யுத்தம் 25

“நீங்கள் ஒரு பேராசைக்காரனை பணத்தால் வெல்லலாம்; ஒரு தற்பெருமை பேசும் நபரை அவரிடம் தாழ்ந்து போவது போல பாவனை செய்து வெல்லலாம்; ஒரு முட்டாளை அவனது பேச்சுக்கு உடன்படுவது போல நடித்து வெல்லலாம்; ஆனால் ஒரு புத்திசாலியை அவனிடம் உண்மையைப் பேசுவதன் மூலமாக மட்டுமே வெற்றி கொள்ள முடியும்”                                                               -சாணக்கியர் வதம்பச்சேரி கிராமம், கோயம்புத்தூர்… கிராமத்திலிருந்த நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான் அருள்மொழி. கூடவே ஐ.பி.சி உறுப்பினர்களும், தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 25

மூவரும் டாக்சியிலிருந்து இறங்கி பப்பை நோக்கி நடைபோட்டனர். மேனகா ஜீன்ஸின் பாக்கெட்டில் கைகளை வைத்து கொண்டு சுற்றி முற்றி வேடிக்கை பார்த்தபடி நடக்க நான்ஸி உற்சாகமாக முன்னேறினாள். ஸ்ராவணி யாருக்கு வந்த வாழ்வோ என்று இருவரையும் பின் தொடர்ந்தாள். வழக்கம் போல பப்பின் பவுண்சர்கள் வழிமறிக்க நான்ஸி கெஸ்ட் லிஸ்டில் தன்னுடைய பெயர் இருப்பதாக கூற அவர்கள் அனுமதித்ததும் மூவரும் உள்ளே சென்றனர். மேனகாவுக்கு ஏற்கெனவே வந்த இடம் என்பதால் சென்ற முறை போலவே ஒரு இருக்கையை […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 23

“நீங்கள் அனைவராலும் விரும்பப்படவேண்டுமென நினைத்தால், எந்நேரத்திலும் எதையும் சமரசம் (compromise) செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள், அப்போது உங்களால் எதையும் சாதிக்க முடியாது”                                                        -மார்கரேட் தாட்சர் ராமமூர்த்தி தனக்காக கூட்டிய மதுரை மாநாடு அவருக்குப் பதிலாக அருள்மொழிக்கே கட்சித்தொண்டர்களிடையே நற்பெயரையும் செல்வாக்கையும் உருவாக்கிக் கொடுத்தது. அந்த மாநாட்டில் எவ்வித அலட்டலுமின்றி தொண்டர்கள் மத்தியில் அவனாற்றிய உரைக்குப் பிறகு அவன் எள் என்றால் எண்ணெய்யாக நிற்குமளவுக்கு கட்சியின் இளைஞரணியினர் தயாராக இருந்தனர். கூடவே புதிய கட்சி உறுப்பினர்களுக்கு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 24

அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழலாம் என்று தூக்கத்தை தொடர்ந்த ஸ்ராவணியை உறக்கத்திலிருந்து எழுப்பியது அவளது போன் ரிங்டோன். அவள் காதை கைகளால் மூடியவள் அதை மீறியும் சத்தம் கேட்க வெறுப்புடன் போனை எடுத்து “ஹலோ உனக்குலாம் தூக்கமே வராதாடா அண்ணா? வினி கிட்ட சொல்லி உனக்கு ரெண்டு மிதி குடுக்க சொல்லுறேன்” என்றாள் தூக்கம் கலைந்த கடுப்பில். மறுமுனையில் சத்தமாக நகைத்த ஸ்ரவன் “ஓ! சாரிடா வனி. பட் என்ன பண்ணுறது? கொஞ்சம் முக்கியமான விஷயம். […]

 

Share your Reaction

Loading spinner

துளி 21

கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் மேனகா ஸ்ராவணியிடம் “வனி இந்த அஸ்வின் பேச்சை அபிமன்யூ தட்ட மாட்டான்னு தெரிஞ்சிருந்தா அவனை வச்சு மூவ் பண்ணியே வீட்டை வாங்கிருக்கலாம்டி. தேவையில்லாம இந்த கல்யாணம் கலாட்டால்லாம் நடந்திருக்காதுல்ல” என்று சொல்ல ஸ்ராவணி ஸ்கூட்டியை ஓட்டியபடி அவளை முறைத்ததை கண்ணாடியில் பார்த்ததும் அமைதியானாள். வீட்டை அடைந்ததும் ஸ்ராவணி முகம் கழுவி விட்டு வந்தவள் விஷ்ணுவுக்கு போன் செய்து அலுவலக விஷயமாக ஏதோ பேச ஆரம்பித்தாள். மேனகா அவளை பெருமூச்சுடன் பார்த்தபடி மனதிற்குள்ளேயே […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 20

