“இன்னைக்கு என்னோட இன்டர்ன்ஷிப்போட முதல் நாள் அருள். ஒரு பெரிய நியூஸ் சேனல்ல அடி எடுத்து வச்சிருக்கேன். லைவ் ரிப்போர்ட்டிங் பண்றப்போ என் கை நடுங்குது அருள். கேமரா முன்னாடி நின்னு பேசும்போது என்னையறியாம டென்ஷன் ஆகுறேன்”
–வானதியின் கடிதம்…
அட்சரனின் பிறந்தநாளன்று காலையில் அவனது வீட்டுக்கு ஜோடியாகச் சென்று தங்களுக்கு வாரிசு பிறக்கப் போகிற செய்தியை அவனது பெற்றோரிடம் கூறி ஆசி வாங்கிக் கொண்டார்கள் அருள்மொழியும் வானதியும்.
அட்சரனிடம் அன்று மாலை ட்ரீட் கேட்டிருந்தார்கள் சஞ்சயும் அருள்மொழியும். தப்பித் தவறி கூட மதுபானம் பக்கம் அருள்மொழியின் பார்வை போகவில்லை. ஒரு முறை குடித்து வானதியிடம் உளறிக் கொட்டியது போதாதா என்ற எச்சரிக்கையுணர்வு.
அட்சரன் அன்று உற்சாகத்தில் அதிகமாய் குடித்துவிட அவனை கேப் ஒன்றில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தனது காரில் முகிலகத்துக்கு வந்து சேர்ந்த அருள்மொழியைக் கண்ணீரோடு எதிர்கொண்டார் கயல்விழி.

“என்னாச்சு அத்தை? உடம்பு எதுவும் சரியில்லையா?” பரபரப்பாக வினவியவனிடம் சற்று முன்னர் ஆதித்யனுக்கும் வானதிக்கும் இடையே நடந்த வார்த்தைப் போரைப் பற்றி கூறிவிட்டார் கயல்விழி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வயித்துப் பிள்ளைக்காரிய பேசாதடானு சொல்ல சொல்ல கேக்காம வாய்க்கு வந்தபடி பேசிட்டான் ஆதி. உனக்கு வானதி பத்தி தெரியும்ல அருள். அவ எமோஷனலி வல்னரபிள். இலக்கியா கூட பீச்சுக்குப் போனவ தனியா இருக்கணும்னு அவளை வீட்டுக்கு அனுப்பிட்டாளாம். அவளுக்குப் பி.பி ஏறக்கூடாதுடா.”
ஆதித்யனால் கட்சியில் ஆதாயம் அடைந்த கூட்டமொன்று அவனை அருள்மொழிக்கு எதிராய்த் தூண்டிவிட, அதே வெறியோடு வீட்டுக்கு வந்தவன், கயல்விழியிடம் வானதியும் இலக்கியாவும் விளையாட்டாய் சொத்து பற்றி குறிப்பிட்டதை வஞ்சமாய் எடுத்துக்கொண்டு வார்த்தைகளைக் கொட்டியிருந்தான்.
நடந்ததை கயல்விழி சொன்னதும் அருள்மொழிக்கு வந்ததே கோபம்! ஆதித்யனின் அறைக்கதவைத் தட்டியவன் அவன் திறந்ததும் சட்டையைக் கொத்தாகப் பற்றினான். பின்னே நின்ற ஜெயந்தன் என்னவோ ஏதோ எனப் பதறிவிட, ஸ்ரீநிதி அவனைத் தூக்கிக்கொண்டாள்.
“உனக்கு நான் அரசியலுக்கு வந்தது பிடிக்கலனு தெரியும். அதுக்காக வானதி கிட்ட கத்துவியா நீ?”
“நான் பேசுனதுல என்ன தப்பு? நீ கட்சியப் பங்கு போடுவ. அவ சொத்தைப் பங்கு போடுவா. நான் இடையில விரல் சூப்பிட்டு நிக்கணுமா? என்னமோ அவ மேல அக்கறை உள்ள மாதிரி துள்ளுற? நீயே அவ மூஞ்சில சுப்ரீம் கோர்ட்ல கரி பூசுனவன் தானே?”
“அது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இடையில உள்ள பிரச்சனை. அதைப்பத்திப் பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல. வானதியோட அண்ணன்ங்கிற ஒரே காரணத்துக்காக உன்னைச் சும்மா விட்டுட்டுப் போறேன்.”
அருள்மொழி அவனது சட்டையை விடுவித்தவன் ஸ்ரீநிதியைப் பார்த்தான் எச்சரிக்கும் விதமாய்.
