மனப்பிறழ்வுக்குறைபாடு அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறைபாடு ஆகும். ஆனால் இக்குறைபாட்டைக் கண்டறிய மருத்துவ சோதனைகளான இரத்தச் சோதனை, மூளை ஸ்கேன், மரபியல் பரிசோதனை போன்று எந்தச் சோதனையும் கிடையாது. அவர்களை சில குணாதிசயங்களை வைத்து கண்டுகொள்ளலாம். பெரும்பாலும் அவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், அதீத கவர்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தங்களது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறுவார்கள். யாரிடமும் அன்பு பாராட்டத் தெரியாமல் அடுத்தவர்களை தங்களது பேச்சு சாதுரியத்தால் ஏமாற்றும் குணம் கொண்டவர்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாமல் விளைவுகளைப் பற்றிய கவலையின்றி எந்த ஒரு குற்றச்செயல்களையும் செய்து முடிப்பார்கள். இதை வைத்துப் பார்க்கையில் சைக்கோபாத் என்றாலே கடினமான, இதயமற்ற மனிதத்தன்மையற்ற ஜீவன் என்ற பிம்பம் நமக்குள் உருவாகும். ஆனால் உண்மை அதுவல்ல! சாதாரண மனிதர்களைப் போல சைக்கோபாத்களும் தங்களது பெற்றோர், வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது பாசம் வைப்பதுண்டு. ஆனால் அந்த பாசமோ இரக்கமோ அடுத்தவர்களைப் பார்க்கும் போது வெளிப்படாது. அது மட்டுமல்லாமல் சைக்கோபாத்கள் உணர்வுரீதியாக வேதனையுறுவதும் உண்டு. பிரிவு, விவாகரத்து, நேசித்த நபரின் மரணம், தங்களது குணத்தை பற்றிய வருத்தம் இதெல்லாம் ஒரு சைக்கோபாத்தை வேதனையில் ஆழ்த்தக் கூடியவை.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
மனோதத்துவ மருத்துவரிடம் வீடியோ கால் வழியாக உரையாடிக்கொண்டிருந்தாள் இதன்யா.
இனியாவின் படுகொலையை விவரித்தவள் கொலைகாரன் என்னென்ன குணாதிசயங்களுடன் இருக்க முடியுமென்ற அவரது ஊகத்தைக் கேட்டறிந்து கொண்டிருந்தாள்.
“நார்மலா பணத்துக்காக, உடலின்பத்துக்காக, பழிவாங்குறதுக்காக நடக்குற கொலைகளை நம்மளால ஈசியா ஃபைண்ட் அவுட் பண்ண முடியும் இதன்யா… அந்தக் கில்லரோட அதிகபட்ச நோக்கமே விக்டிமை கொல்லுறது தான்… உயிரில்லாத உடம்பை அவங்க மேக்சிமம் எதுவும் செய்யுறதில்ல… சிலர் அடையாளம் தெரியக்கூடாதுனு துண்டு துண்டா வெட்டுறது, முகத்தைச் சிதைக்குற காரியங்களை பண்ணுவாங்க… பட் அதுல மாட்டிக்க கூடாதுங்கிற எண்ணம் தான் நிறைஞ்சிருக்கும்…
அப்பிடி கொல்லுறவங்களுக்கு மேக்சிமம் இருக்குறது பணத்தாசை, உடலாசை, பழிவெறி இந்த மூனும் தான்… விக்டிம் இறந்ததும் அவங்களோட இந்த வெறி தணிஞ்சிடும்… ஆனா இனியாவோட கேஸை பொறுத்தவரைக்கும் கில்லர் அப்நார்மலா நிறைய டார்ச்சர்ஸ் செஞ்சிருக்கான்… அந்தப் பொண்ணு முகத்துல ஆசிட் ஊத்தி, தோலை உரிச்சி அப்புறமா வன்புணர்வுக்கு ஆளாக்கிருக்கான்… அவனோட ப்ரைமரி மோட்டிவ் செக்ஸ் இல்லனு இதுல இருந்தே தெரியுது… அவனுக்கு இனியா வேதனைய அனுபவிக்கணும்ங்கிறது தான் மோட்டிவ்… அதுக்காக தான் உடம்பு முழுக்க குத்தியிருக்கான்… அப்பிடியும் இறக்கலனதும் கழுத்தை நெறிச்சுக் கொன்னுருக்கான்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இதன்யாவுக்கு இதிலும் சில சந்தேகம் இருந்தது.
“இது கலிங்கராஜனை பழிவாங்க நடந்த கொலையா ஏன் இருக்கக்கூடாது டாக்டர்?”
