சுபத்ரா அன்று அபிமன்யூவின் பிறந்தநாள் என்பதால் அவனுக்கு பிடித்த உணவாகப் பார்த்துப் பார்த்து செய்து வைத்திருந்தார். மதியம் வீட்டுக்கு அஸ்வினுடன் வீட்டுக்கு வந்தவன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க அந்நேரம் பார்த்து தான் ஸ்ராவணியின் போன் கால் வந்தது. அவளிடம் பேசிவிட்டு வந்தவனின் முகம் சந்தோசத்தில் ஜொலிக்க பார்த்திபன் சுபத்ராவின் கையில் இடித்தவர் மகனிடம் விஷயத்தை கேட்குமாறு சைகை காட்ட அஸ்வின் அதை கவனித்து விட்டான். தான் கேட்பதாக அவர்களிடம் கண்ணால் சொல்லிவிட்டு அபிமன்யூவிடம் “அப்புறம் அபி! […]
Share your Reaction