அத்தியாயம் 45

பெண் சைக்கோபாத்கள் நெருங்கிய உறவுகளிடம் நிலையான அன்பைக் காட்டுவதில்லை. குடும்பத்துடன் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களிடம் விலகலைக் கடைபிடிப்பார்கள். அக்கறையற்ற, அஜாக்கிரதையான, வன்முறையைக் கையாளும் நபராக தன் குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத்துணைவரிடம் நடந்துகொள்ள கூட அவர்கள் தயங்குவதில்லை. சைக்கோபதி கொண்ட நபர்கள் யாராயினும் அவர்களுக்கு சக மனிதர்கள் மீது அக்கறையோ இரக்கமோ இருக்காது. எந்த ஆழமான அன்பையும் உறவையும் மதிக்கும் தன்மை அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு அமைதியற்ற சூழலை உருவாக்கப் பிடிக்கும். சைக்கோபாத் பெண்கள் தங்களது நடவடிக்கையால் சமுதாய … Continue reading “அத்தியாயம் 45”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 44

மனப்பிறழ்வு குறைபாடு கொண்ட பெண் சைக்கோபாத்கள் மனதளவின் காயமுறும்போது அதிவேகமாகவும் சுலபமாகவும் தங்களின் ஆக்ரோசத்தை எதிராளிகளிடம் காட்டத் துணிவார்கள். அது சில நேரங்களில் அவர்களின் இணையராக இருக்கவும் வாய்ப்புள்ளது. பல நேரங்களில் அவர்கள் தங்கள் இணையரை உணர்வுரீதி, பொருளாதாரரீதி, உடல்ரீதியாக வேதனைப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் இணையருடன் இருக்கும் உறவை யாரேனும் தகர்க்க முயன்றார்கள் என்றாலோ வன்முறையைக் கையில் எடுத்து மரியாதை குறைவாக நடந்துகொள்ள தயங்க மாட்டார்கள். இந்தப் பெண் சைக்கோபாத்கள் செக்ஸ், பாலியல் ரீதியான மயக்கம், தன்னைத் … Continue reading “அத்தியாயம் 44”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 43

பெண் சைக்கோபாத்கள் தங்களுக்கென ஒரு போலியான முகமூடியைப் போட்டுக்கொண்டு உலாவுவார்கள். அன்பான பெண், அக்கறையான மனைவி, உதவிக்கு ஆளற்ற அபலைப்பெண், சுதந்திரமனப்பாங்கு கொண்ட பெண், இரக்கமுள்ள அண்டைவீட்டார், அன்பான அன்னை என சமுதாயத்திற்காக அவர்கள் அணியும் முகமுடி சமயத்திற்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்கும். அனைவரும் விரும்பத்தக்க ஒரு பெண்ணாக தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில் பெண் சைக்கோபாத்கள் மெனக்கிடுவார்கள். ஏனென்றால் அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்களுக்குச் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருக்கும். தீவிர மனப்பிறழ்வு … Continue reading “அத்தியாயம் 43”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 42

மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் சைக்கோபாத்களில் ஆண்கள் பெண்களை விட அதிகம் இருக்கின்றனர். காரணம் பெண் சைக்கோபாத்கள் உடல்ரீதியான கொடூரங்களில் ஈடுபடுவதை விட வார்த்தைகளால் வதைப்பதில் கைதேர்ந்திருப்பதே. அதனால் வன்முறையான குற்றங்களில் அவர்கள் ஈடுபடுவது குறைவு. பெண் சைக்கோபாத்களில் ஒட்டுண்ணித்தனமும் பொறாமையும் அதிகம். அடுத்தவர்களின் சந்தோசத்தைக் கண்டு அவர்களால் பொறுக்கவே முடியாது. அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை தனது உடைமையாக்கிக்கொள்ள பயமுறுத்துதல், மிரட்டல் போன்ற காரியங்களில் இறங்குவார்கள் சைக்கோபாத்கள். பெண் சைக்கோபாத்கள் அனைவரும் ஃபேட்டல் அட்ராக்சன் திரைப்படத்தில் வரும் நடிகை … Continue reading “அத்தியாயம் 42”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 41

“பெண் சைக்கோபாத்கள் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்கள். தந்திரமும், வஞ்சகமும் அவர்களின் இயல்பு. அவர்கள் தங்களது செயல்கள் உண்டாக்கும் விளைவுக்கான பொறுப்பை ஏற்கவே மாட்டார்கள். சுரண்டல் மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இளம் வயதிலேயே உணர்வுரீதியாகச் சுரண்டப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிப்பறி, போதைப்பொருட்கள் சார்ந்த குற்றங்களிலும் ஈடுபட வாய்ப்புண்டு. சைக்கோபாத் தன்மை இல்லாத ஒரு குற்றவாளியிடம் இதில் ஏதோ ஒரு குற்றம் மட்டுமே இருக்கும். அதோடு பெண் சைக்கோபாத்களாலும் ஒரு தடவை ஒரு தவறு செய்து அதில் … Continue reading “அத்தியாயம் 41”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 40