“உங்க புருசனுக்கு எடுத்துச் சொல்லுங்க ரேகா அக்கா. வானதி விசயத்துல அண்ணன் அப்பன்னு எவன் வந்தாலும் அருள்மொழி மனுசனா இருக்கமாட்டான். ஜாக்கிரதை.”
உறுமிவிட்டு ஹாலுக்கு வந்தவன் கயல்விழியிடம் வானதி எந்தக் கடற்கரைக்குப் போனாள் என விசாரித்துவிட்டு அவளை அழைத்து வரக் காரைக் கிளப்பினான்.
பெசண்ட் நகர் பீச்சில் அவள் எங்கே எனத் தேடி ஒரு வழியாகக் கண்டுபிடித்தும் விட்டான் அருள்மொழி. அவன் தன்னருகே வந்து நின்றதை அறிந்தும் கலங்கிய விழிகளுடன் கடற்கரை மணலில் அமர்ந்திருந்த வானதி ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. கடலைப் பார்த்தபடியே பேசினாள்.
“எதுக்கு வந்த? அம்மா அனுப்பி வச்சாங்களா?”
“அவன் என்னமோ சொன்னான்னு நீ இங்க வந்து உக்காந்துப்பியா? வா.”
“நான் அதுக்காக மட்டும்தான் இங்கே வந்தேன்னு தோணுதா? மாத்தி மாத்தி நான் அன்பு வச்சிருக்குறவங்க என்னைத் துச்சமா பேசுறது ஆரம்பிச்சதே உன் கிட்ட இருந்துதான் அருள். அன்னைக்கு நீ, இன்னைக்கு அண்ணா! இதுல உங்க தப்பு எதுவுமில்ல. நீங்க எல்லாரும் என்னைத் துச்சமா பேசவும் நடத்தவும் இடம் குடுத்திருக்கேன்ல. என்னோட தப்புதான்.”

அருள்மொழி அமைதி காத்தான். அவள் சொல்வது மெய் தானே! இதுவரை ஆதித்யன் ஒரு வார்த்தை வானதியைப் பேசியிருப்பானா? ஒரு பெண்ணை அவளது கணவன் அலட்சியப்படுத்தினால் புகுந்த வீட்டாரும் மட்டுமில்லை, பிறந்த வீட்டாரும் அவளை மதிக்கமாட்டார்கள் என்பதே நிடர்சனம்.
“நான் மனுசங்களையும் உறவுகளையும் இழக்குறதுக்கு ரொம்ப பயப்படுவேன். அவங்களை என் கூட தக்க வச்சிக்க என்னாலான முயற்சிய நான் பண்ணுவேன். அவங்களுக்கும் எனக்குமான உறவை நான் அந்த அளவுக்கு வேல்யூ பண்ணுறேன். இந்தப் பயம் இருக்குறதால நான் ஒன்னும் கோழை இல்ல. ஐ செரிஷ் த பீப்பிள் ஹூ லவ்ட். அது என் பலவீனமும் இல்ல. இப்பிடியெல்லாம் இருக்குறதால தானோ என்னவோ நான் நேசிக்குறவங்களுக்கு என் கண்ணீரோட வேல்யூ தெரியல.”
என்ன பதில் சொல்லிவிட முடியும் அவனால்? என்ன பதில் சொன்னாலும் இந்தக் கண்ணீரும் ஆதங்கமும் அடங்காதே! உடன்பிறந்தவன் பேசிய வார்த்தைகள் அத்துணை தூரம் அவளை வதைத்திருக்கிறது.
“டைம் ஆகுது வானதி” என்றான் சுருக்கமாக.
வானதி அமர்ந்தபடியே தலையுயர்த்தி அவனை ஏறிட்டாள். தான் இவ்வளவு நேரம் பேசிய ஒரு வார்த்தை கூட அவனது மனதைத் தொடவில்லை என்பது புரிந்ததும் ஏமாற்றத்தின் ரேகைகள் அவளது விழிகளில்! அதை விழுங்கியவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
“அன்பும் மரியாதையும் அதோட வெளிப்பாடா வர்ற கண்ணீரும் பெரும்பாலான நேரங்கள்ல அதுக்குக் கொஞ்சம் கூடத் தகுதியில்லாத ஆட்கள் கிட்ட தான் வீணா கொட்டப்படுதுல்ல. நான் என்னை நிறைய மாத்திக்கணும்.”
செருப்பில் இருக்கும் மணலை உதறிவிட்டு காரை நோக்கி நடக்கத் தொடங்கினாள். திடுமென பாதி வழியில் நின்றவள் “நீ கூப்பிட்டா நான் வரணுமா? மரியாதையா இங்க இருந்து கிளம்பு. நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வருவேன்” என்று பிடிவாதமாய் சொன்னபடி மீண்டும் கடற்கரை மணலில் அமர்ந்துகொண்டாள்.