“பழி வாங்க நினைச்சவன் அவளை வன்புணர்வு பண்ண வேண்டிய அவசியமில்ல… அப்பிடியே வக்கிரம் பிடிச்ச கொலைகாரனா இருந்தாலும் முகத்தைச் சிதைச்சு உறவு வச்சிருக்கமாட்டான்… மனசளவுல தீவிரமான பாதிப்புக்கு ஆளான ஒருத்தனால தான் இவ்ளோ க்ரூயலா யோசிக்க முடியும் இதன்யா… அதான் சொல்லுறேன், கில்லரோட அதிகபட்ச மோட்டிவ் இனியாவ அணுவணுவா சித்திரவதை பண்ணிக் கொல்லுறது தான்… அவளால ஏதோ ஒரு விதத்துல அவன் ஏமாந்ததா நினைச்சிருக்கலாம்… அவனோட ஏமாற்றத்தோட விளைவா கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம்… இந்த ஆங்கிள்ல பாத்தா கில்லர் இனியாவுக்குப் பரிச்சயமானவனா இருக்கணும்”
“ஏமாற்றம் மீன்ஸ்?” இதன்யா கேட்கவும்
“இனியாவோட வயசை வச்சு பாத்தா நட்புரீதியான ஏமாற்றம் ஆர் காதல் சம்பந்தப்பட்ட ஏமாற்றமா இருக்கலாம்ங்கிறது என்னோட கெஸ்… அதாவது அவ கூட நட்பு வச்சிக்க ஆசைப்பட்டு அது முடியாம போனதால வந்த கோபம் வெறியா மாறிருக்கலாம்… அல்லது இனியாவ ஒருதலையா காதலிச்ச நபரா கூட இருக்கலாம்… அந்தப் பொண்ணை அவ காதலனோட பாத்த ஏமாற்றத்தால கூட இவ்ளோ கொடூரமா அவளைக் கொன்னுருக்கலாம்”
மருத்துவர் முடிக்கவும் இதன்யா அடுத்த சந்தேகத்தைக் கேட்டாள்.
“இண்டர்நெட்ல பாத்தப்ப சில கல்ட் குரூப் சாத்தானை வழிபடுறவங்க பெண்களை வன்புணர்வுக்கு ஆளாக்கிக் கொல்லுறதை ஒரு ரிச்சுவல் மாதிரி வச்சிருக்காங்கனு தெரிஞ்சிக்கிட்டேன்… அந்த ஆங்கிள்ல பாத்தப்ப இது கல்ட் குரூப் ஆளுங்களோட மூடநம்பிக்கையால நடந்த கொலைனு யோசிக்கத் தோணுது டாக்டர்”
மருத்துவர் புன்னகைத்தார்.
“நல்ல மனநிலைல இருக்குறவங்க இந்த மாதிரி உயிரோட விளையாடுற கல்ட் குரூப்ல சேர மாட்டாங்க இதன்யா… அப்பிடி யார் மேலயும் உனக்குச் சந்தேகம் இருந்துச்சுனா டிலே பண்ணாம அவங்களை அரெஸ்ட் பண்ணுறது பெட்டர்… அவங்களோட டார்க்கெட் இனியாவா இருந்தா, இதுக்கு மேல கொலைகள் நடக்க வாய்ப்பில்ல… பட் அவங்களோட நோக்கம் சாத்தானுக்குப் பலி குடுக்குறது தான்னா இதே மாதிரி கொலைகள் தொடர்ந்து நடக்க வாய்ப்பிருக்கு… ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கம்மா… எல்லா சைக்கோவும் சீரியல் கில்லர் ஆகுறது இல்ல… ஆனா ஒவ்வொரு சீரியல் கில்லரும் சைக்கோபாத்… அவங்களை ரொம்ப கவனமா கையாளணும்.. இல்லனா விக்டிம்களோட எண்ணிக்கை நீண்டுக்கிட்டே போகும்… இத்தனை நாள் ஆகியும் இதே ஸ்டைல்ல அடுத்த மர்டர் நடக்கல… அப்ப கொலைகாரன் சைக்கோவா இருந்தாலும் அவன் சீரியல் கில்லர் இல்லனு ப்ரூவ் ஆகுது… இருந்தாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் இதன்யா… எது பண்ணுனாலும் லேட் பண்ணாம செஞ்சு முடி”
“ஓ.கே டாக்டர்… உங்க டைமை எனக்காக ஒதுக்கி இவ்ளோ டீடெய்ல்ஸ் சொன்னதுக்கு தேங்க்ஸ்… ஆன்ட்டிய நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க”
“கண்டிப்பா சொல்லுறேன்… அடுத்த மாசம் ஸ்டேட்சுக்கு போறா உன் ஆன்ட்டி… அதுக்குள்ள இந்தக் கேஸை முடிச்சிட்டு வந்துடும்மா… நம்ம ரெண்டு ஃபேமிலியும் பாத்து பேசி ரொம்ப நாளாகுது”
“ஷ்யூர் டாக்டர்”
அவரிடம் பேசிவிட்டு டேபை மேஜை மீது கவிழ்த்துவைத்தாள் இதன்யா.
