அத்தியாயம் 20

மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கட்டுக்கதை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அவர்களின் குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் அனுசரணையும் அன்பும் அவர்களைப் பண்படுத்தும். மருத்துவ சிகிச்சையானது மெதுவாகவே முன்னேற்றத்தை உண்டாக்கும். மற்ற ஆளுமை குறைபாடுகளைப் போலவே மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்துவதும் சவால் நிறைந்த காரியமே. ஏனெனில் அந்தக் குறைபாட்டின் தீவிரம், அதற்கான காரணங்கள், குறைபாட்டுக்கான பயனுள்ள சிகிச்சை முறைகள் பற்றி இதுவரை போதுமான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படாததால் சிகிச்சைக்கான வழிமுறைகளும் போதுமானதாக இல்லை. -From psychopathy.org … Continue reading “அத்தியாயம் 20”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும், மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுவதில்லை. அதே போல உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் மனப்பிறழ்வுக்குறைபாடு இருப்பதுமில்லை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சவால்கள் இருக்கும். சில நேரங்களில் மனப்பிறழ்வுக்குறைபாடு வன்முறையாக வெளிப்படுவதில்லை. திருடுதல், ஏமாற்றுதல் போன்ற சமூக விரோத செயல்களாகவும் மனப்பிறழ்வுக்குறைபாடு வெளிப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாம் வயது மற்று பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகின்றனவாம். … Continue reading “அத்தியாயம் 19”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14

உளப்பிறழ்வுக்கான காரணங்கள் என்னவென இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும் வளர்ந்து வரும் ‘நியூரோ இமேஜிங்’ ஆராய்ச்சியானது மனித மூளையிலுள்ள நரம்பியல் அசாதாரணங்களையும் அதன் அறிகுறிகளையும் அடையாளம் கண்டுள்ளது. உதாரணமாகஉளப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களின் மூளைக்குப் பயம் என்ற உணர்வை உணரும் தன்மை குறைவு என்கிறது அந்த ஆராய்ச்சி. இதே அறிகுறி சில பெண்களுக்கும் இருக்கலாமென அந்த ஆராய்ச்சி கூறுகிறது. மூளையிலுள்ள உணர்வுகளைக் கையாளக்கூடிய பகுதியான அமிக்டலாவின் நரம்பியல் சுற்றுகளில் ஏற்படும் சில வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சில … Continue reading “அத்தியாயம் 14”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் கெவின் டட்டன் தன்னுடைய ‘The wisdom of Psychopaths: What Saints, Spies and Serial Killers can teach us about success’ என்ற புத்தகத்தில் உளப்பிறழ்வுக்குறைபாட்டின் நேர்மறையான பண்புகள் சிலவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளார். உளப்பிறழ்வு என்பது காய்ச்சல் தலைவலி போல முழுமையான ஒரு நோய் அல்ல. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அளவில் பாதிப்பை உண்டாக்கும். சிலர் அதனால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுத் தீவிரநிலையை அடைவார்கள். சிலருக்கோ அறிகுறியோடு முடிந்துவிடும் … Continue reading “அத்தியாயம் 13”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 11

தாமஸின் ‘சோசியோபாத் வேர்ல்ட்’ என்ற வலைப்பூ உளப்பிறழ்வுக் குறைபாட்டாளரோடு வாழும் வாழ்க்கை எப்படி இருக்குமென்பதை பற்றிய பதிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் தாமஸ் ‘சைக்கோபாத்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘சோசியோபாத்’ என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார். அதை மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால் பயன்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார் அவர். தாமஸ் எழுதிய ‘A Life spent hiding in Plain Sight’ என்ற புத்தகம் 2012ல் வெளியாகி பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் … Continue reading “அத்தியாயம் 11”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 12