“அரசியல்வாதிகளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றை குறிக்கோளாகக் கொண்டிருப்பர்”                                                                 -அரிஸ்டாட்டில் காவல்துறை விசாரணையில் இறந்த தாணுமாலயன் மற்றும் விஜயனின் மரணமும் அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொறுப்பற்ற பதிலும் தமிழகமெங்கும் ஆளுங்கட்சிக்கெதிரான அலைய வீசச் செய்தது. என்ன தான் அதன் பின்னர் தனது பதிலை மாற்றிக் கொண்டு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தாலும் முதலமைச்சர் வீரபாண்டியன் மீது சாமானிய மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டுவிட்டதென்னவோ உண்மை! இது குறித்து […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 19

“அரசன் ஆற்றலுடையவனாக இருப்பின் அவனது குடிமக்களும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர். ஒருவேளை அரசன் பொறுப்பற்றவனாக இருப்பாயினாயின் அவனது குடிமக்கள் அவனைப் போலவே பொறுப்பற்றவர்களாக இருப்பதோடு உழைப்பையே மறந்துவிடுவர். அத்துடன் பொறுப்பற்ற அரசன் எதிரிகளின் கரங்களில் எளிதில் வீழ்ந்துவிடுவான். எனவே அரசன் என்பவன் எப்போதும் விழிப்புடன் இருக்க கடமைப்பட்டவன்”                                                                    -சாணக்கியர் கிஷோரிடமிருந்து பெற்ற வீடியோவை அருள்மொழி சமயோஜிதமாகப் பயன்படுத்திக் கொண்டான். இறந்தவர்களின் தாயும் மனைவியும் கதறும் வீடியோவுடன் ‘காவல்துறை அராஜகத்தால் பறி போன இரு உயிர்கள்’ என […]

 

Share your Reaction

Loading spinner

துளி 19

அபிமன்யூ காரை வேகமாக ஓட்டிக் கொண்டு செல்வதை கண்ட அஸ்வின் பதற்றத்துடன் அவனை பின் தொடர அவனது கார் ஸ்ராவணியின் அண்ணா நகர் வீட்டின் முன் சென்று நின்றது. அஸ்வினும் அவனை தொடர்ந்து அங்கேயே காரை நிறுத்தியவன் அவன் ஏதேனும் விபரீதமாக செய்வதற்கு முன் ஓடிச் சென்று அபிமன்யூவை தடுத்து நிறுத்தினான். “அபி! இப்போ நீ கோவமா இருக்க. இப்போ எது பண்ணுனாலும் அது தப்பா தான்டா போய் முடியும்” என்றவனை விரக்தியுடன் பார்த்த அபிமன்யூ “செய்யாத […]

 

Share your Reaction

Loading spinner

துளி 18

வெறிச்சோடி காணப்பட்டது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் மேரேஜ் ஹால். இவ்வளவு நேரம் இருந்த குதூகலம், உற்சாகம் அனைத்தும் விருந்தினர்களோடு சேர்ந்து வெளியேறிவிட  அங்கே மிஞ்சியிருந்தவர்களின் முகத்தில் வேதனையும் வருத்தமும் மட்டுமே குடிகொண்டிருக்க இருவரது முகங்களில் மட்டும் குழப்பரேகை. அஸ்வின் அரை மணி நேரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்… மேனகா பெண்வீட்டார் மற்றும் பார்த்திபன் முன்னிலையில் அபிமன்யூவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஸ்ராவணியுடன் மணமாகிவிட்டது என்றும் சொல்ல அங்கே கலவரம் மூள ஆரம்பித்தது. […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 17

“அரசியலில் ஆர்வமில்லை என்பவர்களுக்கும் அரசியலில் பங்கேற்க விரும்பாதவர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையே தங்களை விட தகுதியில் குறைந்தவர்களால் ஆளப்படுவதே!                                                                     -ப்ளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம்… மூவரணியாய் அருள்மொழி கொடுத்த பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக சந்திரகுமாருடன் தெய்வநாயகமும் மந்திரமூர்த்தியும் கிட்டத்தட்ட உறுதிமொழியளித்து கொண்டிருந்தனர். அருள்மொழியுடன் அமர்ந்திருந்த யாழினிக்கும் இளைய சகோதரனின் இந்த நகர்வில் சம்மதமே! தங்களை குறைத்து மதிப்பிடும் சித்தப்பாவுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க இளைய சகோதரன் என்ன செய்தாலும் ஆதரவளிக்கத் தயாராக […]

 

Share your Reaction

Loading spinner