எழுந்தவள் தனக்கு எதிரே இருந்த போர்டில் மார்க்கரால் கொலைகாரன் பற்றிய தனது ஊகங்களை எழுத ஆரம்பித்தாள்.
- தடயவியல் அறிவு உள்ளவன் – ஏனெனில் இனியாவின் உடலில் நிஷாந்தின் டி.என்.ஏக்கள் கிடைத்த அளவுக்கு அவனுடையது கிடைக்கவில்லை. தடயவியல் அறிவை வைத்து கைரேகை முதற்கொண்டு கலைத்திருக்கிறான்.
- மனப்பிறழ்வுக்குறைபாடுள்ள சைக்கோபாத் – இனியா கொலை செய்யப்பட்ட குரூரமான முறை இதற்கு காரணம்
- சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கையுள்ளவன் – இனியாவைச் சிதைத்துக் கொலை செய்த விதம்
- இனியாவுக்கு நன்கு பரிச்சயமானவன் – அவளிடம் நட்பு பேண ஆசைபட்டவனாகவோ ஒரு தலையாகக் காதலித்தவனாகவோ இருக்க வேண்டும்.
- ஏதோ ஒரு விதத்தால் இனியாவால் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம்
- அவனுக்கு ஓநாய் போன்ற ப்ரிடேட்டர்களைப் பழக்க தெரிந்திருக்கிறது.
வழக்கு போகிற திசையைப் பொறுத்து இந்த அனுமாணங்களில் மாற்றம் வந்தாலும் வரலாமென குறித்தவள் மார்க்கரால் மோவாயில் தட்டியபடி அமர்ந்தாள்.
ஒரு மாதத்துக்குள் இந்த வழக்கு முடியுமா? சந்தேகம் வந்துவிட்டது இதன்யாவுக்கு.
தலைவலி வேறு! காபி போட்டவள் மாத்திரையை விழுங்கிவிட்டுப் படுத்தாள்.
மறுநாள் பொன்மலை காவல் நிலையத்தில் தனது சிறப்பு விசாரணை குழுவினரிடம் மருத்துவர் சொன்ன பாயிண்ட்களையும் தனது அனுமானங்களையும் விளக்கினாள்.
முரளிதரன் இப்போது புதிய சந்தேகமொன்றை கிளப்பினார்.

“இனியாவ கொலை பண்ணுனவங்க ரெண்டு பேர்னு பி.எம் ரிப்போர்ட்ல சொல்லல… அவளை வன்புணர்வுக்கு ஆளாக்குனவங்க தான் ரெண்டு பேர்னு சொல்லிருக்காங்க… ஒருத்தன் நிஷாந்த்… ஆனா அவன் அவளை காட்டுல விட்டுட்டுப் போனதுக்கு அப்புறம் தான் கில்லர் விக்டிமை பாத்திருக்கணும்… அவனுக்குத் துணையா நிறைய பேர் இருந்திருக்கலாம்ங்கிறது என்னோட ஊகம் மேடம்”
இதன்யா புருவங்களைச் சுருக்க மார்த்தாண்டனும் மகேந்திரனும் முரளிதரனின் விளக்கத்திற்குக் காத்திருந்தனர்.
“நல்லா யோசிச்சுப் பாருங்க… நேத்து ஃபாரன்சிக் டீம் அந்தக் குகைய சல்லடை போட்டுச் சலிச்சும் கொலை நடந்ததுக்கான எந்த தடயமும் கிடைக்கல… நம்ம கலெக்ட் பண்ணுன பொருட்களும் இந்தக் கேசுக்குச் சம்பந்தமில்லாத பொருள், அதுல எந்த கைரேகையும் கிடைக்கல… இனியாவ கில்லர் எங்க வச்சு கொலை பண்ணுனான்ங்கிறது இப்ப வரைக்கும் விடை தெரியாத கேள்வியா இருக்கு… அவ உடம்பு கிடைச்ச காட்டுப்பாதைல இருந்து கிடைச்ச ஷூ பிரிண்ட்ஸ் ஒரு இடத்துல பாதிலயே நின்னு போயிடுச்சு… அவ உடம்போட கீழ்பாகத்துல இருந்து ஸ்பெர்ம் செமன் சாம்பிள் எடுத்துடக்கூடாதுங்கிற நோக்கத்தோட அவ உடம்பைத் தண்ணியால கழுவிருக்கான் கில்லர்… அவளோட உடம்புல அவனோட கைரேகை கூட சிக்கல… இதெல்லாம் பாக்குறப்ப இது திடீர்னு உணர்ச்சிவசப்பட்டதால நடந்த கொலைனு எனக்குத் தோணல… திஸ் வாஸ் அ வெல் ப்ளாண்ட் மர்டர் பை அ குரூப் ஆப் பீபிள்… சத்தியமா இதுல ஒரே ஒருத்தன் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருப்பான்னு எனக்குத் தோணல மேடம்”
முரளிதரனின் விளக்கம் கேட்பதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் அதில் தர்க்கரீதியாக நிறைய சந்தேகங்கள் எழுந்தன மார்த்தாண்டனுக்கும் மகேந்திரனுக்கும்.
