“என்னோட ட்ரீம் பாய் பத்தித் தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போற? அப்பிடி ஒருத்தனத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா?” என்று நக்கலாகக் கேட்டவளை உஷாவும் ரித்திமாவும் வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படிக் காட்டினர்.
அவள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை…
ஆனால் ராகவிற்கு அவளது பேச்சுச் சிரிப்பாக இருக்கவே “அவ்ளோ பெரிய மனசு எனக்குக் கெடையாது ஜான்சி ராணி. எனக்குக் கொஞ்சம் போர் அடிக்குது. நீ எதாச்சும் காமெடியா பேசுவ. அதைக் கேட்டா கொஞ்சம் நல்லா இருக்குமேனு கேட்டேன்” என்று அவளைப் பதிலுக்குக் கடுப்பேற்றினான்.
“என்னோட ட்ரீம் பாய் பத்திப் பேசுறது உனக்குக் காமெடியா? போடா வளந்து கெட்டவனே” என்று வாய் தவறி உளறியவள் மறக்காமல் அதை மொழிபெயர்த்தாள்.
“நான் போன ஜென்மத்துல எதோ பெரிய பாவம் பண்ணிட்டேன் போல இருக்கு… அதான் என்னோட ட்ரீம் பாய் மாதிரி ஒருத்தன் என்னோட லைஃப்ல வரவே இல்ல” என்று வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
ராகவ் காபியை அருந்தியபடியே அவள் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். உஷாவுக்கும் ரித்திக்கும் கூட இது கொஞ்ச நேரத்தில் காமெடியாகத் தோன்ற அவர்களும் அவளது ட்ரீம் பாய்க்கான வரையறைகளைக் கேட்க ஆரம்பித்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஃபர்ஸ்ட் நான் ஆல்ரெடி சொன்ன மாதிரியே இப்பிடி மைதாமாவு மாதிரிலாம் இருக்கக் கூடாது. செகண்ட் இவ்ளோ ஹைட் இருக்கவே கூடாது. பிகாஸ் நிமிந்து பாத்துப் பேசிப் பேசியே எனக்குக் கழுத்துவலி வந்துடுச்சு”
“இதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது ஜான்சி ராணி.. இதுல்லாம் என்னோட ஜீன்ல இருக்கு” என்றான் ராகவ்.
“ஓகே…. இதுலயே நீ டிஸ்குவாலிஃபைட்” என்று அவனிடம் சொல்லிவிட்டுத் தன் கதையைத் தொடர்ந்தாள்.
“தென் ரொம்ப ஆட்டிட்டியூட் காமிக்கக் கூடாது. டவுன் டு எர்த் பெர்சனா நடந்துக்கணும். அப்புறம் என்னோட ரொட்டின் வோர்க்ல எனக்கு ஹெல்ப் பண்ணனும். தென் என்கூடச் சேந்து நல்லா ஊர் சுத்தணும். அதை விட்டுட்டு இங்க இருக்கிற லால் பாக் கூடக் கூட்டிட்டுப் போக டைம் இல்லாத மாதிரி சீன் போடக் கூடாது” என்று சொல்லிவிட்டு ராகவைப் பார்த்து உதட்டைச் சுழித்தாள்.
“அப்புறம் என்ன? ம்ம்.. ஹான் ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒன் டைம் என்னைக் காதலோடப் பாத்து ‘அவந்திகா ஐ லவ் யூ’னு சொல்லணும். சில பேர மாதிரி காதல்னா கிலோ என்ன விலைனு கேக்கக் கூடாது. அவ்ளோதான்” என்று சொல்லிவிட்டு மூவரையும் பார்த்தாள்.
ராகவ் சோஃபாவை விட்டு எழுந்தவன் “நாட் பேட் ஜான்சி ராணி! யுவர் ஹியூமர் சென்ஸ் இஸ் ஆஸம்! நல்லாக் காமெடியா பேசுற. கீப் இட் அப்” என்று தோளில் தட்டிவிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் உதட்டைச் சுழித்தவள் “பாத்தியா மைதா மாவுக்குக் கொழுப்பை? நான் எவ்ளோ உணர்ச்சிபூர்வமா என்னோட ட்ரீம்பாய் பத்திச் சொல்லிட்டு இருக்கேன். இவனுக்கு அதைக் கேட்டாக் காமெடி மாதிரி இருக்காம். ஏய்! இவனைப் போய் நான் கல்யாணம் பண்ணிகிட்டேனேடி. சரியான மாங்கா மடையன்” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
“என்ன பண்ணுறது ஹனிபி? எல்லாம் தலையெழுத்து” என்றபடி ரித்திமாவும், உஷாவும் அவளது மூடை மாற்றுவதற்காக வேண்டி வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்தனர்.
