பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியா போன்ற தேசங்களில் வாய்ப்பின்மை மற்றும் வசதியின்மையால் உண்டாகும் சமுதாய மற்றும் ஆன்மீக வெற்றிடங்களை நிரப்புபவர்களாக ஆன்மீகவாதிகள் திகழ்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக இந்த ஆன்மீகவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அவர்களை ஆதரிக்கின்றனர். குறிப்பிட்ட ஆன்மீகவாதியின் ஆதரவு தேர்தல் காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது. இதற்கு கைமாறாக ஆன்மீகம் என்ற போர்வையில் இந்த ஆன்மீகவாதிகள் சம்பாதிக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பாதுகாக்கும் வழிமுறைகளையும், அரசு இயந்திரங்களில் மாட்டிக்கொள்ளமுடியாத பாதுகாப்பையும் […]
Share your Reaction