2012ல் ஜூரிச் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உளப்பிறழ்வுக்குறைபாடு அதாவது சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைத் தங்களது சிரிப்பால் தந்திரமாகக் கையாளுவதாகத் தெரிய வந்துள்ளது. பிறரோடு நடைபெறும் உரையாடலைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அவர்கள் சிரிப்பைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் புலனாகியிருக்கிறது. தாமஸ் தனது வலைப்பூவில் அவருக்குத் தினசரி தோன்றும் எண்ணங்களைப் பகிர்கிறார். அவரது வலைப்பூவின் வாசகர்களுக்கு அவரது தினசரி பதிவுகளும் வீடியோக்களும் ஆற்றுப்படுத்தும் இடமாக இருப்பதாகக் கூறுகிறார் அவர். ஏனெனில் அந்தப் பதிவைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களது … Continue reading “அத்தியாயம் 12”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 10

உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலை இருக்காது என்றும், அடுத்தவர்களின் எண்ணங்கள் அவர்களைப் பாதிக்காது என்றும் அந்நோயால் பாதிக்கப்பட்ட விக்டோரியா என்ற பெண்மணி கூறுகிறார். உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ‘Us’ என்ற ஆன்லைன் கம்யூனிட்டியைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அந்தக் கம்யூனிட்டியானது பெரும்பாலும் எழுத்தாளர் எம்.இ.தாமசின் வலைப்பதிவுகளை மையமாகக் கொண்டிருக்கும் என்கிறார் அவர். எழுத்தாளர் எம்.இ.தாமஸ் என்பவர் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே மிகவும் பிரபலம். டெக்சாஸ் ஏ&எம் … Continue reading “அத்தியாயம் 10”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 9

உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களை விட பெண்கள் ஏன் சமூக விரோத செயல்களிலும், குற்ற செயல்களிலும் குறைவாக ஈடுபடுகின்றனர் என்பதை பற்றி ஆராய்வது சுவாரசியமாக இருக்கக்கூடும் என்கிறார் அன்னா சான்ஸ் கார்சியா. இந்தக் காரணங்களைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் அரைகுறையாக நின்று போயிருந்தாலும் சமீபத்தில் ஃப்ரான்சில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் சாத்தியமான பதிலொன்று கிடைத்திருக்கிறது. சைக்கோபதி என்ற உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நட்புணர்வின்மை, ஜடத்தன்மை ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் இந்த உணர்வு குறைவு. … Continue reading “அத்தியாயம் 9”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 8

மாட்ரிட் பல்கலைகழகத்தில் உளவியல் ஆய்வு மாணவியான அன்னா சான்ஸ் கார்சியா தனது சகமாணவர்களோடு இணைந்து பதினோராயிரம் நபர்களை வைத்து உளப்பிறழ்வுக் குறைபாடு பற்றிய பகுப்பாய்வு ஒன்றை 2021ல் மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் பெண்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களிடமும் உளப்பிறழ்வுக் குறைபாடான சைக்கோபதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்பதை வலியுறுத்தியிருந்தார் அன்னா சான்ஸ் கார்சியா. பிபிசிக்கு அவர் கொடுத்த பேட்டியில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களை விட குறைவாகவே வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

2005ல் உளவியல் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட பகுப்பாய்வில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சில முக்கியமான பண்புரீதியான வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் திட்டமிடாமல் வேலைகளைச் சொதப்புவது, சுவாரசியமான சிலிர்ப்பூட்டும் உறவுகளை வெளியே தேடுவது, கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பது போன்ற பண்புகளை வெளிப்படுத்துவார்களாம். ஆனால் ஆண்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தீவிரமான உடல்ரீதியான வன்முறையை நிகழ்த்துவது மூலமாக தங்களது உளப்பிறழ்வுக் குறைபாட்டை வெளிக்காட்டுவதாக அந்தப் பகுப்பாய்வின் முடிவுகள் கூறுகின்றன. அந்தக் காலகட்டத்தில் ஆண்கள் … Continue reading “அத்தியாயம் 7”

 

Share your Reaction

Loading spinner