ஒரு மாதம் இப்படியே கழிய அதற்கு மேலும் வீட்டிலேயே இருந்தால் அது முட்டாள்தனம் என்று அவந்திகாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது.
அதனால் உஷாவும் அவந்திகாவும் வழக்கம் போலச் சன் டியூவிற்குச் செல்ல ஆரம்பித்தனர். அவந்திகா காரில் போகாமல் அடம்பிடிப்பதால் தினமும் ராகவே அவளை அலுவலகத்தில் விட்டு மாலை வீடு திரும்பும்போது அவளையும் வீட்டுக்கு அழைத்துவரம் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்..
அவந்திகாவுக்கு எரிச்சலாக இருந்தது இதுதான். அவனது அக்கறையை நினைத்து ஒரு புறம் மனம் நெகிழத் தொடங்கினாலும் அதை அவன் ஒரு பொறுப்பாக மட்டும்தான் பார்க்கிறான் என்பது அவளது எண்ணம். அதனால் இருவரும் தங்கள் பிடிவாதத்தை இம்மியும் விட்டுக் கொடுக்கவில்லை…
ஆனால் அவனது சிரிப்பில் மெய்மறப்பதையோ, அவளுக்குப் பிடித்தமானதை அவன் செய்தால் அவனை அணைப்பதையோ அவள் நிறுத்தவே இல்லை. ராகவ் எப்போதும் போல அவந்திகாவைச் சீண்டுவதையும் கேலி செய்வதையும் கொஞ்சம் கூட நிறுத்தவில்லை. சொல்லப் போனால் அவள் ட்ரீம் பாயைப் பற்றிச் சொன்ன நாளிலிருந்து அதை வைத்து அவளைக் கேலி செய்தே சாகடித்தான்!
மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை எந்தச் சிக்கலுமின்றி அதே சமயம் எந்த முன்னேற்றமுமின்றி அமைதியான நீரோடை போல ஓடிக்கொண்டிருந்தது.
எப்போதும் போல மாலையில் ஒன்றாக வீடு திரும்பியவர்களுக்கு அங்கே ஏதோ வித்தியாசமான சூழலாகத் தோன்ற ஒருவரையொருவர் பார்த்தபடி உள்ளே சென்றவர்கள் வாசலிலேயே நின்றனர்…
அனைவரும் ஹாலில் குழுமியிருக்க ஒரு ஜீன்ஸ் ஃப்ளாரல் டாப் அணிந்திருந்த ஒரு பெண் வீணாவின் அருகில் அமர்ந்து அனைவரிடமும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.
அவந்திகாவுக்கு அவளை யாரென்று தெரியாததால் ராகவின் முகத்தைப் பார்க்க அவனோ எந்த உணர்ச்சியும் காட்டாமல் அங்கேயே சிலை போல் நின்றுகொண்டிருந்தான்.
அதற்குள் அந்த ஃப்ளாரல் டாப் அவனைப் பார்த்துவிட ஆர்வத்துடன் அவனை நோக்கி வந்தாள் அவள். அவள் நெருங்கி “ஹாய் ராகவ்” என்று அணைப்பதற்குள் ராகவ் வேகமாக அவந்திகாவின் தோளில் கை போட்டவன் அவள் அணைக்க இடமளிக்கவில்லை.
உடனே அவள் ஏமாற்றத்தை மறைத்தவண்ணம் கை நீட்ட அவளது கையைக் கவனிக்காதவன் போல அலட்சியமாக “ஹாய் தியா… இங்க என்ன பண்ணுற நீ?” என்று கேட்க அவள் முகம் ஒரு நிமிடம் இருண்டது.
பின்னர் சமாளித்தவளாக “ஆன்ட்டி வருணோட மேரேஜ் பத்திச் சொன்னாங்க. அதான் பாபியப் பாத்து விஷ் பண்ணிட்டுப் போலாம்னு வந்தேன்” என்று சிரித்துவைத்தாள்.
அவந்திகா மனதிற்குள் “இந்த மைதாமாவு இந்தப் பொண்ணுகிட்ட பேசுன வார்த்தைய மட்டும் யாராச்சும் என்கிட்ட பேசிருந்தா நான் அடுத்த நிமிஷமே அந்த எடத்தக் காலி பண்ணிருப்பேன். இவ எதுக்கு இப்பிடிச் சமாளிக்கிறா” என்று அவளை நினைத்து ஆச்சரியப்பட்டாள்.
