பூங்கொடி 1.2

இவளா? எங்கே போனாள் என்ன ஆனாள் என்றே தெரியாமல் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தியவள் இப்படியா நான்காண்டுகள் கழித்து கண் முன்னே வந்து நிற்பாள்? அடுத்து அவரது பார்வையில் சிக்கியவன் அவளருகே நின்று கொண்டிருந்த வாலிபன். வேகமாக அவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டார் நர்மதா. குற்றவுணர்ச்சியும் வேதனையும் மனதுக்குள் மண்டியது. ஆனால் அவரது மைந்தனுக்கு அப்படி எந்த உணர்வும் வரவில்லை. அவளைப் பார்த்துவிட்டு சாதாரணமாக மீண்டும் அனுமன் சிலையைப் பார்க்கத் துவங்கினான். நர்மதாவுக்கு அது தான் ஆச்சரியத்தைக் கொடுத்தது. கண்கள் … Continue reading “பூங்கொடி 1.2”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 1.1

“நம்மளை சுத்தி இருக்குற மக்கள் ரொம்ப வினோதமானவங்க… உங்க கிட்ட ஜெயிக்கிறதுக்கான வழி இருக்குனு சொல்லிப் பாருங்க, உங்களைக் கவனிக்கமாட்டாங்க. உங்க கனவை அடையுறதுக்கான திறமை இருக்குனு சொல்லுங்க, அலட்சியப்படுத்துவாங்க. உங்க கனவுக்கான முதல் படியில ஏற முயற்சி பண்ணுங்க, அப்ப உங்களை மதிக்காம மட்டம் தட்டுவாங்க. ஆனா ஒரு தடவை, ஒரே ஒரு தடவை நீங்க ஜெயிச்சுக் காட்டுங்க, உங்க காலடியில வந்து விழுவாங்க… உங்களை மாதிரி ஒருத்தர் இல்லனு கோவில் கட்டி கும்பிடாத குறையா … Continue reading “பூங்கொடி 1.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.1

அந்நியப் பார்வையில் அழகியல் தெரியுதே! குளத்தில் விழுந்ததொரு குட்டிப் பெருங்கல்லாய், குலைந்தவன் நெஞ்சமிதில் குளிர்ச்சியின் சொல்லாய்! காற்றுப் புகாததொரு கானக நடுவினில், காணக் கிடைத்ததொரு காலை நிலவினில்… தடைகள் தகர்ந்தபின் தன்னையவள் காட்டவே, தலைசாய்த்தே அவனது தனிமையைத் தீட்டவே! -அட்சரனின் வேதா அட்சரனின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தினமும் நூறு வரிகளாவது எழுத முயன்றாள் வேதவதி. பதின்வயது குழந்தைகள் பெற்றோருக்குக் கட்டுப்படாமல் திமிறுவது போல எழுத்துமே அவளுக்கு அடங்க மறுத்தது. சில நேரங்களில் ஒரு வாக்கியம் மட்டுமே முழுமையடையும். … Continue reading “அட்சரம் 22.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 21

இனி இழப்பதற்கு ஏதுமில்லை இனியவை பகிர நிறைய இருக்கிறது! பயங்கள் துறந்த பாஷையிது கடலில் கலக்கும் இரு நதிகள் கரையைத் தழுவும் கடைசி நொடிகள்! அர்த்தங்கள் ததும்பும் எளிய பேச்சில் அழகியல் ஆயிரம் வசிக்கிறது மூச்சில்! -அட்சரனின் வேதா “இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம் ஆன்ட்டி. வேதாவோட அவியல் ருசி இன்னும் நாக்குலயே நிக்குது” வேதவதியின் அறையில் அமர்ந்து அவளது மொபைலில் கனகவல்லியிடம் வீடியோ காலில் உரையாடிக்கொண்டிருந்தாள் வானதி. அவளும் அருள்மொழியும் விருந்துக்காக வருவதை அறிந்து வானதியின் நலன் … Continue reading “அட்சரம் 21”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 20

உதிரப்போகும் நேரத்தில் நறுமணத்தோடு கிளையிடம் மலர் விடைபெற தனது வாசனையை நினைவாக விட்டுச் செல்ல பிரிவின் தருணத்தில் வாசனை அடர்த்தியாக இதுவொரு விசித்திரமான வசந்தகாலம்! -அட்சரனின் வேதா “என்ன அச்சு? நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே? உண்மையா?” காலையில் வந்ததும் வராததுமாக இலக்கியா விசாரித்தாள். “அப்பிடி என்ன கேள்விப்பட்ட நீ?” என்றபடி சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஹெல்வட்டாஸின் சார்பில் சமர்ப்பிக்கப்படக் கூடிய கேட்டலாக் ஒன்றைத் தயார் செய்துகொண்டிருந்தான் அட்சரன். “நீயும் வேதாவும் பேட்ச் அப் ஆகிட்டீங்களாமே?” ராகமாக … Continue reading “அட்சரம் 20”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 19

