொல்லி சிரிச்சுது. மாவு அரைக்கத் தெரியாதுனு சொல்லிட்டா ஒரு மாசம் என்னை வச்சு காமெடி பண்ணும். என்னமோ இவங்கம்மா நடமாடும் என்சைக்ளோபீடியானு நினைப்பு’
மனதுக்குள் கடுகடுத்ததை வெளியே சொல்லும் துணிவில்லை அவளுக்கு.
“என்ன? பேசுறியா?” என வசீகரன் அழுத்தமாய் கேட்கவும் வேறு வழியின்றி தலையாட்டினாள் வசுமதி.
அன்னையின் மொபைலுக்கு அழைத்தவன் அவர் அழைப்பை ஏற்றதும் மனைவியிடம் மொபைலைக் கொடுத்துவிட்டு உடை மாற்ற போய்விட்டான்.
“எனக்குத் தோசைக்கு அரிசு உழுந்து அளவு தெரியலத்தை. கொஞ்சம் சொல்லுங்களேன்”
வசீகரனின் அன்னை அன்று அவளைக் கிண்டல் செய்யும் மூடில் இல்லை என்பதால் மருமகளுக்கு அரிசி எத்துணை பங்கு உழுந்து எத்துணை பங்கு, வெந்தயம் என்ன அளவு என்று அனைத்தையும் கூறினார் தெளிவாக.
“யூடியூப்ல ஜவ்வரிசிய போடு, அவலை போடு, ஐஸ் கட்டிய போட்டு அரைனு என்னென்னமோ சொல்லுவான். அதெல்லாம் போட்டு வைக்காத. முதல்ல உழுந்தை அரைச்சு எடுத்துட்டு அப்புறம் அரிசிய போடணும். அரிசிய மையா அரைக்கக் கூடாது. கால் பங்கு ரவை பதத்துக்கு மாவு இருக்கணும். மாவு புளிச்சு வெளிய கொட்டக்கூடாதுனா ஒரு பெரிய தாம்பளத்துல தண்ணி நிரப்பி அதுக்குள்ள மாவு பாத்திரத்தை வச்சிடு”
அனைத்துக்கும் தலையை உருட்டிவிட்டு அவர் சொன்னதை மொபைலில் இருக்கும் நோட்ஸில் குறித்துக்கொண்டாள் வசுமதி.
அவரிடம் பேசி முடித்துவிட்டுக் கணவனிடம் மொபைலைக் கொடுக்கப் போனாள்.
“அம்மா சொன்னாங்களா?”
“ம்ம்”
“அவ்ளோதான்! இதுக்கு ஏன் அவ்ளோ யோசிச்ச நீ? எந்த டவுட்டா இருந்தாலும் போன் பண்ணி கேளு. சரியா?”
தலையை உருட்டினாள் வசுமதி.
“உன் அக்கவுண்டுக்கு அமவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிருக்கேன். புரொவிசன், வேற எதுவும் தேவைனா வாங்கிக்க. சூப்பர் மார்க்கெட் காட்டுனேனே! ஞாபகம் இருக்கா?”
“ம்ம்! கொஞ்சம் வெஜிடபிள்ஸ் வாங்கணும். நீங்க வர்றிங்களா? நாம போய் வாங்கிட்டு வரலாம்”
வசீகரனிடம் மீண்டும் புருவச்சுழிப்பு.
“இதுக்கு நான் ஏன் வரணும்? நீயே போய் வாங்கிட்டு வா. ஒவ்வொன்னும் என்னைத் துணைக்குக் கூப்பிடாத. நானே வீட்டுல இருக்குற கொஞ்சநேரம் தான் ரெஸ்ட் எடுக்க முடியும். புரியுதா?”
சரியென அதற்கும் தலையாட்டியவள் காய்கறி வாங்குவதற்காக எடுத்து வைத்திருந்த ஜூட் பிக் ஷாப்பரோடு கிளம்பிவிட்டாள் தனியே!
************
சந்தீப் – பிரியம்வதா கதைக்கு அடுத்து இந்தக் கதை வரும் மக்களே!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