ராகவோ அவந்திகாவை அணைத்தவண்ணமே “நீ விஷ் பண்ணிட்டியா? பண்ணிட்டன்னா கெளம்ப வேண்டியதுதானே” என்று அவளை அலட்சியம் செய்தபடியே உள்ளே சென்றான்.
அவர்களின் பின்னோடு வேகமாக நடந்து வந்தவள் “அது வந்து…” என்று ஆரம்பிக்க அவளை நிறுத்துமாறு கையமர்த்தியவன் “அப்போ உனக்குக் கண்டிப்பா எங்க மேரேஜ் பத்தியும் தெரிஞ்சிருக்கணுமே” என்று கூரிய விழிகளால் அவளைப் பார்க்க அவளின் பார்வை அவனது கையணைப்பிலிருந்த அவந்திகாவின் மீது படிந்து மீண்டது…
“யா… கேள்விப்பட்டேன் ராகவ்.. கங்கிராட்ஸ்” என்று குரலில் சுரத்தின்றி உரைத்தவளைப் பார்த்ததும் உஷாவிற்கு ராகவ் கல்யாணம் நடந்தது இவளுக்குப் பிடிக்கலை போல என்ற எண்ணம் மனதில் உதயமாகிவிட்டது..
அவந்திகாவை அவள் பார்த்தவிதமும் உஷாவின் மனதுக்கு உவப்பாக இல்லாது போகவே அவளுக்கு அந்த கணமே அந்தத் தியாவைப் பிடிக்காமல் போனது….
ராகவைப் பார்த்தவள் “ராகவ்! நீங்க ரெண்டு பேரும் டயர்டா வந்திருப்பீங்க! நீங்க ரூம்குப் போங்க. ஹனிபி நீயும் போ” என்று கண்ணாலே அவளுக்குச் சைகை காட்டி அவர்களை அறைக்குச் செல்லச் சொன்னாள்.
ராகவ் அவந்திகாவைத் தன் கையணைப்பிலேயே அழைத்துச் செல்லவும் உஷாவுக்கு அது கண்கொள்ளாக் காட்சியாகத் தோன்ற தியாவுக்கோ அதைக் கண்டதும் ‘இது நான் இருக்க வேண்டிய இடம்’ என்று மனதில் வன்மம்தான் தோன்றியது..
உஷா பேசியதும் அனைவருமே அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட வீணா தியாவின் கையைப் பிடித்து அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அவளை நோக்கி “நீ என்ன பண்ணிட்டுருக்கனு உனக்குத் தெரியுதா தியா? நீ அவந்திகாவப் பார்த்த பார்வை, அது கொஞ்சம் கூடச் சரியில்ல” என்று அவளைக் கண்டித்தார்.
அவரை ஆச்சரியமாகப் பார்த்த தியா “ஆன்ட்டி, நீங்களா இப்பிடிப் பேசுறீங்க? டெய்லி ராகவ் பொண்டாட்டி அதைப் பண்ணுனா, இதைப் பண்ணுனானு அவ மேல குறையா அடுக்குன நீங்க இப்போ ஏன் இப்பிடிப் பேசுறீங்க?” என்று பொறுக்க மாட்டாமல் கேட்டாள்.
“ஆமா! அந்தப் பொண்ணு என்கிட்ட வாக்குவாதம் பண்ணுறதயே குறிக்கோளா வச்சிட்டு இருக்கா. பட் என்னைக்குமே என்னை அவ அவமானப்படுத்துனது கெடையாது. அதோட இன்னொரு விஷயம் அவ இந்த வீட்டோட மருமகள். ராகவோட பொண்டாட்டி. அத மறந்துடாத”
“போதும்… இதக் கேட்டாலே எனக்கு எரிச்சலா இருக்கு… அவ ராகவ் பொண்டாட்டினா தென் வாட் அபவுட் மீ? நான் இங்க திரும்பி வந்ததே அவனுக்காகத்தான்” என்று பல்லைக் கடித்தபடிக் கூற வீணா அதிர்ந்து போனார்.
“அவனுக்காகவா? அவனுக்குக் கல்யாணம் ஆகி அவன் பொண்டாட்டியும் இங்கதான் இருக்கா. இப்போ இந்த மாதிரி நீ பேசுறது கொஞ்சம் கூடச் சரியில்ல” என்று வீணா கண்டிக்க “பொண்டாட்டியா? ஜோக் ஆஃப் த இயர். ஆன்ட்டி! நானும் ராகவும் பிரேக் அப்தான் பண்ணிகிட்டோம். ஒரேயடியா அவனை என்னால யாருகிட்டயும் தூக்கிக் குடுத்துட முடியாது” என்றாள் தியா கேலியாக.
