துளி 47

மேனகா லேப்டாப்பில் அவளது வேலை விஷயங்களை டைப் செய்து கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஸ்ராவணி தான் வந்துவிட்டாளென்று ஆவலுடன் ஹாலுக்குச் சென்றவள் ஸ்ராவணியின் அழுதுச் சிவந்த முகத்தைக் கண்டதும் ஏதோ தவறென்று மூளையில் பட அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். “என்னாச்சு வனி? ஏன் அழுற? இஸ் எனிதிங் ராங்?” என்று ஆதரவாகக் கேட்டவளைக் கண்டதும் ஸ்ராவணிக்கு துக்கத்தில் கண்ணைக் கரித்துக் கொண்டு அழுகை வர அவள் தோளில் சாய்ந்து அழுது கொண்டே […]

 

Share your Reaction

Loading spinner

துளி 46

ஸ்ராவணி அலுவலகத்தை அடைந்த போது எப்போதும் கேட்கும் அபிமன்யூ, அஸ்வினின் கேலிப்பேச்சுக்களின் சத்தமின்றி அலுவலகம் மயான அமைதியுடன் இருந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள் இருவரும் ஆளுக்கொரு புறம் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததைக் கண்டதும் மனதிற்குள் “சரியான டிராமா கிங்ஸ்” என்று எண்ணிக் கொண்டாள். அதை வெளிக்காட்டாமல் தொண்டையைச் செருமவும் இருவரும் நிமிர்ந்து அங்கே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் முகத்தைச் சீராக்கிக் கொண்டனர். அஸ்வின் “வாங்க ரிப்போர்ட்டர் மேடம்” என்றபடி எழப் போக […]

 

Share your Reaction

Loading spinner

துளி 44

காலம் வேகமாக உருண்டோட அவர்களின் விவாகரத்து வழக்குக்கான நாளும் அருகில் வந்துவிட்டது. அதன் இறுதி ஹியரிங்கிற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில் தான் ஸ்ராவணியின் பிறந்தநாள் வந்தது. எப்போதுமே அவளது பிறந்தநாளை பெரிதாகக் கொண்டாடுவதில் அவளுக்கு விருப்பம் இருந்ததில்லை. காலையில் எழுந்து சீக்கிரம் குளித்துவிட்டுக் கோயிலுக்குச் சென்றுவந்து வீட்டில் வேதா செய்துவைத்திருக்கும் ஸ்பெஷலான இனிப்பைச் சுவைப்பது, பின்னர் மாலையில் குடும்பத்தோடு ஹோட்டலில் டின்னர், இது தான் அவளைப் பொறுத்தவரை பிறந்தநாள் கொண்டாட்டம். அந்த வருடமும் அதையே […]

 

Share your Reaction

Loading spinner

துளி 41

மழை சென்னைக்கு நல்லது செய்ததோ இல்லையோ அபிமன்யூவின் காதலுக்கு ஒரு பெரிய நல்லதைச் செய்துவிட்டுப் போனது. அன்றைய நிகழ்வுக்குப் பிறகு சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிட கிச்சனில் நின்று கொண்டிருந்த ஸ்ராவணி அவனை விலக்கிவிட்டு முதல் காரியமாக போனை சார்ஜில் போட்டுவிட்டு வந்தாள். ஏனெனில் மழையை நினைத்து வேதாவும், வினிதாவும் ஏற்கெனவே பதறிப்போய் இருப்பர் என்பதால் சீக்கிரம் சார்ஜ் ஏறினால் அவர்களுக்கு போன் செய்து விவரத்தைக் கூறிவிடலாம் என்பது அவளின் எண்ணம். போனை சார்ஜில் போட்டவள் மேனகாவிடம் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 40

அபிமன்யூ அவளது கையைப் பிடிக்கவுமே திரும்பிய ஸ்ராவணி அவன் கூறியதைக் கேட்டுவிட்டு “முதல்ல என் கையை விடுடா” என்க அவன் முடியாது என்று மறுப்பாய் தலையசைத்தான். தலையசைத்தபடியே அவளது இடையை தனது கரங்களால் வளைக்க வாயிலில் அஸ்வினுடன் நின்று கொண்டிருந்த மேனகா அஸ்வினிடம் “டேய் உன் ஃப்ரெண்ட் என்னடா பண்ணுறான்? இவனை..” என்றபடி உள்ளே செல்ல எத்தனிக்க அஸ்வின் பதறிப்போய் அவளது கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றுவிட்டான். அவளை ஹாலுக்கு அழைத்துவந்தவன் “உனக்கென்ன பைத்தியமா? அவங்க […]

 

