.
.
ஸ்க்விட் கேம்
தென்கொரியாவுல இருக்குற ரகசிய தீவுல வருசம் தோறும் நடக்குற ஒரு விளையாட்டுப்போட்டி. தென்கொரியாவுல சின்னப்பசங்க விளையாடுற கேம்ஸ் எல்லாம் வச்சு அந்தப் போட்டில ஒவ்வொரு ரவுண்டும் டிசைன் பண்ணிருப்பாங்க.
456 நபர்கள் கலந்துக்குற அந்த போட்டில ஒவ்வொரு ரவுண்டுலயும் தோக்குறவங்களைக் கொன்னுடுவாங்க. அந்தப் போட்டில கலந்துக்க ஆட்களைச் சேர்க்குற ஒரு சேல்ஸ்மேன் மூலமா ஹீரோ அதுக்குள்ள போவார். ஹீரோ ரொம்ப கஷ்டப்படுற சிங்கிள் ஃபாதர். அவருக்கு ஒரு பொண்ணு உண்டு. இந்தக் கேம்ல ஜெயிச்சா கிடைக்குற பணம் உதவியா இருக்கும்னு ரகசியதீவுக்குப் போவார்.
அங்க போன அப்புறம் தான் ஒவ்வொரு ரவுண்டுலயும் எலிமினேட் ஆனவங்களைக் கொல்லுவாங்கனு தெரியும். இரக்கம், மனிதாபிமானத்தை பணத்தேவையும் வறுமையும் எப்பிடி துடைச்செறியுதுனு இந்த சீரிஸ்ல சொல்லிருப்பாங்க. முதல் சீசன்ல ஹீரோ வின் பண்ணிடுவார். ரெண்டாவது சீசன் அப்ப ஆளுங்களை இரக்கமில்லாம கொல்லுற இந்த போட்டிய நிறுத்தணும்னு மறுபடி ஒரு போட்டியாளரா உள்ள போவார். முதல் சீசன்ல வந்த மாதிரி புதுப்புது போட்டியாளர்கள் வருவாங்க. தன்னால இந்தப் போட்டிய நிறுத்த முடியாதுனு அவருக்குப் புரிஞ்சிடும்.
மூனாவது சீசன் தான் இப்ப ரிலீஸ் ஆகிருக்கு. நல்லதொரு சர்வைவல் அடிப்படையிலான சீரீஸ் வேணும்னா இதை பாருங்க. மனதிடம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை நான் பரிந்துரை செய்யுறேன். நிறைய இடங்கள்ல இந்த சீரீஸ் உங்களை அழ வைக்கும். அடுத்த சீசன் அமெரிக்காவுலனு ரூமர்ஸ் வருது. உண்மையானு தெரியல. நெட்ஃபிளிக்ஸ்ல மூனு சீசன் இருக்கு. இதோ லிங்க்
Share your Reaction
Share your Reaction
Share your Reaction
Share your Reaction