அவளை எப்படிச் சமாளிப்பதெனத் தெரியாமல் அயர்ந்து போனான் அருள்மொழி. ‘எப்படியோ போ’ என்று தனியே அவளை விட்டுச் செல்ல முடியாது அவனால். அதே நேரம் அழட்டுமென விடவும் மனம் வரவில்லை.
“அடம் பிடிக்காத. ஆல்ரெடி லேட் ஆகுது. இதுக்கு மேல நீ இங்க இருந்தா போலீஸே வந்து விரட்டுவாங்க. அதுக்குள்ள ஒழுங்கா நீயே என் கூட கிளம்பிடு” என்றான் பொறுமையாய்.
வானதியும் ஹேண்ட்பேக்கோடு எழுந்தவள் அவனை எதிர்பாராமல் நடக்கத் தொடங்க, அருள்மொழியோ அவளது நடையின் வேகத்தைக் கண்டு பதறிப்போனான்.
“ஏய் மெதுவா நடடி. நீ நடக்குற ஸ்பீட் சரியில்ல வானதி.”
அவனது பேச்சைக் காதில் போடாமல் வேகவேகமாக நடந்தவள் மூச்சிரைக்கப் போய் நின்ற இடம் ரோந்து வந்த காவல் வாகனத்தின் அருகே. அவளது முகம் பரிச்சயமானது என்பதால் காவல் அதிகாரியும் அவளிடம் என்னவென வினவ, வானதியோ சற்று தூரத்தில் வருகிற அருள்மொழியைிக் கை காட்டினாள்.
“அவன் என்னை ரொம்ப நேரமா ஃபாலோ பண்ணிட்டே இருக்கான். ஹியூமன் டிராஃபிக்கர் மாதிரி தெரியுறான். ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் என்னனு விசாரிங்க சார்.”
அவள் சொல்லி முடிக்கையில் அருள்மொழியும் அவளருகே வந்துவிட்டான். வந்தவன் அவளது கையைப் பிடிக்க காவல் அதிகாரி அவனது கையைப் பிடித்தார்.
“போலீஸ் முன்னாடியே சி.எம் மக கிட்ட அத்துமீறுறியா? நீ ரொம்ப நேரமா ஃபாலோ பண்ணுறனு மேடம் சொல்லுறாங்க. என்ன கிட்னாப்பிங்கா?” என்று அவர் எகிற, அருள்மொழி கடுப்போடு வானதியைப் பார்த்தான். அவள் முறைப்போடு நிற்கவும் காவல் அதிகாரியின் கையை உதறினான்.
“சார் நான் அவ ஹஸ்பெண்ட்.”

“இல்ல சார் பொய் சொல்லுறான். கிரிமினல் இவன். என்னனு விசாரிங்க.” வானதி வேண்டுமென்றே காவல் அதிகாரியிடம் அவனைப் பற்றி ஏற்றிவிட்டு இடத்தைக் காலி செய்தாள்.
அவளது முதுகுக்குப் பின்னே “சார் நிஜமா வீ ஆர் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப். இங்க பாருங்க! எங்களுக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு மாதம் ஆகுது. போட்டோஸ் பாருங்க. ஐ அம் அன் அட்வகேட்.” என்று அருள்மொழி பரபரப்பாகப் பேசுவது காதில் கேட்டது.
அவளையும் மீறி நமட்டுச்சிரிப்பு முகிழ்க்க, கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு விரைந்து காரைக் கிளப்பியவள், தன்னை அடையாளம் கண்டுவிட்ட காவல் அதிகாரியிடம் தனது நிலையை விளக்கிவிட்டு ஓடி வந்த அருள்மொழிக்கு ‘தம்ஸ் டவுன்’ சைகையைக் காட்டிவிட்டு வேகத்தைக் கூட்டி அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அருள்மொழி மணலை உதைத்தவன் “எவ்ளோ ஸ்பீடா போகுது பாரு. கடவுளே! இப்பிடி கேரக்டர் கிட்ட என்னை மாட்டிவிட்டிட்டியே” என்று வானத்தைப் பார்த்துப் புலம்புவதைப் பார்த்தபடியே காதல் ஜோடிகள் கமுக்கமாகச் சிரித்தபடி நகர்ந்தார்கள்.
அன்றிரவு எப்படியோ வானதியை அவன் சமாதானப்படுத்திவிட்டான். போதாக்குறைக்கு ஜெயசந்திரனும் ஆதித்யனைக் காய்ச்சியெடுத்துவிட்டார்.