Share your Reaction

Loading spinner

துளி 39

அபிமன்யூவின் கை ஸ்ராவணியின் கூந்தலைச் சரி செய்ய உயர அவள் அவனை முறைத்தவாறே புருவம் உயர்த்தி “என்ன?” என்று கேட்க அந்த ஒரு கேள்வியும், முறைப்புமே உயர்ந்த அவனது கைகளை தானாக இறங்க வைக்க அஸ்வினின் தொண்டை செருமல் அவனை அந்த ஃபிளாட் வாயிலுக்கு மீண்டும் இழுத்துவந்தது. அவன் கைகளைக் கட்டிக் கொள்ள அஸ்வின் ஸ்ராவணியிடம் “ரிப்போர்ட்டர் மேடம் எங்க கார் ரிப்பேர் ஆயிடுச்சு. நைட் ஃபுல்லா கார்ல இருந்துட்டு மார்னிங் சர்வீஸ் விடலாம்னு நெனைச்சோம். பட் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 38

இரண்டு நாட்கள் அபிமன்யூவிடமிருந்து ஒரு போன் காலும் இல்லாததால் ஸ்ராவணி இனி அவன் தன்னைத் தேடி வர மாட்டான் என்ற நம்பிக்கையுடன் வழக்கம் போல தன்னுடைய வாழ்க்கையை வாழத் தொடங்கினாள். அவளது கவனம், நேரம் முழுவதையும் அவளது வேலையே எடுத்துக் கொள்ள அவளால் அதை மீறி வேறு எதையும் சிந்திக்க இயலவில்லை. ஆனால் மேனகாவுக்கு மட்டும் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை அளவுக்கு அதிகமாக இருந்தது. அதனால் அதைச் சொல்லி ஸ்ராவணியை கேலி செய்ய அவளோ […]

 

Share your Reaction

Loading spinner

துளி 36

மருத்துவர் ஸ்ராவணியைப் பரிசோதித்துவிட்டு “உங்களுக்கு இந்த சில் கிளைமேட் ஒத்துக்கல. அதான் ஹை ஃபீவர். மெடிசின்ஸ் எழுதி தர்றேன். ஒரு இன்ஜெக்ஸனும் போடணும்” என்றபடி சிரிஞ்சை எடுக்க மேனகாவின் கண்கள் அதைக் கண்டதும் பீதியடைந்தன. ஸ்ராவணியின் காதில் “வனி உனக்குப் பயமாவே இல்லயா?” என்று கேட்க அவளை முறைத்த ஸ்ராவணி “நீ இங்கே இருந்தா நீயும் டென்சன் ஆகி என்னையும் டென்சன் ஆக்குவ. வெளியே போய் வெயிட் பண்ணு. நான் வர்றேன்” என்று சொல்ல அவள் விட்டால் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 34

ஸ்ராவணியிடமிருந்து மேனகாவைப் பிரித்து அழைத்துச் சென்ற அஸ்வின் அவனது காரில் அவளை அமர்த்திவிட்டு அவனும் கூடவேச் சேர்ந்து அமர்ந்து கொண்டான். மேனகா உம்மென்று அமர்ந்திருக்கவும் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் “ஹலோ நான் ஒன்னும் உன்னை கிட்நாப் பண்ணிக் கூட்டிட்டு வரல. நீ அங்கே இருந்தா அவங்க ஃப்ரீயா பேசிக்க முடியாதேனு தான் கூட்டிட்டு வந்தேன். சோ கொஞ்சம் இந்த சோகமான ரியாக்சனை மாத்து” என்றான் கிண்டலாக. மேனகா “நான் கூட நீ மறுபடியும் திட்ட தான் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 33

ஸ்ராவணி காரிலிருந்துப் போனை எடுத்துவிட்டு வந்தவள் மீண்டும் பார்ட்டி ஹாலுக்குள் நுழையும் போது அவளின் பார்வையில் பட்ட அபிமன்யூவையும் அஸ்வினையும் கண்ட போது தான் அவர்கள் எப்படி இந்த பார்ட்டிக்கு வர முடியும் என்ற கேள்வியே அவள் மூளையில் உதித்தது. அவர்களை நோக்கிச் சென்றவள் “இந்த பார்ட்டிக்கு நீங்க எப்பிடி வந்திங்க? இன்விடேசன் இருக்கா?” என்று கையைக் கட்டிக்கொண்டு கேட்க அபிமன்யூ சாதாரணமாக “நாங்க மிஸ்டர் சிவபிரகாஷ் இன்வைட் பண்ணுனதால வந்தோம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல ரிப்போர்ட்டர் […]

 

Share your Reaction

Loading spinner