“வாட்? நீயும் ராகவும் லவ் பண்ணுனீங்களா? இப்போ நீதான் ஜோக் பண்ணிட்டுருக்க தியா” என்று கேலியாகச் சொன்னவரை அவள் திகைப்புடன் பார்த்தாள்.
“என்ன பாக்குற? நீதான் ராகவ் பின்னாடி சுத்துன…. அவன் என்னைக்காச்சும் உன்னை லவ் பண்றேனு உன்கிட்ட சொன்னானா? அப்பாவும் பொண்ணுமா சேந்து உனக்கும் ராகவ்கும் லவ் இருக்கிற மாதிரி எல்லாரையும் நம்ப வச்சீங்க… அதான் உண்மை.. ஏதோ என்னோட ரிலேட்டிவ்ங்கிற ஒரே காரணத்துக்காக இந்த வீட்ல இருந்தவங்க அந்தப் பொய்யையும் நம்பி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்கலாம்னு முடிவு பண்ணப்போ நீதானே ராகவ் கூட ப்ரேக் அப்னு சொல்லிட்டு லண்டன் திரும்பிப் போன.
ஆனா அதையும் எல்லாரும் நம்புனாங்க. எனக்கு மட்டும்தான் தெரியும் ராகவ் உன்னை லவ் பண்ணவே இல்லங்கிற விஷயம். ஆனா அதை நான் எப்போவோ ராதிகாகிட்ட சொல்லிட்டேன். இனியாச்சும் இல்லாத காதலை இருக்கிற மாதிரி காட்டி அசிங்கப்படாம இருந்துக்கோ. அந்தப் பொண்ணு அவந்திகா நீ நெனைக்கிற மாதிரி இல்ல. அவ என்னைக்கும் ராகவை யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டா” என்று சொல்லிவிட்டுச் சென்றார்…
அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் அவள் இல்லை…
அதே நேரம் அவந்திகா ராகவிடம் தியாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.
“ராகவ்… அந்தப் பொண்ணு யாரு?” என்று கேட்ட அவந்திகாவைப் பார்த்தவன் “என்னோட எக்ஸ்” என்று பொறுமையாகச் சொல்லவும் அவள் சிரிக்க ஆரம்பித்தாள்..
“உன்னையும் ஒரு ஆளா நெனைச்சு லவ் பண்ணிருக்கா பாரு! அவளுக்கு மெடல் குடுக்கணும்” என்று மீண்டும் சிரிக்க ராகவ் தலையிலடித்துக் கொண்டான்.
“உனக்கு அவளைப் பாத்து இன்செக்யூரிட்டியா ஃபீல் ஆகணுமே” என்று அவன் சீண்டவும் அவனைக் கேலியாகப் பார்த்தாள் அவந்திகா.
“தம்பி! ஷீ மே பி யுவர் எக்ஸ். பட் நான் உன்னோட வைஃப்… நான்தான் உன்னோட ப்ரசன்ட் அண்ட் ஃப்யூச்சர்.. நான் எதுக்கு ஒரு பாஸ்ட்டப் பாத்து இன்செக்யூர்டா ஃபீல் பண்ணனும்?” என்று சோஃபாவில் ஏறி நின்று அவனைப் பார்த்துக் கேட்டாள்..
“கொஞ்சம் கூடவா உனக்குப் பொறாமையே வரல?” என்று அவன் நம்பாமல் கேட்க அவனது தாடையைப் பிடித்துக் கொஞ்சியவள் “நான் எதுக்குப் பொறாமைப்படணும்? அதல்லாம் நான் எப்போவோ விட்டுட்டேன். நீ எதுக்கு என்னை இப்போ தூண்டி விடுற?” என்று கேட்க அவளைச் சோஃபாவிலிருந்து கீழே இறக்கிவிட்டவன் “நீ வினோதமா ஏதாச்சும் பண்ணி ரொம்ப நாள் ஆகுது. அதான் லைட்டா உன்னைத் தூண்டி விடலாம்னு பாத்தேன். நாட் பேட். நீ ரொம்பத் தெளிவாயிட்ட” என்று சொல்லிவிட்டு உடையை மாற்றச் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் அவந்திகா மனதினுள் “அடப் போடா! எந்த அழகி வந்தாலும் அவளை நான் நமக்குள்ள வர விட்டாதானே” என்று எண்ணிக்கொண்டாள்…
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


