ரிச்சர்ட் ரமிரேஜ் தன்னை ஒரு சாத்தானிஷ்டாக வெளிப்படுத்திக்கொண்டான். அவனது விசாரணைகளின் போது கூட சாத்தான் பற்றிய குறிப்புகள் பலவற்றை அவன் கூறியுள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். அவனது மணிக்கட்டில் ‘பெண்டாக்ராம்’ எனப்படும் நட்சத்திரத்தைச் சுற்றி வட்டம் இருப்பது போன்ற அடையாளத்தை டாட்டூவாகப் போட்டிருந்தான். அது சாத்தான் வழிபாட்டில் இருக்கும் ஒரு சின்னமாகும். அவன் செய்த குற்றங்களுக்கான விசாரணை 1989ல் ஆரம்பித்தது. அந்தாண்டு செப்டம்பரில் பதிமூன்று கொலைகள் மற்றும் இதர பிற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. […]
Share your Reaction