வார்த்தைகளால் காயங்களை நெய்தவர்கள் உறவுக்கயிற்றின் இறுக்கம் தளர்ந்ததும் இயல்பாகினர் மௌனத்தின் மெல்லிய இழைகளால்! தனித்தீவுகளாக மாறப்போகும் உற்சாகத்தில்! -அட்சரனின் வேதா வானதி வந்த தினத்தில் அட்சரன் வேதவதியோடு பேசி ஒரு முடிவை எடுத்திருந்தான். அதில் அவளுக்கும் சம்மதம் என்றதும் கொஞ்சமாய் மனக்கிலேசம் அடங்கியது அவனுக்கு. உறவுச்சிக்கல்களை மில்லினியல்கள் கையாண்ட விதத்துக்கும், ஜென் ஜி தலைமுறையினர் கையாளும் விதத்துக்கும் வித்தியாசமுள்ளது. காதலிலோ உறவிலோ பிரிவு வந்தாலோ மனக்கசப்பு வந்தாலோ விரோதம் பாவிப்பதும், வெறுப்போடு பிரிவதும் மில்லினியல்கள் காலத்தோடு முடிந்து … Continue reading “அட்சரம் 19”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 18

பழிகள் உரைக்காப் பக்குவமும் பிரிவின் வழிகளுக்கு வரையறையும் கசப்புகள் அகற்றும் கால அவகாசமும் நிதானமாய் அறிந்தனர் தமது நிசப்தம்தனில்! -அட்சரனின் வேதா இலக்கியாவுக்கு அத்துணை கோபம்! சஞ்சய் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டுக்குக் கிளம்பினாள் அவள். “அவன் கோவத்துல கத்துறது புதுசாடி? அதுக்குப் போய் மூஞ்சைத் தூக்கிட்டுக் கிளம்புற” என்று அவளைத் தடுக்கப் பார்த்தான். “வழி விடு சஞ்சய்! இருக்குற கடுப்புல உன்னைக் கடிச்சிடுவேன் பாத்துக்க” மிரட்டியவளைக் கண்டு அவன் அஞ்சுவானா என்ன? “அது புருசன் பொண்டாட்டி … Continue reading “அட்சரம் 18”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 16

மையுலக மாயத்தில் மயங்கியவள் மெய்யுலக வீதியில் மெல்லடி பதித்தாள்! காகிதப் படகைக் கரையில் விடுத்து நிஜத்தின் நதியில் நீந்தப் பழகினாள்! -அட்சரனின் வேதா “பிருந்தாவோட கதைல நீ சொன்ன சேஞ்சஸ் எல்லாத்தையும் பாத்துட்டேன் அச்சு. இன்னும் ஒன் வீக் டைம் வேணும் எடிட் பண்ணுறதுக்கு” இலக்கியா சொல்லவும் சரியெனத் தலையசைத்தான். “கவிநேசன் புக் வேலை எல்லாம் முடிஞ்சுதா? அவரோட புக்குக்கு சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்குக்கான வேலைய சஞ்சய் எந்த லெவல்ல பண்ணிருக்கான்?” “கவிநேசன் புக்கோட ஒர்க் ஃபைனல் … Continue reading “அட்சரம் 16”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 15

மஞ்சமும் கூடமும் மயக்கம் தரவே, கஞ்சத்தனம் ஏனோ அவனின் சிரிப்பில்! பஞ்சணை வீட்டின் பகட்டை ரசிக்க, நஞ்சென முறைத்தே நச்சரிக்கிறானே! -அட்சரனின் வேதா ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். வந்ததிலிருந்து வீட்டில் கனத்த மௌனம் நிலவியது. இந்த மௌனத்திற்கான பிள்ளையார்சுழி மருத்துவமனைக்குச் சதானந்தன் பதறியடித்து வந்த நொடியில் போடப்பட்டது. வந்தவர் மகனிடம் தப்பித்தவறிக்கூட என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. நேரே வேதவதியிடம்தான் போனார். அவளும் நடந்ததில் ஒரு வரியைக் கூட மறக்காமல் புத்திசாலி மாணவி வகுப்பறையில் ஆசிரியரின் கேள்விக்கு … Continue reading “அட்சரம் 15”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 14.2

நக்கலாகச் சிரித்தபடி மாடிப்படியேறியவனின் செவிகளில் “நீ எங்கயும் போகக்கூடாது. இது உன் வீடு. அவன் செயினைக் கழட்டிட்டா எல்லாம் முடிஞ்சுதா? அது என்ன மோதிரம், வளையல் மாதிரி ஒரு நகைனு நினைச்சுக்கிட்டானா?” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மைந்தனின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினார். அட்சரன் கோபத்தோடு அவனது அறைக்குப் போய்விட, வேதவதியிடம் அவளது உடைமைகளை அடுக்கி வைத்துவிட்டாளா என விசாரித்தார். “நான் பேக்கை எடுத்தப்ப அவங்க வந்துட்டாங்க” “சரி! நீ போய் ட்ரஸ் எல்லாத்தையும் வார்ட்ரோப்ல எடுத்து … Continue reading “அட்சரம் 14.2”

 

Share your Reaction

Loading spinner