சில குறிப்பிட்ட வழக்குகள் பெண் சைக்கோபாத்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்று தான் ஆமி என்ற இருபது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலைக்குற்றவாளியின் வழக்கு. ஆமியைப் பரிசோதித்த போது அவளுக்கு ‘ஆன்டி சோசியல் பெர்ஷனாலிட்டி டிஸ்சார்டர்’ எனப்படும் சமூக விரோத மனப்பாங்கு நோயோடு மனப்பிறழ்வுக்கான அறிகுறிகளும் இருந்ததாகக் கண்டறிப்பட்டது. அதீத மனப்பிறழ்வுக்கான அனைத்து அறிகுறிகளும் அப்பெண்ணுக்கு இருந்தன என சோதித்தவர்கள் கூறினார்கள். அவள் தனது பதின்வயதிலேயே சமூகவிரோத மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறாள். அடிக்கடி வீட்டை விட்டுக் … Continue reading “அத்தியாயம் 40”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 39

பெண் சைக்கோபாத்களுக்குத் தங்கள்மீது எந்த நல்லெண்ணமும் இருக்காது. அதற்காக அவர்கள் வருத்தப்படவும் மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அதற்கான நன்றிக்கடனை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் விரும்பிய அனைத்தையும் அடைந்தே தீரவேண்டுமென்ற வெறியோடு செயல்படுவார்கள். அவர்களை வாழ்க்கை ஏமாற்றிவிட்டதாகக் கருதுவார்கள் இந்தப் பெண் சைக்கோபாத்கள். இத்தனைக்கும் அவர்கள் ஆசைப்படும் அனைத்துமே எளிதில் கிட்டாதவை, நடக்கக்கூடாதவையாகவே இருக்கும். அவர்களை யாராலும் திருப்திப்படுத்தவே முடியாது. இம்மாதிரி பெண் சைக்கோபாத் ஒருவர் உங்களிடம் ஏதோ ஒரு ரகசியம் அல்லது … Continue reading “அத்தியாயம் 39”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 38

பெண் சைக்கோபாத்கள் யாருக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அனைவரையும் தனது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது தன் உரிமை என்ற மனப்பாங்கு அவர்களுக்கு இருக்கும். உங்களது துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். மகிழ்ச்சியில் அவர்கள் சிரிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். வேண்டுமென்ற அடுத்தவர்களின் உடமைகளைத் திருடுவதும் பெண் சைக்கோபாத்களில் சிலர் செய்வார்கள். தப்பித் தவறிப் பிடிபட்டுவிட்டால், தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைத் திரித்து கட்டுக்கதை ஒன்றை கூறி தங்களது தகாத செயலைக் கூட நியாயப்படுத்துவார்கள். கடைசியில் உங்கள் மீதே பழியைத் திருப்புவார்கள். செய்த இழிகாரியத்துக்கு … Continue reading “அத்தியாயம் 38”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 37

பெரும்பாலான பெண் சைக்கோபாத்கள் அடுத்தவர்களை உணர்வுரீதியாக வதைப்பதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். ஒரு பெண் சைக்கோபாத் தனது எதிராளியின் தன்னம்பிக்கையை உடைப்பது, அவர்களை கேலிக்கு ஆளாக்குவது, குடும்பத்தினர் மற்றும் தோழமை வட்டத்திடம் அந்த எதிராளியைப் பற்றித் தவறாகச் சொல்லி அவர்களை அந்த எதிராளிக்கு எதிராகத் திருப்பிவிடுவது போன்ற காரியங்களைச் செய்யத் தயங்கமாட்டார். யாராவது ஒருவரின் வாழ்க்கையை அழிக்கவேண்டுமென அந்த பெண் சைக்கோ முடிவு செய்துவிட்டால் அதில் வெறியோடு இறங்குவார். பெண் சைக்கோபாத்கள் ஆண் சைக்கோபாத்களை விட … Continue reading “அத்தியாயம் 37”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 36

சைக்கோபாத் என்றதுமே பொதுவாக அமெரிக்கன் சைக்கோ நாவலில் வரும் பேட்ரிக் பேட்மேன் தான் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவார். ஆனால் நடப்பு வேறு மாதிரி உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். நரம்புளவியல் குறைபாடு கொண்ட ஒரு பெண் அக்குறைபாடு கொண்ட ஆணை விட ஆபத்தானவள் என்கின்றனர் அவர்கள். பொதுவாக சைக்கோபாத் என்றதுமே இரக்கமற்ற, குற்றங்கள் செய்யக்கூடிய, சமூகவிரோத நடத்தை கொண்ட கொடூரன் என்றே மக்கள் கருதுகிறார்கள். பெண்கள் மென்மையானவர்கள் என்ற பொதுமைப்படுத்துதல் காரணமாக மேற்சொன்ன குணாதிசயங்கள் பெண்களுக்கும் இருக்கும் என்பதை … Continue reading “அத்தியாயம் 36”

 

Share your Reaction

Loading spinner