Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

ஸ்வரங்களில் ஓர் ஆராதனை - டீசர்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“டி மது! நீ இங்க தான் ஒளிஞ்சிருக்கனு எனக்குத் தெரியும். அவுட் ஆகிட்ட. வெளிய வா!”

அந்தப் பெரிய அறைக்குள் கண்களை ஓட்டியபடி சொன்ன வெண்பா தனது முதுகுக்குப் பின்னே கதவு மூடப்படும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிகொண்டு கதவின் முழு உயரத்துக்குமாய் ஒரு காலை மடித்து இன்னொரு காலை அழுத்தமாய் தரையில் ஊன்றி நின்றிருந்தான் நேத்ரன்.

“நீ… நீங்களா?” என அவள் அதிர

“என் ரூம்ல நான் இருக்காம வேற யார் இருப்பாங்கனு நினைச்ச டீச்சரம்மா?” என்றான் அவன் கண்களில் ஒளிர்ந்த குறும்போடு

வெண்பாவுக்குத் தலை சுற்றாதக் குறை!

‘இவனது கண்களில் படவே கூடாதென பிரயத்தனப்பட்டு நான் செய்த முயற்சிகள் யாவும் இந்தச் சிறுபிள்ளைகள் விளையாடிய கண்ணாமூச்சி ஆட்டத்தால் வீணாய் போனதே!’

மனதை வெளிக்காட்டாமல் தொண்டையைச் செருமிக்கொண்டாள்.

“நாங்க ஐஸ்பால் விளையாடிட்டிருந்தோம். மது இங்க வந்து ஒளிஞ்சிருக்கானு நினைச்சு வந்தேன்” என்றாள் மெதுவாய்.

மனதுக்குள் சின்னதாய் படபடப்பு! அந்த வீட்டின் மேல்தளத்தில் இருக்கும் அறையில் அவள் தனியாய் நேத்ரனுடன் இருப்பது மட்டும் கீழ்தளத்தில் உறவுக்காரக்கூட்டத்தோடு இருக்கும் ஒருத்திக்குத் தெரியவந்தால் வெண்பாவின் கதி அதோகதியாகிவிடும்.

“நீங்க வழி விட்டா நான் போயிடுவேன்”

அவள் அப்படி சொன்ன பிற்பாடு தான் இன்னும் வாகாகக் கதவில் சாய்ந்துகொண்டான் நேத்ரன்.

“டீச்சரம்மாக்கு எப்பவும் சின்னப்பசங்க கூட கேம் விளையாடத்தான் பிடிக்குமோ? வயசுக்கேத்த மாதிரி பெரியவங்க கேம் ஒன்னு விளையாடலாமா?”

வேண்டுமென்றே விசமத்தோடு அவன் வினவ வெண்பாவின் கண்களில் பதற்றமும் பயமும் ஒருங்கே குடியேறின. மெதுவாய் பூத்த வியர்வைப்பூக்களை அவனறியா வண்ணம் துடைத்துக்கொண்டாள்.

********

ஸ்வரங்களில் ஓர் ஆராதனை – நாளை முதல் தளத்தில் தினமும் வரும் மக்களே! காதல் கலந்த குடும்ப நாவல் இது. 30 எபி கதைதான். முடிஞ்ச தினத்தில் இரவு 12 மணிக்கு கதையை நீக்கிடுவேன். ஆன்கோயிங்கில படிக்க முயற்சி பண்ணுங்க. நன்றி!

1783832415-WhatsApp-Image-2026-07-12-at-101755-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

This topic was modified 1 hour ago by Admin - NM Tamil Novel World

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : July 12, 2026 10:19 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images