“என் மக எனக்கு அம்மா மாதிரி. இன்னொரு தடவை தரக்குறைவா அவளை யார் பேசுனாலும் அவங்களுக்கு இந்த வீட்டுல இடம் கிடையாது” என்று சொல்லிவிட்டார் மனிதர்.
ஆனால் அருள்மொழியால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. அகத்தியனிடம் அவன் லண்டனில் ஒரு உதவி கேட்டானே – ஆதித்யனுக்கும் ஒரு பெண்ணுக்குமான தொடர்பு, அது பற்றிய தகவலைக் கசிய விடுவதற்கான நேரம் வந்துவிட்டதென அவனது மனம் சொன்னது அந்நொடியில்.
மறுநாளே அந்தப் பெண்ணுடன் ஆதித்யன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆயின. கண்ணீரும் கம்பலையுமாக அந்தப் பெண்ணின் ரீல் வீடியோ அனைத்துச் செய்தி சேனல்களிலும் வெளியானது. எதிர்க்கட்சிக்கு லட்டு போல கிடைத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தாமல் விடுவார்களா?
“அவர் முதலமைச்சர் மகனா மட்டும் இருந்தா பரவால்லையே. சட்டமன்ற உறுப்பினர் வேற. கூடவே அந்தக் கட்சிக்குப் போன தேர்தல்ல ஜெயிக்குறதுக்கு வியூகம் அமைச்சுக்குடுத்தவர். இப்பிடி ரெண்டு பெண்களோட வாழ்க்கையச் சீரழிச்ச, திருமணம் கடந்த உறவுல இருக்குற ஒரு நபர் எப்பிடி தொகுதி மக்களுக்கு நல்லது பண்ணுவார்? போதாக்குறைக்கு அடுத்த தேர்தல்ல அவங்க கட்சி வெற்றியடைஞ்சா துணை முதலமைச்சர் வேறயாம். தனிமனித ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் இல்லாத ஒருத்தர் தமிழ்நாட்டுக்குத் துணை முதலமைச்சர் ஆனா தானே சிறப்பா இருக்கும்?”
அனைத்துக் கட்சித் தலைவர்களும் விளாசி எடுத்தார்கள். தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட்டது. கூட்டத்தில் ஆதித்யனும் எப்படியெல்லாமோ சமாளித்தான். ஆனால் அவனது பேச்சைக் கேட்க ஆள் வேண்டுமே!
அரசியல் என்று வந்துவிட்டால் அதில் ஜெயிக்க யாரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார் ஜெயசந்திரன். மகனோடு இணைத்துப் பேசப்பட்ட பெண் அவனது தேர்தல் வியூக அமைப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றியவள் என்று தெரிந்ததும், உடனடியாகக் காவல்துறையை வைத்து விசாரித்தவருக்கு அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இருந்த தொடர்பு உண்மையெனத் தெரிய வந்தது.
மகாபாரதத்தில் குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற அரவானைக் களபலியாக்கியது போல, ஆதித்யனைப் பலியாக்கியாவது அரசியல் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடிவு செய்தார்.
இறுதியில் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டான் ஆதித்யன். அவனுடன் திருமணம் கடந்த உறவிலிருந்த பெண் நீதிமன்றத்தை நாடினால் அவனது சட்டமன்ற உறுப்பினர் பதவியும் போய்விடும் அபாயம்.
அன்றைய கூட்டம் முடிவடைந்ததும் யாருமறியாவண்ணம் அருள்மொழி அகத்தியனிடம் தம்ஸ் அப் காட்டிவிட்டு முகிலகத்துக்குக் கிளம்பினான். இந்நேரம் அங்கே பூகம்பம் வந்திருக்குமென்ற அருள்மொழியின் ஊகத்துக்குச் சற்றும் குறைவில்லாத களேபரம் முகிலகத்தில் நடந்தேறிக் கொண்டிருந்தது.
ஸ்ரீநிதி, கயல்விழியோடு வானதியும் அங்கே இருந்தாள். ஸ்ரீநிதி தலையிலடித்துக் கொண்டு அழுவதை மனம் பொறுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த வானதிக்கு அவளை எப்படிச் சமாதானப்படுத்துவதெனத் தெரியவில்லை. கொஞ்சம் ஆடம்பரப்பிரியே. அதீதச் செலவுகளில் நாட்டமுள்ளவள் என்பதைத் தவிர்த்து அவளிடம் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாது.
‘சே! இந்த அண்ணனுக்கு ஏன் இப்படிப் புத்தி கெட்டுப் போக வேண்டும்?’
“ஸ்ரீமா அழாத. எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா…”
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