“விக்டிம் காணாம போய் இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ள மர்டர் நடந்திருக்கு… ஒரு கொலைய இவ்ளோ குறுகுன நேரத்துக்குள்ள இத்தனை தெளிவா ஆர்கனைஸ்டா செய்ய முடியுமா சார்? புரொஃபஷனல் கில்லருக்குக் கூட ஒரு கொலைய திட்டமிடுறதுக்கு இதை விட கூடுதலா நேரம் தேவைப்படும்… நீங்க சொல்லுற மாதிரி ஒரு குரூப்பை வச்சு செய்யணும்னா எப்பிடி சார் பாசிபிள்?” என்றார் மகேந்திரன்.
“அப்ப கில்லர் மாசக்கணக்குல ப்ளான் பண்ணி இனியாவை கொன்னுருக்கலாம்னு சொல்ல வர்றிங்களா சார்?” இது மார்த்தாண்டனின் சந்தேகம்.
முரளிதரன் மறுப்பாகத் தலையசைத்தார்.
“அவனுக்கு இனியா மேல ஏதோ ஒரு வகை ஏமாற்ற உணர்வு இருந்திருக்கு… அது ரொம்ப நாளா இருந்திருக்கலாம்.. வசமா அவ சிக்கட்டும்னு காத்திருந்து காய் நகர்த்திருப்பான்னு தோணுது… ஷார்ட் டைம்ல இவ்ளோ அழகா ஒரு கொலைய செஞ்சு முடிச்சது அவனோட பெர்ஃபெக்சனைக் காட்டுது… ஆதாரத்தை அழிச்ச விதம் அவன் புத்திசாலியா இருக்கலாம்னு தோணவைக்குது… குரூப் ஆப் பீபிளை வச்சு கொலை பண்ணிருந்தான்னா அவன் கட்டாயம் லீடர்ஷிப் குவாலிட்டி உள்ளவனா இருக்கணும்… சிலரால ஹெக்டிக்கான நேரத்துல கூட பல வேலைகளை ஆர்கனைஸ்டா செஞ்சு முடிக்க முடியும்… இதன்யா மேடமையே உதாரணமா வச்சுக்கலாம்” என அவர் நிறுத்தவும் அங்கிருந்த மூவரும் அதிர்ந்தனர்.
“கடைசில என் தலைல கை வைக்குறிங்களே முரளி சார்”
அவள் கேலியாகச் சொல்ல முரளிதரன் சிரித்தபடி மறுத்தார்.
“இந்தக் கேஸ் நம்ம கழுத்தை நெறிக்குது… பட் இந்த நேரத்துல கூட இன்வெஸ்டிகேசன், மர்டர் ஸ்பாட்டுக்குப் போறது, சஸ்பெக்ட்களை விசாரிக்குறது, கேசுக்கு டீடெய்ல் கலெக்ட் பண்ணுறதுனு இவ்ளோ வேலையையும் செஞ்சு ரெண்டு சஸ்பெக்ட்ஸ் கிட்ட இருந்து உண்மையையும் கறந்துட்டிங்க… இதே பெர்ஃபெக்சன், ஆர்கனைஸ்டா வேலை பாக்குற பாணி ஏன் அந்தக் கில்லருக்கு இருக்கக்கூடாது?”
அவரது ஊகத்திற்கான காரணங்கள் இப்போது மூவருக்கும் புரிந்தது. இந்தக் கோணத்தை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும்? இதிலும் விசாரித்துப் பார்ப்போமென முடிவுக்கு வந்தனர்.
அப்போது கான்ஸ்டபிள் ஒருவர் கதவைத் தட்டினார்.
“உள்ள வாய்யா”
மகேந்திரன் சொன்னதும் உள்ளே வந்தவர் நிஷாந்தின் அன்னையும் பாதிரியார் பவுலும் வழக்கறிஞரோடு வந்திருப்பதாகக் கூறினார். அவர்களிடம் பேசுவதற்காக அங்கிருந்து வெளியேறினாள் இதன்யா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

